தில்லிகை – தில்லியில் சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டு இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தைப் பெற்றுவரும் தமிழ் இலக்கிய வட்டம். இது, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு, தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சந்திப்புகளை நட த்தி வருகிறது.
ஒவ்வொரு மாதமும் ஒரு மையக் கருத்தை ஒட்டி இந்தச் சந்திப்புகள் நிகழ்கின்றன. இதுவரை, ‘மதுரை’, ‘கரு’, ‘போர்’, ‘தில்லியும் தமிழ் இலக்கியமும்’, ‘தமிழும் பிற இந்திய மொழி இலக்கியங்களும்’ ஆகிய மையக் கருத்துக்களை ஒட்டி ஐந்து இலக்கியச் சந்திப்புகள் நடந்தேறியுள்ளன. உறுப்பினராக வேண்டிய அவசியம் ஏதும் இல்லாத இந்தச் சந்திப்புகளுக்கு அனுமதி இலவசம். நிகழ்ச்சியின் முடிவில் பார்வையாளர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் கலந்துரையாடலும் இடம்பெறுகிறது.
தோற்றம், நோக்கம்
இலக்கிய ஆர்வம் கொண்ட சில நண்பர்களுக்கிடையேயான கலந்துரையாடல்களின் பொது, புது தில்லியில் ஒரு இலக்கிய வட்டம் அமைப்பதன் மூலம் நல்ல இலக்கியங்கள் குறித்துப் பேசலாம், அவற்றைப் பதிவு செய்யலாம் என்ற கருத்து எழுந்தது. தமிழிலக்கிய முதுநதியின் ஓட்டத்தில் தலைநகரின் அனுபவங்கள் தரும் பொருண்மையின் வழி தத்தமது பார்வைகளை சேர்ப்பதன் மூலமாக எமது சிறு பங்களிப்பை செய்யலாம், இவற்றின் மூலம் தற்காலத் தமிழிலக்கிய உலகின் நிகழ்வுகளில் பங்கேற்கலாம், இவற்றின் மூலம் தமிழிலக்கியச் சோலைக்கு மணம் சேர்க்கும் சிறு முயற்சியாக இது இருக்கும் என்ற எண்ணத்தில் இது துவங்கப்பட்டது. தில்லி தமிழ் சங்கமும் இம்முயற்சியில் இணைந்துகொள்ள, ஒவ்வொரு கூட்டத்திலும் வித்தியாசமான தலைப்புகள், பார்வைகள், பகிராளிகள், பங்காளிகள் என தற்போது ஐந்து கூட்டங்கள் நிகழ்ந்தேறியுள்ளன.
இதுவரை நிகழ்ந்த கூட்டங்கள்
- முதற் கூட்டத்தில் ‘மதுரை’ கருவாக எடுத்துக்கொள்ளப் பட்டது. சங்கம் காட்டும் மதுரை என்ற தலைப்பில் முனைவர் சே. ராம்மோகன், சிலம்பு காட்டும் மதுரை பற்றி முனைவர் ம. சுசீலா, மகாவம்சம் காட்டும் மதுரை பற்றி திரு விஜய் ராஜ்மோகன் உரை நிகழ்த்தினர். கூட்டத்தை தொடர்ந்து மகாவம்சம் பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது.
- இரண்டாவது கூட்டத்தில் ’கரு’ மையமாக இருந்தது. ’உள்ளம் கவர் கள்வர்’ என்ற தலைப்பில் ஔவையிலிருந்து ஷேக்ஸ்பியர் வரை உதாரணங்களை எடுத்தாண்டு நாவலாசிரியர் திரு பி. ஏ. கிருஷ்ணன் உரை நிகழ்த்தினார். ஒளவையாரின் ஒரு பாடல் கரு எப்படி பாலி மொழியில் எழுதப்பட்ட தம்மபதத்திலிருந்து வருகிறது என்பதை உதாரணத்துடன் விளக்கியது மிகவும் சுவாரசியமாக இருந்தது. ’முள்ளும் மலரும் தருணம்’ என்ற தலைப்பில் சாதாரண கருவில் உருவான சில சிறந்த தமிழ்ப்படங்கள் பற்றி தில்லிகையின் நிறுவனர் திரு ஸ்ரீதரன் மதுசூதனன் பேசினார். ‘ ஒரு பிடி விதையும் ஒரு கானகமும்’ என்ற தலைப்பில் புதுமைப்பித்தன் மற்றும் சீனாவின் லூ ஸ்ஷுன் கதைக் கருக்கள் பற்றி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் திரு வீ காளத்தி உரை நிகழ்த்தினார்.
- மூன்றாவது கூட்டத்தின் கருவாக ‘போர்’ இருந்தது. ’பதினெட்டாம் போரும் அதற்குப் பின்னும்’ என்ற தலைப்பில் மாகாபாரத மேடையில் எதிரொலிக்கும் போர்க்குரல்கள் பற்றி தேசிய நாடகப்பள்ளியின் பேராசிரியர் திரு எஸ். ராஜேந்திரன் மிகவும் சுவாரசியமான உரையை நிகழ்த்தினார். ‘நீதிக்கான போரும் நீதியான போரும்’ என்ற தலைப்பில் பினாயக் சென் பற்றிய நூலின் மொழியாக்கப் பின்னணி குறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவரும், மொழிபெயர்ப்பாளருமான திரு க. திருநாவுக்கரசு தமது உரையை நிகழ்த்தினார்.
- நான்காவது கூட்டத்தின் கருவாக ‘தில்லியும் தமிழ் இலக்கியமும்’ இருந்தது. ‘தில்லியும் தமிழ் எழுத்தாளர்களும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி உரை நிகழ்த்தினார். ’தில்லியில் ஒரு தமிழ் வாசகன்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு வெ. சந்திரமோகன் மற்றும் ‘தில்லியில் தமிழுக்கான தேடல்’ என்ற தலைப்பில் இந்திய வெளியுறவுப் பணியில் இருக்கும் திரு ச. ராம் குமார் ஆகியோர் உரையாற்றினர்.
கடந்த வாரக் கூட்டம்
ஐந்தாவது கூட்டத்தின் மையக் கருவாக ‘தமிழும் பிற இந்திய மொழி இலக்கியங்களும்’ இருந்தது. இது கடந்த வாரம் (14 ஜூலை 2012) நடைபெற்றது.
தமிழ் – இந்தி மொழி இலக்கிய உறவு என்னும் தலைப்பில் பேசிய எழுத்தாளர் புதியவன் (திரு ஷாஜஹான்) அவர்களின் உரை வங்கம், மராத்தி, மலையாளம் உள்
இதைத் தொடர்ந்து தமிழ் – கொங்கணி இலக்கிய உறவு குறித்துப் பேசியவர் ஜவஹர்லால் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் திரு. தமிழ்ச்செல்வன். கொங்கணி மொழியைச் சார்ந்தே தன் முனைவர் பட்ட ஆய்வையும் தொடர்ந்து வரும் அந்த மாணவர் முன் வைத்த செய்திகள் அதிகம் அறியப்படாதவை; பரவலான தளத்தில் இன்னும் அறிமுகமாகாதவை. கொங்காணம்(கொன் காணம்) என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி கொங்கணி மொழி பேசிய மக்கள் வாழ்ந்த இடமாக இருக்கலாம் என்றும், தெற்கிந்தியப் பகுதியில் ஜைன மதத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளில் தமிழும் கொங்கணியும் ஒரு சேர இடம்பெற்றிருப்பது இரு மொழி பேசுவோரிடையேயான தொடர்புகளைச் சுட்டும் என்றும் பல ஆராய்ச்சித் தகவல்களை எளிமையாகச் சொல்லினார் தமிழ்ச்செல்வன். பெரு முயற்சி மேற்கொண்டு கொங்கணி மொழியைக் கற்று அம்மொழியிலிருந்து நேரடியாகவே தமிழுக்கு இரு சிறுகதைகளை மொழிபெயர்த்தும் அளித்திருப்பவர் இவர். அக்கதைகள் அவரது இள முனைவர் பட்ட ஆய்வேட்டில் இடம் பெறிருப்பதோடு அண்மையில் அவற்றில் ஒரு படைப்பான ’சிடுமூஞ்சி’ என்னும் சிறுகதை ‘திசை எட்டும்’ இதழிலும் வெளிவந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுசீலா, தில்லிகை போன்ற இலக்கிய அமைப்புகளின் முக்கியத்துவத்தைப் பாராட்டிப் பேசுகையில் “வெளிச்சத்தைப் பற்றி ஏன் விரிவுரை ஆற்றுகிறாய்..விளக்கை ஏற்று’’என்கிற அப்துல் ரஹ்மான் கவிதையில் சொல்லியது போன்ற சிற்றகல்களை ஏற்றி இளம் நெஞ்சங்களில் இலக்கிய ஆர்வத்துக்கான பொறிகளைப் பதிய வைக்கும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான இத்தகைய நிகழ்ச்சிகளும் இன்றில்லை எனினும் என்றோ…எப்பொழுதோ…எவருக்கோ பலனளிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன” என்றார்.
அடுத்த கூட்டம்
தில்லிகையின் ஆறாவது கூட்டம், ஆகஸ்ட் 11ம் திகதி நடைபெறும். தில்லியில் வசிக்கும் அன்பர்கள் மற்றும் தில்லிக்கு வருகை தரும் இலக்கிய ஆர்வம் உடைய தமிழர்கள் வந்து கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
* * * * * * *
தில்லிகை நண்பர்கள் குழு, புது தில்லி
19.07.2012
- நினைவுகளின் சுவட்டில் – 94
- சென்னையில் கழிந்த முதல் ஒரு பகல்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 22
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35
- மாமியார் வீடு
- கல்வியில் அரசியல் பகுதி – 2
- BAT MAN & BAD MAN பேட் மேனும், பேட்ட் மேனும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் சில இருந்துள்ளன (கட்டுரை 81)
- பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.
- ‘பினிஸ் பண்ணனும்’
- பூமிதி…..
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -4
- குடத்துக்குள் புயல்..!
- தஞ்சை பட்டறை செய்தி
- முள்வெளி அத்தியாயம் -18
- குற்றம்
- தாகூரின் கீதப் பாமாலை – 23 பிரிவுக் கவலை
- சிற்றிதழ் வானில் புதுப்புனல்
- உய்குர் இனக்கதைகள் (3)
- வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- ஓரு கடிதத்தின் விலை!
- பதிவர் துளசி கோபால் அவர்களின் “என் செல்ல செல்வங்கள்” : புத்தக விமர்சனம்
- தில்லிகை
- கணினித்தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு ஒரு அஞ்சலி
- தாவரம் என் தாகம்
- நகர்வு
- பிறை நிலா
- உலராத மலம்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்” என்ற தளத்தை நிறுவியுள்ளோம்.
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 29)
- கற்பித்தல் – கலீல் கிப்ரான்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-11)
- திருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள்
- பஞ்சதந்திரம் தொடர் 53
- அப்படியோர் ஆசை!
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது
கட்டுரையை ஒட்டி எழுதாமைக்கு முதல் வருத்தம்.
என் பின்னூட்டம் கட்டுரைத்தலைப்பைப் பொறுத்தது.
தில்லிகை.
தில்லியில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் ஒரு இலக்கியவட்டத்துக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர். புதிய தமிழ்ச்சொல் என்பது தவறு. புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்ச்சொல் எனலாம்.
ஒரு சொல் உருவாக்குவதில் ஒன்றும் விவாதமில்லை. புதுச்சொற்கள் ஒரு நிரந்தரத்தைத்தரவேண்டும். அல்லது அஃது எதற்காக உருவாக்கப்பட்டதோ, அஃதழிந்தபின்னரும், அச்சொல் வேறு வகையில் நின்று தமிழுக்கு அணி சேர்க்க வேண்டும்.
தில்லியில் இந்த இலக்கிய வட்டம் காலாவதியான பின்னர், தில்லிகை என்ற சொல் என்னவாகும்?
“ஒரு சொல் உருவாக்குவதில் ஒன்றும் விவாதமில்லை. புதுச்சொற்கள் ஒரு நிரந்தரத்தைத்தரவேண்டும். அல்லது அஃது எதற்காக உருவாக்கப்பட்டதோ, அஃதழிந்தபின்னரும், அச்சொல் வேறு வகையில் நின்று தமிழுக்கு அணி சேர்க்க வேண்டும்.”
Whose law is that? Why assume that this association will die. If it died, ‘Dilligai’ was the name of a Tamil Association in Delhi, that died! So what?
In stead of appreciating what these people are trying to do, why pick on a name.
Move on, Kavya!
தமிழ் மொழி ஆராய்ச்சியும் தமிழ் இலக்கிய இரசனையும் வெவ்வேறானதாகும். இலக்கிய வாதிகளெல்லாரும், அல்லது அவ்விலக்கியத்தைப்பற்றி கதைப்போரெல்லாரும் மொழி ஆர்வமிக்கவர் என்று சொல்ல முடியாது.
நான் எழுதியது தமிழ் மொழி ஆர்வலருக்கு மட்டுமே. இலக்கியவாதிகள், அல்லது இலக்கிய ஆர்வலர்கள், அல்லது இரசனையாளர்களுக்கன்று. உங்கள் இலக்கியவட்டம் இங்கு என்னால் பேசப்படவில்லை. அஃது எமக்குத் தேவையில்லை.
எல்லாமே ஒரு நாள் காலாவதியாகும். சங்கம் போய் இன்னொரு சங்கம் வரவேயில்லை.
தாம் நிரந்தரம், தம் அமைப்பும் நிரந்தரம் என்பது சிறுவர் உணர்வென்றால் அறியாமை. பெரியவருக்கு அந்த உணர்வென்றால் அஹங்காரம்.
தில்லிகை அமைப்பாளர்கள் இந்தப்பக்கத்துக்கான சுட்டியை இணைத்து அஞ்சல் அனுப்பியிருந்ததால் பார்த்தேன். காவ்யா பின்னூட்டத்தில் கூறுகிறார் – தில்லிகை புதிய தமிழ்ச் சொல் என்பது தவறு என்று. இது புதிய தமிழ்ச் சொல் என்று எங்கே குறிப்பு இருக்கிறது என்பது புரியவில்லை. தானே ஊகமும் செய்து கொண்டு, மறுப்பும் எழுத வேண்டியதன் அவசியமும் புரியவில்லை.
ஒரு குழந்தை பிறந்து அதற்குப் பெயர் சூட்டப்படுகிறது, பெயரைக் கேட்டதுமே அக்குழந்தை செத்துப்போனால் பெயர் என்ன ஆகும் என்று யாராவது கவலைப்படுவார்களா என்ன?
முதலில் இந்தப் பெயரைக் கேட்டபோது எனக்கும் கொஞ்சம் நெருடத்தான் செய்தது. யோசித்தபோது, மணம் பரப்பும் மல்லிகை போல தில்லியில் இலக்கிய மணம் பரப்பும் தில்லிகை என்று அமைப்பாளர்கள் கருதியிருக்கலாம் எனத் தோன்றியது. அவர்களும் இதை விவாதித்தே முடிவு செய்திருப்பார்கள். தில்லிகை என்ன செய்திருக்கிறது, என்ன செய்கிறது என்பதைப் பற்றி கேட்கவோ, கேட்டறியவோ மறுத்து “மொழி ஆர்வலர்க்கு மட்டுமே” என்று பெயரோடு மல்லுக்கட்டுவது அவசியம்தானா…
லாபம் கருதாமல் நடத்தப்பட்ட எந்த அமைப்புதான் நிரந்தரமாக இருந்திருக்கிறது இதன் நிரந்தரம் பற்றிப்பேச? தில்லியில் இதுபோல அவ்வப்போது ஏதேனுமொரு அமைப்பு தோன்றியிருக்கிறது, சில மாதங்களுக்குப் பிறகு மறைந்திருக்கிறது. எல்லாம் அதில் முனைப்புள்ளவர்களின் பங்களிப்பைப் பொறுத்தது. இப்படி நிகழக்கூடாது என்பதே என் ஆவல் என்றாலும் இதுவும் மறையலாம், நாளை வேறொன்று வேறொரு பெயருடன் பிறக்கலாம். பெயரே எல்லாமோ?
அதுபோகட்டும். கடந்தமாத தில்லிகை நிகழ்ச்சியில் நான் பேசிய உரையின் சுட்டிகள் கீழே –
http://pudhiavan.blogspot.in/2012/07/blog-post_15.html
http://pudhiavan.blogspot.in/2012/07/blog-post_9213.html
கட்டுரைகள் பற்றிய கருத்தறிய ஆவல்.
இந்த மறுமொழி தேவையில்லை. சொற்களைப்பற்றிய ஆராய்ச்சியாளர்கள் லிங்குவிஸ்ட் என அழைக்கப்படுவர். அஃதொரு தனியான பெரிய படிப்பு. அவர்கள் ஒரு சொல்லைப்பற்றியே பக்கம்பக்கமாக விவாதிப்பார்கள். தமிழ் மொழிஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப்பாவாணர் என்பவர் அப்படி ஒரு ஆராய்ச்சியாளர்களுள் ஒருவர். அவர்கள் விவாதிக்கும்போது மற்றவர்கள் மூக்கை நுழைக்கக்கூடாது. கேட்டுக்கொண்டுதான் இருக்கவேண்டும். தமக்கு அவ்வாராய்ச்சியில் விருப்பமென்றால் மட்டும் கலந்து கொள்ளலாம். அவ்வளவுதான்.
தில்லிகை என்ற அமைப்பு எப்படியும் இருந்துவிட்டுபோகட்டும். போகாலுமிருக்கட்டும். தில்லிகை என்ற சொல்லைப்பற்றி மட்டுமே என் மறுமொழி. அஃது உங்களுக்கன்று.
புதிய தமிழ்ச்சொல் எவர் உருவாக்கினார் என்று தெரியாமல் மொழியில் புழங்கும் ஒரு கட்டத்தில் மறையலாம். அல்லது நின்று நிலவலாம்.
புதிதாக உருவாக்கப்பட்ட சொல் என்பது மெனக்கெட்டு ஒரு குறுகிய நோக்கத்தில் ஒரு குறுகிய வட்டத்தினருக்கு உருவாக்கப்படுவது. தில்லிகை என்பது நீங்கள் உங்களுக்காக செய்து கொண்டது.
சினிமாவில் புதிய சொற்களை வலிந்து உருவாக்குவார்கள். அது இன்று ரொம்ப. நகைச்சுவை நடிகர்களுக்கு வசனம் எழுதுப்வர்கள் இதைச்செய்வார்கள். சிரிக்க வைக்க.
தில்லிகை மல்லிகை போன்றென்றால், சண்டிகர் வட்டம் என்ன சண்டிகையா? கல்கத்தா வட்டம் கல்லிகையா? மும்பாய் வட்டம் என்ன முல்லிகையா? நல்ல நகைச்சுவை, சினிமா கெட்டது போங்கள் !
//புதிய தமிழ்ச்சொல் என்பது தவறு. புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்ச்சொல் எனலாம்.//
புதிய தமிழ்ச்சொல், புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்ச்சொல்
இந்த இரு சொற்கள்/சொற்றொடருக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்ன என்பதை காவ்யா விளக்குவாரா?
மல்லிகை மணம் தில்லியில் கமழ்கிறது. அதுதான் தில்லிகை. நன்றாக தொடங்கப்பட்ட எதுவும் பாதி நிறைவடைந்ததற்குச் சமம்.
நாளடைவில் கூடுதல் நேரம் ஒதுக்கி விவாதங்கள், கலந்துரையாடல்கள் இடம்பெறும்போது தில்லிகை நிரந்தரமாக மணம்பரப்பும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
காவ்யா மீண்டும் ஒரு வறட்டுவாதத்தை முன்வைப்பது விந்தையாக இருக்கிறது. முந்தைய பின்னூட்டத்தில் நான் கேட்டது – தில்லிகை என்பது புதிய சொல் என்று எங்கே குறிப்பு இருக்கிறது? என்பதே. தில்லிகை நண்பர்கள் அவ்வாறு கூறவில்லை. பின் எங்கிருந்து இவரே ஊகம் செய்து கொண்டார் என்று கேட்டால், லிங்குவிஸ்ட் என்றால் என்ன என விளக்கம் தருகிறார். தில்லிகை என்பது அதன் அமைப்பாளர்கள் வைத்த பெயர் – சொல் அல்ல. அவர்கள் யாருமே நாங்கள் சொற்களை உருவாக்குகிறோம் என்று கூறவில்லை. தில்லிகை என்பதை சொல் என தானே மனதில் உருவாக்கிக்கொண்டு, அது ஏதோ தன்னை சொல் என நிரூபிக்க முனைவதாக கற்பனையும் செய்து கொண்டு, அதோடு சண்டை போட்டாக வேண்டிய நிலையில் தன்னை இருத்திக்கொண்டு காற்றில் வாள்சுழற்றும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சண்டிகையா முல்லிகையா என்று உளறி இதை நகைச்சுவை என்று தானே சிலாகித்தும்கொள்கிறார். இந்த மொழி ஆய்வாளர் கட்டுரைகளையும் கொஞ்சம் படித்து அதன் நிறைகுறைகளை சுட்டிக்காட்டியிருந்தால் திருப்தியாக இருந்திருக்கும்.
காவ்யாவுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்.பெயர் என்பது அந்த அமைப்புக்கான குறியீடு மட்டுமே.சொல்லப்போனால் மனிதப் பெயர்கள் கூட அவ்வாறானவைதானே! தில்லிகை என்ற ஒரு சொல்லை உருவாக்கினால் அதில் என்ன பிழை இருக்கிறது…அது நிலைப்பதும்,காலாவதியாவதும் காலத்தின் கைகளில்.எத்தனையோ செழுமையான பழந்தமிழ்ச்சொற்கள் கூடத்தான் இன்று புழக்கத்தில் இல்லை.’சொல்லில் என்ன இருக்கிறது?’என்று கேட்டான் சொல்லை மிக நுட்பமாக ஆளத் தெரிந்த ஓர் ஆங்கிலக்கவிஞன்.ஷாஜகான் சொல்லியபடி இந்த அமைப்பு என்ன செய்கிறது,எப்படி இயங்குகிறது என்பதை மட்டும் நீங்கள் மதிப்பிட்டுக் குறை நிறை கூற முடிந்தால் நல்லது.அதுவே பொருத்தமானதும் கூட.
இறுதிவரியில் ஒரு அறியாமை தெரிகிறது. நான் எழுதியது ஒரு சொல்லைப்பற்றி. நீங்கள் சொல்வது உங்கள் வட்டத்தைப்பற்றி.
செகப்பிரியரைத்தவறாகப்புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர் நாடகத்தில் ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்தோடு அந்த நிகழ்ச்சிக்கு வேண்டிய ஒன்றைச் சொன்னதாக எழுதுகிறார். அதே செகப்பிரியர் வேறொரு நாடகத்தில் சொல்லில்தான் எல்லாமிருக்கிறது என்றும் சொல்வார். அவர் ஒரு நாடகாசிரியர். நாடகத்துக்கு அல்லது அதில் வரும் கதாமாந்தருக்குத்தக்க மாறிமாறி வசனம் எழுதினாரே தவிர உங்களைப்போன்றோர் தன் வசதிக்குத்தக்க வாழ்க்கையில் போட்டுத் தெளிக்க அன்று.
‘பெண்கள் ரோஜாவைப்போன்றவர்கள். காலையில் தோன்றி மாலையில் வாடும்.’ என்றும் அதே நாடகத்தில் எழுதுகிறார். ஒத்துக்கொள்வீர்களா சுசீலா? அவ்வளவு சீப்பா பெண்கள்? பெண்ணென்றால் உடல் மட்டுமதானே செகப்பிரியரே என்று கேட்க மாட்டீர்களா?
இலக்கியவாதிகள் சொன்னதை வைத்து வாழ்க்கையை அமைக்காதீர்கள். மோசம் போவீர்கள். என் ‘இலக்கிய வாதிகளின் அடிமைகள்’ என்ற திண்ணைக்கட்டுரையைப்படிக்கவும்.
முதலில் இஃதொரு வாதமில்லை. இரண்டாவது, இஃது உங்களுக்காக – அதாவது இந்த இலக்கிய வட்டத்தினருக்காகன்று.
நான் எழுதியது என் சொந்தக்கருத்து. ஒரு வியப்பு. எப்படி தில்லி என்ற ஊர்ப்பெயரை வைத்து தில்லிகை என்று உருவாக்கியிருக்கிறார்களே? அப்படியென்றால், சென்னையிலிருந்து எப்படி? கல்கத்தாவிலிருந்து எப்படி? போன்ற நகைச்சுவை இழைகளை இரசிப்பதற்காகத்தான் நான் எழுதியது. மேலும், மொழியாராய்ச்சியாளர்கள் எவராவது புகுந்து எழுதினால் நலம். அப்படி எவருமில்லாமல் இந்த இலக்கியவட்டப்பேர்வழிகளே எழுதிக்குவிக்கிறார்கள். உங்களை ஆர் வரச்சொன்னது?
என்னைப்பொருத்தவரை தில்லிகை நகைச்சுவையில் போய்முடியும்.
தில்லிகை என்பது பெயர். பெயரைக்குறிப்பிடுவது பெயர்ச்சொல். சொல் வகைகளுள் ஒன்று. நானே படித்தது. நீங்கள் எந்த கிராமர் புக்கை படித்தீங்கோ. ஒருவேளை வெள்ளைக்காரன் போட்டிருப்பானோ! சுசிலா சொல் என்கிறார். நீங்கள் இல்லையென்கிறீர்கள். உங்களுக்குள்ளேயே குழப்பம் !
இந்த அமைப்பு எப்படி போகிறது; வாழ்கிறது என்பனவெல்லாம், உங்களைச்சார்ந்தது. அவ்வப்போது திண்ணையில் சொல்லுங்கள். எப்படி தில்லியின் இயந்திரவாழ்க்கைக்கிடையில் இலக்கியமும் சிலரால் பேசப்படுகிறது. அஃது எப்படியிருக்கும் என்று வேடிக்கை பார்க்கலாம்.
இதனால் சகல வலைவாசிகளுக்கும் திண்ணை எழுத்தாளர்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால்….
காவ்யா என்ற மொழி ஆர்வலர் ஏதும் எழுதினால் யாரும் கேள்வி கேட்கக்கூடா….தூ….
காவ்யா என்ற மொழி ஆராய்ச்சியாளர் எழுதும்போது யாரும் குறுக்கே பேசக் கூடா…..தூ…..
காவ்யா என்ற தமிழ் ‘கிராமர்’ புலி பின்னூட்டம் தந்தால் ‘ஆரும்’ பதலளிக்க வரக்கூடா…..தூ….
இயந்திர வாழ்க்கைக்கிடையே யாரும் இலக்கியம் பேசக் கூடா….தூ…..
ஷா !
நீங்கள் ஒரு கெமிஸ்ட்ரி மாணவன் என்று வைத்துக்கொள்வோம். கெமிஸ்ட்ரி ஆசிரியரிடம் சென்று பாட சம்பந்தமாக என்னவோ கேட்கிறீர்கள். பக்கத்தில் தமிழாசிரியர் நிற்கிறார். அவர் உங்களுக்குப்பதில் சொல்லலாமா? ‘ஏன் நான் தலையிடக்கூடாதா…தூ…” என்று துப்புகிறார் அவர் நீங்கள் திண்ணையில் செய்வதைப்போல.
ஆகவே ஷாஜஹான், உங்களுக்கு எது தெரியுமோ, அல்லது எதில் ஆர்வமோ அதைச்செய்யுங்கள். மொழியார்வரமிர்ந்தால் பேசுங்கள். இல்லாவிட்டால் மற்றவர் நேரத்தை விரயம் செய்தது ஆகும்.
இலக்கியம் பற்றி வட்டமெல்லாம் நடாத்தும் நீங்கள் ‘தூ…’ என்று திண்ணையில் எழுதலாமா ? எந்த ஊர் பண்பாடிது ?
நீங்கள் எழுதிய ஏதாவது கதையையோ அல்லது கவிதையையோ திண்ணையில் விரியுங்கள். படித்து விமர்சனம் பண்ணுகிறேன். அப்போது வாருங்கள் மன திடத்தோடு..