சுற்றுச்சூழலால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்
An Ancient Civilization, Upended by Climate Change
By RACHEL NUWER
ரேச்சல் நுவெர்
இந்து சமவெளி நாகரிகம்(indus civilization) என்றும் சிந்து சமவெளி நாகரிகம் என்றும் அழைக்கப்பட்ட இடத்தில் இன்றும் நிலவியலாய்வாளர்களும், அகழாராய்வாளர்களும் ஆராய்ந்து வருகிறார்கள். வேதங்கள் என்னும் புராதன புத்தகங்கள் இங்கேயே 3000 வருடங்களுக்கு முன்னர் இயற்றப்பட்டதாக கூறினர். இந்த வேதங்கள் சரஸ்வதி என்னும் மாபெரும் நதி இங்கே பாய்ந்து சென்றதாக கூறுகின்றன. இந்த சரஸ்வதி என்ற பெயரிலேயே கல்விக்கான கடவுள் அழைக்கப்படுகிறாள். ”எல்லா நதிகளிலும் பிரம்மாண்டமானதும் மகத்தானதுமான சரஸ்வதி” என்று வேதங்கள் கூறுகின்றன. ஆனால், 4000 ஆண்டுகளுக்கு முன்னால், சுற்றுச்சூழல் மாறுபாடால் இந்த நதி காணாமல் மறைந்ததாக இன்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
நிலவியலாய்வாளர்களும், புவிமாற்ற ஆய்வாளர்களும், அகழ்வாராய்ச்சியாளர்களும், கணிதவியலாய்வாளர்களும் ஒன்றிணைந்து பல நூற்றாண்டுகளாக கேள்விக்குள்ளான புதிர் “இந்து சமவெளி நாகரிகம் என்னவாயிற்று” என்பதை ஆராய்ந்து மேற்கண்ட முடிவுக்கு வந்துள்ளார்கள்.
இந்த மாபெரும் நாகரிகம் 4500 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கே எழுந்தது. இது 600 ஆண்டுகள் மிகவும் செழித்து நின்றது. அதன் பின்னர் மெல்ல மெல்ல அழிய ஆரம்பித்தது. முந்திய ஆராய்ச்சியாளர்கள், வெளியிலிருந்து வந்த ஆக்கிரமிப்புப் படையால் இந்த நாகரிகம் அழிந்தது என்று கருதிவந்தார்கள். மற்றவர்களோ, சுற்றுச்சூழல் மாறுபாடே இதற்கு காரணம் என்று சொல்லிவந்தார்கள். Proceedings of the National Academy of Sciences அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டு இரண்டாம் கொள்கையே சரி என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.
லிவியூ ஜியோசான் Liviu Giosan என்ற Woods Hole Oceanographic Institution in Massachusettsஇல் பணிபுரியும் புவியாய்வாளரே இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கியவர். ”சுற்றுச்சூழல் எவ்வாறு மக்களை பாதிக்கிறது என்பதைத்தான் பார்க்க மறந்திருக்கிறார்கள்” என்று கருதினோம் என்று இவர் கூறுகிறார். மாறுதல்களை பெருமளவில் ஆய்வு செய்து இந்த முடிவிற்கு வந்திருக்கிறார்கள்.
துணைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் மூலமாகவும், நில அளவை மேடு பள்ளம் ஆகியவற்றை ஆராய்வதன் மூலமும், இந்த ஆற்றுப்படுகையின் நிலப்பரப்பை டிஜிட்டல் வரைபடங்களாக உருவாக்கினார்கள். ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் படுகைகளின் வருடக்கணக்கை ஆராய்ந்து எந்த நிலம் நதியாலும் எந்த இடம் காற்றாலும் மாறுபாடு அடைந்துள்ளது என்பதை டிஜிட்டல் வரைபடங்களில் பொருத்தினார்கள். இந்த செய்திகுவியல், ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்த அகழ்வாராய்வு மாதிரிகள் மீது படியப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகள், 10000 வருடங்களாக இந்த இடம் எவ்வாறு மனிதர்களின் வரலாற்றையும், அதன் மீது நிலப்பரப்பின் மாறுபாடுகளையும், எது அவர்களை இங்கேயிருந்து விரட்டியது என்பதையும் மிகத்துல்லியமாக அறிய உதவின.
இந்த வரலாறு இவ்வாறு போகிறது:
காட்டாறாக, கட்டுப்பாட்டுக்கு அடங்காத ஆறுகள் இந்து சமவெளியின் இதயத்தினூடாக பாய்ந்து சென்றன. இந்த ஆறுகள் எந்த காலத்தில் எந்த திசைக்கு மாறும் என்று திட்டமுடியாதபடிக்கு இருந்ததால், இதன் கரையில் எந்த ஒரு நகரமும் அமைக்கப்பட முடியாததாக இருந்தது. பல நூற்றாண்டுகள் சென்றபின்னால், பருவமழையின் வரவு குறைந்த பின்னால், வெள்ளங்களின் வலிமை குறைந்த பின்னால், விவசாயம் செய்யவும் வீடுகள் அமைக்கவும் வசதியான நிலைப்பட்ட சூழல் உருவானது.
இன்றைக்கு பாகிஸ்தானாகவும், வடமேற்கு இந்தியாவாகவும், தெற்கு ஆப்கானிஸ்தானகவும் இருக்கும் இந்து சமவெளி நாகரிகம் 625000 சதுர மைல்கள் பரப்புள்ளதாக புராதன எகிப்து, மெஸபட்டோமியாவின் சாதனைகளுக்கு சவால் விடும் வண்ணம் மிகப்பெரியதாகவும் வளமுள்ளதாகவும் வளர்ந்தது. அதன் நகரங்களில், வீட்டுக்குள்ளேயே தண்ணீர் கொண்டுவரும் குழாய்களும், குளியலறைகளும், வடிவமைக்கப்பட்ட தெருக்களும், மிகப்பெரிய அறிவுஜீவி வாழ்க்கை முறையும் இருந்தது.
விவசாயத்துக்கு வாய்க்கால்களை கட்டி வாழ்ந்த எகிப்தியர்களையும் மெஸபட்டோமியர்களையும் போலல்லாமல், ஹரப்பாவில் இருந்தவர்கள், நம்பிக்கையான பருவமழை தரும் தண்ணீரையும், அங்கு இருந்த சிறிய ஆறுகளையும் சார்ந்திருந்தார்கள்.
ஆனால், பின்னால் வந்த தலைமுறைகள் கண்டறிந்தது போல, 2000 வருடங்களுக்கு பின்னர் விவசாயத்துக்கான நம்பத்தகுந்த நிலைமை அழிந்து விவசாயம் பொய்க்க ஆரம்பித்தது.
காலம் செல்ல செல்ல, பருவமழை பலவீனமாக ஆகிக்கொண்டே சென்றது. ஆறுகள் எதிர்பார்த்தது போல குறித்த நேரத்தில் குறித்த காலத்தில் வெள்ளத்தை கொண்டுவரவில்லை. இதனால் பயிர்கள் அழிந்தன. விவசாயம் உருவாக்கும் அதிகப்படி வருமானம் இல்லாததால், சமூகத்தால், வியாபாரிகளையும், கலைஞர்களையும், கைவினைஞர்களையும், அறிவாளிகளையும் ஆதரிக்க முடியவில்லை.
மக்கள் நகரங்களை விட்டு வெளியேறி, கிழக்கே கங்கை நதிக் கரையை நோக்கி கிளம்பினர். அங்கே கங்கைக்கரையில் மழை நம்பத்தகுந்தாற்போல இருந்தது. ஆனால், ஒரு பெரு நகரத்தை தாங்கும் வண்ணம் நம்பத்தகுந்தாற்போல இல்லை. சமவெளியில் வாழ்ந்த சமூகம் சிதறியது. சின்னஞ்சிறு கிராமங்களாகவும், சிறு நகரங்களாகவும் சிதறியது.
“நகரங்கள் அழிந்த சிதிலம் அடைந்து நசிகின்றன. ஆகின்றன. அவை முழுக்க முழுக்க காணாமல் போவதில்லை” என்று ஜியோசன் கூறுகிறார். “இறுதியில், இந்த நகரங்கள், உதிரி மக்களின் தற்காலிக தங்கும் இடமாக ஆகிவிடுகிறது”
சரஸ்வதி நதியின் புவியியல் சிதிலங்கள், காக்கர்-ஹக்ரா பள்ளத்தாக்கில் இருப்பதை இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தார்கள். இமயத்திலிருந்து ஓடிவரும் தண்ணீரால் மட்டுமே இந்த சமவெளி நாகரிகம் இருந்ததாக இதுவரை ஆராய்ச்சியாளர்கள் கருதி வந்ததற்கு மாறாக, பருவமழையினால் மட்டுமே இந்த நாகரிகம் வாழ்ந்து வந்ததை அறிந்தார்கள். சுற்றுச்சூழல் வறண்டநிலமாக ஆக ஆக, பருவ மழை பொய்க்க பொய்க்க, சரஸ்வதி என்ற நதியும் அதன் நாகரிகமும் புராதன கதைகளில் ஒன்றாக ஆகி பின்னுக்கு மறைந்தது.
அன்றைய ஹரப்பா வாழ் மக்களிடமிருந்து இன்று வாழும் மக்கள் கற்றுகொள்ள நிறைய பாடங்கள் உண்டு என்று டாக்டர் ஜியோசன் கருதுகிறார். “நாம் நாளையை பற்றி சிந்திக்கிறோம். நாம் நமது பிள்ளைகள் , நமது பேரப்பிள்ளைகளை பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். ஆனால், தொடர்ந்து மாறிகொண்டே செல்லும் சுற்றுச்சூழலும் மிக மிக மெதுவாக மாறுவதால், நமது சிந்தனைக்குள்ளும் நமது விவாதப் பொருள்களிலும் அது வருவதில்லை” என்கிறார்.
நவீன கால கலாச்சாரங்கங்களும், எதிர்கால கொள்கை வகுப்பவர்களும், ஆழமான காலத்தை மிகவும் ஆய்ந்து புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார். மிக மிக மெதுவாகவும் சிறியதாகவும் நடக்கும் சிற்சில மாறுதல்களும், இன்று நாம் பயன்படுத்தும் பொருள்கள் , மூன்றாவது, நான்காவது ஐந்து தலைமுறைகளுக்கு அப்பால் என்ன மாறுதல்களை உருவாக்கும் என்று சிந்திக்க வேண்டுமென்கிறார். சில பயன்பாடு பொருள்களில் , உதாரணமாக, பெட்ரோலியம் போன்ற பயன்பாடு பொருள்களில் இருக்கும் மாறுதல்கள் (குறைவுகள்) அவ்வளவு மெதுவாக நடக்கவில்லை.மிக விரைவாகவே இந்தப் பொருள்கள் அருகி வருகின்றன.
“இந்து சமவெளி நாகரிகத்துக்கு நடந்தது போல, நாமும் ஒரு பயன்பாடு பொருளை நம்பி வாழ்கிறோம். அது வருகிறது. பிறகு சென்று மறைந்து விடுகிறது. இன்றைக்கு நாம் தீவிரமாகக் கருதவேண்டிய பயன்பாடு பொருள பெட்ரோலியம் ஆகும். ” என்கிறார் டாக்டர் ஜியோசன்.
http://green.blogs.nytimes.
- காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!
- முள்வெளி அத்தியாயம் -11
- தங்கம் – 9 உலகத் தங்கக் குழுமம்
- தடயம்
- நாஞ்சில் கவிஞரின் நகைச்சுவைத்துளிகள்..
- காத்திருப்பு
- சந்தோஷ்சிவனின் “ உருமி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 15
- தாகூரின் கீதப் பாமாலை – 16 கீத இசையின் தாக்கம்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 22)
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4
- நான் செத்தான்
- நச்சுச் சொல்
- மாறியது நெஞ்சம்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-4)
- ஜூன் முழுவதும் சென்னையில் வானவில் விழா!
- எஸ்.எழிலின் “ மனங்கொத்திப்பறவை “
- பஞ்சதந்திரம் தொடர் 46
- காத்திருப்பு
- இஸ்மத் சுக்தாய் – ஒரு சுயசரிதை
- சுற்றுச்சூழல் மாறுதல்களால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றிரண்டு
- 2014 இல் இந்தியா அடுத்தனுப்பும் சந்திரயான் -2 தளவுளவி இறக்கத் திட்டத்தில் ஏற்படும் தாமதம்
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 28
- கேரளாவின் வன்முறை அரசியல்
- துருக்கி பயணம்-4
- அத்திப்பழம்
- கேரளாவில் சிபிஎம் தனது மரணச்செய்தியை எழுதிகொண்டிருக்கிறதா?