செல்வராகவனின் மயக்கம் என்ன ..

This entry is part 16 of 37 in the series 27 நவம்பர் 2011

இன்றைய இளைஞர்கள் தனக்குப் பிடித்ததில் செய்வதில் ஒரு வெறியுடன் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவரது மகன் சிங்கப்பூரில் வேலையை விட்டு விட்டு வீடியோ கேமராவைப் பிடித்திருக்கிறான். பல கட்டிட தொழில் நுட்பம் படித்தவர்கள் சால்சா வகுப்புக்குப் போய் அதில் மூழ்கிப் போய்விடுகிறார்கள் என்பது நான் அறிந்த உண்மை. அதனாலேயே என்னால் இந்தத் திரைப்படத்தை புரிந்து கொள்ள முடிந்ததோ என்னமோ? வேறு ஏதோ எதிர்பார்த்த திரையரங்கக் கூட்டத்திற்கு பெரும் ஏமாற்றம். அது கேட் கால்ஸாகவும், அசிங்கக் காமெண்டு களாகவும் எதிரொலித்தது.
கார்த்திக் சுவாமிநாதன் புகைப்படக் கலைஞன்.. அதில் சாதிக்கும் தீவிர வெறி கொண்டவன். கூடவே அவனுடன் நண்பன் நண்பிகள் கூட்டம். அவர்கிடையே அவன் ஜீனியஸ். ஆண், பெண் எல்லோரும் சேர்ந்து தண்ணியடிப்பது, டேட்டிங் என்று எதிலும் ஸ்திரத்தன்மை இல்லை அவர்களது நட்பைத் தவிர..
யாமினி மாடர்ன் யுவதியின் அடையாளம். எதிலும் அதிராத அயர்ன் லேடி.. அப்படித் தான் கதையின் நாயகன் கடைசியில் சொல்கிறான். சில காட்சிகள் ஸ்லோ.. பல காட்சிகள் விர்ர்ர்..
உலகத் தரம் வாய்ந்த பின்னணி இசை ( ஜி வி பிரகாஷ்குமார்), தமிழ்ப்படத்தரம் வாய்ந்த குத்துப் பாட்டுகள்.. ஒரே காக்டெயில்தான்.
உழைப்புத்திருட்டு இங்கே மையக்கரு. கார்த்திக் எடுத்த படங்களை ‘ ஆய் ‘ என்று ஒதுக்கும் விளம்பர உலகின் லீடிங் ·போட்டோகிராபர் அவைகளை தன் பெயரில் போட்டு சிறந்த புகைப்படத்துக்கான அவார்டும் வாங்குவதும் அதனால் அதிர்ச்சியில் கார்த்திக விபத்துக்குள்ளாவதும் முதல் பாதி.
அவன் மனைவியாகும் யாமினி அவனது கிறுக்குத்தனத்தால் முதல் குழந்தையையே பறி கொடுக்கிறாள். மீண்டும் அவன் திறமை அவனது படங்களால் வெளிப்பட்டு அவன் உலக அங்கீகாரத்தைப் பெறுவதே பின்பாதி.
நல்லவன் வாழ்வான் என்கிற அரத பழசு கதைதான். கூடவே பிள்ளையார் செண்டிமெண்ட் வேறு.. அவனது யானை ·போட்டோதான் அவனைப் பற்றி உலகம் அறிய பயன்படுகிறது. அனாவசிய விளக்கங்கள் கிடையாது. முக்கியமாக ·பிளாஷ் பேக் இவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று.. காட்சிகளின் ஓட்டத்தைப் பார்த்து நாம் புரிந்து கொள்ள வேண்டியதுதான். முக்கியமாக கதைநாயகனின் பெற்றோர், அவர்கள் செண்டிமெண்ட் என்று காட்சிகளே கிடையாது.
லேசான நகைச்சுவை அதுவும் வாலிபர்களிடம் இடையே பாப்புலராக உள்ளவை..
நாயகனுக்கு சண்டையே கிடையாது.. ஸெல்·ப் பிடி அழுகை அவ்வளவுதான். அசாத்திய தைரியம் உள்ள நாயகி.. துடைத்து விட்டுப் போகிற ரகம் இல்லை.. ஆனால் எதற்கும் துணிந்தவள்.
சாம்பிளுக்கு ஒன்று.. கார்த்திக் யாமினி கல்யாணத்தில் அதற்கு முன் ‘டேட்டிங்’ செய்த சுந்தர் பொருமுவது.. ‘ ·பிரெண்டா இருப்பான்.. நம்ம கேர்ள் ·பிரண்டையே கரெக்ட் பண்ணிடுவான்.. அவன் கல்யாணத்துக்கு நாம அட்சதை போட்டு ஆசிர்வாதம் பண்ணனும்.. ‘ இதை அவன் சொல்வது ஒரு நண்பியிடம்..
கிளாஸிக் மூவிஸ் விரும்புபவர்கள் பார்க்கலாம்..

Series Navigationசஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்!இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ? கட்டுரை : 2
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *