மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
இங்கும் அங்கும் போகும்
வீதிகளில் உலவிக்
கானங்கள் பாடிக் கொண்டென்
காலம் கடந்து போனது.
பிரியும் தருணத்தில் யார் கையில்
நானென் இதயத்தில் வாசித்த
வீணையைத் தருவது ?
பூக்களின் வண்ணத்தில் வைப்பேன்
பாக்களின்
பல்வேறு இசைத் தொனியை !
யாழிசைக் கருவியைப் பொன் முலாம்
பூசிய முகில்களின் சந்திப்பில்
போட்டு விடுவேன்.
பூமாலைகள் சூடி ஐக்கிய மாகிய
பாமரர் தொண் டைக்குள்
பதுங்கிக் கொள்ளும் சில பாடல் !
ஆர்வமாய் நோக்கும்
இருவர் கண்ணி மைகளை
ஈரமாக்கும் சில பாடல் !
சித்திரை மாதத்தில்
போகுள் பூக்கள் மூடிய காட்டுப்
புல் வெளியில்
துறவி ஒருவன் காண்பான்
ஒரு வேளை
சிறிய என் இருதயத் துணுக்கை !
+++++++++++++++++++++++++
பாட்டு : 19 1922 மார்ச் 15 இல் தாகூர் 61 வயதினராய் ஆகும் போது , ஒருநாள் கல்விக்கூட விடுமுறையில் சிலைதஹா குடும்ப எஸ்டேட்டில் தங்கிய சமயம் எழுதியது.
+++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] November 6, 2012
- ஆப்கானிஸ்தான் இந்துக்களும் சீக்கியர்களும் தங்களது கிராமத்தை மீட்டெடுக்க விரும்புகின்றனர்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 44) கவலைச் சின்னம்
- பூனை மகாத்மியம்
- விடுமுறை நாள்
- கண்காணிப்பு
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.4.. லா.ச.ராமாமிருதம் – கங்கா
- பழமொழிகளில் ‘காடு’
- வீடு
- நைலான் கயிறு…!…?
- நம்பிக்கை ஒளி! (6)
- க.நா.சு.வும் நானும்
- அவம்
- என்னை மன்னித்து விடு குவேனி
- சவுதி அரேபியாவின் அடக்குமுறையினால், ஷியா புரட்சி உருவாகிறது.
- அலையின் திசையில் மாற்றம் தேடி..-வாஸந்தியின் “ மீட்சி” சிறுகதைத்தொகுப்பை முன் வைத்து….
- நூறு மசலாவும் நூறாயிரம் வாசல்களும்
- தலைதப்பிய தீபாவளி
- வீதி
- இது தான் காலேஜா – நிஜங்கள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (நான்காம் அங்கம்) அங்கம் -4 பாகம் -2
- தீபாவளியின் முகம்
- அகாலம்
- நுகராத வாசனை…………
- குன்றக்குடியில் கார்த்திகை முதல். சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்
- தாகூரின் கீதப் பாமாலை – 39 என் காலம் முடியும் தருணம்
- களரி தொல்கலைகள் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
- குறும்பாக்களைப்பற்றி குறும்பாக்கள்
- மணலும் நுரையும்! (3)
- நானும் அவனும்
- தீபாவளிப் பரிசு!
- கடிதம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – செவ்வாய்க் கோள் இழந்த சூழ்வெளிப் புதிரை விடுவிக்கப் போகும் நாசாவின் தளவுளவி
- அக்னிப்பிரவேசம் -9