கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -5)

This entry is part 31 of 37 in the series 18 செப்டம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“துயரடையும் என் தோழனே ! நீ விடும் கண்ணீர், செய்த இடரை மறப்போன் சிரிப்பை விடத் தூய்மையானது ! இழித்துரைப்போன் கேலி நகைப்பை விட இனிமையானது ! கொடும் பழிசுமத்தும் வெறுப்பாளியின் இதயதைக் கழுவும் இந்தக் கண்ணீர் துளிகள் ! மனம் முறிந்து போனவனின் துயரைப் பகிர்ந்து கொள்ள உனது கண்ணீர் பாடம் கற்பிக்கும் !

கலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்)

என்னுடன் பேசிய தென் ஆத்மா !
“இப்படி நேற்று இருந்தது
அப்படி நாளை இருக்கும் !”
இப்படிச் சொல்லிக்
காலத்தை அளக்காதே என்று !
என் ஆத்மா சொல்வதற்கு
முன்பு நான்
இப்படிக் கற்பனை செய்தேன் :
“போனது மீளாத
ஊழி நிகழ்ச்சி !
எதிர்காலம் என்பது
கையிக் கெட்டா நிகழ்ச்சி !
நிகழ்காலத் தருணம்
என் தேவைகளை யெல்லாம்
பூர்த்தி செய்யு மென்று
உணரும் என் மனது !

+++++++++++

என் ஆத்மா உபதேசிக்கும் :
“இங்கே, அங்கே
எல்லா வற்றுக்கும் மேலே
என வரையறைக் கோடிட்டுக்
கால வெளிக்கு
வேலி இடாதே” என்று
எங்கெங்கு நான் போயினும்
அங்கிருந்து வெகு தூரம்
போக நேரும் எனக்கு !
இப்போது நான்
எங்கெங்கு போயினும்
அங்கெலாம்
அனைத்து நாடுகள் இருந்தன !
நடை வைத்த
தூரங்கள் எல்லாம் அனைத்துலக
எல்லையாய் இருந்தன !

+++++++++++

அறிவு புகட்டியது என்
ஆத்மா எனக்கு :
மகிழ்ச்சி அடையாதே பிறர்
புகழ்ச்சி செய்யும் போது !
பழி சுமத்தும் போது நீ
துயர் அடையாதே !
ஐயுற்றேன்
என் படைப்பைப் பற்றி
என் ஆத்மா அறிவுரை
கூறும் முன்பு !
பழி சுமத்தப் படாமல்
மரங்களில் மலர்கள் பூக்கும்
வசந்த காலத்தில் !
கனிகள் பழுக்கும் வேனிற்
காலத்தில் !
இலைகள் உதிரும்
இலை யுதிர் காலத்தில் !
அமணமாய்ப் போய் விடும்
குளிர் காலத்தில் !

(தொடரும்)
+++++++++++++

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 13, 2011)

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (இசை மேதை) (கவிதை -48)தமிழ் வளர்த்த செம்மலர்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *