இந்திய இன்சுரன்ஸ் பணம் & பிஎஃப் பணம் பணால் ஆக, நிதிஅமைச்சரின் யோசனை….

This entry is part 28 of 37 in the series 2 செப்டம்பர் 2012

புனைப்பெயரில்

 

போனமுறை திரு.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது நடந்த ஸ்டாக் மார்க்கெட் கூத்து பலரின் வாழ்வை தெருவிற்கு கொண்டு வந்தது

எங்காயாவது இருக்கட்டும் எப்படியும் போகட்டும் என அவர் உள்துறை மந்திரியாக இருந்த போது நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்…

ஆனால், மன்மோகனுக்குத் தான் நாம் நிம்மதியாக இருப்பது பிடிக்காதே….

திரும்பவும் இப்போது நிதி, ப.சி கையில்.

தற்போது அவரின் லட்சியம், ஸ்டாக் மார்கெட்டை ரிவைவ் பண்ணுவதாம்..?

எப்படி,

இந்திய இன்சுரன்ஸ் கம்பெனிகள், பிஎஃப் பணம் எல்லாவற்றையும் மியூசுவல் பண்டிலும், காப்பிடல் மார்க்கெட்டிலும் போட அய்யா இப்போது ஐடியா கொடுத்து நம்மை வயிற்றில் நெருப்பை அள்ளி லைட்டா போட்டிருக்கிறார்.

என்ன நடக்கும்….

இப்போது தோராயமாக டாலர் – இந்திய ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு 55.XX , இல்லை அமெரிக்க மதிப்பில் சொல்லப்போனால், 58 ரூபாய் கொடுத்தால் ஒரு டாலர் கிடைக்கும். இந்த குறியீட்டில் தான் அமெரிக்க கான்சுலேட்டில் பணம் வாங்கப்படுகிறது.

சரி , இப்போது என்ன நடக்கும்…?

ஒரு பில்லியன் டாலரை இந்தியாவிற்குள் ஸ்டாக் மார்கெட்டில் போட்டால் 58 பில்லியன் மதிப்புள்ள ஷேர்களை FII க்கள் வாங்கிப்போடும்.

10% ஸ்டாக் மார்க்கெட் இறங்கினாலும், நாளை டாலர் மதிப்பு 50 ரூபாய்க்கு வந்தால் , யானைக்கும் பானைக்கும் சரியென்று நஷ்டம் இருக்காது.

10% ஸ்டாக் மார்கெட் ஏறினால்,  58ரூபாயிலேயே மதிப்பு இருந்தாலும் லாபம் தான்.

இதில் நஷ்டமடையப் போவது, நம்ம பயக தான்…. நம்ம பயகன்னா ஸ்டாப் லாஸ் புத்திசாலிகள் தான்.

இல்லென்ன கன்சல்டண்ட் ஆவரேஜ் பண்ணச் சொல்வான்…

 

நம்ம நாட்டில் ஸ்திரமான இன்சுரன்ஸ் துறையின் அத்துனை பணமும் FII மூலமாக, நிதிஅமைச்சரின் ஐடியாவில் அய்யோ அம்மான்னு போகப் போகுது…

 

அப்ப நமா செத்தா…? 10% இன்சுரன் கவரேஜ் கூட கிடைக்கப் போறதில்லை…

 

பி எஃப் பணமும் இதே நிலைக்கு தான்.. போகப் போகுது…

 

ஸ்டாக் மார்க்கெட்டிலும்,  மியூசுவல் பண்டிலும் பொதுச் சொத்தை தூக்கி போட்டால் எப்படி தேசம் வளரும் என்ற இந்த புத்திசாலி சொல்லட்டும்…

 

ஏன், அந்தப் பணத்தில் மருத்துவத் துறை, அடிப்படை விவசாயக் கட்டுமானத்திற்கு செலவு, நதி நீர் இணைப்பு என்று போட்டால் கூட அத்துனை பணமும் நமது சந்ததிக்கு போனது என்ற நிம்மதியாவது இருக்கும்…

 

ஆனால், ஸ்டாக் மார்கெட்டில் போடும் இந்த புத்திசாலித்தன ஐடியாவிற்கு பின் இருக்கும் அபயாகரத்தை உணர்ந்து நாம் செயல்பட வேண்டிய தருணம் இது…

 

என்னை விட அதிகம் படித்த நல்லோர்களே… பொருளாதர மேதனைகளே…. நிதி அமைச்சரின் இந்த, இன்சுரஸ் பணத்தையும், பி எஃப் பணத்தையும் ஸ்டாக்மார்க்கெட்டிலும் , மியூசுவல் பண்டிலும் போடுதல் பற்றிச் சொல்லுங்கள்…

Series Navigationஎன்ன செய்வார்….இனி..!ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 35) குற்ற மன்னிப்பு

11 Comments

  1. Avatar அ-அர்வி

    ஸ்டாக் மார்கெட்டில் போட்டால், ஏற்கெனவே முதலீடு செய்தவர்களுக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும். ஸ்டாக் மார்கெட் முதலீடுகளில் லாபம் கிடைப்பதால், அதிகமானவர்கள் அதில் முதலீடு செய்யத் துவங்குவார்கள், தொழிற் துறை வளரும்.

    இந்தியாவில் சேமிப்புக்கு அதிக வட்டி கிடைக்கிறது. அதனால், தொழிற்துறை முதலீடு குறைகிறது.

    தொழிற்துறை வளர்ந்தால் தான் நாடு முன்னேறும். யார் தொழில் துவங்குகிறார்கள்? மிகச் சிலரே. ஏன் என்று யோசித்துப்பாருங்கள் விடை கிடைக்கும்.

  2. Avatar அ-அர்வி

    பிஎப் பணத்தை அரசாங்கம் தனது பெரிய பிராஜக்டுகளுக்காக பயன்படுத்தினால், ரிடர்ன் இருக்காது. அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தான் பலன் கிடைக்கும் – நாட்டிற்கும், பிஎப் பணத்திற்கும் அது கேடு.

    • Avatar Raj

      2G; Coal; Common wealth; iron..all done..nothing left for both parties..now they seem to looking around

  3. Avatar அ-அர்வி

    நதி நீர் இணைப்புக்கு பிஎப் பணமா? :O

    அய்யா, நதி நீர் இணைப்பால் வருகிற ரிடர்ன் 0.5% கூட இருக்காது. அதற்கு பிஎப் பணத்தை செலவிட்டால் திவால்தான். அரசாங்கம் வசூலிக்கின்ற வரிப்பணத்தில் இருந்து செய்ய வேண்டிய வேலை அது.

  4. Avatar paandiyan

    Indian Middleclass are ready to suffer any extreme level. govt know how to split the people based on their political languvage. corporate means getting subsidy, lower level all free for votes.. he himself suggested to deposit all money in the share market earlier. Mr.Gurmoorthy has given enough inputs against his view, thoughts and his budjet artificial tuning etc. people must read his articles to understand worst part or PC. should remember onething he himself forced to resign based on fairgrowth issues..

  5. Avatar annamalai N

    it should be invested in all the 100% risk free sectorslike Bonds,Infra,POwer, Blue chip shares.Or GOVT owned public sectors companies they can invest.I feel nothing wrong in investing the fundamentally strong Stocks

  6. Avatar R. Sathishkumar

    Both congress and BJP are selling our lives…

  7. Avatar punaipeyaril

    I feel nothing wrong in investing the fundamentally strong Stocks— check with IFCI story.. of around 30% downfall now….

  8. Avatar paandiyan

    invest PF money into share market and for development go for loan to world bank and pay more interest. fantastic PC Policy…

  9. Avatar Raj

    Ada Kaduvale! Edhu enna Vibareetha Puddhi! Ayya Chidambram..aandathu pothatha!! Konjam VRS vangi inbamay pozhuthu kazhiyungalen!! Ennathukku intha Vilayateelam..Kadai thengai etuthu !

  10. Avatar punaipeyaril

    இந்த வார நாணய விகட்னில்… (இதத் தான்யா ப.சி செய்வாரென்று அன்றே திண்ணையில் சொன்னது ) …மத்திய அரசாங்கம் அடுத்தடுத்து வெளியிட்ட அறிவிப்புகளால் எக்கச்சக்கமாக வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 10-15% லாபம் பார்த்துவிட்டனர். தவிர, டாலரின் மதிப்பு நன்றாக குறைந்துள்ளது. இந்த சமயத்தில் பணத்தை எடுத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்ததன் விளைவுதான் இந்த சிறிய இறக்கம். ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *