பழங்கால திருமண வழக்கங்களிலிருந்து விடைபெற விரும்பும் ஆப்கானிஸ்தான்.

author
105
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 31 in the series 16 டிசம்பர் 2012

பாராங்கிஸ் நஜிபுல்லா

6BC0AA75-E5B5-4640-9BA5-E5C677F56D28_w640_r1_s_cx0_cy3_cw0ஒரு இளம் வாலிபர் தன் மனைவியை திருமணம் செய்ய ஏராளமாக செலவு செய்வதை பார்த்து ஆப்கானிஸ்தானில் யாரும் அதிர்ச்சியடையமாட்டார்கள்.

வருங்கால மனைவியின் பெற்றோருக்கு ”வால்வார்” எனப்படும் தொகையை கொடுப்பது ஏறத்தாழ பல லட்சக்கணக்கான ரூபாய்கள் ஆகலாம். இது தவிர திருமணச் செலவும் ஏராளமாகும்.

இப்போது நாட்டின் அரசாங்கத்தின் உள்ளேயே பொருளாதார வகையில் நசுக்கக்கூடிய இப்படிப்பட்ட செலவினங்களை கட்டுப்படுத்த இந்த நீண்டகால பாரம்பரிய பழக்கத்தை தடுத்து நிறுத்த இயக்கம் தோன்றியுள்ளது.

ஆப்கானிஸ்தான் பெண்கள் நல அமைச்சகம், “வால்வார்” பழக்கத்துக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. இந்த பழக்கம் சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்ல, பல குடும்பங்களை நிரந்தரமாக கடனில் ஆழ்த்திவிடுகிறது என்றும் அமைச்சகம் தெரிவிக்கிறது.

“இந்த வெட்ககரமான பழக்கத்தையும், தாங்கமுடியாத வால்வாரையும் குறிவைத்து இந்த பிரச்சார இயக்கம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த வால்வார் குடும்பங்கள் மீது தாங்கமுடியாத பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது” என்று பெண்கள் நல அமைச்சகத்தின் துணை அமைச்சர் மெழகான் முஸ்டஃபாவி கூறுகிறார். “அதுவும், குடும்ப சண்டைகளை தீர்த்துகொள்ள பெண்களை திருமணம் செய்விப்பது ஆகிய பல தீய பழக்கங்களையும் எதிர்த்து இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்

இந்த இயக்கத்தின் குறிக்கோள், பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும், அவர்களது உரிமைகளை பாதுகாப்பதுமேயாகும். ஏனெனில் எப்படிப்பட்ட கொடுக்கல் வாங்கலிலும், பெண்களே அதன் விளைவுகளை அனுபவிக்கிறார்கள் என்று முஸ்தபாவி கூறுகிறார்.

வால்வார் பணக்கொடையை பொறுத்த மட்டில், மணப்பெண் “ஏற்கெனவே பெரும் கடனில் வாழ்க்கையோடு போராடிகொண்டிருக்கும் குடும்பத்தில் தன் புது வாழ்க்கையை துவங்குகிறார். சரிப்பட அமையாத திருமணங்களிலோ, இந்த பெண் எதிரியின் பெண் போல நடத்தப்படுவதும் உண்டாகிறது” என்று முஸ்தபாவி கூறுகிறார்.

அமைச்சகம், நாட்டின் முக்கியமான இஸ்லாமிய மதகுருக்களையும், சட்டம் ஒழுங்கு நிலைப்படுத்தும் அதிகாரிகளையும் அமைச்சகங்களையும் இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்ல அழைத்துள்ளது.

நாடெங்கும் உள்ள சுமார் 400 இஸ்லாமிய மதகுருக்கள் காபூலில் இந்த இயக்கம் சார்ந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். அப்போது பெண்களுக்கு எதிரான இந்த வால்வார் திருமண பழக்க வழக்கத்துக்கு எதிராகவும், மற்ற பெண்ணுரிமைகளை கட்டுப்படுத்தும் பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும் கண்டனம் தெரிவித்தார்கள்.

இந்த இஸ்லாமிய மதகுருக்கள், மசூதிகளில் நடத்தும் தங்களது வெள்ளிக்கிழமை உரைகளில், இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களை பற்றி பேசி நாடெங்கும் பரப்பவும் ஒப்புகொண்டார்கள்.

டோலோ என்னும் பிரபலமான தொலைக்காட்சி நிலையம் அப்படிப்பட்ட உரைகளை ஒளிபரப்பவும் ஒப்புகொண்டது.

ஆப்கானிஸ்தானின் தீவிரமான கட்டுப்பெட்டித்தனமான சமூகத்தில், இஸ்லாமிய மதகுருவின் வார்த்தை வலுவானது. இவர்களது பங்கு இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்லவும் இதன் வெற்றிக்கும் முக்கியம் என்றும் கருதுகிறது.

“வால்வார் என்ற இந்த பழக்கம் இஸ்லாமுக்கு சம்பந்தமில்லாது என்றும், இது ஏறத்தாழ பெண்ணை விற்பதற்கு ஒப்பானது என்றும் முஸ்தபாவி கூறுகிறார். சொல்லப்போனால், இது சிவில் சட்டத்தையும் ஷரியா சட்டத்தையும் மீறுகிறது என்றும் கூறுகிறார்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஆப்கானிஸ்தான் சட்டம் தடைசெய்கிறது. ஆகவே திருமணம் என்ற பெயரில் ஒரு பெண்ணை விற்பதையோ வாங்குவதையோ 10 வருட கடுங்காவல் தண்டனை மூலம் தடை செய்கிறது.’ என்று முஸ்தபாவி கூறுகிறார். “நமது சிவில் சடங்கள் திருமண பந்தத்தில் முன் நிபந்தனைகளை தடை செய்கின்றன. வால்வார், மணப்பெண் கொடை, குடும்ப சண்டைகளை தீர்க்க பெண்களை திருமணம் செய்துகொடுப்பது, அல்லது கொலை செய்யப்பட்டதற்கு மாற்றாக ரத்த பணமாக பெண்ணை திருமணம் செய்து கொடுப்பது ஆகியவை இஸ்லாமுக்கு எதிரானவை. ஆகவே இந்த பழக்கவழக்கங்கள் தடை செய்யப்பட்டவை” என்று முஸ்தபாவி கூறுகிறார்.

ஷரியா திருமணம், ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள மணக்கொடை (மஹர்) கொடுப்பதை அனுமதிக்கிறது. ஆனால், அந்த பணம் உறுதியானதல்ல. ஷரியா சட்டங்கள், அந்த பணம் சிறிதளவு இருப்பதையும், புதிய குடும்பத்துக்கு வசதிக்கொப்ப இருப்பதையும் அனுமதிக்கிறது.

சில இஸ்லாமிய மதகுருக்கள், இந்த பணம் சில ஆப்கானிஸ்தான் பணத்தில் நூறு அல்லது இருநூறு என்று கூறுகிறார்கள். (அதாவது இந்திய பணத்தில் நூறு ரூபாய்கள்)

ஆனால் நடப்பில், பெண்களின் குடும்பத்தினர், பல லட்சக்கணக்கான பணத்தை தரும்படி மாப்பிள்ளை வீட்டாரை நிர்ப்பந்திக்கின்றனர். இது தவிர நகை, வீடு ஆகியவை கூட கேட்கின்றனர். இது தவிர மாப்பிள்ளை பகட்டான திருமண விருந்தும், திருமணத்துக்கு தொடர்பான பெரும் கொண்டாட்டங்களுக்கும் செலவு செய்யவேண்டும்.

ஒரு சராசரி ஆப்கானிஸ்தான் குடும்பம் திருமண செலவுகளுக்காக சுமார் 15000 அமெரிக்க டாலர்கள் (அல்லது 8 லட்சம் இந்திய ரூபாய்கள்) செலவு செய்ய வேண்டியிருக்கிறது என்று அமைச்சகம் கணக்கிடுகிறது

இந்த வால்வார் பணமும் திருமண செலவு விருந்துகளுமே ஒவ்வொரு குடும்பத்தின் சமூக அந்தஸ்தையும் நிர்ணயிக்கின்றன. ஆகையால், தங்களது உயர்ந்த அந்தஸ்தை காட்டிகொள்ள பல வருடங்கள் குடும்பங்கள் சேமிக்கின்றன. இளைஞர்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியேறி பல வருடங்கள் கடுமையாக உழைத்து பணம் சேர்க்கிறார்கள்.

இந்த எக்கச்சக்க செலவுகளை தவிர்ப்பதற்காக சில குடும்பங்கள், தங்கள் மகன்களையும் மகள்களையும் அடுத்த குடும்பத்தின் மகள்களுக்கும் மகன்களுக்கு திருமணம் செய்து வைத்துகொள்கிறார்கள். இதனை “பதல்” திருமணம் அல்லது பதிலுக்கு பதில் திருமணம் எனலாம்.

“இப்படிப்பட்ட செயல்களை தண்டிக்க சட்டங்கள் இருந்தாலும் அவை நிறைவேற்றப்பட்டதே இல்லை” என்று முஸ்தபாவி கூறுகிறார். ” இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடும் சிலரை தண்டித்து அதன் மூலம் தங்கள் மகள்களை விற்கும் குடும்பத்தினரை எச்சரிக்கலாம் என்று சட்ட ஒழுங்கு அமைச்சகத்தை கேட்டுகொண்டுள்ளோம்” என்கிறார் முஸ்தபாவி.

மூலம்

Series Navigationசாஹித்ய அகாடமியில் கிடைத்த ஒரு நட்பு – பேராசிரியர் மோஹன்லால்
author

Similar Posts

105 Comments

 1. Avatar
  suvanappiriyan says:

  இஸ்லாமியர்களிடம் இது போன்று பெண்களிடம் வரதட்சணை கேட்கும் பழக்கம் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளிலேயே அதிகமாக நடைபெறுகிறது. இந்து மதத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்ற போது பல பழக்கங்களை அங்கிருந்து கொண்டு வந்தனர். அதில் வரதட்சணையும் ஒன்று. இது இஸ்லாத்திற்கு எதிரானது. ஒரு பொற்குவியலையே கொடுத்தாலும் அந்த மஹர் பெண்ணுக்கு ஈடாகாது என்பது ர்ஆனின் சட்டம். பெயருக்கு 1000, 2000 என்று எழுதிக் கொண்டு கொல்லைப் புறமாக கொள்ளையடிக்கும் பழக்கம் இஸ்லாத்தில் இல்லாத ஒன்று.

  அரபு நாடுகளில் பெண்கள் கட்கும் மஹரை தர முடியாமல் 35, 40 வயது இளைஞர்களும் :-) கல்யாணமாகாமல் இருப்பதை சர்வ சாதாரணமாகப் பார்ககலாம். இதனால் அரசு இளைஞர்களுக்கு திருமண உதவித் திட்டத்தை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறது.

  தமிழகத்திலும் இஸ்லாமியரிடத்தில் இந்த வரதட்சணை கொடுமை முன்பு இருந்தது. தற்போது டிஎன்டிஜே என்ற அமைப்பின் அயராத முயற்சியால் இன்று வாங்கிய வரதட்சணையை திருப்பி கொடுப்பதை ஒரு நிகழ்ச்சியாகவே நடத்தி வருகின்றனர். வஹாபிய இயக்கத்தால் தமிழகத்தில் விளைந்த நன்மைகளில் இதுவும் ஒன்று. இந்த நிலை ஆப்கானிஸ்தானிலும் ஏற்பட வேண்டும்.

 2. Avatar
  தங்கமணி says:

  அன்புள்ள சுவனப்பிரியன்,
  கட்டுரையை படித்துவிட்டு மறுமொழி எழுதலாமே?

 3. Avatar
  punaipeyaril says:

  சு.பிரியன் எதற்கு இதற்கெல்லாம் சப்பைக்கட்டு. எந்த மதமாயிருந்தால் என்ன.. இது கடைந்தெடுத்த கேவலம். என்ன, இந்தியாவில் இதை எதிர்க்க முடியும் … அங்கு ஜிகாத்தின் பெயரால் எதிர்ப்பவர்கள் அழிக்கப்படுகிறார்கள். அதை பற்றிச் சொல்லுங்கள்…

 4. Avatar
  தங்கமணி says:

  சுவனப்பிரியனுக்கு புரியவில்லை என்பதால் மீண்டும்.

  இது வரதட்சிணை அல்ல. மெஹர். பெண்ணுக்கு ஒரு ஆண் கொடுக்கவேண்டிய பணம். அதனை ஆப்கானிஸ்தானில் வால்வார் என்று அழைக்கிறார்கள். ஆகையால் இது நிச்சயம் இந்துக்களிடமிருந்து வந்திருக்கமுடியாது.

  //அரபு நாடுகளில் பெண்கள் கட்கும் மஹரை தர முடியாமல் 35, 40 வயது இளைஞர்களும் :-) கல்யாணமாகாமல் இருப்பதை சர்வ சாதாரணமாகப் பார்ககலாம்.//
  அதுதான் ஆப்கானிஸ்தானிலும்.

 5. Avatar
  ஷாலி says:

  //இது வரதட்சிணை அல்ல. மெஹர். பெண்ணுக்கு ஒரு ஆண் கொடுக்கவேண்டிய பணம். அதனை ஆப்கானிஸ்தானில் வால்வார் என்று அழைக்கிறார்கள். ஆகையால் இது நிச்சயம் இந்துக்களிடமிருந்து வந்திருக்கமுடியாது.// திரு.தங்கமணி கூறுவது உண்மைதான்.இஸ்லாத்தில் வரதட்சணை கிடையாது.ஆனால் இந்திய முஸ்லிம்கள்,திரு தங்கமணி சொல்வதுபோல் இப்பழக்கத்தை இந்து சகோதரர்களிடமிருந்து கடன் பெற்று, வரதட்சணை கொடுத்தே கடனாளியான குடும்பம் அனேகம்.மதங்களுக்கு அப்பாற்பட்டு சிந்தித்துப்பார்த்தாலும் வரதட்சணை வாங்குவது ஒரு கேவலமான செயல். பிறந்ததிலிருந்து தன்னைப்பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையை பிரிந்து கணவன் வீட்டிற்கு வந்து,அவனுக்கு சுகத்தைக்கொடுத்து,அவன் குடும்பத்தை எடுத்து நடத்தி,அவனுக்கு ஒரு வாரிசு ஒன்றை பெற்றுத்தரும் பெண்ணிடம், எனக்கு என்ன தருகிறாய்? என்று கேட்பவன் ஒரு ஆண் மகனா? பேடிப்பயல் என்றுதான் சொல்லவேண்டும். அதேசமயம் இஸ்லாம் கூறும் மஹர் எனும் மணக்கொடையையும் மணமகனின் தகுதிக்கு மீறி கேட்டு ஆண்களை முதிர் கண்ணன் களாக மாற்றுவதையும் இஸ்லாம் ஏற்கவில்லை.இயற்கை மார்க்கத்தில் எதிலும் நடு நிலைதான் பேணப்படவேண்டும்.வரம்பு மீறுதலை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது.

 6. Avatar
  விசிறி says:

  ஷாலி,

  மஹர் என்றால் என்ன என்று ஒரு இஸ்லாமிய சகோதரர் மஹர் பழக்கத்தை விமர்சித்திருக்கிறார். அதுவும் இஸ்லாமிய மதப்புத்தகங்கள் அடிப்படையிலேயே.

  இஸ்லாமை பொறுத்தமட்டில் மஹர் என்பது பெண்ணை ”அனுபவிக்க” ஆண் அந்த பெண்ணுக்கு கொடுக்கும் விலை!

  மெஹர் என்பது என்ன?

  ஆனால், வரதட்சிணை என்பது ஒரு குடும்பத்தில் இருக்கும் சொத்தில் ஒரு பெண்ணுக்கு இருக்கும் பங்கை பெற்றுகொண்டு தன் புதிய குடும்பத்தை ஆரம்பிக்கும் முறை. இது பெண்ணுக்கான சொத்துரிமை. இது இந்துமத வழிமுறை அல்ல. பெரும்பாலான இந்துக்களில் உள்ள சமூக வழக்கம். இரண்டுக்குமான வேற்றுமையை அறிவீர்கள் என்று கருதுகிறேன்.

  மஹர் கேவலமான கருத்து கொண்டது. வரதட்சிணை பெண்ணின் சொத்துரிமை பற்றியது. இரண்டையும் ஒப்பிடமுடியாது.

 7. Avatar
  suvanappiriyan says:

  திரு தங்கமணி!

  //சுவனப்பிரியனுக்கு புரியவில்லை என்பதால் மீண்டும்.
  இது வரதட்சிணை அல்ல. மெஹர். பெண்ணுக்கு ஒரு ஆண் கொடுக்கவேண்டிய பணம். அதனை ஆப்கானிஸ்தானில் வால்வார் என்று அழைக்கிறார்கள். ஆகையால் இது நிச்சயம் இந்துக்களிடமிருந்து வந்திருக்கமுடியாது.//

  ஒரு பெண் நபி அவர்களிடம் வந்து தன்னை நபி அவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது ஒரு மனிதர் எழுந்து தங்களுக்குத் தேவையில்லை என்றால் இப்பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள் என்றார். அவளுக்கு மஹராக வழங்க ஏதும் உம்மிடம் உள்ளதா? என்று நபி கேட்டார்கள். அதற்கு அவர் ‘இந்த எனது ஆடையைத் தவிர என்னிடம் வேறு ஏதும் இல்லை என்றார். அதற்கு நபி அவர்கள் நீ உனது ஆடையை அவளுக்குக் கொடுத்தால் ஆடையே இல்லாமல் நீ இருக்க வேண்டி வரும். எனவே வேறு எதையாவது தேடுவீராக என்றனர். அதற்கு அவர் எனக்கு ஏதும் கிடைக்கவில்லை என்றார். அப்படியானால் ஒரு இரும்பு மோதிரத்தையாவது தேடுவீராக என்று நபி கூறினார்கள். அவர் எதுவும் கிடைக்கவில்லை என்றார். குர்ஆனில் உமக்கு ஏதேனும் தெரியுமா? என நபி கேட்டார்கள். இன்னின்ன அத்தியாயங்கள் தெரியும் என்று அந்த அத்தியாயங்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டார். உம்மிடம் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக உமக்கு நான் மணமுடித்துத் தந்தேன் என்று கூறினார்கள்.
  லஹ்ல் பின் ஸஃது அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. ஆதாரபூர்வமான நபி மொழியாகும் இது.

  இங்கு மஹர் என்பது திருமணம் முடிக்கப் போகும் ஆணிண் பொருளாதாரத்தை ஒத்து உள்ளதை கவனிக்கவும். ஒரு ஆணுக்கு வசதி இல்லை என்றால் சில குர்ஆன் வசனங்களையாவது மஹராக தந்து திருமணம் முடிக்க நபி மொழி வழி காட்டுகிறது. எனவே ஆப்கானிஸ்தானிலும், சவுதி அரேபியாவில் ஆடம்பர மோகத்தினால் சிரமத்தை அனுபவிக்கிறார்கள். இஸலாம் மிக எளிய வழியை காட்டித்தர ஏன் இந்த வரட்டு ஆடம்பரம்.

  எனவே தவறு இஸ்லாமிய சட்டத்தில் இல்லை. அதனை தவறாக புரிந்து கொண்ட முஸ்லிம்களிடத்தில் உள்ளது.

  1. Avatar
   தங்கமணி says:

   அந்த ஆடவன் இந்த பெண்ணை விவாகரத்து செய்துவிட்டால், அந்த குரான் வசனங்களை வைத்து அந்த பெண் பிழைத்துகொள்ள முடியுமா?
   ஆப்கானிஸ்தானில் சரி.
   ஆனால் சவுதி அரேபியாவில் ஆடம்பர மோகமா? என்ன சொல்கிறீர்கள்? பூலோக சொர்க்கமான சவுதி அரேபியாவை விமர்சிக்கிறீர்களா? :-))

 8. Avatar
  suvanappiriyan says:

  இதே போல் மஹர் தொகை பெண்கள் அதிகமாக கேட்டு ஆண்கள் சிரமப்படும் நிலை முன்பும் இருந்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட ஜனாதிபதி உமர் அவர்கள் ஒரு கமிடடியை அமைத்து ஆலோசனை நடத்தினார்.
  உமர் அவர்கள் இப்பிரச்னையை ஈரடுக்கு குழுவில் விவாதித்து முடிவெடுத்து பொதுமக்களைப் பள்ளி வாசலில் கூட்டினார்கள். மேடையேறிய கலீபா, நபிகள் நாயகம் வழங்கிய மஹரை விட அதிக மஹரை யாரும் வழங்கக் கூடாது. இந்த ஆணையை மீறி வழங்கப்படும் மஹர் பறிமுதல் செய்யப்பட்டு பைத்துல்மால் பொதுநிதியில் சேர்க்கப்படும் என்று அறிவித்தார்கள். உடனே ஒரு மூதாட்டி, “”உமரே! நீர் மேடையிலிருந்து இறங்கிவிடும்” என்று கூறினார். கீழே இறங்கிய உமர் அவர்கள் அம்மூதாட்டி அருகே சென்று காரணம் கேட்டார்கள்.
  அம்மூதாட்டி “”மனைவிக்கு நீங்கள் ஒரு பொற்குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து நீங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்ற திருக்குர்ஆனின் 4-20 வது வசனத்தை நினைவூட்டினார்கள்.
  கலீபா அவர்களுக்கு நல்வழி காட்டியதாக அம்மூதாட்டியைப் பாராட்டினார். மூதாட்டி நினைவுபடுத்தியபடி அதிக மஹர் பெற மகளிருக்கு உரிமை உண்டு என்றும் பிரகடனப்படுத்தினார். மக்களாட்சியின் மாண்பை உயர்த்தினார்.

  இந்த வரலாற்று சம்பவத்தின் மூலம் பல உண்மைகள் தெரிய வருகிறது. பெண்கள் அன்று மமூதிக்கு அதிகம் வந்து கொண்டிருந்திருக்கிறார்கள். ஒரு ஜனாதிபதியையே எல்லோர் முன்னிலையிலும் கேள்வி கேட்கும் அளவுக்கு பெண்களின் சுதந்திரம் இருந்தது. தன்னையே கேள்வி கேட்ட அந்த பெண்ணை தண்டிக்காது தக்க நேரத்தில் உண்மையை உணர்த்தியதற்காக மூதாட்டியை பாராட்டியதையும் பார்க்கிறோம். இஸ்லாமிய ஜனாதிபதிகள் அந்த அளவு மக்களை மதிப்பவர்களாக இருந்தனர்.

 9. Avatar
  தங்கமணி says:

  ஒரு பக்கம் அதிகமாக மஹர் கேட்பதோ கொடுப்பதோ ஆடம்பரம் என்கிறீர்கள். அந்த மஹர் அதிமாக கேட்பதை கொடுப்பதை கட்டுப்படுத்துவதை உங்கள் சாமி தடுக்கிறது என்கிறீர்கள்.

  அது சரி, மஹர் என்ற கருத்தே கேவலமானதாக இருக்கும்போது அந்த பணத்தை திருப்பி வாங்கிகொள்ளக்கூடாது என்பதற்கு கொடுத்துள்ள வசனமும் சரியாகத்தான் இருக்கிறது.

  விசிறி கொடுத்துள்ள இணைப்பிலிருந்து …

  4:20 நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் – அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?

  4:21 அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!

  ஒரு பெண்ணோடு கலந்துவிட்டதுதான் காரணம். அதற்காகத்தான் அந்த மெஹர் திரும்ப பெறக்கூடாது. அந்த கலப்புக்கு கொடுக்கும் விலைதான் மெஹர். இதற்கு பெயர் விபச்சாரம். திருமணம் அல்ல.

  1. Avatar
   keriya says:

   ///ஒரு பெண்ணோடு கலந்துவிட்டதுதான் காரணம். அதற்காகத்தான் அந்த மெஹர் திரும்ப பெறக்கூடாது. அந்த கலப்புக்கு கொடுக்கும் விலைதான் மெஹர். இதற்கு பெயர் விபச்சாரம். திருமணம் அல்ல.///

   ஒரு பெண்ணோடு கலந்துவிட்டால், அது விபச்சாரம்.

   உறுதியான வாக்கு பெற்று, கலந்துவிட்டால் அது திருமணம்.

 10. Avatar
  suvanappiriyan says:

  //ஒரு பெண்ணோடு கலந்துவிட்டதுதான் காரணம். அதற்காகத்தான் அந்த மெஹர் திரும்ப பெறக்கூடாது. அந்த கலப்புக்கு கொடுக்கும் விலைதான் மெஹர். இதற்கு பெயர் விபச்சாரம். திருமணம் அல்ல.//

  வரதட்சணையாக பெண்ணிடம் பல லகரங்களை வாங்குகிறீர்களே? அதற்கு உங்கள் மதமும் வக்காலத்து வாங்குகிறதே? இதற்கு என்ன பெயரைக் கொடுக்கப் போகிறீர்கள்?

  அடுத்து இந்து மதத்தில் கணவன் மனைவி விவாகரத்து பெற்று விட்டால் மனைவிக்கு ஜீவனாம்சமாக மாதா மாதம் கொடுக்க நமது சட்டம் அறிவுறுத்துகிறதே? இதற்கு என்ன பெயரை கொடுப்பதாக் உத்தேசம்? :-)

  //ஆனால் சவுதி அரேபியாவில் ஆடம்பர மோகமா? என்ன சொல்கிறீர்கள்? பூலோக சொர்க்கமான சவுதி அரேபியாவை விமர்சிக்கிறீர்களா? :-))//

  80 சதவீதம் நிதானத்தோடு தான் இருப்பார்கள். 20 சதவீதம் தான் பணத்தை எவ்வாறு செலவு செய்வது என்பது தெரியாமல் ஆடம்பரத்தில் மூழ்கியுள்ளவர்கள்.

 11. Avatar
  தங்கமணி says:

  //வரதட்சணையாக பெண்ணிடம் பல லகரங்களை வாங்குகிறீர்களே? அதற்கு உங்கள் மதமும் வக்காலத்து வாங்குகிறதே?//
  சும்மா வழக்கம்போல அடிச்சி விடக்கூடாது. இந்து சமூகத்தில் வழக்கம். இது இந்து மத சட்டம் அல்ல. கட்டாய படுத்தி வரதட்சிணை வாங்குவது இந்தியாவில் இந்துக்களுக்கு என்று இருக்கும் இந்து சட்டப்படி குற்றம்.

  வரதட்சிணை என்பது பிறந்த வீட்டு சொத்தில் பெண்ணுக்கு இருக்கும் சொத்துரிமை. அது மிரட்டி கேட்டு பெறுவதல்ல.

  //அடுத்து இந்து மதத்தில் கணவன் மனைவி விவாகரத்து பெற்று விட்டால் மனைவிக்கு ஜீவனாம்சமாக மாதா மாதம் கொடுக்க நமது சட்டம் அறிவுறுத்துகிறதே? இதற்கு என்ன பெயரை கொடுப்பதாக் உத்தேசம்? :-)
  //
  ஜீவனாம்சம். ஏனெனில் அது ஆண் மட்டுமே பெண்ணுக்கு தருவதல்ல. பெண் வசதியாக இருந்து ஆண் வசதி இல்லாமல் இருந்தால், பெண்ணும் ஆணுக்கு தர வேண்டும்.

  அரபிய காட்டுமிராண்டி வழக்கங்களோடு இந்தியாவின் நாகரிக சட்டங்களை ஒப்பிட முடியாதில்லையா?

  1. Avatar
   keriya says:

   ///வரதட்சிணை என்பது பிறந்த வீட்டு சொத்தில் பெண்ணுக்கு இருக்கும் சொத்துரிமை. அது மிரட்டி கேட்டு பெறுவதல்ல.///

   வரதட்சணை பிறந்த வீட்டில் பெண்ணுக்கு இருக்கும் சொத்துரிமையா? அப்படி ஏதும் சட்டம் இருக்கிறதா?

   பெண் வீட்டுச் சொத்துரிமையை, ஏன் இந்து ஆண்கள் மிரட்டி வாங்கிக் கொள்கின்றனர்.

  2. Avatar
   keriya says:

   ///அரபிய காட்டுமிராண்டி வழக்கங்களோடு இந்தியாவின் நாகரிக சட்டங்களை ஒப்பிட முடியாதில்லையா?///

   ஒரு சட்டம் நாகரிகமானதா அல்லது காட்டுமிராண்டித்தனமானதா என்பதை அறிய, அதன் விளைவுகளைப் பார்த்துத்தான் அளவிட வேண்டும்.

 12. Avatar
  தங்கமணி says:

  //அடுத்து இந்து மதத்தில் கணவன் மனைவி விவாகரத்து பெற்று விட்டால் மனைவிக்கு ஜீவனாம்சமாக மாதா மாதம் கொடுக்க நமது சட்டம் அறிவுறுத்துகிறதே? இதற்கு என்ன பெயரை கொடுப்பதாக் உத்தேசம்? :-)
  //
  வெறும் ஜீவனாம்சம்தான்.
  ஏனெனில் அது கொடுக்க காரணம் அந்த பெண்ணை ”அனுபவித்ததுதான்” என்று காரணம் சொல்லப்படுவதில்லை.

  1. Avatar
   keriya says:

   ///ஏனெனில் அது கொடுக்க காரணம் அந்த பெண்ணை ”அனுபவித்ததுதான்” என்று காரணம் சொல்லப்படுவதில்லை.///

   கணவன், மனைவி என்ற உடன்பாடே, அனுபவிப்பதற்குத்தானே!

   அனுபவித்தாலும் அனுபவிக்காவிட்டாலும், குறிப்பிட்ட ஜீவனாம்சம் கொடுபடவேண்டும் என வற்புறுத்தப்படுகிறது தப்பல்லவா?

 13. Avatar
  மலர்மன்னன் says:

  அரேபியர்கள் புத்திளம் பெண்களுடன் சுகித்திருக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்து தமது மதச் சடங்குகள் பிரகாரம் முறைப்படி ஏழைப் பெற்றோருக்குப் பணம் கொடுத்து மகள்களைத் திருமணம் செய்துகொண்டு அலுக்கும் வரை சுகித்திருந்துவிட்டுத் தமது மதச் சட்டப் பிரகாரமே தலாக்கும் சொல்லிவிட்டுப் போவது தெரிந்த விஷயம்தான். இஸ்லாத்தில் மதச் சம்மதத்துடனான விபசாரத்திற்கு அளிக்கப்படும் மறுபெயர்தான் திருமணம். எதுபற்றியும் சரியாகத் தெரிந்துகொள்ளாமலே எல்லாம் தெரிந்ததுபோல் விமர்சிப்பவர்களுக்கும், தவறைச் சுட்டிக் காட்டியபிறகும் வருத்தம் தெரிவிக்கும் அடிப்படை நாகரிகம்கூடத் தெரியாதவர்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பது கால விரயம்.
  -மலர்மன்னன்

  1. Avatar
   keriya says:

   ///எதுபற்றியும் சரியாகத் தெரிந்துகொள்ளாமலே எல்லாம் தெரிந்ததுபோல் விமர்சிப்பவர்களுக்கும், தவறைச் சுட்டிக் காட்டியபிறகும் வருத்தம் தெரிவிக்கும் அடிப்படை நாகரிகம்கூடத் தெரியாதவர்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பது கால விரயம்.///

   மேற்குறிப்பிட்ட நற்சான்றிதழ் உங்களுக்குப் பொருந்திப் போகின்றது போல இருக்கிறது.

   எனது வாழ்த்துக்கள்.

 14. Avatar
  punaipeyaril says:

  மொரொக்கோவில் நடப்பது அப்படப்பான குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை. இதற்கு பெயர் தான் இஸ்லாம் எனில் இநத அடிமைகளை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது… களைகள்..

 15. Avatar
  suvanappiriyan says:

  திரு மலர் மன்னன்!

  //இஸ்லாத்தில் மதச் சம்மதத்துடனான விபசாரத்திற்கு அளிக்கப்படும் மறுபெயர்தான் திருமணம். எதுபற்றியும் சரியாகத் தெரிந்துகொள்ளாமலே எல்லாம் தெரிந்ததுபோல் விமர்சிப்பவர்களுக்கும், தவறைச் சுட்டிக் காட்டியபிறகும் வருத்தம் தெரிவிக்கும் அடிப்படை நாகரிகம்கூடத் தெரியாதவர்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பது கால விரயம்.//

  எப்படி…கடவுளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற போர்வையில் இளம் பெண்களை கோவிலுக்கு நேர்ந்து விடுவதும், பிறகு அந்த பெண்களை கோவிலில் உள்ளவர்கள் உபயோகித்துக் கொள்வதும், அந்த பெண்கள் தேவரடியாள் என்ற பட்ட பெயரோடு சமூகத்தில் ஓரங்கட்டப்படுவதுமாக எனது நாட்டில் இளம் பெண்கள் நரகில் தள்ளப்படுகிறார்களே! இதற்கு காரணமானவர்கள் அல்லவா சமூகத்தில் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு அந்த பெண்களை சமூகத்தில் இரண்டற கலக்கச் செய்ய வேண்டும்?

  பொட்டு கட்டி விடும் பழக்கத்தினால் தஞ்சையில் இன்றும் அந்த குடும்பங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றன. நேபாளத்தில் இன்றும் பொட்டு கட்டும் பழக்கம் இருந்து வருகிறது. அதை தடுக்க மலர்மன்னன், தங்கமணி, ஸ்மிதா போன்றவர்கள் முயற்சிக்கலாம்.

  1. Avatar
   paandiyan says:

   ok. we will do. we can generate so many people as reformers. what you are going to do??????? indirectly you accpet all MM contents.. now you tell me what you are going to do???? see your back always… 6 years baby marraige .. do u wants me to explain in more details.. since you are in muslim ..concentrate only muslim related issues.. we know how to handle our issues…

 16. Avatar
  suvanappiriyan says:

  //அரபிய காட்டுமிராண்டி வழக்கங்களோடு இந்தியாவின் நாகரிக சட்டங்களை ஒப்பிட முடியாதில்லையா?//

  பொட்டு கட்டி விட்டு அந்த இளம் பெண்களை தேவரடியார்களாக்கி மகிழ்கிறீர்களே…அதைச் சொல்றீங்களா…:-)

 17. Avatar
  suvanappiriyan says:

  //வெறும் ஜீவனாம்சம்தான்.
  ஏனெனில் அது கொடுக்க காரணம் அந்த பெண்ணை ”அனுபவித்ததுதான்” என்று காரணம் சொல்லப்படுவதில்லை.//

  வேறு எதற்காக கொடுக்கிறீர்கள் என்ற காரணத்தை சொன்னால் தெரிந்து கொள்வேன்…

 18. Avatar
  மலர்மன்னன் says:

  ஹிந்து மதத்தின் எந்த ஸ்ருதி, ஸ்மிருதியில் பெண்களைப் பொட்டுக் கட்டி விட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கவும். இஸ்லாமிய குடிமைச் சட்டம் திருமணம் செய்த பெண்ணை எவ்வித வழக்கு, விசாரணை, இன்றி தலாக் சொல்லியே மண விலக்குச் செய்ய ஆணுக்குத் அனுமதி அளிக்கிறது. இது நடைமுறையிலும் உள்ளது. பெண்ணுக்கும் மண விலக்குச் செய்ய உரிமை இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அதில் நடைமுறைச் சிக்கல்கள் பல உள்ளன. ஆணுக்கு இவ்வாறு இல்லை. அரேபியன் இங்கு வந்து ஏழைப் பெண்ணை மத குருவின் முன்னிலையில் மத சம்பிரதாய முறைப்படித் திருமணம் செய்துவிட்டு, அதே மத சம்பிரதாயப்படி மண விலக்கும் செய்துவிட்டுப் போவதற்கும் பொட்டு கட்டுவதற்கும் என்ன சம்பந்த்ம்? அதென்ன அரேபியனுக்கு இத்தனை வக்காலத்து வாங்கும் அடிமைப் புத்தி? அரேபியன் இங்கு வந்து மணம் செய்து சொற்ப காலம் அனுபவித்துவிட்டுத் தூக்கி எறிந்து செல்வது நம் நாட்டு ஏழை முஸ்லிம் பெண்களைத்தான் என்கிற தார்மிகக் கோபம் கூட வராத அளவுக்கா அரேபிய மோகம் தலைக்கு ஏற வேண்டும்?
  -மலர்மன்னன்

  1. Avatar
   keriya says:

   ///இஸ்லாமிய குடிமைச் சட்டம் திருமணம் செய்த பெண்ணை எவ்வித வழக்கு, விசாரணை, இன்றி தலாக் சொல்லியே மண விலக்குச் செய்ய ஆணுக்குத் அனுமதி அளிக்கிறது. இது நடைமுறையிலும் உள்ளது. பெண்ணுக்கும் மண விலக்குச் செய்ய உரிமை இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அதில் நடைமுறைச் சிக்கல்கள் பல உள்ளன.///

   உங்கள் புரிதல் தவறு. இஸ்லாத்தில் எடுத்தவுடன் ஆணுக்கோ பெண்ணுக்கோ மணவிலக்கு செய்ய இயலாது. மணவிலக்கை நாடும் ஆணோ பெண்ணோ அவகாசமளிக்கப்படுகிறார். குடும்ப அங்கத்தவர்களாலேயே பரஸ்பரம் விசாரணை நடக்கிறது. காதி நீதிவானிடம் முறையிட வேண்டிய தேவை இருக்கிறது. காதி நீதிவானும் எடுத்த எடுப்பிலேயே மணவிலக்கு அளிப்பதில்லை. எத்தனையோ படிமுறைகள் இருக்கின்றன.

   என்னமோ சொன்னீர்கள் – நடைமுறைச் சிக்கல்களை அறிந்து கொள்ளலாமா?

 19. Avatar
  மலர்மன்னன் says:

  //ஒரு பெண் நபி அவர்களிடம் வந்து தன்னை நபி அவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது ஒரு மனிதர் எழுந்து தங்களுக்குத் தேவையில்லை என்றால் இப்பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள் என்றார்-சுவனப்பிரியன்//

  பெண் என்பவள் ஏதோ ஒரு பண்டம் என்பது போலவும் பண்ட மாற்று போலப் பேசப்படுவதாகவும் அல்லவா உள்ளது? இதைப் பெருமையுடன் எட்டுத்துக்காட்டும் மனப் போக்கை என்ன சொல்ல? இது என்ன ஸிண்ட்ரோம்?
  -மலர்மன்னன்

  1. Avatar
   Ram says:

   சுவனப்பிரியரின் ஹிலா திருமணம் பற்றிய கருத்து இப்பொழுது ஏனோ நினைவுக்கு வந்தது:
   //
   அடுத்து பெண்ணுக்கு இதில் என்ன நஷ்டம்? வேறொரு ஆணை மணக்கும் பெண் மஹராக 1 லட்சம் இரண்டு லட்சம் பெற்றுக் கொள்கிறாள். அவனோடு ஒரு இரவு இல்லற சுகத்தையும் சட்ட பூர்வமாக அனுபவிக்கிறாள். –சுவனப்பிரியன்
   //

  2. Avatar
   keriya says:

   ///பெண் என்பவள் ஏதோ ஒரு பண்டம் என்பது போலவும் பண்ட மாற்று போலப் பேசப்படுவதாகவும் அல்லவா உள்ளது? இதைப் பெருமையுடன் எட்டுத்துக்காட்டும் மனப் போக்கை என்ன சொல்ல? இது என்ன ஸிண்ட்ரோம்?
   -மலர்மன்னன்///

   ஓர் ஆணோ பெண்ணோ – இருவருக்கிடையில் விருப்பம், பொருத்தம் என்று வரும்போதுதான், திருமணம் நடக்கிறது. இருவரில் ஒருவர் விரும்பாவிடின், திருமணம் நடப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. This is a common sense.

   இதற்கு பொருள் பண்டமாற்று என்று பெயரிடுவது, எந்தவகையான syndrome?

 20. Avatar
  punaipeyaril says:

  பொட்டு கட்டி விடும் பழக்கத்தினால் — இதற்கு மலர்மன்னன், தங்கமணி, ஸ்மிதா கருத்தறிய ஆவல்

 21. Avatar
  விசிறி says:

  சுவனப்பிரியன்,
  //பொட்டு கட்டி விட்டு அந்த இளம் பெண்களை தேவரடியார்களாக்கி மகிழ்கிறீர்களே…அதைச் சொல்றீங்களா…:-)//
  அதற்கு எதற்காக ஸ்மைலி போட்டு சந்தோஷப்படுகிறீர்கள் என்று தெரியவில்லை.

  முதலாவது எல்லா இளம்பெண்களுக்கும் இப்படி பொட்டுக்கட்டுவதில்லை.

  இரண்டாவது பொட்டுக்கட்டுபவர்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த குடும்பத்தினராக இருந்தார்கள். அவர்களில் யாரேனும் அந்த பொட்டுக்கட்ட விருப்பப்படவில்லை என்றால், அவர்களை அந்த குடும்பம் வற்புறுத்தாது. விருப்பப்படுகிறவர்கள்தான் தேவரடியார்களாக ஆனார்கள்.

  மூன்றாவது இது இந்து மத பழக்கம் அல்ல. இந்துக்களின் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் இருந்த பழக்கம்.
  இந்து மத சட்டங்கள் எதுவும் அவ்வாறு செய்யவேண்டும் என்று கோரவில்லை. இன்றைய இந்து சமூகத்தில் உள்ள இந்து சட்டப்படி இது குற்றம்.

  நான்காவது இந்த கட்டுரை ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சமூக சிக்கலை சொல்கிறது. அதற்கு தேவையில்லாமல் இந்து மதத்தின் மீது பழி போட்டு இங்கே விவாதத்தை ஆரம்பித்து வைத்தது சுவனப்பிரியன்.

  உடனே இதனை இந்துமதம் vs இஸ்லாம் என்ற விவாதமாக ஆக்கி தங்களது வெறுப்பு உள்ளத்தை வெளிக்காட்டிகொள்கிறார்கள் ஷாலியும் சுவனப்பிரியனும்

  1. Avatar
   keriya says:

   //பொட்டு கட்டி விட்டு அந்த இளம் பெண்களை தேவரடியார்களாக்கி மகிழ்கிறீர்களே…அதைச் சொல்றீங்களா…:-)//

   ///அதற்கு எதற்காக ஸ்மைலி போட்டு சந்தோஷப்படுகிறீர்கள் என்று தெரியவில்லை.///

   நமக்கு சந்தோஷப்பட, இதில் என்ன இருக்கிறது? உள்ளதைத்தானே சுவனப்பிரியன் சொன்னார்.

  2. Avatar
   paandiyan says:

   விசிறி said rightly. சுவனப்பிரியன் is a not a real muslim. might be he converted for some money or benefits. that why he is more keen on hindus rather than muslim issues.

 22. Avatar
  suvanappiriyan says:

  திரு மலர் மன்னன்!

  //ஹிந்து மதத்தின் எந்த ஸ்ருதி, ஸ்மிருதியில் பெண்களைப் பொட்டுக் கட்டி விட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கவும்.//

  தேவதாசிகளை ருத்திர கன்னிகை என்றே பல ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.

  சைவ சமயக் குறவரான திருநாவுக்கரசர்

  அருமணித்தடம் பூண் முலையரம்பையரொ டருளிப் பாடியர்
  ஊமையிற்றொழுவர் உருத்திரபல் கணத்தார்

  என்று அழகு தமிழில் பாடுகின்றார். சுந்தர மூர்த்தி நாயனாரின் காதல் மனைவி பறவை நாச்சியாரைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் யார்? எந்த குலம்? அவர் ஒரு தேவரடியார். தேவதாசி குலத்தில் பிறந்தவர். இந்த இருவரின் காதலுக்கு சிவ பெருமானே தூதாக சென்றதாக இந்து மத புராணங்கள் கூறுகின்றன. தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டில் 400 தேவதாசிகள் பணி புரிந்ததாக விபரம் உள்ளது. இந்து மத கடவுளே தேவதாசி காதலுக்கு தூது போனதாக வரும் போது வேறு எந்த ஆதாரத்தை மலர் மன்னன் கேட்கிறார்?

  மேலும் ஆண்டாள் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றோர்களைப் பற்றி கண்ணியம் கருதி நான் எழுதவில்லை.

  அல்லது இந்த தேவதாசி முறை ஏன் நமது சமூகத்தில் ஊடுருவியது? அதற்கு யார் காரணம என்பதை மலர் மன்னன் விளக்குவாரா

  குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்களை கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டு தேவரடியார் (தேவடியாள் என்றுதான் வழக்கில் சொல்லுவார்கள்) என்று முத்திரை குத்தும் கேவலமான முறை ஒழித்துக்கட்டப் பட்டது நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான்!
  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியார் அம்மையார்தான் இதற்கான மசோ தாவை முன்மொழிந்தார். அதற்கும் பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு! – அதிலும் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
  “தாசிகுலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது. பலருக்கும் இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. இப்படிக் கூறுவதால் என்னைத் தாசிக் கள்ளன் என்று கூடக் கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.
  சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதைத் திரும்பச் செல்ல விரும்பு கிறேன். தாசிகள் கோயில் பணிக் கென்று படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால் பரதநாட்டியக் கலை அழிந்து விடும். ஆண்டவன் கட்ட ளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயம் ஆகும்!” – என்று வீர உரை நிகழ்ததியதை மலர் மன்னன் மறுக்க முடியுமா?

  .

  1. Avatar
   Ram says:

   இந்து மதம் மற்றும் இந்து சமூகம் விமர்சனங்களையும் , விவாதங்களையும் எப்பொழுதுமே ஏற்றுக்கொண்டு மாறுதலுக்கு உட்படுதிக்கொண்டே வந்திருக்கிறது. அந்த விவாதங்கள் நடைபெரும் போது, இரு சார்பிலும் கருத்துக்கள் வைக்கப்பட்டு, கால மாறுதலின் தேவை அறிந்து சம்பிரதாய மாற்றங்களோ, சட்ட மாற்றங்களோ ஏற்பட்டன. அவை இரு சார்பிரனாலும் சில காலத்துக்குளேயே நடைமுறையில் ஏற்கப்பட்டன.
   நடை முறையில் உள்ள இந்த நல்ல மாற்றங்களை கண்டும் காணாததுபோல் , பழைய விடயங்களை இந்து மதத்திற்கு எதிராக கிளப்பிவிட்டு தங்கள் மட்டுமே உத்தமர் என்று கூறுவதை மாற்று மதம் மற்றும் தற்கால இந்து விரோத அரசியல் வாதிகள் செய்கின்றனர். இப்பொழுது தேவதாசி முறை சட்டப்படி குற்றம். அதுபோல் பல பழைய முறைபாடுகள் அழிக்கவோ , குறைக்கவோ செய்யப்பட்டுவிட்டன. (உதாரணம்: சதி முறை. சில (20 அல்லது 30) வருடங்களுக்கு முன்னால் சாதரணமாக பார்க்க கூடிய விதவை அலங்காரங்களை (மொட்டை) இப்பொழுது காண மிகவும் தேடவேண்டும் )
   இன்றைய காலகட்டத்தில் இந்து மதத்தின் மீது உள்ள பெரிய குற்றச்சாட்டு சாதி முறை மட்டுமே. அதை போக்க சாதாரண மக்கள் தயாராக இருந்தாலும் , அரசியல்வாதிகள் அனுமதிக்க தயாராக இல்லை. ஆனால் விரைவில் இதுவும் சரி செய்யப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
   இந்து மக்கள் யாரும் தங்கள் மதம் மாறுதலுக்கு தேவையே இல்லாத perfect மதம் என்று கூறுவதில்லை. எனக்கு தெரிந்து கிறிஸ்துவர்களும்,சீக்கியரும், பௌத்தரும் கூட இதேபோல் மாற்றங்களை ஏற்கின்றனர், அவை தங்கள் பழைய மத நம்பிக்கை மற்றும் மத புத்தகங்களுக்கு எதிராக இருந்தாலும்.

 23. Avatar
  suvanappiriyan says:

  திரு மலர் மன்னன்!

  //அதென்ன அரேபியனுக்கு இத்தனை வக்காலத்து வாங்கும் அடிமைப் புத்தி? அரேபியன் இங்கு வந்து மணம் செய்து சொற்ப காலம் அனுபவித்துவிட்டுத் தூக்கி எறிந்து செல்வது நம் நாட்டு ஏழை முஸ்லிம் பெண்களைத்தான் என்கிற தார்மிகக் கோபம் கூட வராத அளவுக்கா அரேபிய மோகம் தலைக்கு ஏற வேண்டும்?//

  இங்கு யாருக்கும் எந்த அரேபிய பாசமும் இல்லை. அது எனக்கு அவசியமும் இல்லை. எந்த நாட்டுக்கு சென்றாலும் உழைத்தால்தான் அதற்கு தக்க ஊதியம் கிடைக்கும். வயதான அரபுகள் ஹைதரபாத் போன்ற நகரங்களில் வந்து சிறுமிகளை திருமணம் செய்து கொள்வதை நான் என்று ஆதரித்தேன். இது முற்றாக தடுக்கப்பட வேண்டும்.

  இவ்வாறு திருமணம் நடக்க யார் காரணம்? உங்களைப் பொன்ற உயர்சாதிக் காரர்கள் இரண்டு சதவீதமே இருந்து கொண்டு என்பது சதமான அரசு வேலைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளீர்கள். முஸ்லிம்களுக்கு அவ்வளவு லேசில் அரசு வேலைகள் கிடைப்பதில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு படிப்பும் பறிக்கப்பட்டது. அரசியலில் இருந்தும் ஓரம் கட்டப்பட்டோம். வறுமை விளையாடும் ஒரு குடும்பத்தில் தனது மகளுக்கு வெளி நாட்டில் பண உதவியோடு திருமணம் நடைபெறுகிறது என்பதால் அரை மனதோடு அந்த பெற்றோர் சம்மதிக்கின்றனர்.

  இதே பெற்றோர் நல்ல வசதியோடு கல்வியறிவோடு இருந்தால் ஒரு கிழவனுக்கு தனது மகளை கொடுப்பார்களா? எனவே தவறு நமது அரசாங்கத்திடமும், பெரும்பான்மை சமூகத்திடமும்தான் உள்ளது. அது மாறினால் இது போன்ற திருமணங்கள் தானாக குறைந்து விடும்.

  1. Avatar
   Ram says:

   ஏதோ வறுமையும் , அறியாமையும் முஸ்லிம்களுக்கு மட்டுமே உண்டானது என்பது போல் பேசுகிறீர்கள். சரி, அந்த வறுமையும் அறியாமையும் உள்ள முஸ்லிம் இளம் பெண்களுக்கு ஏன் முஸ்லிம் சட்டப்படி பாதுகாப்பு இல்லை ?
   //எனவே தவறு நமது அரசாங்கத்திடமும், பெரும்பான்மை சமூகத்திடமும்தான் உள்ளது. அது மாறினால் இது போன்ற திருமணங்கள் தானாக குறைந்து விடும்.//
   தவறு அரசிடமும் , பெரும்பான்மை சமூகத்திடமும் (யாரது?) இருந்தால் இந்தியாவில் உள்ள மற்ற சமூகத்திலும் இது போன்ற திருமணங்கள் இருக்க வேண்டுமே?

  2. Avatar
   Ram says:

   //வயதான அரபுகள் ஹைதரபாத் போன்ற நகரங்களில் வந்து சிறுமிகளை திருமணம் செய்து கொள்வதை நான் என்று ஆதரித்தேன். இது முற்றாக தடுக்கப்பட வேண்டும்.//

   எப்படி தடுப்பீர்கள்?

 24. Avatar
  suvanappiriyan says:

  //பெண் என்பவள் ஏதோ ஒரு பண்டம் என்பது போலவும் பண்ட மாற்று போலப் பேசப்படுவதாகவும் அல்லவா உள்ளது? இதைப் பெருமையுடன் எட்டுத்துக்காட்டும் மனப் போக்கை என்ன சொல்ல? இது என்ன ஸிண்ட்ரோம்?
  -மலர்மன்னன்//

  அன்றைய காலங்களில் ஆதரவற்ற அனாதைகளை பராமரிக்க தற்போது உள்ளது போன்ற விடுதிகள் கிடையாது. அந்த பெண்கள் தங்களின் பாதுகாப்புக்காக சமூதாய தலைவர்களிடம் தஞ்சம் அடைவார்கள். அந்த தலைவர் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அந்த பெண்களை உரிய மணமகனுக்கு திருமணம் முடித்து கொடுப்பது அந்த காலத்து வழக்கம். இது நம் நாட்டிலும் அந்த காலத்தில் நடைமுறையில் இருந்தது. அவ்வாறு ஒரு ஆதரவற்ற பெண் நபிகளிடம் வந்து ‘தங்களின் பாதுகாப்பில் இருந்து கொள்கிறேன்’ என்று சொல்லி நபி குடும்பத்தாரோடு தங்கி கொள்கிறார். அந்த நேரத்தில்தான் ஒரு நபி தோழர் அந்த பெண்ணை தான் மணந்து கொள்வதாக அனுமதி கேட்கிறார். இதில் என்ன தவறு கண்டீர்கள்?

 25. Avatar
  மலர்மன்னன் says:

  பொட்டு கட்டி விடும் பழக்கத்தினால் — இதற்கு மலர்மன்னன், தங்கமணி, ஸ்மிதா கருத்தறிய ஆவல் – punaipeyaril//

  சமூகவியல், கலாசாரக் கூறுகளின் அடிப்படையில் சிலப்பதிகாரம், திருக்குறள் தொடங்கி, பிற மாநில நிலைகள் (எ-கா. ஜய சோமநாத், புரி ஜகந்நாத்) ஓர் ஆய்வு நூல் எழுதி வருகிறேன். தேவரடியார் சமூகம் என ஒரு நூல் ஏற்கனவே வந்துள்ளது. எனது நூல் வேறு கோணத்தில் அமையும். நமது கலைகள் அழிந்துவிடாமல் பாதுகாத்து அளித்த மாதரசிகள் வணக்கத்திற்குரிய தேவரடியார்கள். பொட்டுக் கட்டி விடுதல் என்கிற பதப் பிரயோகமே என்னைத் துன்புறுத்துகிறது. ஒரு நடைமுறையில் ஊழலும் முறைகேடும் காலப் போக்கில் நுழைந்துவிடும்போது அவற்றை ஆராய்ந்து களைய முற்பட வேண்டுமேயல்லாது அந்த நடைமுறையையே குறைகண்டு நீக்குதல் தவறு என்பது என் கருத்து. அவ்வாறு நீக்கியதால் ஒரே இரவில் நூற்றுக் கணக்கான தேவரடியார்கள் வீடும் மானியமும் இழந்து வீதிக்கு வந்த பாலியல் தொழிலாளிகளாக மாறினார்கள். தங்களையும் அழித்துக் கொண்டு பிற்ரையும் அழித்தார்கள். பாலியல் தொழிலாளர் எண்ணிக்கைதான் அதிகரித்தது.
  எனக்குத் தெரிந்த தேவரடியாராக இருந்து பதிவிரதா சிரோமணிகளாக விளங்கியவர்கள் பலர். மு. கருணாநிதி அவர்களின் தாயாரும் நான் அறிந்த அத்தகைய உத்தம பதிவிரதா சிரோன்மணியே.
  -மலர்மன்னன்

 26. Avatar
  suvanappiriyan says:

  திரு பாண்டியன்!

  //விசிறி said rightly. சுவனப்பிரியன் is a not a real muslim. might be he converted for some money or benefits. that why he is more keen on hindus rather than muslim issues.//

  நான் உண்மையான முஸ்லிமா பெயர் தாங்கி முஸ்லிமா என்பதை உங்களையும் என்னையும் படைத்த இறைவன் அறிவான். இவ்வாறு இஸ்லாம் சம்பந்தப்பட்ட இடுகைகளோ பின்னூட்டங்களோ இடுவதற்கு எனக்கு எந்த சன்மானமும் எவரும் தருவதில்லை. அலுவலகத்தில் கிடைக்கும் ஓய்வு நேரத்தை சினிமாவில் பொழுதை கழிக்காமல் இது போன்று பதிலளித்துக் கொண்டுள்ளேன்.

