புதிய கட்டளைகளின் பட்டியல்..

ஒரு வரையறை வைத்துக் கொள்ளமுடியவில்லை உனது எல்லை எதுவென்ற வரைபடத்தை எனது அறைச் சுவரில் ஒட்டி வைக்கிறாய் நினைவுப் படுத்திக் கொள்ளவோ அல்லது ஞாபகத்தில் இருத்திக் கொள்ளவோ புதிய கட்டளைகளின் பட்டியலொன்றை வாசலில் நின்றபடி சத்தமிட்டு வாசித்துச் செல்கிறாய் படித்துக் கொண்டிருந்த…

பஞ்சதந்திரம் தொடர் 47

  மூடத் தச்சன் ஒரு ஊரில் ஒரு தச்சன் இருந்தான். அவன் மனைவி ஒரு வேசி என்பது ஊரறிந்த சங்கதி. அவள் நடத்தையைச் சோதிக்க நினைத்தான் தச்சன் ‘’இவளை எப்படிச் சோதிப்பது? பெண்களின் கற்பின் முன்னே நெருப்பு குளுமையடையும், நிலா நெருப்பாகிவிடும்,…

பிரேதம்

  புத்தகம் மூடியே கிடந்தது மேஜையில் காபி ஆறிப்போயிருந்தது ஆஸ்ட்ரேவில் சாம்பல் இல்லை இன்னும் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது அவளுக்கு உற்ற துணையாய் இருப்பேன் என்றேன் ஆனால் இதற்கு துணை வர முடியவில்லை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள…

கன்னியாஸ்திரிகளின் சிலுவைகளும் சில பிரார்த்தனைகளும்

குருசு.சாக்ரடீஸ் பிரார்த்தனைகூடத்தின் பாடல் அலையில் போன்சாய்களாய் உருமாறும் கன்னியாஸ்திரிகள் ரோமபுரியின் கனவில் வார்த்தெடுக்கப்பட்ட போன்சாய்களின் பாடல் திணறும் சுவாசத்தில் உயிர்க்கின்றன பறவைகள் போன்சாய்கள் முணுமுணுக்கும் வெதுவெதுப்பான காலையை வரவேற்க காத்திருக்கின்றன போக்கிடமற்ற பறவைகள் பிரார்த்தனைக்கான பாடல்கள் கை தவறிய நாணயத்தைப் போல…
வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம்

வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம்

மதியழகன் சுப்பையா காஞ்சிபுரம் இலக்கியக்களம் அமைப்பு சார்பாக வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த்து. இதில் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில் கவிஞர் அ. வெண்ணிலா தலைமை…

ஒரு விவாகரத்து இப்படியாக…!

  எழுதியவர்: ’கோமதி’   காலை முதல் பக்கத்து போர்ஷனில் ஏதோ தகராறு. விவரம் சரியாகப் புரியவில்லை. ஆனால், காரசாரமான விவகாரம். நான் அலுவலகம் புறப்படும் வரை தொடர்ந்ததால் எனக்குப் புறப்படவே முடியவில்லை. எப்படியாவது விவரம் அறியவேண்டும். என் மனைவியோ அவள்…
திலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்

திலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்

  திலக பாமா ஒரு கவிஞர். இதோடு நான் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் சமீபகாலமாக இது சாத்தியமில்லாது போய்க்கொண்டு இருக்கிறது. நான் கவிஞர் என்று சொல்வதோடு நிறுத்திக்கொண்டாலும், பெயரைப் பார்த்து பெண் கவிஞர் என்றும் சேர்த்துப் படித்துக்கொண்டு, அதற்கான இன்றைய தமிழ்ச்…

தாகூரின் கீதப் பாமாலை – 17 விருப்பமற்ற இல்லம்

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேற்றுக் கடந்த இரவை நான் மீட்டு வருவ தெப்படி ? வீணாய் விழிகள் ஏன் கண்ணீர் துளிகள் சிந்தும் ? இந்த அங்கியை அணிவாய் என் நண்பனே !…

முள்வெளி அத்தியாயம் -12

'செக்யூரிட்டி கேமரா' வழியாக வரவேற்பறையில் உட்கார்ந்திருக்கும் இளம் பெண்ணை லதா 'கம்ப்யூட்டரி'ல் பார்த்தாள். இருபது இருபத்தி இரண்டு வயது இருக்கும் அந்தப் பெண்ணுக்கு. தனது மண வாழ்க்கை தொடர்ந்திருந்தால் ஒருவேளை இதே வயதுப் பெண்ணோ பையனோ ஒரு வாரிசாக வந்திருக்கலாம். தோழியின்…

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-5)

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com   வறுமையிற் செம்மை போற்றிய கவிஞர்கள் வறுமை மிகுந்த தமது வாழ்க்கையிலும் செம்மாந்த வாழ்க்கையினை இரு கவிஞர்களும் வாழ்ந்தனர். வறுமையின்றி மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்பி…