ருத்ராவின் க‌விதைக‌ள்

This entry is part 12 of 43 in the series 17 ஜூன் 2012

 

பட்.
இதன் கதை
முடிந்து விட்டது.
இனிமேல் தான்
கதை எழுதப்போகிறார்
ஆசிரியர்.”கொசு”
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________

எழுதிச்செல்லும்
விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்.
எங்கே முடியும் விதி?

“பத்திரிகை அலுவலகத்தின் குப்பைக்கூடை”

_______________________________________________

பேனாவுக்கு
மட்டுமே புரிந்தது.
காகித‌ம் ம‌ட்டுமே
ர‌சித்த‌து.

“க‌விதை”

_________________________________________________

எழுதி முடிக்க‌வில்லை.
பேனாவில் எல்லாம்
எறும்புக‌ள்.

“த‌மிழுக்கும் அமுதென்று பேர்”

___________________________________________________

என்னைத் தூக்கி கொடுக்கிறார்க‌ள்
என்னைக்கேட்டா கொடுக்கிறார்க‌ள்.
இது யார் எழுதிய‌ க‌விதை?

“ஞான‌பீட‌மே எழுதிய‌து”

____________________________________________________

ல‌ட்ச‌க்க‌ண‌க்கான
ஸ்லோக‌ங்க‌ள் கேட்டு
மோட்ச‌ம் அடைந்து விட்ட‌ன‌.

“சிறைக்க‌ம்பிக‌ள்”.

_____________________________________________________

ராம‌ர்க‌ளைத் தேடுவ‌திலும்
இங்கு
ஆடு புலி ஆட்ட‌ம் தான்.

“ஜ‌னாதிப‌தி தேர்த‌ல்”

______________________________________________________

மூட்டை மூட்டையாக‌
உயிர் எழுத்து மெய் எழுத்துக்க‌ள்.
ஊடே ஊடே வைர‌ங்கள்.

“நாவ‌ல்”

_______________________________________________________

ப‌சியை ம‌ட்டுமே
சாப்பிட்டுக்கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.
தாக‌த்தையே குடிப்ப‌வ‌ர்க‌ள்.

“எழுத்தாள‌ர்க‌ள்”

_______________________________________________________

இந்த‌ப்பூக்க‌ளின்
ம‌க‌ர‌ந்த‌ங்க‌ள் எல்லாம்
“பூலிய‌ன் அல்ஜீப்ரா”க்க‌ள்.

“வ‌லைப்பூக்க‌ள்”.

_______________________________________________________

ருத்ரா

Series Navigationஜென்மணமுறிவும் இந்திய ஆண்களும்
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *