கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)

This entry is part 37 of 45 in the series 9 அக்டோபர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

யாரிந்த மாறுதல் செய்பவர் ?

எவரிந்த மாறுதலைப் புரிபவர் ?
இடது பக்கம் எய்த அம்பு
வலது பக்கம் விழுந்தது ! மானை
விரட்டிச் செல்லும் போது
காட்டுப் பன்றி என்னைத்
துரத்திக் கொண்டு வரும் !
சுயத் தேவைக்கு நான்
சூழ்ச்சி செய்தேன் !
சிறையில்
தள்ளப் பட்டேன்
இறுதியில் !
பிறருக்குத் தோண்டிய
குழியில் நான்
தவறி விழுந்தேன் !
நினைப்பது ஒன்று ! ஆனால்
நடப்பது வேறொன்று !
ஐயுற வேண்டும் நான் எனது
ஆசைகளை எல்லாம் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (Octoberber 3, 2011)

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -2)யார் குதிரை?
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *