Posted in

ஒரு கடலோடியின் வாழ்வு

This entry is part 12 of 37 in the series 18 செப்டம்பர் 2011

திரண்டத் திட்டாய் கரு நீல மேகங்கள் 
உதிப்பின் ஒளியில் மேல் வானச்  சிவப்பு 
வெண் கை நீட்டி மற்றொரு  மேகம்... 
கடல்விட்டெம்பும் சீகல் பறவைகள் …
அடர் நீல அசையும் பெரும் பட்டாய்க் கடல் 
எத்தனை பேருக்குக் கிடைக்கும் இவ் வாய்ப்பு? 
கர்விக்கும் மனம்…  மறுநொடி சென்றமரும் 
மனைவி, குழந்தைகள் பக்கத்தில் .
கண்கள் இங்கும் மனமங்குமாய்  
விடுமுறை தினத்தை கணக்கெடுக்கும்
நாளை மீண்டுமோர் விடியல்..  
Series Navigationதேடல்காலம் கடந்தவை

One thought on “ஒரு கடலோடியின் வாழ்வு

  1. நாடோடிக்கு எப்படி கடலோடி பற்றி தெரியும்.ரசிக்கும் கவிதை.
    இடம் மாறினாலும் குரல் ஒன்றுதானே

Leave a Reply to vciri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *