வீரபாண்டி
நீங்கள் மூன்றாம் உலகப் போர் என்று சமூக அக்கறையுடன் எழுதுவதால் இந்தக் கடிதம்.
உலக இலக்கியம் உங்களுக்குத் தெரியாததல்ல…
மக்களை சுருட்டிப் போடும் திரைச்சுருளை தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம் என்ற நீங்கள், இன்று தின்னும் ஒவ்வொரு பண்டத்திலும் அந்த திரைச்சுருள் அள்ளித் தந்தது இருக்கிறது.
புலவன் என்றால் பஞ்சபரதேசி, கடனாளி, கைகட்டி யாசகம் பெறுபவன் என்ற குறியீட்டை மாற்றினீர்கள், அதற்கு நிச்சயம் யாவரும் வந்தனம் சொல்ல வேண்டும்.
ஆனால், புலவனுக்கும், கவிஞனுக்கும் வேறுபாடு உண்டு.
பாடிப் பரிசு பெறும் புலவன் முன் காலத்தால் வெல்லும் கருத்துக்களை மட்டுமல்ல மாற்றத்தையும் தர முடிந்தவனே கவிஞன்.
அதுவும் நீங்கள் கவிப்பேரரசு…
உங்கள் பேரரசுவில் நடக்கும் ஒரு அக்கிரமத்தை நீங்கள் அரம் பாடி அழிக்க வேண்டும்…
மீண்டும் அறம் தளைக்க எழுத வேண்டும்.
நீங்கள் நீராகாரத்தில் வாழ்வு தொட்ங்கியவர்.
நீரின்றி அமையாது உலகு என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், உங்கள் மூதாதையர் வாழ்வோ நீரால் அழிந்தது வரலாறு.
ஆம், வைகை அணையில் கட்டுமானத்தில் மூழ்கடிக்கப்பட்ட கிராமங்கள் பலதில் உங்கள் ஊரும் ஒன்று.
அப்படியெனில் உங்கள் வெறுப்பு நீருடன் தானே இருக்க வேண்டும்…?
ஏன், கரிசக்காட்டு மேல்..? புஞ்சைக் காடுகள் மேல்..?
உங்கள் கண் முன்னே… உங்கள் மண் தோண்டப்படுகிறது…
பாறைகள் உடைக்கப்படுகின்றன்..
பொக்லைன் எனும் பூதத்தால் மலைகள் விழுங்கப்படுகின்றன….
கண்மாய்களோ வெட்டிய கற்களின் மிச்சத்தால் கண் முன் மாயமாகின்றன…
பஞ்சமா பாதகர்கள் நமது பூமித்தாயை மதுரை கொத்து புரோட்டா மாதிரி கொத்தி கொத்தி போடுகிறார்களே..
அது உங்கள் கண்ணில் படவில்லையா..?
எந்தக் கவிஞனுக்கும் கிடைக்காத அளவு அதிகாரமட்டத்துடன் உங்களுக்கு தொடர்பு உண்டே…
நீங்கள் ஒரு வரி எழுதினால் அது அரசாணையாக ஆக்க ஒரு ஆட்சி இருந்தது…
நீங்கள் இந்த மதுரை நில அழிப்பிற்கு ஏன் குரல் கொடுக்கவில்லை…?
உலகம் என்பது என்ன “ஹல்திராமில்” விற்கும் லட்டு உருண்டையா..?
அது உள்ளூரையும் அடக்கியது தானே…?
உள்ளூரில் ஒரு தெருவில் ஒருவனோ அல்லது ஒருத்தி கண்ணீர் துளியோ தொடங்கி வைப்பது தானே உலகப்போராய் மாறுகிறது…
இதோ நாசம் செய்யப்பட்ட மதுரை பூமி ,
கண்ணீரும் கம்பலையுமாய் கதறிக் கொண்டு…
எங்கிருந்தோ வந்த ஒரு பிள்ளை சகாயம்
கலெக்டர் உருவத்தில் காக்க வந்த போது
கயவர்கள் அவனை தூக்கி அடித்த போது,
அவன் எழுதி வைத்துச் சென்ற ஓலை ஒன்று
இன்று–
யாதுமாகி நிற்கும் காளி – ஜெயலலிதாவால்
கட்டளையாக மாறி ,
விரட்டி விரட்டி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கொண்டு…
இதில், மதுரை மண்ணின் பொக்கிஷம் நீங்கள்
உங்கள் மண் காக்க என்ன செய்யப் போகிறீர்கள்…????
கிரானைட் அதிபர்களின் விருந்துகளில்
உங்கள் கோப்பைகளில் நிரப்பப்படுவது
மதுரை மண் கிழிக்கப்பட்ட போது வந்த
பூமித்தாயின் ரத்தம்..
உங்கள் தட்டுக்களில் போடப்படுவது
மதுரை புரோட்டா அல்ல,
கொத்திக் குதறப்பட்ட அவளின் தேகம்…
காலையில் கூழ் குடிக்கும் போது அதில் அதிகமாய் தெரிவது உப்பு அல்ல
அவளின் கண்ணீர்…
வாருங்கள், இந்த கயவர்கள் மேல் அரம் பாடுங்கள்…
மூன்றாம் உலகப் போர் புத்தகம் முப்பது பதிவுகள் காண்பதை விட,
நீங்கள் பாடும் அரத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும், எல்லா திசை மனிதர்களும் துணையிருப்பர்.
உங்கள் தமிழின் சத்தியம் உலகறிய இதோ உங்களுக்கு ஒரு விண்ணப்பம்…
ஒரு தனி மனித விருந்து சுகத்திற்கு
பலியாகும் புலவனில்லை நீங்கள்..,
பொது மனித வர்க்கத்திற்கு நீங்கள்
காலம்காக்கும் கவிஞன் என்று அழைக்கிறோம்…
இயற்கையை அறுத்துத் தள்ளும்
அவர்கள் மேல்
அரம் பாடுங்கள்…
- மரியாதைக்குரிய களவாணிகள்!
- முன் வினையின் பின் வினை
- அன்புள்ள கவிப்பேரரசு. வைரமுத்துவிற்கு,
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 26
- வீணையடி நான் எனக்கு…!
- வாத்சல்யம் அற்ற கிரகணங்கள் …
- பிராணன்
- சுஜாதாவின் நிலாநிழல் விமர்சனம்
- கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா
- கதையே கவிதையாய்! (1) இரு வேடர்கள்! – கலீல் ஜிப்ரான்
- இந்திய மக்களாட்சியின் பாதையில் தேர்தல்முறை
- முனைவர் ரெ.கார்த்திகேசுவின் “விமர்சன முகம் 2”, “நீர்மேல் எழுத்து” இரு நூல்கள் வெளியீட்டு விழா
- (98) – நினைவுகளின் சுவட்டில்
- என் இரு ஆரம்ப ஆசான்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியனுக்கு அருகில் பேரளவு கரும் பிண்டம்
- வா…எடு…எழுது..படி…பேசும்..கவிதை.!
- நூறு கோடி மக்கள்
- பிணம்
- இருள் மனங்கள்.
- இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சி- ஒரு கண்ணோட்டம்
- நெய்தல் வெளி – தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு
- கங்கை சொம்பு
- ஆத்துல இன்னும் தண்ணி வரல….
- தாகூரின் கீதப் பாமாலை – 27 புயல் அடிப்பு
- NCBHவெளியீடு மனக்குகை ஓவியங்கள் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம்
- தமிழ் ஸ்டூடியோவின் ‘ லெனின் விருது 2012 ‘ அம்சன் குமார்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 33) சூரிய வெளிச்சமும் முகிலும்
- முள்வெளி அத்தியாயம் -22
- மானுடர்க்கென்று……..
- அசோகன் செருவில்லின் “ டிஜிட்டல் ஸ்டூடியோ “
- பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை
- மலட்டுக் கவி
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 39
- கருணைத் தெய்வம் குவான் யின்
- பழமொழிகளில் ‘வெட்கம்’
- படைப்பாளி ‘பழமனு’க்கு ஒரு விமர்சனக் கடிதம் (‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து)
- பெரியம்மா
- இடைவெளிகள் (8) – கருத்துப் பறிமாறலும் கவனமான பரிசீலிப்பும்