கிசு பற்றி உங்களுக்கு தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்.. கிசு எண்பது அகவை தாண்டிய மூத்த படைப்பாளி.
மொழி பெயர்ப்பு செய்வோரைப்போய் படைப்பாளி என்று எப்படி அழைப்பது என்று யாரேனும் குடுமிப்பிடிச் சண்டைக்கும் வரலாம். வரட்டும் அதனால் என்ன சண்டையேதான் வளர்ச்சிக்கு ஆதாரம். கிசு இப்போதைக்கு கல்கத்தா என்கிற கொல்கத்தா நகரத்து வாசி. அவரின் அந்த வங்கத்து வாழ்க்கைக்கே அறுபது ஆண்டுகள் முடிந்து போயிற்று. கொஞ்சம் கவிதை கொஞ்சம் கட்டுரை என்று தமிழில் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியவர்தான். இன்று வங்காளி மொழி சரளமாய் கிசுவுக்குப் படைப்பிலும் வந்துவிட்டது.. தமிழ்ப் புதினங்கள் பலதுகளை வங்க மொழியில் கொண்டு சேர்த்த பெருமை மட்டும்தானா அவருக்கு சிலப்பதிகாரம் குறுந்தொகை என பைந்தமிழ் இலக்கியங்களூமே அவராலே வங்கமொழிக்கு பயணம் போயுள்ளன..
. தாகூர், பங்கிம் சந்திரர், பிரேம் சந்த் மகாசுவேதா தேவி என்கிற படிக்கு எத்தனையோ இலக்கிய ஜாம்பவான்களைத் தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்ள கிசுதான் ஆதாரம். அந்த கிசுவை ஒரு நாள் பார்த்து அவன் எழுதிய சிறுகதைகளாய்த்தேர்ந்து பின்னர் புத்தகமாயும் போட்ட செய்தவம் என்னும் பெயர் கொண்ட அந்தத் தொகுப்பைக் கொண்டுபோய் நீட்டினான். தொகுப்பில் பத்துக்கதைகள் இருந்தன. பத்துகதைகளும் தெரிந்தவர்கள் தாட்சண்யத்திற்கு மனத்தை விசாலப்படுத்திக்கொண்டு சிறு பத்திரிகையில் வெளியிட்டவைதான்.
அந்த கிசுவிடம் கொண்டுபோய் செய்தவம் தொகுப்பை எப்படி நீட்டினான் எங்கே வைத்து நீட்டினான் என்று கேள்வி கேட்பீர்களே. ஆக அதனையும் சொல்லிக்கொண்டுதான் பிறகு கதை கிதை என்கிற ஒன்றிற்குப் போகவேண்டும். இல்லை இல்லை வரவேண்டும் என்பதுதான் சரி.
அவன் ஒருநாள் மாலை நேரத்தில் தன் மனைவிக்குப்பல்வலி என்று தாம்பரம் கடைத்தெருவில் ஒரு பல் டாக்டரிடம் அழைத்துப்போனான். வலியை அவளே சமாளித்துக்கொண்டு விட்டால் தேவலைதான். ஆனால் முடிகிறவரைக்கும்தானே எதுவும், பல் டாக்டரின் வைடிங் ரூமில் ஒரு டோக்கன் கொடுத்து உட்கார ச்சொன்னபோதுதான் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் எட்டி எட்டிப் பார்த்து எப்படியோ பொழுது போக்கிக்கொண்டிருந்தான். பல் வலி வந்த மனைவியோடு பேசிப்பார்த்தவர்களுக்குமட்டுமே அந்தபடிக்கு அனுபவம் இருக்கலாம். கொஞ்சம் சிரமம் என்று மரியாதைக்குச்சொல்லலாம். கனசிரமமமம்தான். எவ்வளவுக்குத்தான் பாட்டு ஒரு மனிதன் வாங்குவது. தமிழ் மொழியோ அலாதி சுவாரசியமானது. அத்தனை நெளிவு சுளிவுகள். இங்கே பாட்டு என்பது ஒருவன் திட்டு வாங்குவதை மட்டுமே குறிக்கும். அந்தப் பல் டாக்டர் கிளினிக்குக்கு எதிரே இருந்த கடைத் தெருவில் யாரோ எல்லாம் போய்க்கொண்டிருந்தார்கள். எல்லாரையும் அவனுக்குத்தெரிந்து இருக்கவேண்டிய நியாயம்தான் என்ன இருக்கிறது. எதோ நீட்டமாய் ஊர்வலம் கூட தெருவில் போனது. மேரிமாதா உருவத்தை அலங்கரித்து ஒரு சிறு தேர் ஒன்றில் வைத்துக்கொண்டு தேரை உருட்டிக்கொண்டு ஒரு நூறு பேருக்கு வரிசையாய்ப்போனார்கள். சுற்றச்சுற்றி அங்கே வணிகத் தொழில் செய்யும் வியாபாரிகள் கிளினிக் வைத்து பிழைப்பு செய்யும் மருத்துவர்கள் எல்லோரும் செழிப்புடன் இ¢ருக்க அந்த மேரிமாதா துணையிருக்க வேண்டும் எனப்பிரார்த்தித்தார்கள்
ஊர்வலம் முடிவில் ஒரு பெரியவர் நடந்து போய்க்கொண்டிருந்தார். பார்த்தால் அந்த கிசு மாதிரியே இருந்தது. கொல்கத்தாவில் வசிக்கும் அந்தக்கிசுதான். திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது வழங்கு விழாவில் வைத்து சமீபமாய்த்தான் அவன் பார்த்து இருந்தான். அதற்கும் முன்பாகவே அவரை அனேக முறை பார்த்தும் இருக்கிறான்தான். இங்கே எப்படி கிசு வந்தார். அவர் கொல்கத்தா சென்றிருப்பார் என்றுதானே அவன் நினைத்தான். ஒருவர் போலவே உலகத்தில் ஏழுபேர் உருவில் ஒத்து இருப்பார்கள் என்கிறார்களே அந்தக்கணக்கில் இது வருமோ.. எதற்கெடுத்தாலும் என்ன ஏழு ஏழு. கடவுளுக்கு ஏழு எண் தான் மிகவும் பிடிக்குமோ என்னவோ . யார் கண்டார்கள்
மனைவியைப்பார்த்தான். அவள் சிம்மராசிக்கரிதான். கன்னத்தில் கை வைத்து பல் வலிக்குப்பயந்து கண்களை மூடி நாற்காலியில் உட்கார்ந்து இருந்தாள்.. கிசு மாதிரிக்கு ஒருவர் தெருவில் செல்வதைத்தான் பார்க்கப்போவதாய் சொல்லிவிடலாம். அவளை எழுப்பிச்சொன்னால் காரியம் கெட்டாலும் கெட்டுவிடும் என முடிவோடு கட கட என தெருவுக்கு ஒடி வந்தான்.
‘ யாரு கிசு சார் தானே’
‘ ஆமாம் நான் கிசு தான் நீங்க’
‘ அந்த திசை எட்டும் விழாவிலே நீங்க விருது வாங்க வந்திருந்தீங்க சார்’
‘ ஆமாம் வந்திருந்தேன். இன்னும் ஊருக்குப்போகவில்லை. இங்க என் டாட்டர் வீடு இருக்கு. தோ தெரியர்தே அந்த நாடி ஜோதிடர் வீடு. அதுக்கு நேர் எதிர் வீடு. வாழ்க வளமுடன்னு முன்னாலே எழுதி இருக்கிற அந்த அதே வீட்டுல தான் தங்கி இருக்கேன். இன்னும் ஒரு வாரம் இருப்பேன். அப்புறம் கொல்கத்தா போயிடுவேன். பிளைட்டு டிக்கட் கெடைக்கல. அதான் லேட். நீங்க’
‘ சாரு நான் டெலிபோன் துறையிலே வேலை பார்க்கிறேன். இலக்கியம்னா கொஞ்சம் விருப்பம்’
அவன் சொன்னான்.
‘ இங்க எங்க வந்தீங்க’
‘ என் மனைவி க்கு ப்பல்வலின்னு வந்தேன். டாக்டரைப்பர்க்கணும்னு அங்க வைட் பண்றா அவ’
கிசு ஒரு வாழைப்பழக்கடை முன்பாக நின்றுகொண்டார்.
‘ சாவுகாசமா ஒரு தரம் வந்து ஒங்களைபார்க்கணும் எனக்கு. வரேன் ரொம்ப சந்தோஷம் சார்’
அவனுக்கு அவன் மனைவியின் நினைவு திடீர் என வந்துவிடவே பல் டாக்டர் கிளினிக்குக்கு மீண்டும் திரும்பினான்.
‘ எங்க தொலஞ்சீங்க’
‘ இல்ல ஒருத்தரை பார்த்துட்டுவந்தேன்’
‘ அப்படி என்ன அவசரமோ’ அவள் கேட்டு முடித்தாள்
கொல்கத்தாவுக்கு கிசு புறப்படுவதற்கு முன்பாகவே அவரைப்பார்த்து தான் வெளியிட்ட ‘செய்தவம்’ சிறுகதை த்தொகுப்பை க்கொடுத்துவிட வேண்டும் என்று மனதிற்குள் திட்டம் போட்டான். அந்தப்படிக்கு ஒரு நாள் நாடி ஜோதிடர் வீட்டுக்கு எதிர் புறமுள்ள கிசு வின் மகள் வீட்டுக்கு வந்து கிசு விடம் தான் எழுதிய அந்த புத்தகத்தை சேர்ப்பித்தான். .
பதிலுக்கு கிசுவும் சும்மா விடவில்லை ‘நான் கடந்து வந்த பாதை’ என்கிற அவரின் வாழ்க்கை வரலாற்று நூலை அவனிடம் கொடுத்தார்.
‘நான் ‘செய்தவம்’ படிச்சுட்டு சொல்றேன்’
‘ ரொம்ப மகிழ்ச்சி’’ அவன் சொல்லி முடித்து ப்புறப்பட்டான்..
மறு நாள் டெலிபோன் காலையிலேயே ஒலித்தது. யார் டெலிபோனில் அந்த கிசு தான் பேசினார்.
‘ செய்தவம் உங்க கதைப் புத்தகம் படிச்சுட்டேன். நீங்க ஒரு தொழிற்சங்க வாதி போல. தீவிரமா மார்க்சியத்தை தூக்கிப்புடிச்சி எழுதி இருக்கிங்க. ஒரு மாசம் கொல்கத்தாவுல செங்கொடிக்காரங்க ஆட்சியில இருந்தப்ப வந்து தங்கி இருந்து நேராவே அனுபவிச்சி இருந்தா உண்மை தெரிஞ்சி இருக்கும். உங்கள சொல்லி குத்தம் இல்ல. வங்கத்துல தேனாறும் பாலாறும் ஔடுதுன்னு மட்டும்தானே எழுதுவீங்க. இண்ணைக்கும் கூட அது எல்லாம் அங்க ஒடுலயே. மனசாட்சிய காயடிக்காம நேர்மையோட புகழ்ந்து இருந்தா அந்த சோவியத்தும் கூட அழிஞ்சி ப்போயிருக்காது ரெண்டு லெட்சம் மனித உசிரை பலிகொடுத்து ஒரு சமூகத்தை புதுசா அங்க சிருட்டிச்சாங்க, அந்த தியாக பர்வதத்தை தொலச்சிட்டு குற்ற உணர்வு கிஞ்சித்தும் இல்லாம எப்படித்தான் மொத்தமா நிமிந்து நிக்குறீங்.களோ. நீங்க சவுரியமா மறந்துபோறது இதுதான்.’ ஒருத்தன் எழுதுகோல் பிடிச்சி எழுதித்தான் அந்த மார்க்சியம் வந்துச்சிங்கறது’ ஆனா அதுக்கப்புறம் என்னன்னு யாராவது உங்ககிட்ட கேட்டா மட்டும் தாங்கமாட்டிங்களே’
போனை வைத்துவிட்டார் கிசு. ஏன் எனக்கு மட்டும் எங்கும் ஒரே இருளாகவே இருக்கிறது.
————————————————–
- ஆப்கானிஸ்தான் இந்துக்களும் சீக்கியர்களும் தங்களது கிராமத்தை மீட்டெடுக்க விரும்புகின்றனர்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 44) கவலைச் சின்னம்
- பூனை மகாத்மியம்
- விடுமுறை நாள்
- கண்காணிப்பு
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.4.. லா.ச.ராமாமிருதம் – கங்கா
- பழமொழிகளில் ‘காடு’
- வீடு
- நைலான் கயிறு…!…?
- நம்பிக்கை ஒளி! (6)
- க.நா.சு.வும் நானும்
- அவம்
- என்னை மன்னித்து விடு குவேனி
- சவுதி அரேபியாவின் அடக்குமுறையினால், ஷியா புரட்சி உருவாகிறது.
- அலையின் திசையில் மாற்றம் தேடி..-வாஸந்தியின் “ மீட்சி” சிறுகதைத்தொகுப்பை முன் வைத்து….
- நூறு மசலாவும் நூறாயிரம் வாசல்களும்
- தலைதப்பிய தீபாவளி
- வீதி
- இது தான் காலேஜா – நிஜங்கள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (நான்காம் அங்கம்) அங்கம் -4 பாகம் -2
- தீபாவளியின் முகம்
- அகாலம்
- நுகராத வாசனை…………
- குன்றக்குடியில் கார்த்திகை முதல். சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்
- தாகூரின் கீதப் பாமாலை – 39 என் காலம் முடியும் தருணம்
- களரி தொல்கலைகள் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
- குறும்பாக்களைப்பற்றி குறும்பாக்கள்
- மணலும் நுரையும்! (3)
- நானும் அவனும்
- தீபாவளிப் பரிசு!
- கடிதம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – செவ்வாய்க் கோள் இழந்த சூழ்வெளிப் புதிரை விடுவிக்கப் போகும் நாசாவின் தளவுளவி
- அக்னிப்பிரவேசம் -9