துளிப்பாக்கள் (ஹைக்கூ)

author
0 minutes, 2 seconds Read
This entry is part 29 of 45 in the series 9 அக்டோபர் 2011
சுமந்த போழ்தும்
சும்ந்த பின்னும்
சுமப்பது – தாயின்
தியாகம்
ஊருக்கு விருந்து வைக்கவும்
ஊரையே விருந்தாக்கவும்- ஒற்றைத்
தீக்குச்சி
மானம் காப்பதும்
மானமிழந்தால் கோர்ப்பதும் – ஒன்றே
முடிச்சு
மணந்தால் மறப்பதும்
மணக்காவிடில் மறக்காததும்- அதே
காதல்
உணவின் முடிவு
மறுவுலகின் துவக்கம் – அதுவே
மரணம்
ஊரை இணைப்பதும்
ஊரைப் பிரிப்பதும் – அதே
தெருக்கள்
பிறரைக் காப்பதால்
தன்னைக் காப்பது – அதே
தர்மம்
குழந்தைக்கு வந்து
பொம்மை நிறுத்தியதும்
பெரியதாய் வளர்ந்ததும்
தன்னைக் குழந்தை மறந்ததால்
பொம்மைக்கு வந்ததும் – ஒன்றே
அழுகை
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
Series Navigationஎனது இலக்கிய அனுபவங்கள் – 19கொக்கும் மீனும்..
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *