(செய்தி: ரெ.கா.)
மலேசியாவில் தான் ஸ்ரீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியத்தால் நடத்தப்பட்ட 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசை இலங்கை அறிஞர், கவிஞர், விமர்சகர் மு.பொன்னம்பலம் வென்றார். அவருடைய “திறனாய்வின் புதிய திசைகள்” என்ற நூலுக்கு அமெரிக்க டாலர் 10,000 பரிசாக வழங்கப்பட்டது. டிசம்பர் 6ஆம் தேதியன்று பெட்டாலிங் ஜெயாவில் தோட்ட மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்தப் பரிசு வழங்கப்பட்டது. மு.பொ.நேரில் வந்து பரிசினைப் பெற்றுக்கொண்டார்.
இதே நிகழ்வில் மலேசிய நூல்களுக்கான சிறப்புப் பரிசை நாவலாசிரியர் அ. ரெங்கசாமி வென்றார். அவருடைய “விடியல்” என்ற நாவலுக்கு மலேசிய ரிங்கிட் 10,000 வழங்கப்பட்டது. அவரும் நேரில் வந்து பரிசினைப் பெற்றுக்கொண்டார்.
தான் ஸ்ரீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியத்தின் தலைவர் சோமசுந்தரம் இருவருக்கும் பரிசுகளை எடுத்து வழங்கினார். இவ்வாண்டு இலக்கியப் பரிசுக்காக அனைத்துலகிலும் இருந்து 150 தமிழ் நூல்கள் வந்ததாகவும் அவற்றை வடிகட்டி இந்த இரு நூல்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பரிசுகள் இவ்வாண்டு முதன் முறையாக வழங்கப்படுகின்றன. ஆனால் இனி தொடர்ந்து ஈராண்டுகளுக்கு ஒருமுறை இதே வகையில் பரிசுகள் வழங்கப்படும் என அவர் கூறினார்.
தான் ஸ்ரீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் என்பது மலேசியாவில் இயங்கும் இந்தியர்களுக்குச் சொந்தமான தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தால் (National Land Finance Cooperative Society) அமைக்கப்பட்டது. அது தனது லாபத்தின் ஒரு பகுதியான 20 மில்லியன் மலேசிய ரிங்கிட்டை வைப்புத் தொகையாக வைத்து, அதிலிருந்து வரும் ஈவில் இந்தப் பரிசுகளை வழங்குகிறது. இதே போன்று உள்ளூர் கலை கலாசார நிகழ்வுகளுக்கும் உதவி நிதி அளிக்கப்பட்டு வருகிறது.
——-
- சந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்
- மலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்
- மூன்று பேர் மூன்று காதல்
- மதிப்பும் வீரமும்
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ
- அரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)
- காளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்
- வெளி
- கண்ணீர்ப் பனித்துளி நான்
- தாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்
- ஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)
- நினைவுகளின் சுவட்டில் (105)
- சந்திப்பு
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -6
- பி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை
- 22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )
- நம்பிக்கை ஒளி! (10)
- சீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்
- வந்த வழி-
- பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்
- வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை
- ஆத்ம சோதனை
- உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை? – 1
- பூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.
- அக்னிப்பிரவேசம் -13