கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)

This entry is part 27 of 33 in the series 11 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

காதல் பறித்துச் சென்றது என்
கல்விப் பயிற்சிகளை
கவிதைகளை
நிரப்பிக் கொண்டு !
மௌனி ஆனேன்
திருப்பி முணுமுணுத்து
“உன் பலத்தைத் தவிர
வேறில்லை”
என விளம்பி !
என்னால் உனை மறக்க
இயல வில்லை !

+++++++++

கைத் தாளம் போட்டுக்
கானம் பாட வேண்டும் நான் !
நாகரிக மோடு பெண்ணை
நாடிச் செல்லாது
மதிப்புடன்
வீட்டில் தனித்துக் கிடந்தேன் !
சூறாவளிக் காற்றுக்கு எதிராய்
யாராவது நிற்பரா ?
அதை மனதில் நினைத்துப்
பார்ப்பரா ?

+++++++++++++

மலைமுகடு எதிரொலியைத்
தன்னுள்ளே
மறைத்து வைக்கும் !
அதைப் போல்
ஒளித்து வைத்துள்ளேன்
உன் குரலை !
உனது உடல் தீயில்
வெட்டி
வீசிய விறகு நான் !
வெகு விரைவில்
எரிந்து போய்ப்
புகையாய்ச் சுருங்கினேன் !

++++++++++++

பாவை உனைப் பார்த்தவுடன்
பைத்தியம் ஆனேன் !
உன்னத மானது
இந்தப் பெண் பித்து
உயிர் வாழ்வைக் காட்டிலும் !
வசிப்பதை இது மறக்க
வைப்பது !
வரும் போது
வசிப்பை வளமாக்குது !
வாழ்வுக்குப் புத்துயிர்
வழங்குது !

+++++++++++

நீல நிறத்தில் உள்ளது
நெடு வானம் !
ஞாலம் அமர்ந்தி ருக்கும்
குருடாய்
குத்த வைத்துத் தெருவில் !
உன் பெண் பித்தை அறிபவர்
நீல வானுக்கும்
குருட்டு மனிதனுக்கும் அப்பால்
பார்க்கிறார் !
நபி நாயகம் போலவும்
ஏசு நாதர் போன்றும்
ஓர் உன்னத ஆத்மா
ஒளிந்து கொண்டி ருக்கிறது
ஒருவரும் அறியாமல் !

++++++++++++++

பரிதியைப் போற்றுவது
உன் சொந்த
விழிகளைப் புகழ்வது !
கடலைப் போற்று நீ
நான் சொல்வது
நல்லதோர் கப்ப லென்று !
கடற் பயணம் தொடரும்
ஆயினும்
நீ போவ தெங்கோ ?
படகானது
கடலால் சூழப் படுவது
ஒரு பெரும் அதிர்ஷ்டம் !
விழிப்புணர்வு
உண்டாக்கும் படகுக்கு !

++++++++++++++

உறங்கும் போது நாமேன்
வருந்த வேண்டும் ?
மெய் மறந்த நிலையில்
வெகு நேரம்
தொய்ந்து கிடந்தால் என்ன ?
குடித்துள்ளோம் ! நமது
குற்ற உணர்வுகள்
விட்டுப் போகட்டும் !
மிதக்கும்
உன்னைச் சுற்றிலும்
கருணை உள்ளங்கள்
உருவாகட்டும் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 7, 2011)

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)மனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *