மெர்சியின் ஞாபகங்கள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 29 of 30 in the series 15 ஜனவரி 2012

குழல்வேந்தன்

அன்பு தோழர்களே, நமக்கெல்லாம் பெண்களைப் பற்றிய செய்திகளோ அல்லது தகவல்களோவென்றால் விருப்பமானதன்றோ?

பெண்களைப் பற்றிய சித்திரங்கள்,  வண்ணப் படங்கள், சிற்பங்கள், கவிதைகள், காவியங்கள், நாடகங்கள், என எங்கும் பெண்கள் எதிலும் பெண்களென்பதன்றோ நம்மவர்களின் விருப்பமும் தேர்வும். ஆடவர்களின் ஜட்டி விளம்பரம் தொடங்கி முகச் சவரம் செய்துகொள்ள ாடவர்கள் பயண்படுத்தும் பிலேடு விளம்பரம் வரை  எல்லாவற்றிர்க்கும் நமக்கு ஒரு பெண்ணின் பிம்பமன்றோ வேண்டி  இருக்கிறது. எனவே தோழர்களே நானும் உங்களோடு பெண்ணைப் பற்றியே பேசுவதென்று தீர்மானித்துள்ளேன்.

பெண்கள் மட்டும் இல்லை என்றால் கண்ணாடிகளுக்கு ஏது இத்தனை மரியாதை?ஆடவர்கள் பயன்படுத்தும் அழகுச் சாதனங்களுக்கு அர்த்தமோ அகராதியோ அட அவற்றின்  பெயர்கள் கூட தெரிந்து  இருக்குமா என்ன? ஒரு இளைஞனை முதல் முதலில் அன்றொரு நாள் சந்தித்தேன். அவன் முகம் மிகவும் வாட்டமாக இருந்தது.  காரணம் கேட்டேன். சொன்ன பதில் இதுதான் {என்னப்பா அனியாயமா இருக்குது? என்ன எங்க அப்பா காலேஜுல சேக்கிறேன்னு சொல்லி இப்படி பெண்களே படிக்காத காலேஜுல சேத்துட்டாரே, ஐய்யோ இப்படிப் பட்ட காலேஜுன்னு தெரிஞ்சு இருந்தா நான் படிக்கவே ஒத்து இருந்திருக்கமாட்டனே. இது என்னடா இது காட்டு மிராண்டிங்க மட்டும் இருக்கும் எடத்துல நம்மள குடி இருக்க சொல்லராங்க?  அடுத்த வருஷம் எதாவது ஒரு காரணத்த சொல்லி நாந் கோயெட் காலேஜுல சேரலன்னா நான் ஆண்பிள்ளையே இல்லை} என்று சபதமே எடுத்த ஒரு கல்லூரி இளைஞனை எனக்குத் தெரியும் நண்பர்களே. அந்த நண்பன் யார் எனக்கதை பண்ணுவது என்னுடைய நோக்கமல்ல.   இந்த ஆண்களது உலகம் என்த அளவுக்கு பெண்ணின் வயப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டத்தான் மேர்ப்படியான நண்பனைப் பற்றி உங்களிடம் சொன்னேன்.

பெண்களது பெயரில் எழுதுவதில்  நம் படைப்பாளரில் சிலருக்கு என்ன காரணத்தாலோ ஒரு கவர்ச்சி அல்லது போதை இருக்கும் போலத் தெரிகிறது. பெண்களோடு பேசுவது, பெண்களுக்கு குறுஞ்செய்தி, மின்மடல்  அனுப்புவது, இத்தியாதி இத்தியாதி எல்லாம்    சாதாரண சம்பவங்கள்தானே நமக்கு. ஆனால் யார் அவற்றைச் செய்கிறார்களோ அப்போது அவர்கள் அசாதரணமாகிடும் வேடிக்கையைப் பார்க்க ஒருவருக்கு கொடுத்து வைக்கணுமே. அடடா! ஓ! அடடா!

{நான் பேச வந்ததும் பெண்ணைப் பற்றி என்று உங்கள் இடம் சொல்லிட்டு பேச வந்ததைப் பேசாமஇருந்துட்டா எப்படிங்க?

நான் பேச வந்த பெண்ணுன்னா  சாதாரணமான பெண் இல்லைங்க அவங்க. எப்படிப்பட்ட பெருமைக்கு உரிய பெண்னுன்னு  நான் சொல்லப் போரத வச்சி நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. அதாங்க அந்த பெண்ணுப் பேரு  மெர்சிங்க. மெர்சின்னா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமுங்க. என்கிட்ட நீங்க அட அந்த பெண்ண ஏன் உனக்கு பிடிக்கும்னு  காரணம் கேக்கரது தெரியிதுங்க. அத தாங்க சொல்ல வர்ரேன். ஆனா சொல்ல எனக்கு கொஞ்சம் கூச்சமா இருக்குதுங்க. இருந்தாலும் சொல்லாமலும் இருக்க முடியலிங்க.

மெர்சி என்னவெல்லாம் செய்வாங்க தெரியுங்களா? நான் உடை களையரத அப்படியே படம்எடுப்பாங்க. அது மட்டும் இல்லைங்க. பிறந்த மேனியா குளிக்கிறது, சோப்பு போடரது, மீண்டும் சோப்புப் போக தண்ணியை மொண்டு ஊத்திக்கிறது, அப்புரம் ஒடம்ப தொடைக்கிறது, புதுசா தொவச்ச ஆடைய போட்டுக்கிறது, சாப்பிடரது, காப்பிக் குடிக்கிறது இப்படி நான் செய்யக்கூடிய எல்லாத்தையும் அவங்க படம் எடுப்பாங்க. அப்படி படம் எடுக்கிறதுல அவங்களுக்கு என்ன சந்தோஷமோ திருப்தியோ அது பத்தியெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. அட அவங்க என்நமட்டும்அப்படி படம் ெடுத்தாங்கனு சொல்லலிங்க. எங்க குழுவையும் அப்படித்தான் படம் எடுப்பாங்க. அப்போ எங்க குழுவ சேர்ந்தவங்கள்ள சிலரு {ஹோய் ஹோய் நம்மள போட்டோ புடிக்கிறாங்கடோய்} னு கூச்சல் போடுவாங்க.    அப்படி செய்யரதுனால மெர்சியை எனக்கு ரொம்ப பிடிக்குமுங்க. இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு இருந்துச்சின்நா எப்படி இருக்கும் சொல்லுங்க?} {அது சரி!மெர்சி எப்படி? ரொம்ப அழகா?னு நீங்க கேக்குரது எனக்கு நல்லா புரியிதுங்க.  அதுல பாருங்க!அழக ஆராதிக்காதவங்க யாருங்க? என்னப் பொருத்தவரைக்கும் அவங்க பேரழகிதாங்க. பொதுவா ஒரு பெண்ணுன்னு சொன்னா கால் தொடங்கி பூச்  சூடிய தலை முடிவரைக்கும் ஒரு பெண்ணோட ஒடம்பத்தாங்க எல்லாரும் பாக்கரீங்க. அழகுன்னா அது ஒரு பெண்ணோட ஒடம்புமட்டும் சார்ந்ததான்னு நெசமாவே எனக்குத் தெரியாதுங்க. எந்த பெண்ண எந்த ஆண் பார்த்தாலும் பொதுவா ஒல்லியா? குண்டா? குட்டையா? நெட்டையா? கருப்பா?செவப்பா? இல்ல மாஞ்தளிர்மேனியா? உடுத்திட்டு இருக்கும் உடை அந்த பெண்ணுக்கு எந்த அளவுக்குப் பொருத்தம்? மார்க்கு எவ்வளவு போடலாம்? இப்படித்தாங்க பல ஆண்கள் கணக்குப் போடுவாங்க. நானு அப்படி எல்லாம் போட்டதில்லிங்க. அப்படிப் பட்ட பழக்கமும் எனக்கு கிடையாதுங்க. அதுமாதிரி செய்யருதுல எனக்கு விருப்பமும் இருக்குரதில்லிங்க.

