பொங்கல் வருகுது

This entry is part 27 of 30 in the series 15 ஜனவரி 2012சி. ஜெயபாரதன், கனடா

பொங்கல் வருகுது ! புத்தரிசி
பொங்க வருகுது ! மகிழ்ச்சி
பொங்கி வருகுது !
எங்களை எல்லாம் இன்பத்தில்
முங்க வருகுது !  நாவில்
தங்க வருகுது !  கும்பி
குளிர வருகுது ! கும்மி
அடிக்க வருகுது !  அன்பில்
அணைக்க வருகுது ! விழாவில்
இணைக்க வருகுது !
புத்தாடை மங்கையர்
உட்கார்ந்து
முற்றத்தில் வண்ணக்
கோல மிட்டுப்
பால் பொங்கல் இனிதாய்ப்
பொங்கப் போகுது !
வெண் பொங்கல்
வெந்திடப் போகுது !  கரும்பு

காத்திருக்க

காளை மாடு தாளமிட
சர்க்கரைப் பொங்கல்
அற்புதமாய்ப்
புதுப் பானையில் வழிந்து
பொங்கப் போகுது.

Series Navigation3 இசை விமர்சனம்ஷங்கரின் ‘ நண்பன் ‘
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

3 Comments

 1. Avatar
  jayashree shankar says:

  பொங்கல் கவிதை….பொங்கி வருகுது..
  பால் போலே…..பொங்கலோ பொங்கல்…
  என மகிழ்வாய்…வந்தது…கவிதையாய்..
  கனடாவின் கவிப்புயல்…கரும்பு கொண்டு…
  தமிழர் திருநாள்…..மனதில் ஏந்தி….!
  அருமையான கவிதைக்கு நன்றி.
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

 2. Avatar
  ganesan says:

  I wish and hope my friend jai’s,positive pongal kavithai becomes reality in poor indian farmers life sooner or later…if so india wil b the self sufficient nation in agri…thanx 4 ur positive poetry during pongal festival jai ..hats off!

 3. Avatar
  காருண்யன் கொன்பூசியஸ் says:

  காளை மாடு தாளமிட…………….. ஏன் ஆடுகள் வந்து இசையெழுப்ப குரங்குகள் வந்து குலவையிட என்றுந்தொடர்ந்திருக்கலாமே? விட்டுவிட்டார். சி.ஜெயபாரதன் தனக்குத் தெரிந்தவற்றோடு மட்டும் நிற்பதே அவருக்குச்சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *