சான்ஸ்கீரிட் டமிழுக்கு தம்பியா? அல்லது அண்ணா ?
இல்ல இரண்டுத்தும் என்னதான் ஆச்சு ? தாயாதி சண்டையா?
இல்லான மூத்த தாரத்து மக்களா? சக்களத்தி சண்டையா?
அன்னிக்கி இன்ன டானா ? அந்த கச்சி மீட்டிங்கிலே வடமொழி ஒழிப்போன்னு குரல் உட்டுகினு கிறான் பழக்கடை பாலு.
தமிழன் டிவி யில்ல என்ன சொல்றன்னு சம்ஸ்கிருதம் கலக்கமா பேசனும்கிறாண் !, வடமொழி அது இதுனு ரவுஸ் உடறானுங்க.
அவன் இன்னடான கோயிலுல டமில்ல சாமிக்கு பாட்டு படிக்க கூடாதாம்.. சாமிக்கு இன்னா டமில் தெரியாத மாறி பிலீம் காட்டறாங்ன்னு.
ஏதோ போன போவதுன்னு , சில கோயில மட்டும் தமிழிலும் பாட்டு படிப்போம் ன்னு போர்டு போட்டுனுங்கி றானுங்க
டமிலிலும் .அர்ச்சனை செய்யப்படும் சொல்லறான்.
அப்போன்னுனா அந்த சாமி மட்டும் டமில் தெரிந்த சாமியா ?
மத்த சாமிக்கெல்லாம் டமிலே தெரியாத ?
இது தேவ பாஷை அப்படி இப்படி உதார் உடறானுங்க
என் சின்ன மண்டையிக்கு ஒன்னுமே பிறியவே இல்லை !!
அன்னிக்கு இன்னாடான மீர்சாப்பேட் மார்க்கெட்ல எய் கஸ்மாலாம் திட்டிக்கி இருந்தேன்.
சுப்பு சாஸ்திரி கூடவே வந்து , இன்னா சம்ஸ்கிருதாத்திலே பேசுறேள் னு சொல்லி ஒரு போடு போனரு
ஏன்ன நைனா கலாய்க்கிறீயா ? கேட்டனா?
அவரு சொன்னரு , கஸ்மலம் இன்னா சம்ஸ்கிருதத்தில் அழுக்கு அர்த்தம்னு சொன்னார்.
நஸ்தி பண்ணிடுவேன்னு குரல் உடுக்கினு இருந்தப்போ கூடவே வந்து
இதுவும் சமஸ்கிருத்திலே இருக்குதுன்னரே பாக்கனும்,
நஸ்தி னா இல்லையினு அர்த்தமுன்னுரே பார்க்கனும்
கப்பு ஆயிருச்சு…
என் பொஞ்சாதி கிட்டே சண்டை உடுக்குனு இருந்தபோது..
தோ பார் … ஏய் அன்னம் மெளனம் கலக நஸ்தி .. கம்முன்னு கிட சொன்னேனா
பின்னாலே வந்து சாஸ்திரி வந்து ..
என்னடா? முனுசாமி சமஸ்கிருத்திலே பூந்து விளையாடறா ?ன்னு கேட்டு கினே
மெளனம் கலக நஸ்தினா.
( பேசாம இருந்தா சண்டையே ல்லேனு )
விளக்கமா சொல்லிடு போனரு..
அப்பாலே … நம்ப கதாநாயகரு ரஜினி , நாயகி குஷ்பூ படம் போலாமான்னு அன்னத்தை கேட்டுக்கினு இருந்தப் போது ,
குடுகுடுனு வந்து சாஸ்திரி இதுவும் சமஸ்கிருத்திலே இருக்குது சொல்லி ஒரு பெரிய விளக்கமே குடுத்தார்.
கதாம் கக நயதி இதுக்க்தே கதாநாயகா
( கதை யார் நடத்தி செல்லுகிறானோ அவன் கதாநாயகன், நடத்தி செல்லுப்பவள் கதாநாயகி ) ஒரு பெரிய கதையே சொல்லி போட்டார்.
எனக்கு ஒரே கோபம போயி
ஏன்ன சாஸ்திரி எல்லாமே உன்னுது சொல்றயா ?
உனக்கே நியாயம் இருக்குதான்னுக் கேட்டேன் ..
உடனே கப்புனு .. நியாயமும் சமஸ்கிருதம் ன்னுடாரு..
பீட்டரு வீட்டல விசேஷமாம்? சுவிஷேச் கூட்டமுன்னு ஏதோவாம் .
எக தடபுடல் பட்டது.
அப்போதும் வந்து சாஸ்திரி விசேஷம், சுவிஷேசம் ,பிராத்தனை எல்லாம் சமஸ்கிருதம் பாஷைனு சொல்லி போட்டார்.
நம்ம பீச்ல கொடியேத்தி தேசியகீதம் பாடனுகல்ல .
அப்போவு வந்து கீதம் மும் சமஸ்கிருதமுன்னுர்.
ஒரு பெரிய லிஸ்டே போட்டுனு போனரு..
ஒரே பேஜரா போச்சு பா
புரியாத வெள்ளைகார மொழி இங்கீலிஸ்ல பேசலாமாம்
ஆனா நமக்கு கொஞ்சம் கொஞ்சம் நஞ்சம் புரிச்சா வாயில வர சான்ஸ்கீரீட் யூஸ் பண்ணக்கூடாதாம் இதி என்ன நியாயனு பழக்கடை பாலுண்ட்டே கேட்டான்
அது அவன், அதலாம் கிடையாது தலைவரு சொல்ட்டார்
அதான் நாங்க எல்லோரும் பேச மாட்டோம்ன்னு சபதமே எடுத்துக்கினுனோம் அது சன் டிவில கூட காட்டனே நீ பார்க்கல .
இல்லாக்கட்டி அடுத்த தப நமக்கு கவுன்சிலர் டிக்கெட் குடுக்கலன என நான் இன்ன பண்ணுவ்வேன்.. .
சன் டிவிலேயே சொல்டான்
அதுனால நீயும் அத பத்தி பேசாத சரியான்னு சொல்லிட்டு
அப்பால்லே எதுக்கு அவனுனா மட்டும் டமில்ல பூஜை பண்ண கூடாது. அது இது ஒரே குரல்லு உட்டுகினு கிரனுக. அது என்ன நியாயம்பா நீயே கேளுனு … என்னையே குடைய ஆரம்பிச்சுட்டான் பாலு
அன்னிக்கு ஒரு நாள் அம்பட்டன் வாரபதிக்கு போய்க்கினு இருந்த போது ,
ஒரே கூட்டமா இருந்தது ,
என்னட்டானு கோவிந்தனை கேட்டான் ,
அவன் வந்து , நம்ம தலைவரும், அக்காவும் செம்மொழி மாநாடுக்கு ஆள் சேக்கறங்கப்பா .
நம்ப டேங்கு கபாலி ஐயரு பெண்ணுக்கூட தஞ்சாவூரில போய் டான்ஸ் பண்ண போவது ,அங்க ஆயிரம் பொம்பளை பசங்க ராஜாராஜ சோழனுக்கு ஆயிரமாவது பர்த்டேவாம்பா அதுக்கு போய் டான்ஸ் பண்ண போறங்க
ஏக தடபுடலா இருக்க போவதுன்னு சொல்லுடு போய்க்கினே இருந்தான்.
அது என்னது செம்மொழி , அப்போ நாம பேசறதெல்லாம் என்ன மொழி ??
சாஸ்திரி வூட்டு சம்சாரம் என்னவோ புலம்பினு இருந்தது. அவகிடேய போய் என்ன என் பொஞ்சாதி அன்னம் போய் கேட்க போக ,
பொச்சுக்கு ஆழ தொடங்கீச்சி.
என்னடாது பேஜரா போச்சு நினைச்சிக்கினேன். அழுவத ,
என்ன விசயம்னு சொல்லுக்கா. பயம் படதே
சாஸ்திரிக்கு பத்து மாசமா சான்ஸ்கீரீட் காலேஜிலேருந்து சம்பளம் வரவே இல்லையாம்.வீடு வாடகை கொடுக்கனும் ,ஒனர் பாலு திட்டிட்டு போனாராம்,
காலேஜிக்கு கவர்மெண்ட்டிலெருந்து வரவேண்டிய பணத்தை நிறுத்திப் பூட்டங்களாம். கேக்கவே கச்டாம இருந்தது.
மயிலாப்பூர்ல சான்ஸ்கீரிட் காலேஜ் எவ்வளவோ நாளா கீது
அதுக்கு கவர்மெண்டு பணத்தை எதுக்கு நிறுத்தனும்..
இவனுன்ன 2Gல கைய வெச்சங்கல ?, இல்லை லாட்டரி வித்தானுங்களா?,
அங்க என்னடானா வண்ணாண்துறை மார்க்கெட் டாஸ்மாக்குல லைட், ஏசி யேல்லாம் போட்டு சூப்பர்ரா மாரிஸ் ஒட்டலு பார் மாரி ஆகிட்டானுக
இங்க என்னட்டான சான்ஸ்கீரிட் காலேஜ் மூடற மாறி பண்ணற்றங்கானுக.
எனக்குனு ஒன்னுமே பிறியவே இல்லை !! இப்பவே கண்ணை கட்டுது.
எது கரீட்டு , எது தப்பு.. எவன் விளையாடறான் , எவன் ஆட்டைய போடறான்
காலேஜ் முடிட்டு பளாட் போட போறானுங்கள்ளா?
பெரம்பூர் பின்னி மில்ஸ் முடிட்டு கண்ணாம்பூச்சி காட்டினாங்களே,
தாம்பரம் கார் கம்பெனி முடிட்டு , ஒரகடத்துல புதுச்சா ஆரம்பிக்கிறேன்னு
கல்லா கட்டினாங்கல அது மாறிய ?..
பாவம் சனங்கதான் கஸ்ட படுது…
இந்த சாஸ்திரிக்குதான் வேற என்ன வேலை தெரியும், பாவம்.
மெய்யாலுமே என்னதான் தகராறு இந்த இரண்டு பாஷைக்களுக்கும் எப்பத்தாலும் ஒரு ஜென்ம பங்காளி சண்டை மாதிரி பேசறானுங்க.
இவன் வணக்கம் ன அவன் நமஸ்காரம் ரான்
இவன் தண்ணீர்ன அவன் ஜலம் ரான்
இவன் தம்பினா அவன் சகோதரன் ரான்
இவன் கோவில்ன அவன் ஆலயம் ரான்
இவன் மொழின்ன அவன் பாஷை ரான்
இதுல எல்லாம் வித்தியாசம் இல்லை எனக்கும் புரியுது ,
ஆனா இந்த கீரி பாம்பு சண்டைதான் புரியவே மாடேங்குது.
இந்த இரண்டு பாஷைக்கும் நடுவுல ஏதோ அரசியல் ஒடுது அதுதான் எனக்கு புரிபடமாட்டேங்குது.
உனக்கு தெரிஞ்ச ஒரு கடிதாசி போடு நைனா.
ரவிசந்திரன்
- ஆண்ட்ரூ லூயிஸின் “ லீலை “
- சயந்தனின் ‘ஆறாவடு’
- ஆர். பெஞ்சமின் பிரபுவின் “ படம் பார்த்துக் கதை சொல் “
- குறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்
- தங்கம் 5- விநோதங்கள்
- பில்லா 2 இசை விமர்சனம்
- மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்
- தாகூரின் கீதப் பாமாலை – 12 உன்னைத் தேடி வராத ஒருத்தி !
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11
- முள்வெளி – அத்தியாயம் -7
- “பெண் ” ஒரு மாதிரி……………!
- அகஸ்டோவின் “ அச்சு அசல் “
- பஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம், இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 22
- ’சாலையோரத்து மரம்’
- புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:
- சித்திரைத் தேரோட்டம்…!
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 18) தோழி மீது ஆழ்ந்த நேசம்
- கொத்துக்கொத்தாய்….
- பங்கு
- ஈரக் கனாக்கள்
- பாரதிதாசனின் குடும்பவிளக்கு
- விதை நெல்
- கால இயந்திரம்
- மகன்
- புத்தகம்: லண்டன் வரவேற்பதில்லை ஆசிரியர்: இளைய அப்துல்லாஹ்- புத்தக வெளியீடு
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தெட்டு இரா.முருகன்
- இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது
- சாயப்பட்டறை
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24
- ரௌத்திரம் பழகு!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! முடங்கிய விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை
- ‘சென்னப்பட்டணத்து எல்லீசன்!’
- “என்ன சொல்லி என்ன செய்ய…!”
- இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபகவிழா அழைப்பிதழ்!
- “பேசாதவன்”
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 57
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”
- மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்
- எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்