ஆனாலும் சொல்லுரேங்க! யாருக்கு எப்படியோ எனக்குத் தெரியாதுங்க. மெர்சி எனக்கு அப்போவும் அவங்களப் பத்திப் பேசிக்கிட்டு இருக்குர இப்போவும் எப்போவும் அவங்க அழகானவங்கதாங்க.

 

நான் மெர்சியோட அதிகம் பேசினது இல்லிங்க. எதோ ஒண்ணு ரண்டு சந்தர்ப்பங்கள்ள வெட்கத்தோட எனக்கு சொல்லித் தரப்பட்ட கொச்சை இங்கிலீஷ்லியோ மழலைத் தமிழ்லியோ பேசினது உண்டுங்க அப்போவெல்லாம் அவங்க அன்போடையும் கொஞ்சலாவும் என் கன்னத்தை வலிக்காம கிள்ளனதுண்டுங்க. அவங்களும்என்னோட அதிகமா பேசினது இல்லிங்க.  எப்போவாச்சும் அவங்களுக்குத் தெரிஞ்ச கொச்சைத் தமிழிலியோ இல்லன்னா இங்கிளீஷ்லியோதாங்க பேசுவாங்க. அவங்களோட மொழி எனக்குப் புரிஞ்சதோ இல்லையோ? ஆனா அவங்களோட பேச்சில இருக்குர ஏத்த இரக்கத்த வச்சி அவங்களோட நேசத்தையும் கனிவையும் என்னால உணரமுடிஞ்சுதுங்க.

.

எனக்குத் தெரிஞ்சிஅவங்கதாங்க மொதல் மொதல்ல எனக்கு அரிமுகம் இல்லாத பழவகைகள சாப்பிடத் தந்தவங்க. அது மட்டும் இல்லிங்க. அவங்கதாங்க என்ன மொதல் மொதல்ல பேச வச்சி டேப்ரிக்காடுல என்னோட கொரல எனக்கே கேக்க வச்சாங்க. மொதல்ல என் கொரல கேசட்டுல அவங்க ஓடவிட்டப்போ இது எனடா இது நம்மளோட சத்தம்தானான்னு ரொம்ப பிரம்மிப்பா இருந்துச்சிங்க. ஆனா கொஞ்ச நேரம் பொருத்து என்னோட குறிப்புப்  பேர சொல்லி பாடுன்னுஎனக்குப் புரிரமாதிரியான முறைல இங்கிலீஷ்ள கேட்டாங்க. அப்போ எனக்குவெக்கமா போயிடுச்சிங்க. நான் அவங்க இருந்த ரூமவிட்டுட்டு நான் இருக்கவேண்டிய ரூமுக்கு ஓடியே போயிட்டேங்க.    என்னத்த சொல்லரதுங்க. அவங்க எனக்கு வச்ச செல்ல பேர நெனைக்கிறப்போ இப்பவும் சிறிப்பாவும் சிலிர்ப்பாவும் இருக்குதுங்க. அதுதாங்க எனக்கு அவங்க வச்ச பேரு [shy boy] என்ன எப்போ கூப்பிட்டாலும் ஷைபாய் ஷைபாய் அப்படின்னுதான் கூப்பிடுவாங்க. இல்லன்னா ரோசி  ரோசின்னு கூப்பிடுவாங்க. ரோசின்னு கூப்பிட்டத்துக்கு ஒரு காரணம் இருக்குதுங்க. அத நீங்களே தெரிஞ்சிக்குவிங்க.  மொதல்ல அவங்க எங்க ,ஸ்கூலுக்கு வந்த அப்போ எஞ்க பாட்டு சாரு அவங்கள வரவேர்க்க ஒரு பாட்டு சொல்லிக் குடுத்தாருங்க. அந்த பாட்டோட பல்லவில ஒரு வரி மட்டுந்தான் இப்போ எனக்கு ஞாபகம் இருக்குதுங்க. {வண்ணமலர் சொலையிலே கூடிடுவோம். மெர்சி அம்மாவை வருக வருக என்று வாழ்த்திப் பாடிடுவோம்.} அப்படின்னு அந்தப்பாட்டை நாங்க ெல்லாரும் சேர்ந்து குழுவா பாடனும்னு சாரு சொன்னபோது கூட்டத்துல கோவிந்தா போடருதுதானேன்னு பாடிநேந். ஆனா தனியா பாடச் சொன்னா? அதனாலதான் எனக்கு வெக்கம் வந்துரிச்சி. ஆனா பாருங்க. அவங்க அதையே எனக்கு பேரா வச்சில்ல கூப்பிட்டு இருக்காங்க. எங்க ஸ்கூலுக்கு அவங்க மொதல்ல வந்த நாளை ஒரு நாளும் என்னால மறக்கமுடியாதுங்க. அவங்க வந்தவொடனே நாங்க அந்த பாட்டைடான்சு ஆடிக்கிட்டே பாடினோம். அதுக்காகஒண்ணாங்கிலாசு படிக்கிற புள்ளைங்கள்ள அஞ்சுபேரத்தான் தேர்ந்தெடுத்தாங்க. அதுல நானும் இருந்தேங்க. வரவேர்ப்பு பாட்ட பாடுர குழந்தைகளாகிய நாங்கள் எல்லாம் செடிகலாம். செடின்னாபூக்களை தரணுமாம். அப்படி செடிகளா வேஷம் போட்டு என் கூட ஆடினவங்களைக் கூட இப்போவும் என்னால சொல்லமுடியுங்க. பிறைமதிதாங்க சாமந்திப்பூச் செடி. தேன்மொழிதாங்க முல்லைப்பூங்கொடி. அமுதாதான் கனகாம்பரச் செடி. செல்வமூர்த்திதாங்க மல்லிப்பூச் செடி. நானுதான் ரோஜாச் செடியாம். மெர்சியம்மா வர்ரப்போ செடிகளா இருக்கிற நாங்க அவங்க அவங்க நிலைக்கு அடையாளமான பூங்கொத்துக்களை அந்த அம்மையாருக்குத் தரணுமாம். அவங்க வர்ரதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாலையே எங்களுக்கு பாடவும், ாடவும், பூங்கொத்தை கொடுக்கவும், அப்புரம் வரவங்களைக் கை குலுக்கி வருக வருக வணக்கம்னு இங்கிலீஷ்ல  சொல்லவும் சொல்லிக் குடுத்தாங்க. நாங்களும் சொல்லிக் குடுத்தமாதிரியே நல்ல ஆடிப் பாடிக் காட்டி வரவேற்றோமுங்க. குழந்தைகளாகிய ெங்களோட ஆட்டமும் பாட்டும் மெர்சிக்கு நிச்சயம் ரொம்ப பிடிச்சி இருக்கனும். அவங்க வந்த அண்ணைக்கிஎல்லாருக்கும் ஆரஞ்சு பழம், திராட்சை, ஆப்பிள்னு ஏதேதோ பழங்களெல்லாம்  குடுத்தாங்க. அதுல விசேஷம் ென்னன்னா டான்சாடின ெங்களுக்கு அண்ணமாரைவிடவும் அக்காமாரைவிடவும் அதிகமா மிட்டாய்களும் பழங்களும் குடுத்தாங்க. ஆனா பாருங்க. தநம் அக்கா எனக்கு பழங்களும் மிட்டாய்களும்  குடுத்தப்போ {தம்பி உன்னால இவ்வளவையும் தூக்கமுடில இல்லைடா, குடு நான் அக்கா எடுத்துட்டு வர்ரேன். உனக்கு வேணும்கிறத அப்புரமா கேளு அக்கா தர்ரேன்} அப்படின்னு சொல்லி வாங்கிநாங்க. நானும் வரவேர்ப்பு முடிய காத்திருந்தேன். அப்புரம் {அக்கா எனக்கு பழம் குடுக்கான்னு கேட்டேன். அதுக்கு தனம் அக்கா ஆரஞ்சு பழச் சுளைல ரண்டு மட்டும் குடுத்துச்சிங்க. {ெங்க அக்கா நானு மூணு நாலு பழங்கள குடுத்தேன். ரண்டே பழந்தான் குடுக்கிரையே. நான் குடுத்த அப்போ பழம் பந்துமாதிரி குண்டாதானே இருந்துச்சி. இப்போ குட்டி குட்டியா வெரல் மாதிரி இருக்கு.} அப்படின்னு கேட்டேன். அதுக்கு அக்கா {அட மடப் பயலே, உனக்குத் தெரியலையா?  ஆரஞ்சுப் பழத்த உரிச்சிதாண்டா தருவாங்க. மத்த சொளையெல்லாம் தோலோட தோலா போயிருச்சி} அப்படின்னு சொல்லுச்சிங்க.

அப்புரம் அட காலம் கடந்துதாங்க எனக்கே தெரிய வந்துச்சிங்க, தோலிருக்க சொள முழுங்கும் ஆளுங்கிறதுக்கான அர்த்தமும் அகராதிப் பொருளும். மத்தப் பழங்களையும் மிட்டாய்களையும் தானே பத்திரமா வச்சிருந்து அப்புரம் தர்ரேன்னு சொல்லிச்சிங்க அந்த அக்கா. அப்புரம் சாயங்காலம் கேட்டப்போ {என்னடா தம்பி பண்ணரது. எல்லாத்தையும் யாரோ திருடித் தின்னுட்டாங்கடா. அக்காவுக்குத் தந்ததுல இருந்து உனக்கு கொஞ்சம் தர்ரேன்னு சொல்லி ரண்டு  ஆப்பிள் துண்டும் கொஞ்சம் மிட்டாய்களையும் அந்த அக்கா ஒரே அடியா நானு ேமாந்திடக் கூடாதுன்னு குடுத்துச்சி போல இருக்கு.

அந்த நாளில இருந்து அண்ணமார்களும் அக்காமார்களும் தனம் அக்காவுக்கு {தோலோட போச்சி   தோலோட போச்சி} அப்படின்னு பட்ட பேர் வச்சிக் கூப்பிட ஆரம்பிச்சாங்க. யாராவது அக்காவோட சண்ட போடரப்போ {போடி தோலோட போச்சி} அப்படின்னு சொல்லிட்டா அப்போ அந்த அக்காவுக்குவரும் கோபத்த பாக்கணுமே. அக்கா நம்ம தாய் மொழி அகராதில இல்லாத புதுப் புது வார்த்தைகளை ஆயுதமாக்கி சண்டைக்கு வந்தவங்கமேல போர் தொடுக்கும். அக்காவோட சொல்லாயுதங்களுக்கு முன்னால பீமராசாவோட கதாயுதமும் ராமபிரானோட வில் வித்தையும் கூட தோத்து போயிடும்னா அப்புரம் பாத்துக்கோங்களேன்.   {அட அக்காவ அவமானப்படுத்த இதை சொல்லலிங்க. மெர்சியை நினைக்கிறப்போ இந்த சம்பவங்களும் என்னோட ஞாபகத்துக்கு தானே வந்திடுச்சிங்க.

மெர்சியை எங்களுக்கெல்லாம் புடிச்சாலும் தோட்டக்காரர் கதிரேசன் அண்ணநுக்கு மட்டும் புடிக்கவே இல்லயாமுங்க. அதுக்கு அவுரு  சொன்ன காரணமும் ஏதோ ொரு வகையில ஞாயமாத்தான் இருந்ததுங்க. {மெர்சி நம்ம ஊருக்கு வந்த புதுஸுல நம்ம ஊரு பலகாரமான வடையைத்தான் விரும்பிச் சாப்பிட்டாங்களாம். தோட்டக் கார அண்ணந்தாங்க  வாங்கி வந்து தருவாறாம். மசால்வடை உளுந்து வடைனு நெரைய சாப்பிட்டதால அந்த அம்மையாருக்கு கீழ் நாட்டு பிரச்சனை அதிகமா போயிடுச்சாம். அவங்க நாட்டு வழக்கப்படி கக்கூசுக்கு போயிட்டு கழுவாம டிஷ்யு பேப்பர    வச்சி ஆசன வாயைத் தொடச்சித் தொடச்சி கக்கூசுக்குள்ளையே போட்டுப்புட்டாங்களாம்.  அப்புரம் கக்கூசு அடைச்சிக்க இவர கூப்பிட்டு காட்டிசுத்தம் பண்ணச் சொல்லுவாங்களாம்.   இவருதான் அறுவறுப்போட தொடச்ச காகிதங்களை அப்புரப்படுத்த வேண்டி இருக்குமாம். அதனால பாவம் கதிரேச அண்ணன் ரொம்பவே சங்கடப் பட்டாராம்.

எங்களப் பொருத்தவரை அவங்களமாதிரி ஒரு நல்ல ஆசிரியரையோ விளையாட்டுத் தோழியையோ அவங்க சொந்த நாட்டுக்கு போன பின்னால பார்க்க முடியலிங்க.

அவங்கதான் ஒரு புதுமையை பள்ளிக்கூடத்துல கொண்டு  வந்தாங்க. குழந்தைகள் கிளி பிள்லை மாதிரி மனப்பாடம் பண்ணரத ஏத்துக்கலிங்க. அவங்க இருந்தவரை எங்களுக்கு வாத்தியாருங்க பரிட்சையே வைக்கலிங்க. வைக்கக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க போல இருந்துச்சிங்க. அந்த அளவோட மட்டும் இல்லைங்க. குழந்தைகள் செயல் வழி படிக்கிறதுக்கு வாத்தியார்களுக்கு சொல்லிக் குடுத்தாங்களாம். உழவு பத்தின பாடத்த வயலுக்கு கூட்டிப் போய் சொல்லிக் குடுக்கனும்அதுதான் குழந்தைங்க மனசுல படியும்} என்று சொல்லிக் குடுத்ததோட நேரடியா தானே குழந்தைகளுக்கான பாட புத்தகங்களையும் சரியான அட்கள வச்சித் தயார் பண்ணினாங்களாம்.

படிப்புங்கறது புத்தகத்துக்குள்ளமட்டும் இல்லங்கிறது அவங்க நெனைப்பு.

எங்களுக்கு கரும்பைப் பத்தி பாடம் வந்தப்போ கரும்புத் தோட்டத்துக்கே  கூட்டிப்போய் காட்டினாங்க

கரும்பக் கொண்டு என்ன என்ன பொருள்கள் தயாரிப்பாங்க? அது எந்த ெந்த வடிவத்துல இருக்கும்?அவைகளோட பயன்கள் என்ந?  போன்ற விவரங்களைத் தெரியவேண்டும் என்பதர்க்காக  கரும்பாலைக்கு கூட்டிப் போய்க் காட்டினதோட கரும்பு பால் வெல்லம் எல்லாம்  எப்படி தயாரிக்கிறாங்கண்ணு அங்க வேலை செய்யக்கூடியவங்க மூலமே எங்களுக்கு புரியரமாதிரி சொல்லவச்சாங்க. ஒரு நாளு பாலக்கோட்டுல உள்ள சக்கரை ஆலைக்கும் கூட்டிட்டு போய் காட்டினாங்க.       மரத்தைப் பத்தி பாடம் வந்தப்போ ஒரு மரத்தை கூட்டிட்டு போய் காட்டினதோட, மரத்துல எப்படி பத்திரமா ஏரரது, இரங்கறது, மரத்தோட உறுப்புகள் எவை?அந்த மரத்தோட பேரு என்ந? அந்த மரத்தோட தனித்தன்மை என்ந?அந்த மரத்தை     எப்படி படமா வரயரது? னு சொல்லிக் குடுத்தாங்க. ஆடை வகைகளைப் பத்திய பாடத்த புரிய வைக்க பருத்தி தோட்டத்துக்கு கூட்டிப்போய் காட்டினதுமட்டும் இல்லாம  பருத்தி செடியோட பிம்பத்தையும் எப்படி பருத்தில இருந்து நூல் கிடைக்குது?எப்படி நூல துணியாக்கராங்க?என்பது போன்ற விவரங்களையும்   நாங்களே புரிஞ்சிக்கிறமாதிரி கோட்டுச் சித்திரங்களை வரஞ்சிக் காட்டுவாங்க. பட்டு கம்பளம் முதலியவற்றைப் பத்தியும் இப்படியே அவங்களாலசொல்லித் தரப்பட்டதுங்க.   அது மட்டுமில்லிங்க, குழந்தைங்கள எப்படி விளையாட வைக்கிறதுங்கிறதுக்கு கூட அவங்க கிட்ட ொரு திட்டம் இருந்ததுபோல. ஒரு குழந்தைகூட விளையாடாம இருக்க கூடாதுன்னு அவங்க முடிவு பண்ணிநாங்க. அவங்களும் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டி வச்சாங்க. அவங்கள மாதிரி விளையாட்டுப் போட்டி வச்ச எந்த  ஆசிரியரையோ விளையாட்டு நிருவனங்களையோ இதுவரை நானு கண்டதுமில்லை, கேட்டதுமில்லைங்க. இது விளையாட்டுக் கடவுள் மேல சத்தியமுங்க. விளையாட்டுக்குனு தனியா ஒரு கடவுள்    இருக்கிறாரானு எனக்குத் தெரியாதுங்க. ஆனா நாம எல்லாத்துக்கும் கடவுள் வச்சிருக்கிறமாதிரி விளையாட்டுக்கும் ஒரு கடவுள வச்சிருந்்தா அந்த கடவுள் மெர்சியை அவங்களோட விளையாட்டு போட்டி முறைக்காகஎந்த பக்தனுக்கும் கொடுக்காத வரத்த ெல்லாம் கொடுக்கும்னு நான் உறுதியா நம்புறேங்க.  மெர்சியைமாதிரி யாரும் ஒரு நாளும் விளையாட்டுப் போட்டி வச்சதில்லிங்க.   . சாயங்காலத்துல விளையாடக் கூட்டிட்டு போவாங்க. குழந்தைகள் அவங்கள தீண்டும் விளையாட்டுல ஒரு ஊதியை வச்சி ஊதிட்டே போவாங்க. எந்த குழந்தை முதல்ல அவங்கள தொடுதோ அந்தக் குழந்தைக்கு முதல்ல ஊதியையோ அல்லது ஒரு பொம்மையையோ கொடுப்பாங்க. ஆனா பாருங்க. கடைசியா வரும் குழந்தைக்கு கூட முதல் குழந்தைக்கு தந்தமாதிரியே  பரிசு தருவாங்க. எல்லாக் குழந்தைகளையும் சமமாவே நடத்துவாங்க. ஒரு குழந்தைமனசுலேயும் தாழ்வு மனப்பான்மை வரக்கூடாதுங்கிற கோணத்துலதான் அவங்களோட கற்பித்தல் முறையும் விளையாட்டு முறயும் இருந்ததா இப்போ அவங்களப் பத்தி நெனைக்கிறப்போ எனக்குத் தோணுதுங்க. மெர்சின்நா என்ன அர்த்தம்கிறதுக்கு அவங்களோட பேரில்லிங்க. அவங்களோட வாழ்க்கைதான் உதாரணமுங்க. கண்டிப்பும் கருணையும் அவங்களோட கூடவே பொறந்த குணம்னு சொல்லனுமுங்க. அப்படித்தான் ஒரு நாளு காத்தால {புள்ளைங்களுக்கு என்ன டிபன் போட்டிங்க}னு கேட்டிருக்காங்க. அதுக்கு எங்க ஹெட்மி்ஸ்ஸஸ் {சப்பாத்தி} னுசொல்லி இருக்காங்க. ஆனா அண்ணைக்கி ெங்களுக்கு ஹாஸ்ட்டல்ல  போடப்பட்டது ரவைக் கூழுதாங்க.  பசங்கள மெர்சி விசாரிச்சிருக்காங்க. அதுல பாருங்க ஒரு குரும்புக் கார அண்ணன் மெர்சிக்கிட்ட  {அம்மா ணம்ம மேடம் என்ன டிபன்னு கேட்டா சப்பாத்தின்னு நீங்க சொல்லனும்} {யாரும் கூழுனு சொல்லக்கூடாது} னு அவங்க சொன்னதையும் போட்டுக் குடுத்திட்டாரு. அடுத்த நாளு மெர்சி காத்தால பிள்ளைங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கிரப்போவே வந்து எங்களுக்குத் தரப்படும் சாப்பாட்டுக்கான அட்டவணையை ஹெட்மிசஸ்கிட்ட காட்டி குழந்தைங்களோட சாப்பாட்டுவிஷயத்துல நீங்க மனசாட்சிக்கு விரோதமா நடக்க கூடாது, அவங்களோட பாவம் உங்களையும் உங்க குழந்தைகளையும் பாதிக்கும்} னு சொல்லிகண்டிச்சி இருக்காங்க. அதுக்கு அப்புரம் அவங்க இருந்த வரைக்கும் ஒரு நாளும் எங்க சாப்பாட்டுல கொறை இருந்ததில்லிங்க. ஆனா அவங்க சொந்த ஊருக்கு போன அப்புரம்?அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சமுங்க. மெர்சியைப்    பத்திய  ஞாபகங்கள எழுத ஆரம்பிச்சா அது பாஞ்சாலிக்கு கண்ணன் கொடுத்த சேலைமாதிரி வளர்ந்துக்கிட்டே போகுமுங்க. உங்களுக்கும் படிக்கிற பொரும இருக்காதுங்க. எப்படி மெர்சி எங்க ஸ்கூலுக்கு வந்த நாள் எங்களுக்கு கொண்டாட்டமா இருந்திச்சோ அட அதே மாதிரி அவங்க எங்கள விட்டு தன்னோட தாய் நாட்டுக்கு புரப்பட்ட நாளும் கொண்டாட்டந்தாங்க. ஆனா அந்தக் கொண்டாட்டம் எப்படி ஒரு பொண்ணோட கல்யாணம் பெத்தவங்களுக்கு சந்தோஷமும் சங்கடமுமா இருக்குமோ அப்படித்தாங்க இருந்துச்சி.  மெர்சியோட பிரிவு உபச்சார நாளு    தென்னாளிராமன் கதைல நாம படிச்சி இருப்போமில்லிங்களா அதுதாங்க பலகார மழ கதை. நெஜமாவே மெர்சி எங்கள விட்டுப் பிரிஞ்சி போன அந்த நாள இனிப்பும் காரமுமா  பலகார மழை நாளா ஆக்கிட்டுதான் போனாங்க. அவங்கள கடைசியா நானும் என்கூட டான்சு ஆடின நண்பர்களும் {உங்களோட  பழகின காலம் சந்தோஷமா இருந்துச்சி உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் அருளுவாரு}னு எங்களுக்கு பாட்டு வாத்தியாரு கத்துக் குடுத்த பாட்டோட வரிய  சொல்லி கடைசியா வாழ்த்துப் பாடி அனுப்பினோம். அந்த பாட்டோட அர்த்தம்அட அப்போ புரியலிங்க.  எனக்கு அவங்களப் பத்திய ஞாபகங்கள எழுதுர இண்ணைக்குதாங்க புரியுது.

Series Navigationஷங்கரின் ‘ நண்பன் ‘அடிகளாசிரியர் மறைவு – அஞ்சலி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *