ஆயுதங்களும், ஊழலும், மனித உரிமை மீறல்களும்

This entry is part 7 of 54 in the series 4 செப்டம்பர் 2011

Dr. செந்தில் முத்துசாமி

உலகெங்கிலும் உள்ள ஊழல்வாதிகளும், உளவு நிறுவனங்களும், ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும், சில பத்திரிக்கை தரகர்களும் ஒன்று சேர்ந்துவிட்டதாகவே தெரிகிறது.. இந்த நிலையில், நேர்மையான அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், மத மற்றும் ஆன்மிக தலைவர்கள், மக்கள் நல தொண்டாற்றும் தலைவர்கள், பிரதிநிதிகள் அனைவரும் தீவிரவாதிகளாகவோ, மக்கள் விரோத சக்திகள் எனவோ எளிதில் முத்திரை குத்தபட்டு, எல்லாவித மனித உரிமை மீறல்களுக்கும் எளிதில் உட்படுத்தபடலாம். தீவிரவாதத்திர்க்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், குறிப்பாக வெளி நாடுகளில் வசிக்கும் இந்திய மற்றும் ஆசிய கண்டத்தில் இருந்து புலம் பெயர்ந்த மக்களூம் பலவித கொடுமைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எளிதில் உட்படுத்தபடலாம்..

சில வாரங்களுக்கு முன் அன்னா ஹஜாரே ஊழல்வாதியாகவும், மக்கள் விரோதியாகவும் காங்கிரஸ் கட்சியினால் முத்திரை குத்தபட்டது போல.

இந்த கட்டுரையின் நோக்கம்: இத்தகைய ஆயுதங்கள், கருவிகள், எந்த வித தடைகள் இன்றி, ஆயுத உற்பத்தியாளர்களால் தனிமனித உபயோகத்திற்க்கும், தீவிர குழுக்களின் உபயோகத்திற்கும் வந்துவிட்டது என்பதை சொல்லவும். வளர்ந்த நாடுகளின் அரசாங்கங்கள் ஆயுத உற்பத்தியாளர்களின் கைப்பாவையாக மாறிவிட்ட நிலையில், வியாபார நோக்கத்திற்க்காக, இக்கருவிகள் அழிவு சக்திகளின் கைகளில் விழுந்து மனித, அரசியல் உரிமைகள் மீறப்படலாம். மறைமுகமாக, நேர்மையான அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் அச்சுறுத்தலுக்கும், இன்னல்களுக்கும், ஊழலுக்கு பணியவைக்கவும், உயிராபத்துகளையும் சந்திக்க நேரிடலாம். உதாரணமாக, flying clubs, satellites, மற்றும் white noise radio transmissions போன்றவற்றை உபயோகித்து இளைஞர்ளை தீவிரவாதத்திற்க்கும், வன்முறைக்கும் தூண்டுதல்.

எந்த வித மதம், தீவிரவாதம் இயக்கத்திலும் சேர்ந்து இயங்காமல், அமெரிக்க பிரஜை/குடியுரிமை கொண்டுள்ள, ஒரு அமெரிக்க பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் என்னுடைய அனுபவத்திலேயே இப்படி. மற்ற நாடுகளில் இருந்து இங்கு வந்துள்ள மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் மீதும் இதை போன்று நடத்தபடும் தாக்குதல்கள் குறித்து விழிப்புணர்வும், ஆவணபடுத்துதலும் அவசியம். ஏனெனில், அரசாங்கதின் கவனத்திற்க்கு உட்படாமால், பல்வேறு இன, மொழி, மத கலவரங்களை உருவாக்க, இத்தகைய உரிமை மீறல்கள் சிலரால் நடத்தபட கூடும். இதை அமெரிக்க homeland security department- கவனத்திற்க்கு கொண்டு சென்றும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடாததால், இது குறித்து மக்கள் கவனத்திற்க்கு கொண்டு செல்வது அவசியம். வேற்று நாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் வசிப்பவர்களின் மீது சிலர் கட்டவிழ்த்துவிட்ட மனித உரிமை மீறல்கள் என தோன்றுகிறது.

கனரக மற்றும் அணு ஆயுதங்களுக்கும் மேலாக, பொதுமக்களும், மக்கள் நல இயக்கங்களும் பெரிதும் எதிர் கொள்ளும் சவால் சிறு ஆயுதங்களான கைத்துப்பாக்கி, லேசர்கள், டேசர்கள் துணையுடன் இயங்கும் கருவிகள், சர்வைலன்ஸ் என்ற பெயரில் உற்பத்தி செய்யபடும் பலவித ஒலி, ஒளி துணையுடன் இயங்கும் மின்சாதன கருவிகள், ரேடியோ ஒலிபரப்புகள், கதிரியக்க கருவிகள் இவையெல்லாம், அரசு இயந்திரங்களின் மூலம் பொதுமக்களுக்கு எதிராக உபயோகத்திற்கு வருவதோடு, பல்வித மத, இன, தேசியவாத தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகளுக்கும், தனிமனிதர்களுக்கு எதிராகவும், ஊழல் அரசியல்வாதிகளின் நலங்களை காக்கும் குழுக்களின் செயல்பாடுகளுக்கும் உதவலாம். உதாரணமாக, அதிநவீன போர்க்கருவிகளையும் மக்கள் நலங்களுக்கு எதிராக உபயோகபடுத்தகூடும். இதை போன்ற கருவிகளும், போர்சாதனங்களும் துப்பாக்கிகள் போன்று மக்கள் விரோத இயக்கங்கள், ஊழல் சக்திகள் (இடது, வலது மற்றும் தீவிரவாத கும்பல்கள்), பொதுமக்களை கொலை செய்வதற்க்கும், அச்சுறுத்துவதற்க்கும், துன்புறுத்துவதற்க்கும் பயன்பாட்டிற்க்கு வந்து விட்டதாக தெரிகிறது. உதாரணமாக, நீங்கள், காரில் பயணம் செய்யும் பொழுது, மற்றொரு காரில் பொருத்தபட்ட (அல்லது வானூர்தியில் பொருத்தபட்ட) மின்னனு கருவிகளின், மின்காந்த அலை, மற்றும் ஒலி பெருக்கி கருவிகள் மூலம் உங்களை நிலைகுலைய செய்ய முடியும். தொலைவில் இருந்து உங்கள் இல்லங்கள் மீது டேசர்/கதிரியக்க கருவிகள் கொண்டு சுட முடியும் எதிரி நாட்டு விமானங்கள், மற்றொரு நாட்டில் ஊடுருவி, அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த முடியும்.

இதை போன்ற மின்னனு, கதிரியக்க, ஒலி, ஒளி சாதனங்களால் நீங்களோ, உங்கள் குடும்பமோ, நண்பர்களோ, தெரிந்த அரசியல், பிரமுகர்களோ பாதிக்கபட்டிருப்பின், தகுந்த சட்ட, அரசியல், தற்காப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வது அவசியம். ஏனெனில், இத்தகைய நடவடிக்கைகள் மறைமுகமாக நடத்தபடுவதோடு, அரசியல், மத, பொதுமக்கள் உறவுகளையும் சீர்குலைக்கும் வகையில் சில அரசியல் கட்சிகளாலும், குழுக்களாலும் செயல்படுத்தபடலாம்.

உதாரணமாக: இது நடைமுறை செய்யபடும் விதம் குறித்த இணையத்தில் உள்ள விளக்கம்.
http://www.as.northropgrumman.com/products/hart/index.html

http://en.wikipedia.org/wiki/Directed-energy_weapon
http://www.as.northropgrumman.com/products/hart/index.html

Series Navigationகாயகல்பம்குரூரமான சொர்க்கம்
author

Dr. செந்தில் முத்துசாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *