வேதனை விழா

This entry is part 12 of 31 in the series 19 பிப்ரவரி 2012

ஆதாம் ஏவாள் பிறந்த மேனியில்
காதலர் தின வாழ்த்து
ஓலையில் எழுதிய முதலிரு
காதலர் !
காதல் என்பது கனவு,
களவு, உறவு, பிரிவு, துறவு !
இரகசியத் தேடல் !
முரசத்தில் அடித்து அதை
முத்திரை செய்வது
முறை ஆகுமா ?
காதற் புறாக்கள் தூது போய்ப்
பாதிக்கப் படும்
வேதனை விழா இது !
நீதியும் போதனையும்
வேதமும் மருந் தில்லை
காதலர் புண்ணுக்கு !
நீயும் நானும்
ஓயாக் கடல் மேல்
பாய்மரப் படகில் போகிறோம் !
இலக்கணம் தவறி
எம்மே பட்டம் பெறாதர் நாம் !
பாதை தவறிப் போய்க்
காதல் தீவிலே
மோதிக் கிடக்கிறோம் !
காதலர் தின நினைவு
காதலரை முடுக்கவா ?
ஒடுக்கவா
அல்லது தடுக்கவா ?

++++++++++++++++

Series Navigationகலங்கரை விளக்குஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 7) எழில் இனப் பெருக்கம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *