உ.வே.சா.
==========
இவருக்கு நாலு வேதங்களும்
எட்டுத்தொகையும்
பத்து பாட்டும் தான்.
கி.வா.ஜ
========
செந்தமிழும்
“பன்”தமிழும்
இவருக்கு நாப்பழக்கம்.
திரு.வி.க
==========
தமிழின் “ஓங்கு வெள்ளருவி”
ஓட வைத்தது
“கல்கி”எனும் தேனாறு.
வ.உ.சி
=======
சுதந்திரம் எனும்
கனல் எழுத்து நடுவேயும்
“தொல்காப்பியம்” தந்தவர்.
பரிதிமாற்கலைஞர்
=================
நரியை பரியாக்கினர்.
பரியை நரியாக்கினர்…இவர் தான்
தமிழை “பரிதி” ஆக்கினார்.
மகாகவி பாரதி
=============
தமிழ் நாட்டின்
இமய மலையும் இவன் தான்.
எரிமலையும் இவன் தான்.
பாரதி தாசன்
===========
பாரதியின் நிழல் அல்ல இவர்.
அந்த விளக்கின் அடித்திரி இவர்.
இவர் விட்ட சுடர் தமிழின் அமுதம்.
வையாபுரிப்பிள்ளை
=================
ஊரான் மொழியை ஊட்டி வளர்த்தால்
தன் மொழி தானே வளரும் என்றவர்.
தமிழ் வெளிச்சத்தில் சமஸ்கிருதம் படித்தவர்.
ஆறுமுக நாவலர்
===============
இவர் தமிழால்
கற்கண்டு தீவு ஆனது
இலங்கை.
விபுலானந்த அடிகள்
==================
இவர் நரம்பு மீட்டினால்
சரிகமபதநிச கேட்காது.
அகரமுதல என்று தமிழே ஒலிக்கும்
மறைமலை அடிகள்
==================
தமிழே தேன் தானே.
அதையும் தேனில் வடிகட்டி
தூய தமிழ் தந்த பண்பாளர்.
தேவநேயப்பாவாணர்.
===================
தொல்காப்பியரும் மலைத்துப்போவார்.
தேவ மொழிக்கும் கருப்பை தமிழே..என்று
இவர் நாட்டிய திறம் கண்டு!
புலியூர் கேசிகன்
==============
சங்கத்தமிழ் ஓலைகளை யெல்லாம்
படிக்கும் காகிதங்கள் ஆக்கினார்.
உரைத்தமிழின் உயர்தர சிற்பி இவர்.
கோவி. மணிசேகரன்
===================
வாளும் மகுடமும் உரசும் ஒலிகளில்
இதழ்ப்பவளங்கள் கோத்த
காதல் தேசத்தின் கனவுகளும் உண்டு.
சாண்டில்யன்
===========
இதோ இளவரசன் உதடு குவித்தான்
இன்பவல்லி கண்புதைத்தாள்…ஆனால்
ஆயிரம் பக்கங்கள் ஒரு “முத்தத்துக்கு”
ஆரணி குப்பு சாமி முதலியார்
===========================
ஆங்கில ஆடையைக் களைந்து
திகில் மூட்டும் எழுத்துகளின்
துகில் உரிந்த துணிச்சல் எழுத்தாளர்.
வடுவூர் துரைசாமி அய்யங்கார்
===============================
கத்தியில் ஒட்டியிருக்கும்
ஒற்றை மயிர் போதும்…கொலையின்
ஒளி ஒலிக்காட்சி இவர் எழுத்துக்களில்.
தமிழ்வாணன்
=============
தொப்பியும் கருப்புக்கண்ணாடியும்
சங்கர்லாலுடன் கூட்டணி அமைத்து
எழுத்துக்களின் ஆட்சியையே பிடித்துவிட்டன.
ஆபிரகாம் பண்டிதர்
====================
தமிழில் இசை ஆராய்ச்சியை
நுட்பமாய்த் தந்த
தமிழ்நாட்டின் “கால்டுவெல்”
ராஜம் அய்யர்
==============
கமலாம்பாள் சரித்திரம் என்பதில்
கி.மு வும் அல்ல கி.பி யும் அல்ல
பெண்ணியம் துடித்த முதல் இதயம் அது.
வீர்மா முனிவர் என்ற ஃபாதர் பெஸ்கி
===================================
தமிழுக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்தவர்
அன்பே சிவம் என்றால் இவரது
சிலுவை மரத்திலும் சிவலிங்கம் செய்யலாம்.
- பசித்தவனின் பயணம் – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
- ஏகப்பட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையே பதில்
- நினைவுகளின் சுவட்டில் – 86
- எழுத்தாளர்களின் ஊர்வலம் (பாகம்..2)
- எல்ரெட் குமாரின் ‘ முப்பொழுதும் உன் கற்பனைகள் ‘
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –
- சேத்தன் பகத்தின் ‘ ரெவல்யூஷன் 2020 ‘
- பிரகாஷ்ராஜின் ‘ டோனி ‘
- மயிலு இசை விமர்சனம்
- பஞ்சதந்திரம் தொடர் 31- பாருண்டப் பறவைகள்
- கலங்கரை விளக்கு
- வேதனை விழா
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 7) எழில் இனப் பெருக்கம்
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 31
- பழமொழிகளில் ஒற்றுமை
- மரணம்
- அகில நாடுகளில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
- இன்றைய பள்ளிக் கல்வி முறையும் ஒரு வகுப்பறைக் கொலையும்
- கனவுகள்
- பட்டறிவு – 1
- தற்கொலையிலிருந்து கொலைக்கு …
- இஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்
- குருதி சுவைக்கும் வாழ்வு எனக்குறியது.
- ஐங்குறுப் பாக்கள்
- ஐசிஐசிஐ வங்கியின் மென்பொருள் பாதுகாப்பானதா…?
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 11
- இவள் பாரதி கவிதைகள்
- முன்னணியின் பின்னணிகள் – 27
- Kalachuvadu to publish a collection ancient Chinese poems in Tamil
- தமிழகத்தின் ஹம்ஸா கஷ்காரியும் சவுதி அரேபியாவின் மனுஷ்யபுத்திரனும்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 54