  திண்ணையில் இஸ்லாம் சம்பநதமாக விமர்சனம் வரும் போது அதற்கு தகுந்த பதிலை இந்து மதத்தின் துணை கொண்டே தரும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறேன். அப்பொழுதுதான் நமது சமூகத்திலும் இந்த பழக்கம் உள்ளது என்பதை உங்களைப் போன்றவர்கள் அறிந்து கொள்வீர்கள். இஸ்லாத்தின் பால் வைக்கப்பட்ட கு;றச்சாட்டுகளுக்குத்தான் எனது பதில்கள். வேறு எந்த உள் நோக்கமும் இல்லை.

 27. Avatar
  suvanappiriyan says:

  திரு விசிறி!
  //இரண்டாவது பொட்டுக்கட்டுபவர்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த குடும்பத்தினராக இருந்தார்கள். அவர்களில் யாரேனும் அந்த பொட்டுக்கட்ட விருப்பப்படவில்லை என்றால், அவர்களை அந்த குடும்பம் வற்புறுத்தாது. விருப்பப்படுகிறவர்கள்தான் தேவரடியார்களாக ஆனார்கள்.
  மூன்றாவது இது இந்து மத பழக்கம் அல்ல. இந்துக்களின் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் இருந்த பழக்கம்.
  இந்து மத சட்டங்கள் எதுவும் அவ்வாறு செய்யவேண்டும் என்று கோரவில்லை. இன்றைய இந்து சமூகத்தில் உள்ள இந்து சட்டப்படி இது குற்றம்.//

  இது நண்பர் விசிறியின் வாதம்.

  //நமது கலைகள் அழிந்துவிடாமல் பாதுகாத்து அளித்த மாதரசிகள் வணக்கத்திற்குரிய தேவரடியார்கள்.//

  //எனக்குத் தெரிந்த தேவரடியாராக இருந்து பதிவிரதா சிரோமணிகளாக விளங்கியவர்கள் பலர். மு. கருணாநிதி அவர்களின் தாயாரும் நான் அறிந்த அத்தகைய உத்தம பதிவிரதா சிரோன்மணியே.//

  இது திரு மலர் மன்னனின் வாதம்.

  இருவருமே இந்து மதத்துக்காக வாதிடுகின்றனர். இதில் யார் சொல்வதை ஏற்பது?

  //இந்த கட்டுரை ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சமூக சிக்கலை சொல்கிறது. அதற்கு தேவையில்லாமல் இந்து மதத்தின் மீது பழி போட்டு இங்கே விவாதத்தை ஆரம்பித்து வைத்தது சுவனப்பிரியன்.//

  அந்த சமூக சிக்கல் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டதனால் வந்தது என்பதையும் நான் விளக்கியுள்ளேனே!

  நாம் ஏன் ஆப்கானிஸ்தானம் போக வேண்டும்? நமது நாட்டிலேயே பெண்களை கடவுளுக்கு நேர்ந்து விடும் பழக்கத்தை இன்றும் புனிதமாகத்தானே கருதி வருகிறோம் என்று ஞாபகப்படுத்தினேன். திரிபுராவிலும், டெல்லியிலும், தமிழகத்திலும் தினமும் வன்புணர்வு க்கு ஆளாக்கப்பட்டு பெண்கள் கொடுமை படுத்தப்படுவதை கண்டு கொள்ளாமல் ஆப்கானிஸ்தானத்தை எதற்கு நாம் விமரிசிக்க வேண்டும் என்று நானும் உங்களைப் பார்த்து கேட்கலாம் இல்லையா?

  இது ஒரு சாதாரண கருத்துப் பரிமாற்றமே… இந்த கருத்து பரிமாற்றத்தினால் உங்கள் கருத்தை நானோ எனது கருத்தை நீங்களோ உடன் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதில் உள்ள சாதக பாதகங்களை அலசுவதோ இது போன்ற பின்னூட்டங்களின் பலனாக இருக்கும்.

 28. Avatar
  மலர்மன்னன் says:

  1.ஆலயங்களில் தேவரடியார்கள் இருந்தமைக்கு நான் ஆதாரம் கேட்கவில்லை. ஆலயங்களில் தேவரடியார்கள் இருக்க வேண்டும் என்கிற விதிமுறை எங்கு உள்ளது என்றுதான் கேட்டேன். அடிப்படை வித்தியாசங்களைப் புரிந்துகொண்டு பதில் சொல்ல முற்பட வேண்டும்.
  2. இஸ்லாமிய குடிமைச் சட்டத்தின் பிரகாரம் மனைவி மண விலக்குப் பெறுவதானால் பத்து மாதம் சுமந்து பெற்று, சீராட்டி வளர்த்த தன் குழந்தைகள் மீதுகூட எவ்வித உரிமையும் இன்றி, அனைத்தையும் துறந்து கணவன் வீட்டைவிட்டு வெறுங் கையுடன் வெளியேற வேண்டும். ஆண் மண விலக்குப் பெறுவதாயின் தான் மும்முறை தலாக் சொல்லிவிட்டதாகப் பதிவு செய்துவிட்டால் போதும். அந்நிலையில் மனைவியின் வயிற்றில் வளரும் சிசுவின் மீது கூடக் கணவனுக்கே உரிமை.
  ஏதோ ஒரு கட்டத்தில் கணவன் மனைவியை தலாக் செய்து மீண்டும் அந்த மனைவியையே மணம் செய்துகொள்ள அவன் விரும்பினால் அவள் வேறு ஒரு ஆணை மணம் செய்து அவன் அவளை தலாக செய்து அதன் பிறகே முந்தைய கணவன் அவளை மீண்டும் மணக்க இயலும். எனவேதான் இஸ்லாமில் திருமணம் என்பது மத சம்மதத்துடனான விபசாரம் என்று முன்பு குறிப்பிட்டேன்.
  நான் கர்நாடக மாநிலத்தில் இருக்கையில் Struggle and Action Against Acid Attack on Women என்ற அமைப்பில் வேலை செய்து பெண்களுக்காகப் பல வழக்குகளை முன்னின்று நடத்தியவன். இன்றும் அந்த அமைப்புடன் எனக்குத் தொடர்பு உண்டு. கணவனால் திராவகம் ஊற்றப்பட்ட பல இஸ்லாமியப் பெண்கள் சார்பில் போராடியபோது பல நடைமுறைச் சிக்கல்களை நேரில் எதிர்கொண்டவன் நான். அத்தகைய சிக்கல்கள் ஏதும் எங்களுக்கு ஹிந்து, கிறீஸ்தவப் பெண்கள் விவகாரங்களில் ஏற்படவில்லை.
  இஸ்லாமியப் பெண்கள் மணவிலக்குப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் பற்றி விரிவாக அறிய 2006 அல்லது 2007 ஆண்டில் காலச்சுவடு மாத இதழில் நான் எழுதிய கட்டுரைகளைத் தேடிப் படித்துக்கொள்ளலாம்.
  எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருப்பது சாத்தியமில்லை.
  -மலர்மன்னன்

 29. Avatar
  மலர்மன்னன் says:

  சிறுபான்மை என்ற பெயரில் வேறு எங்குமே காணாத பல சலுகைகளைப் பெற்று, எல்லாத் துறைகளிலும் – ஹவாலா, கள்ளக் கடத்தல் உள்பட!- எவ்விதத் தடங்கலும் இன்றி முன்னேறிவரும் முஸ்லிம்கள் இங்கு முஸ்லிம்களாக இருப்பதால சிரமப் படுவதாக ஒரு முஸ்லிம் சொன்னால் அது சந்தேகமில்லாமல் தேசத் துரோகம். ஒருவர் தான் முஸ்லிமாக இருப்பதால் கல்வி கற்கவோ வாழ்க்கையில் முன்னேறவோ இயலவில்லை என்று இந்த நாட்டில் சொல்ல முடியுமா? இரண்டு சதம் இரண்டு சதம் என்று ஹிந்து சமுதாயத்தைப் பிரித்துப் பேசினால் அந்த இரண்டு சதமும் சிறுபான்மைதானே, அதற்குரிய இப்போதுள்ள சலுகைகளை அளிக்கலாமா?
  -மலர்மன்னன்

 30. Avatar
  மலர்மன்னன் says:

  //ஒரு பெண், நபி அவர்களிடம் வந்து தன்னை நபி அவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது ஒரு மனிதர் எழுந்து தங்களுக்குத் தேவையில்லை என்றால் இப்பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்…- சுவனப் பிரியன்//
  இங்கு, ’தங்களுக்குத் தேவையில்லை என்றால்…’ என்பதை கவனிக்க வேண்டும். இது பெண்ணை ஒரு பண்டம் எனக் கருதுவதுபோல் அல்லாமல் வேறு எப்படிக் கருதத் தோன்றுகிறது?
  சிந்திக்கும் ஆற்றல் சிறிதளவு இருந்தால்கூடப் போதுமே, இதைப் புரிந்துகொள்ள! இதனால்தான் இவர்களுடன் விவாதிப்பது காலவிரயம் என்பது. செய்வதற்கு வேறு எத்தனையோ உபயோகமான பணிகள் உள்ளன. நேரமே போதவில்லை. வா, வா, வந்து உன் கருத்தைச் சொல் என்று திண்ணை வாசகர்கள் மின்னஞ்சல்
  களை விடாது அனுப்பி வற்புறுத்துவதை தயை செய்து நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். தனிப்பட்ட முறையில் விளக்கம் ஏதும் கேட்டால் அதேபோல் தனிப்பட்டமுறையில் எனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொள்கிறேன். அவற்றை சரிபார்த்து ஏற்பதும் புறக்கணிப்பதும் அவரவர் விருப்பம்.
  -மலர்மன்னன்

 31. Avatar
  மலர்மன்னன் says:

  எஸ். சத்திய மூர்த்தி தமிழ் நாட்டில் ஓர் அரசியல் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். ஹிந்து வேதாகம சாஸ்திர விற்பன்னரோ, அவற்றின் அடிப்படையில் அங்கீகாரம் அளிக்க அதிகாரம் பெற்றவரோ அல்லர். மேலும் அவர் ஹிந்து தர்மத்தின் பிரதிநிதி என்று தம்மை முன்னிறுத்திக்கொண்டவரும் அல்லர். ஐயர் என்று அவர் தம் பெயருக்குப் பின்னொட்டுப் போட்டுக் கொண்டதும் இல்லை. இங்கு அவரை சத்திய மூர்த்தி அய்யர் என்று வேண்டுமென்றே சாதியைக் குறிப்பிட்டு எழுதுவது அப்பட்டமான துவேஷத்தின் வெளிப்பாடு. எனவேதான் நீயும் கருத்தைச் சொன்னாலதான் சூடு பிடிக்க்கிறது என்று கச்சேரி கேட்கும் சுவாரசியத்துடன் எனக்கு மின்னஞ்சல் எழுதுபவர்களையும் வேண்டுகிறேன், வேண்டாம் எனக்கு இக்கால விரயம்.
  -மலர்மன்னன்

 32. Avatar
  மலர்மன்னன் says:

  நீ தமிழ்நாடு காங்கிரஸ் தலைவனாக இரு, நான் உனக்குக் கீழே வேலை செய்கிறேன் என்று காமராஜ (நாடார்) அவர்களிடம் சொன்னவர்தான் அந்த எஸ். சத்தியமூர்த்தி (ஐயர்)!
  -மலர்மன்னன்

 33. Avatar
  ஷாலி says:

  திரு.மலர்மன்னன் கூறும் தேவரடியார் பதிவிரதா சிரோன்மனிகள் அன்று எந்த தேவனை திருப்தி செய்தார்கள்?. புள்ளை பெயரைச்சொல்லி பூதம் சாப்பிட்டது போல் கடவுள் பெயரால் தேவரடியாள்களை அனுபவித்தவர்கள் கோயில் தர்மகர்த்தாக்கள்,அர்ச்சக பார்ப்பனர்கள்,ஜமீன்தார்கள்.ஊர்ப்பெரியவர்கள்.இதுதானே உண்மை.இந்த நடைமுறையை குறை கண்டு நீக்குவது தவறு என்கிறார்.மலர் மன்னன்.
  அதாவது லிமிட்டெட் நபர்கள் அனுபவிப்பதால் பதிவிரதா சிரோமணி தன்மை மாறாது. ஆனால் பப்ளிக்கா அனைவரும் அனுபவித்தால் அவர்கள் பாலியல் தொழிலாளியாக மாறிவிடுவார்களாம். அப்பெண்கள் மேல் என்னே கரிசனம்!

  இறுதியில் அண்ணாவிடம் அரசியல் நாகரீகம் பயின்றவர்.
  கருணாநிதிக்கும் கரி பூசிவிட்டார்.” அவர் தாயாரும் நானறிந்த அத்தகைய உத்தம பதி விரதா சிரோமணியே!”

 34. Avatar
  suvanappiriyan says:

  திரு மலர் மன்னன்!

  //ஆலயங்களில் தேவரடியார்கள் இருக்க வேண்டும் என்கிற விதிமுறை எங்கு உள்ளது என்றுதான் கேட்டேன். அடிப்படை வித்தியாசங்களைப் புரிந்துகொண்டு பதில் சொல்ல முற்பட வேண்டும்.//

  அடிப்படை விததியாசங்களை மலர் மன்னன் அவர்கள்தான் விளங்கிக் கொள்ளவில்லை. திருநாவுக்கரசர் அருளிய பாடலை ஆதாரமாக தந்தேனே! சிவ பெருமானே பறவை நாசசியாரின் காதலுக்கு தூது போனதாக குறிப்பிட்டிருந்தேனே. இதை விட என்ன ஆதாரம் வேண்டும். அல்லது அனைத்தும் பொய்யாக புனைந்துரைக்கப்பட்டது என்று சொல்லப் போகிறீர்களா?

  //இஸ்லாமிய குடிமைச் சட்டத்தின் பிரகாரம் மனைவி மண விலக்குப் பெறுவதானால் பத்து மாதம் சுமந்து பெற்று, சீராட்டி வளர்த்த தன் குழந்தைகள் மீதுகூட எவ்வித உரிமையும் இன்றி, அனைத்தையும் துறந்து கணவன் வீட்டைவிட்டு வெறுங் கையுடன் வெளியேற வேண்டும்.//

  எந்த சட்டம் அவ்வாறு சொல்கிறது? ஆதாரம் தர முடியுமா? தயவு செய்து பொய்களை அரங்கேற்ற வேண்டாம். குர்ஆனின் சட்டத்தை பார்க்கவும்

  ‘விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும்.இறைவனை அஞ்சுவோருக்கு இது கடமை’
  -குர்ஆன் 2:241
  ‘வசதி உள்ளவர் அவருக்கு தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள். இது நன்மை செய்வோர் மீது கடமை’
  -குர்ஆன் 2:236
  விவாகரத்து செய்பவன் வசதியுள்ளவனாக இருந்தால் அவனது வசதிக்கேற்ப லட்சக் கணக்காண ரூபாய்களை அந்த பெண்ணுக்கு பெற்றுத் தர வேண்டியது அந்த ஊர் ஜமாத்தின் கடமை. இது கட்டாயக் கடமை என்றும் கூறுவதைப் பார்க்கவும். எங்கள் ஊரில் ஏற்கெனவே மஹராக கொடுத்தும் விவாகரத்து சமயத்தில் பல லட்சங்களை பெண்ணுக்கு கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. அரபு நாடுகளில் அந்த பெண்களுக்கு கோடிக் கணக்கில் பணம் கிiடைக்கும்

  ‘பெண்களை விவாகரத்து செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தமக்குப் பிடித்த கணவர்களை விருப்பப் பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதை தடுக்காதீர்கள்’
  -குரஆன் 2:232

  விவாகரத்து செய்து விட்டால் அந்த பெண் மறுமணம் செய்து கொள்வதை முந்தய கணவன் தடுக்கக் கூடாது என்று குர்ஆன் இடும் கட்டளையை கவனியுங்கள். இது 1400 வருடங்களுக்கு முன்பே வந்த புரட்சிகர திட்டம். ஆனால் மலர் மன்னன் பின் பற்றும் மார்க்கம் அந்த பெண்களை கணவனின் நெருப்பிலேயே தள்ளி விட்டு சதி என்ற சடங்கை சமீப காலம் வரை செய்து வந்தீர்கள். அக்பர், ஒளரங்கசீப் போன்ற முகலாய மன்னர்கள் கடுமையான சட்டம் போட்டு இந்த கொடுமையை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். அதன பிறகு ராஜாராம் மோகன்ராயும் , ஆங்கிலேயர்களும் இந்த சட்டத்தை மிக கடுமையாக்கி இன்று சமூகத்தில் அந்த பழக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டது. ஆனால் வட நாடுகளில் இன்றும் அந்த கொடுமை மறைமுகமாக நடந்து வருகிறது. ரூப் கண்வர் விவகாரம் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். வலுக்கட்டாயமாக சிகையில் தள்ளிய கொடுமையை மறக்க முடியுமா?

  //கணவனால் திராவகம் ஊற்றப்பட்ட பல இஸ்லாமியப் பெண்கள் சார்பில் போராடியபோது பல நடைமுறைச் சிக்கல்களை நேரில் எதிர்கொண்டவன் நான்.//

  இது புதிய செய்தியாக உள்ளது. மலர் மன்னனே தயாரித்த செய்தியாக இருக்கலாம். ஏனெனில் குர்ஆன் இவ்வாறு கட்டளையிட்டுருக்க ஆசிட் ஊற்றியவன் கண்டிப்பாக முஸ்லிமாக இருக்க முடியாது…

 35. Avatar
  suvanappiriyan says:

  திரு மலர் மன்னன்!

  //எஸ். சத்திய மூர்த்தி தமிழ் நாட்டில் ஓர் அரசியல் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். ஹிந்து வேதாகம சாஸ்திர விற்பன்னரோ, அவற்றின் அடிப்படையில் அங்கீகாரம் அளிக்க அதிகாரம் பெற்றவரோ அல்லர். மேலும் அவர் ஹிந்து தர்மத்தின் பிரதிநிதி என்று தம்மை முன்னிறுத்திக்கொண்டவரும் அல்லர். ஐயர் என்று அவர் தம் பெயருக்குப் பின்னொட்டுப் போட்டுக் கொண்டதும் இல்லை. இங்கு அவரை சத்திய மூர்த்தி அய்யர் என்று வேண்டுமென்றே சாதியைக் குறிப்பிட்டு எழுதுவது அப்பட்டமான துவேஷத்தின் வெளிப்பாடு.//

  சத்திய மூர்த்தி சொல்லும் செயலும் இந்து மதத்தை கட்டுப்படுத்தாது என்று சொல்லும் அதே நீங்கள் கர்நாடகாவில ஏதோ ஒரு பெயர்தாங்கி முஸ்லிம் இஸ்லாமிய பெண்களுக்கு இழைத்த கொடுமையை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மேல் எப்படி போடுகிறீர்கள்? உங்களுக்கு நியாயம்: எனக்கொரு நியாயமா? நான் சத்திய மூர்த்தியை மட்டும் குறிப்பிடவில்லை. சிவ பெருமான் தூது போன கதையையும் குறிப்பிட்டுள்ளேன்.

  //இங்கு, ’தங்களுக்குத் தேவையில்லை என்றால்…’ என்பதை கவனிக்க வேண்டும். இது பெண்ணை ஒரு பண்டம் எனக் கருதுவதுபோல் அல்லாமல் வேறு எப்படிக் கருதத் தோன்றுகிறது?//

  ‘தேவையில்லை’ என்பது திருமண பந்தம் ஒன்றுக்கு மட்டும் பொருந்தக் கூடியது அல்ல. அன்று முகமது நபி அரபுலகம் அனைத்திற்கும் சக்கரவர்த்தியாக இருந்தார். ஒரு ஆட்சித்தலைவருக்கு அரசாட்சி செய்ய ஆண்களும் பெண்களும் நிறைய தேவைப்படும். ஆட்சித் தலைமை மட்டும் அல்லாது ஆன்மீக தலைமையையும் முகமது நபி கவனித்து வந்தார். எனவே தான் அந்த தோழர் ‘உங்கள் வேலைக்கு தேவைப்படவில்லை என்றால் அந்த பெண்ணை நான் திருமணம் முடித்துக் கொள்கிறேன்’ என்று கேட்டது. நன்றாக கவனிக்கவும். ‘தேவரடியாராக வைத்துக் கொள்கிறேன்’ என்று கேட்கவில்லை. ‘திருமணம் முடித்துக் கொள்கிறேன்’ என்றுதான் கேட்கிறார்.

 36. Avatar
  suvanappiriyan says:

  திரு மலர் மன்னன்!

  //இரண்டு சதம் இரண்டு சதம் என்று ஹிந்து சமுதாயத்தைப் பிரித்துப் பேசினால் அந்த இரண்டு சதமும் சிறுபான்மைதானே, அதற்குரிய இப்போதுள்ள சலுகைகளை அளிக்கலாமா?//

  சரியான வாதம். நீங்கள் உடனே ஆர்எஸ்ஸையும், பிஜேபியையும், பார்பனர்கள் சங்கத்தையும் தொடர்பு கொண்டு இந்தியாவில் பார்பணர்கள் மொத்தம் எத்தனை பேர் என்று கணக்கிட சொல்லுங்கள். அந்த விகிதாசரப்படி நீங்கள் பணியில் அமர்ந்துள்ளீர்களா என்று பாருங்கள். கூடுதலாக இருந்தால் அதனை தலித், பிற்படுத்தப்பட்டோருக்கு பிரிதது கொடுத்து விடுங்கள். குறைவாக இருந்தால் தாராளமாக அரசிடம் வாங்கிக் கொள்ளுங்கள். இதற்கு முஸ்லிம்களோ, தலித்களோ, பிற்படுத்தப்பட்ட சாதியினரோ குறுக்கே நிற்க மாட்டார். இதை நீங்கள் முன்னெடுத்து செய்யலாமே!

  //சிறுபான்மை என்ற பெயரில் வேறு எங்குமே காணாத பல சலுகைகளைப் பெற்று, எல்லாத் துறைகளிலும் – ஹவாலா, கள்ளக் கடத்தல் உள்பட!- எவ்விதத் தடங்கலும் இன்றி முன்னேறிவரும் முஸ்லிம்கள் இங்கு முஸ்லிம்களாக இருப்பதால சிரமப் படுவதாக ஒரு முஸ்லிம் சொன்னால் அது சந்தேகமில்லாமல் தேசத் துரோகம்.//

  ஒரு தாவுத் இப்றாகிமோ, ஒரு ஹாஜி மஸ்தானோ ஒட்டு மொத்த இந்திய இஸ்லாமிய மக்களின் பிரதிநிதியாக முடியாது. உங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஏழை முஸ்லிம்களை சற்று நோக்குஙகள். தலித்களை விட மிக மோசமான நிலையில்தான் முஸ்லிம்கள் உள்ளதாக சச்சார் கமிட்டி ஆய்வு சமர்பித்ததை அதற்குள் மறந்து விட்டீர்களா?

  ஆரம்பததில் இருந்து பர்மா, சிலோன், மலேசியா, வளைகுடா என்று தமிழக மற்றும் கேரள முஸ்லிம்கள் வெளி நாடுகளுக்கு சென்று பொருளீட்ட சென்றதால் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் சற்று வசதியாக உள்ளனர் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவை எடுத்துக் கொண்டால் இஸ்லாமியர்களின் நிலை மிக கவலைக்கிடமாகவே உள்ளது. இதை அரசும் அறியும்.

 37. Avatar
  மலர்மன்னன் says:

  விருப்பம் உள்ளவர்கள்தான் தேவரடியார் ஆனார்கள் என்கிறார், ஸ்ரீ விசிறி. அவ்வாறு தேவரடியார் ஆனவர்கள் பங்களிப்பைப் பற்றி நான் குறிப்பிட்டேன். இதில் முரண்பாடு எங்கே வந்தது? இரண்டில் எதை ஏற்பது என்று ஸ்ரீ சுவனப்பிரியன் குழம்ப வேண்டிய அவசியம் என்ன? வறண்ட பாலைவனப் பிரதேசத்தில் வேலைக்குப் போய்விட்டதாலேயே சிந்தனையில் வறட்சி ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை. பிரச்சினையை தேவரடியார் பக்கம் திசை திருப்பித் தப்பித்துக் கொள்ளும் புத்திசாலித்தனத்துக்கு மட்டும் குறைச்சலே இல்லை! இதற்கு நடுவே ஒருவர் குறுக்கிட்டு ஜலதோஷம் பிடித்தால் மூக்கையே அறுத்துப் போட்டுவிட வேண்டும் என்று வேறு கட்சி கட்டுகிறார்!
  -மலர்மன்னன்

 38. Avatar
  suvanappiriyan says:

  திரு ராம்!

  //ஏதோ வறுமையும் , அறியாமையும் முஸ்லிம்களுக்கு மட்டுமே உண்டானது என்பது போல் பேசுகிறீர்கள். சரி, அந்த வறுமையும் அறியாமையும் உள்ள முஸ்லிம் இளம் பெண்களுக்கு ஏன் முஸ்லிம் சட்டப்படி பாதுகாப்பு இல்லை ?//

  காரணம் இந்து மதத்தில் ஊறிப் போன வரதட்சணை கொடுமை. இந்து மதத்திலிருந்து மதம் மாறிய இஸ்லாமியர்கள் வரதட்சணை பழக்கத்தையும் கூடவே கொண்டு வந்ததால் இந்த பிரச்னை. தற்போது மஹர் கொடுத்து திருமணம் முடிப்பதுதான் இஸ்லாமிய முறை என்று தவ்ஹீத் ஜமாத் மூலம் பட்டி தொட்டி எல்லாம் கடந்த 20 வருடங்களாக பிரசாரம் செய்ததன் பலனாக நிறைய மாற்றங்கள் தென்படுகிறது. இளைஞர்கள் வரத்சணை வாங்க மாட்டோம் என்று ஒவ்வnhரு கூட்டத்திலும் இறைவன் மேல் ஆணையிட்டு உறுதி மொழி எடுத்துக் கொள்கின்றனர். முன்பு வாங்கிய வரதட்சணையை பலர் தற்போது திருப்பி கொடுத்து வருகின்றனர்.

  //தவறு அரசிடமும் , பெரும்பான்மை சமூகத்திடமும் (யாரது?) இருந்தால் இந்தியாவில் உள்ள மற்ற சமூகத்திலும் இது போன்ற திருமணங்கள் இருக்க வேண்டுமே?//

  ஏன் இல்லை. பால்ய விவாகம் இன்றும் இந்து மதத்தில் நடந்து வருகிறதே! கடுமையான சட்டம் போட்டும் அதனை தடுக்க முடியவில்லையே!

  //எப்படி தடுப்பீர்கள்?//

  பிரசாரத்தின் மூலம்தான். சவுதியில் இது போன்ற பால்ய விவாகம் முற்றிலும் தடை செய்யப்பட்டது. நம் இந்திய முஸ்லிம்களும் கல்வி வேலை வாய்ப்புகளில் சம அந்தஸ்தை பெறும் போது வறுமை நீங்கி இந்த பால்ய விவாகம் தடுக்கப்படும்.

  //இந்து மக்கள் யாரும் தங்கள் மதம் மாறுதலுக்கு தேவையே இல்லாத perfect மதம் என்று கூறுவதில்லை. எனக்கு தெரிந்து கிறிஸ்துவர்களும்,சீக்கியரும், பௌத்தரும் கூட இதேபோல் மாற்றங்களை ஏற்கின்றனர், அவை தங்கள் பழைய மத நம்பிக்கை மற்றும் மத புத்தகங்களுக்கு எதிராக இருந்தாலும்.//

  குர்ஆனில் அப்படி மாற்றம் செய்தே ஆக வேண்டும் என்று ஏதாவது ஒரு வசனத்தை காட்ட முடியுமா? இது அகில உலக மக்களுக்கும் இன்று வரை எந்த சட்ட சிக்கலையும் தர வில்லையே…

  1. Avatar
   Ram says:

   திரு சுவனப்பிரியன்,
   நான் கூறியது அரபுகள் இங்கு வந்து வறுமையிலும் அறியாமையிலும் வாடும் முஸ்லிம் இளம் பெண்களை மணமுடிப்பதை பற்றி. அதற்கும் இந்து மதத்திலிருந்து முஸ்லிமாக மாறியதற்கும் என்ன சம்பந்தம் ? அல்லது அவ்வாறு மதம் மாறியவர்களின் பெண்களை மட்டுமே அரபிகள் மணம் செய்கிறார்கள் என்கிறீர்களா?

   இந்து மதத்தில் உள்ள வறுமையில் மற்றும் அறியாமையில் உள்ள பால்ய பெண்களை உள்நாட்டவனோ அல்லது வெளிநாட்டவனோ மணமுடிப்பது சட்டப்படி குற்றம். ஒன்றிரண்டு நடந்தாலும் அந்த குற்றத்தை செய்தவர் தண்டனையில் இருந்து தப்பிக்கவைக்க எந்த ஒரு மத அதிகாரியோ அல்லது குருவாலோ முடியாது.

   மத சட்டப்படி அனுமதித்தாலும், பிரசாரத்தின் மூலம் மட்டுமே இதை நீங்கள் சரி செய்ய முடிந்தால், எதற்கு மற்ற மத சட்டங்கள் எல்லாம்?

 39. Avatar
  Ram says:

  //ஏதோ வறுமையும் , அறியாமையும் முஸ்லிம்களுக்கு மட்டுமே உண்டானது என்பது போல் பேசுகிறீர்கள். சரி, அந்த வறுமையும் அறியாமையும் உள்ள முஸ்லிம் இளம் பெண்களுக்கு ஏன் முஸ்லிம் சட்டப்படி பாதுகாப்பு இல்லை ?//
  //காரணம் இந்து மதத்தில் ஊறிப் போன வரதட்சணை கொடுமை. இந்து மதத்திலிருந்து மதம் மாறிய இஸ்லாமியர்கள் வரதட்சணை பழக்கத்தையும் கூடவே கொண்டு வந்ததால் இந்த பிரச்னை //

  இங்கே என் கேள்விக்கும் உங்கள் பதிலுக்கும் என்ன சம்பந்தம்?

  அரபுகள் ஹைதராபாத் மட்டுமல்ல எகிப்திலும் இது போன்ற தற்காலிக திருமணம் செய்வதாக படித்தேன். அப்போது எகிப்தியரும் வறுமையில் வாடுவதற்கு இந்து வரதச்சனை முறைதான் காரணமா?

 40. Avatar
  Ram says:

  குர்ஆனில் அப்படி மாற்றம் செய்யவே கூடாது என்று ஏதாவது ஒரு வசனத்தை காட்ட முடியுமா?

  ஒவ்வொரு மதத்திற்கும் தனி சட்டம் இருப்பதே சிக்கல் தானே?

  காலத்திற்கு ஏற்ப மாற முடியாத சட்டம் எல்லோராலும் ஏற்க முடியாது.
  நீங்கள் உங்கள் சட்டத்தை காலத்து ஏற்ப மாற்ற முடியாது. ஆனால் காலத்திற்கு ஏற்ப பிரசார மற்றம் மட்டும் செய்யலாம் என்கிறீர்கள்.

 41. Avatar
  suvanappiriyan says:

  திரு மலர் மன்னன்!

  //வறண்ட பாலைவனப் பிரதேசத்தில் வேலைக்குப் போய்விட்டதாலேயே சிந்தனையில் வறட்சி ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை. பிரச்சினையை தேவரடியார் பக்கம் திசை திருப்பித் தப்பித்துக் கொள்ளும் புத்திசாலித்தனத்துக்கு மட்டும் குறைச்சலே இல்லை!//

  பெண் கொடுமை இஸ்லாத்தில் உள்ளது என்று ஒரு கட்டுரை சொல்லும் போது அதை இஸ்லாமியான எனக்கு விளக்கம் கொடுக்க உரிமை உள்ளது. அதைத்தான் செய்தேன். அதோடு நமது இந்திய நாட்டிலும் பெண்கள் எவ்வாறெல்லாம் கொடுமை படுத்தப் படுகிறார்கள் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கவே ‘தேவரடியார்கள்’ பற்றி நான் சொன்னது. இதில் உங்களுக்கு என்மேல் சற்று கோபம் என்று நினைக்கிறேன். ‘மூளை வறண்டு விட்டது’ என்று என்னை இகழ்ந்தாலும் உங்கள் மேல் எனக்கு கோபம் வராது. எனது தாத்தா என்னை ஏதும் கோபத்தில் சொன்னால் நான் அவர் மேல் கோபப்படுவேனா! கண்டிப்பாக இல்லை. தாத்தாவிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை. எனவே தான் கோபப்படுகிறார் என்று நினைத்து விட்டு நான் நடையை கட்டுவேன்.

 42. Avatar
  suvanappiriyan says:

  திரு மலர் மன்னன்!
  //கணவனால் திராவகம் ஊற்றப்பட்ட பல இஸ்லாமியப் பெண்கள் சார்பில் போராடியபோது பல நடைமுறைச் சிக்கல்களை நேரில் எதிர்கொண்டவன் நான்.//

  புதுடில்லி :காதலிக்க மறுத்ததால், மூன்று இளைஞர்களால், “ஆசிட்’ வீச்சுக்கு இலக்காகி, முகத்தை பறிகொடுத்த, சோனாலி முகர்ஜி என்ற இளம் பெண், “கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் பங்கேற்று, 25 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.

  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=612432

  அப்படியே தின மலரின் இன்று வந்த இந்த செய்தியையும் படித்து விடுங்கள். இதற்காக நான் இந்து மதத்தை குறை சொல்ல மாட்டேன்.

 43. Avatar
  paandiyan says:

  ஈராக்கில் தற்போது பெண்களை ஏற்றுமதி செய்யும் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. ஒரு கன்னிப் பெண் 5000 டாலர்களுக்கு விலை போகின்றார். கன்னித்தன்மை இல்லாத பெண்ணின் விலை, அதிலும் அரைவாசி. சில இடங்களில்,வறுமை காரணமாக பெற்றோரே தங்கள் பெண் பிள்ளைகளை விபச்சார தரகரிடம் விற்று விடுகின்றனர். செய்னா எனும் 13 வயது சிறுமி, அவரது தாத்தாவால் விற்கப்பட்டாள். அரபு எமிரேட்சில் நான்காண்டுகள் பாலியல் தொழில் செய்த பிறகு, ஊருக்கு திரும்பி வந்தாள். தன்னை பண்டமாக விற்ற தாத்தா மீது நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தாள். எப்படியோ, சில நாட்களின் பின்னர், செய்னாவை காணவில்லை. இம்முறை பெற்ற தாயே, அவளை வட ஈராக்கை சேர்ந்த தரகர் ஒருவருக்கு விற்று விட்டாள். see the muslim cultume. converted muslim???? dont tune issues to hindu side. always see your back…

 44. Avatar
  paandiyan says:

  முஹம்மதுவிற்கு மட்டும் தனிப்பட்ட சலுகைகளை அல்லாஹ் கொடுத்துள்ளார், இது வேறு யாருக்கும் தரப்படவில்லை என்று குர்ஆன் சொல்கிறது.

  இஸ்லாமிய ஆதார நூல்களின் படி, இந்த ஜையத் என்பவர் “ஜையத் இபின் ஹரிதா” என்பவராவார். இவர் முஹம்மதுவின் முதல் மனைவியாகிய கதிஜாவின் முன்னால் அடிமையாவார். பிறகு இவரை தன் வளர்ப்பு மகனாக முஹம்மது தத்து எடுத்துக்கொண்டார். இஸ்லாமிய நூல்களில் சொல்லியிருக்கிற படி, ஒரு முறை முஹம்மது ஜையத்தை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்ற போது, ஜையத்தின் மனைவியாகிய ஜையத் பி. ஜேஷ் என்பவரை திரையில்லாமல் காண்டுவிட்டார் மற்றும் அவரின் அழகில் மயங்கிவிட்டார். முஹம்மது தன் அழகை புகழ்வதை ஜைனப் கேள்விப்பட்டார் அதனை தன் கணவருக்கும் தெரிவித்தார். இந்த செயல் ஜையத்தை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது, இதனால், அவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார், இதன் மூலம் முஹம்மவது தன் மனைவியை திருமணம் செய்யமுடியும் என்று கருதினார். suvanappiriyan dont waste our times by pasting some junk other portal links here. rightly said to you – ‘மூளை வறண்டு விட்டது’ .otherwise when mulsim issues comes why you are bring hindu issues that too all wrong contetns and so many people have been given solid explanations .. that too you are doing copy/paste the contents from other portals. i can also do such way.. Admin – please note if he is going to do against hindus by copy/paste some links always here then please permit me also to do here .

 45. Avatar
  punaipeyaril says:

  சு.ப : ஒருவன் உடம்பும் முழுதும் சீழ் வழிகிறது என்றால், “உனக்கு கட்டை விரல் நுனியில் வழிகிறது…” என்பது போல் ஏன் இந்த் எதிர் வாதம் செய்யவேண்டும். தனியே எங்கேயாவது மாட்டிக் கொண்டால், இன்று உலகம் முழுதும் பயப்பிடுவது என்ன மாதிரி அடையாளம் , என்று உலகறியும். இவ்வளவு நாள் பயந்து நடுங்கிய உலகு இன்று நிமிர்ந்து நிற்கிறது – ஜார்ஜ் புஷ் புண்ணியத்தில்.

 46. Avatar
  punaipeyaril says:

  ராம், அரேபியர்கள் மொராக்காவில் நடத்தும் அழிச்சாட்டியம், குரான் சொன்னது இல்லை அல்லா வழி முகமது சொன்னதா என்று சு.பி சொன்னால் தேவலை. சத்திய மூர்த்தி சொன்னது தவறென்று எங்களால் அவரை தூக்கியெறிந்து முத்துலட்சுமி ரெட்டியை கொண்டாட முடிந்தது. ஆனால் இவர்களின் கும்பலில்…? தாலிபான் அட்டூழியத்தை இதே சு.பி வெளிப்படையாக மீடியாவில் வந்து சொல்லட்டும்…. அப்புறம் மௌண்ட்ரோட் முகமதே பார்த்துக் கொள்வார்…

 47. Avatar
  மலர்மன்னன் says:

  சவூதி என்னு சுவனத்தின் மீது வெகு பிரியமாய் இருக்கும் பேராண்டி, திராவக வீச்சுக்கு இலக்கான முஸ்லிம் பெண்களுக்கு அவர்களின் கணவன்மார்களிடமிருந்து இழப்பீடு வாங்க நாங்கள் முயற்சி எடுக்கும்போது உங்கள் மதச் சட்டங்ககள் அதில் சிக்கலை உண்டுபண்ணுகின்றன. கணவன்மார்களின் வக்கீல்கள் உங்களைப் போலவே திசை திருப்பி மஹமடன் லா என்றெல்லாம் அளக்கிறார்கள். ஹிந்து, கிறீஸ்தவப் பெண்கள் விஷயத்தில் இம்மாதிரி சிக்கல் வருவதில்லை என்ற எனது நேரடி அனுபவத்தைச் சொல்கிறேன். ஆண்டு தோறும் ஹிந்து, கிறீஸ்தவ, முகமதிய மத வேறுபாடு பாராமல் லட்சக் கணக்கில் பணம் திரட்டி பாதிக்கப் பட்ட பெண்களுக்காக மிக அதிகச் செலவுள்ள மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். சந்தேகம் இருந்தால் Struggle and Action Against Acid Attack on Women, Bangalore என்று தேடிப்பாருங்கள். அதில் நான் பின்னணியில் இருந்து பணி செய்வதால் எனது பங்களிப்பு பற்றி நிர்வாகிகளீடம் விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். முதுமையின் காரணமாகத் தற்சமயம் என்னால் முன்போல் தீவிரமாக இயங்க இயல்வில்லை, அவ்வளவுதான். குட்டையைக் குழப்புவதற்கும் திசை திருப்புவதற்கும் மட்டுமே உங்கள் புத்தியையும் பொழுதையும் செலவிடாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட முயற்சி செய்யுங்கள். எதற்கெடுத்தாலும் சப்பைக்கட்டுக் கட்டுவதும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் சுட்டிகளைத் தருவதும் வெட்டி வேலை என உணருங்கள். நேரடியான கேள்விக்கு நேரடியாக பதில் இருந்தால் சொல்லுங்கள். அவசியம் கருதியே சில சமயங்களில் எனது பணிகள் குறித்து நான் பேச வேண்டியதாகிறது. அதனால் உங்களூக்கு எல்லாம் புதிய செய்தியாகத்தான் தெரியும். எனது இளமையிலேயே எனது குடும்பத்தைவிட சமூக நலனில்தான் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளேன். சாதி, மத வித்தியாசங்கள் பாராமலும்தான் பிறர் நலன் கவனித்துள்ளேன். மேலும் எந்தவொரு அமைப்பிலும் ஐக்கியமாகிவிடாமல் தனி நபராகவேதான். ஒரு காலகாட்டத்திற்குப் பிறகு குடும்ப நலனைக் கவனிப்பதை முற்றிலுமாகத் துறந்தும்விட்டேன்.
  -மலர்மன்னன்

 48. Avatar
  மலர்மன்னன் says:

  திராவக வீச்சுக்கு பலியாகும் பெண்கள் எண்ணிக்கை இஸ்லாமிய நாடுகளில்தான் அதிகம் என்கிற புள்ளி விவரமும் நாங்கள் சேகரித்துள்லோம் என்பதையும் அறிவீராக.
  -மலர்மன்னன்

  1. Avatar
   keriya says:

   ///திராவக வீச்சுக்கு பலியாகும் பெண்கள் எண்ணிக்கை இஸ்லாமிய நாடுகளில்தான் அதிகம் என்கிற புள்ளி விவரமும் நாங்கள் சேகரித்துள்லோம் என்பதையும் அறிவீராக.
   -மலர்மன்னன்///

   அதென்ன இஸ்லாமிய நாடுகளில் அதிகம்? நீங்கள் சேகரிக்கும் புள்ளிவிபரம் நம்பக் கூடியதா?

 49. Avatar
  மலர்மன்னன் says:

  //அன்று முகமது நபி அரபுலகம் அனைத்திற்கும் சக்கரவர்த்தியாக இருந்தார். ஒரு ஆட்சித்தலைவருக்கு அரசாட்சி செய்ய ஆண்களும் பெண்களும் நிறைய தேவைப்படும்.- சுவனப் பிரியன்//
  எனவேதான் இஸ்லாம் ஒரு ஆன்மிக மதம் அல்ல, உலகம் முழுவதையும் அடக்கி ஆள வேண்டும் என்ற அதிகார வேட்கை மிக்க அரசியல் இயக்கம் என்று சொல்லப்படுகிறது.
  -மலர்மன்னன்

  1. Avatar
   paandiyan says:

   perfectly said. இஸ்லாம் ஒரு ஆன்மிக மதம் அல்ல, உலகம் முழுவதையும் அடக்கி ஆள வேண்டும் என்ற அதிகார வேட்கை மிக்க அரசியல் இயக்கம். everyone understand this in the gulf country. in india they dont understand this concept becuase the are all converted to muslim based on some benefits. vangina kassukku rombava koovara vallakkam nambakku undu allava!!!!

   1. Avatar
    keriya says:

    ///இஸ்லாம் ஒரு ஆன்மிக மதம் அல்ல, உலகம் முழுவதையும் அடக்கி ஆள வேண்டும் என்ற அதிகார வேட்கை மிக்க அரசியல் இயக்கம்.///

    இஸ்லாம் என்பது ஆன்மிகத்தை மட்டும் போதிக்கும் மதம் அல்ல. அது, அரசியல் போன்றவத்தையும் உள்ளடக்கியது. அடக்கி ஆளுதல், அதிகார வேட்கை என்பது உங்களது தனிப்பட்ட கூற்றுக்கள்.

 50. Avatar
  smitha says:

  The problem is no one is sure what is there in the Koran.

  1. Divorce by internet & over phone.

  2. Justification of a father-in-law raping his daughter-in-law.

  3. Issuing fatwas

  4. Jehad – Holy war

  Everything has a religious sanction in Koran – that is what the practioners says.

  After everything is over, persons like suvanapirian will say (over their dead bodies)

  “Islam oru amaithi maargam”.

  Appadi podu.

 51. Avatar
  Ram says:

  //பெண் கொடுமை இஸ்லாத்தில் உள்ளது என்று ஒரு கட்டுரை சொல்லும் போது அதை இஸ்லாமியான எனக்கு விளக்கம் கொடுக்க உரிமை உள்ளது.//
  பெண் கொடுமை எல்லா சமூகத்திலும், நாடுகளிலும் உள்ளது. ஆனால் இஸ்லாம் மட்டுமே அதற்கு மத ரீதியான சட்ட பாதுகாப்பு கொடுத்துள்ளது .

  1. Avatar
   keriya says:

   ///பெண் கொடுமை எல்லா சமூகத்திலும், நாடுகளிலும் உள்ளது. ஆனால் இஸ்லாம் மட்டுமே அதற்கு மத ரீதியான சட்ட பாதுகாப்பு கொடுத்துள்ளது.///

   பெண் கொடுமையே இல்லாத முஸ்லிம் சமூகத்தில், மத ரீதியான சட்ட பாதுகாப்பு எதற்கு?

 52. Avatar
  suvanappiriyan says:

  திரு ராம்!

  //குர்ஆனில் அப்படி மாற்றம் செய்யவே கூடாது என்று ஏதாவது ஒரு வசனத்தை காட்ட முடியுமா?//

  ‘அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். ‘இது இறைவனிடமிருந்து வந்தது’ எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே இறைவனின் பெயரால் பொய் கூறுகின்றனர்.’
  -குர்ஆன் 3:78

  முன்னால் வேதம் கொடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வசதிக்காக வேதக் கருத்துக்களில் தங்களின் கருத்தையும் புகுத்தி விட்டனர். தங்களுக்கு எவை எல்லாம் பிரச்னை தருகிறதோ அந்த வசனங்களை நீக்கி விட்டனர். எனவே தான் ஒரே வேதத்தில் ஏக தெய்வ கொள்கையும் பல தெயவ கொள்கையும் வருவதைப் பார்க்கிறோம்.

  ஒரு வேதத்தில் ஒவ்வொரு வருடங்களிலும் மாற்றங்களை செய்தால் அது இறை வேதமாக இருக்க முடியாது. முக்காலத்தையும் உணர்ந்த இறைவன் அருளிய வசனங்கள் எத்தனை ஆயிரம் வருடங்களானாலும் உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தி வர வேண்டும். அது போல் எல்லா நாட்களுக்கும் எல்லா நாட்டு மக்களுக்கும் இன்று வரை எந்த சட்ட சிக்கலையும் குர்ஆன் தரவில்லை. எனவே மாற்ற வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை.

  ‘நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்’
  -குர்ஆன் 15:9

  குர்ஆனை அருளிய இறைவனே அதனை பாதுகாக்கும் பொருப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளான். எனவே உலக முடிவு நாள் வரையில் இந்த குர்ஆனில் எந்த மாற்றமும் ஏற்படாது.

  //ஒவ்வொரு மதத்திற்கும் தனி சட்டம் இருப்பதே சிக்கல் தானே?//

  நமது இந்தியாவில் இந்துக்களுக்கும், கிறித்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தனித் தனி சட்டமே உள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் என்ன சிக்கல் வந்து விட்டது?

  //காலத்திற்கு ஏற்ப மாற முடியாத சட்டம் எல்லோராலும் ஏற்க முடியாது.//

  உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏற்று அதை கடைபிடித்து வருகிறார்களே!

  //நீங்கள் உங்கள் சட்டத்தை காலத்து ஏற்ப மாற்ற முடியாது. ஆனால் காலத்திற்கு ஏற்ப பிரசார மற்றம் மட்டும் செய்யலாம் என்கிறீர்கள்.//

  ‘அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்காதீர்கள்’
  -குர்ஆன் 2;42

  உண்மை தெரியாமல் இருக்கும் மக்களுக்கு பிரசாரம் செய்து விளங்க வைக்க குர்ஆன் கட்டளையிடுகிறது.

  ‘தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுகளில் எந்த நன்மையும் இல்லை. இறைவனின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.’
  -குர்ஆன் 4:114

  மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் நன்மையான காரியங்களை ஏவுதல் போன்றவற்றை செய்பவரை இறைவன் விரும்புகிறான். இது உலக மக்கள் அனைவருக்கும் நன்மை தரும் செயல்தானே…

 53. Avatar
  suvanappiriyan says:

  திரு பாண்டியன்!

  //ஈராக்கில் தற்போது பெண்களை ஏற்றுமதி செய்யும் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. ஒரு கன்னிப் பெண் 5000 டாலர்களுக்கு விலை போகின்றார்.//

  இந்த செய்தி உண்மையானால் அதற்கு யார் காரணம்? சிறப்பாக ஆட்சி செய்து வந்த சதாம் ஹூகைனை நீக்கியது ஏன்? பெட்ரோலை உலக மார்க்கெட்டில் டாலரில் விநியோகம் செய்ய மாட்டேன். யு_ரோவுக்கு மாறப் போகிறேன் என்று சதாம் சொல்லவும் அங்கு ரசாயன ஆயுதங்கள் உள்ளன என்ற பொய்யான காரணத்தை சொல்லி போர் தொடுத்தது யார்? ஒரு சிறிய நாட்டை 10க்கு மேற்பட்ட நாசகார நாடுகள் துவம்சம் செய்தன. இன்று அந்த மக்கள் உணவுக்கு சிரமப்படும் நிலை. இதை உண்டாக்கியது அமெரிக்க ஐரோப்பிய கிறித்தவ நாடுகள் அல்லவா?

  அதனால் ஐரோப்பிய மக்கள் தங்கள் அரசாங்கத்தின் செயலால் வெறுத்து போய் இன்று இஸ்லாத்தை எந்த பிரசாரமும் இல்லாமல் கூட்டம் கூட்டமாக ஏற்று வருகின்றனர். இன்னும் ஒரு 10 ஆண்டுகளில் உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் வல்லமை முஸ்லிம்கள் கைகளில் வருகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

  1. Avatar
   paandiyan says:

   again you are doing mistake. see pakisthaan recent years or close to past 10 years. how many people moved out from muslima and coverted to christian. உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் வல்லமை முஸ்லிம்கள் கைகளில் வருகிறதா இல்லையா — dont dream too much. even that comes true what you are going to do???? take syria example, pakisthaan/bangaldesh/pulisthaan issues, sudan issues, Iraq kurthi issues. afgan talipan issues — first safe guard yourself/your relegion worldwide. dont waste unnecessary your free time by dreaming always..

  2. Avatar
   paandiyan says:

   சிறப்பாக ஆட்சி செய்து வந்த சதாம் ஹூகைனை நீக்கியது — ask your counterpart KURTHI muslims. they begged UN/USA and worldwide to help.

 54. Avatar
  suvanappiriyan says:

  //சாதி, மத வித்தியாசங்கள் பாராமலும்தான் பிறர் நலன் கவனித்துள்ளேன்.//

  சீரியஸாக விவாதம் பண்ணிக் கொண்டிருக்கையில் இடையில் காமெடி எல்லாம் பண்ணப்படாது. மண்டைக்காடு கலவரம் வேறு எனக்கு ஞாபகம் வந்து பாடாய் படுத்துகிறது. :-(

  1. Avatar
   paandiyan says:

   engalukkumthaan coimbatore கலவரம் ஞாபகம் வந்து பாடாய் படுத்துகிறது.

 55. Avatar
  suvanappiriyan says:

  //engalukkumthaan coimbatore கலவரம் ஞாபகம் வந்து பாடாய் படுத்துகிறது.//

  ஒரு போலீஸ்காரரை மூன்று இஸ்லாமிய பெயர் தாங்கிகள் வெட்டி கொலை செய்கின்றனர். அந்த மூவரையும் முஸ்லிம்களே பிடித்து காவல் துறை வசம் ஒப்படைக்கின்றனர். ஆனால் காவல் துறை கட்டுப்பாட்டை இழந்து இருபதுக்கு மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை அப்பாவிகளை சுட்டு கொல்கிறது. பல கோடி ரூபாய் முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசப்படுத்தப்படுகின்றன. இதனால் கொதித்த சில இளைஞர்கள் பழி வாங்கும் முகமாக கோவையின் பல இடங்களில் குண்டு வைத்து அப்பாவிகள் இறக்க காரணமாகின்றனர். இது மடத்தனமான செயல். அப்பாவிகளை கொன்றது மன்னிக்க முடியாத செயல். அதற்கான தண்டனையை இன்றும் பல இளைஞர்கள் அனுபவித்து வருகின்றனர். இதிலும் பல அப்பாவிகளை விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகளாக அடைத்து வைத்துள்ளது காவல் துறை. ஆக..தவறு எங்கு ஆரம்பித்தது என்று பார்க்க வேண்டும்.

  அதன் பிறகு நடந்த எந்த குண்டு வெடிப்புகளிலும் இஸ்லாமியர்கள் சம்பந்தப் பட வில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இந்தியா முழுக்க நடந்த குண்டு வெடிப்புகளின் பின்னால் இந்துத்வா இருந்தது தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் இவர்களின் தேச பக்தியா?

  1. Avatar
   விசிறி says:

   அல் உம்மா இயக்கத்தை முஸ்லீம் பெயர்தாங்கிகள் என்று குறிப்பிடுகிறார் சுவனப்பிரியன்.

   இஸ்லாமியர்கள் குண்டு வைத்தது கோயம்புத்தூர் மட்டும் அல்ல.
   http://www.tamilhindu.com/2011/03/islamic_terrorism_in_india_04/

   இந்துக்கள் தங்களுக்கு நடந்த அநீதிகளை ஆவணப்படுத்துவதும் இல்லை. அந்த அநீதிகளை வைத்து அரசியல் நடத்துவதும் இல்லை என்பதால், வாய்க்கு வந்த பொய்களை மீண்டும் மீண்டும் பேசி உண்மையாக்கி கொண்டிருக்கிறார்கள்.

 56. Avatar
  ஷாலி says:

  திண்ணை தள நிர்வாகிகள் தெளிவாக ஒரு அறிவிப்பு கொடுத்துவிட்டால் திரு.மலர்மன்னன்,பாண்டியன்,போன்ற பெரியவர்களை டென்ஷன் ஆக்காமல் விவாதம் நடத்தலாம்.
  “ திண்ணையில் முஸ்லிம், இஸ்லாத்தை விமர்சித்து தொடர்ந்து கட்டுரை போடுவோம். அதற்க்கு பதிலளிப்பவர்கள்,பேச வேண்டிய சொல் இஸ்லாம், தவிர்க்க வேண்டிய சொல் இந்து மதம்.”
  பிரச்சினை முடிந்துவிட்டது.

 57. Avatar
  தங்கமணி says:

  இது ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஒரு சமூக வழக்கத்தை பற்றிய கட்டுரை. அதில் தேவையில்லாமல் இஸ்லாம் என்று ஆரம்பித்து, இந்துக்களால்தான் இஸ்லாமியரிடம் கெட்ட பழக்கங்கள் வருகின்றது என்று ஆரம்பித்து வைத்தது உங்கள் சுவனப்பிரியன்.
  அந்த வழக்கம் இந்துக்களிடம் இல்லை. இந்துக்களிடம் இருப்பது வரதட்சிணை, இஸ்லாமிய ஆப்கனிஸ்தானிகளிடம் இருப்பது மெஹர் வழக்கம். இதற்கும் இந்துக்களை குறை சொன்னால் என்ன பொருள் என்று கேட்டேன். தவறை ஒத்துகொள்ளாமல், மீண்டும் வரதட்சிணையை இந்துக்களின் கெட்ட வழக்கம் என்று ஆரம்பித்து வைத்ததும் அவரே.
  அப்படி எழுதும்போது மற்றவர்கள் பதில் சொல்லக்கூடாது என்றுதான் உங்களை காப்பாற்ற திண்ணை முயலவேண்டும்.

 58. Avatar
  ஷாலி says:

  தங்கமணி ஸார்! என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் எழுதிய ஆரம்ப பின்னூட்டத்தில் சுவனப்பிரியனுக்கு என்ன விளக்கம் கொடுத்தீர்கள்.//சுவனப்பிரியனுக்கு புரியவில்லை என்பதால் மீண்டும்.இது வரதட்சணை அல்ல.மெஹர் பெண்ணுக்கு ஒரு ஆண் கொடுக்க வேண்டிய பணம்.அதனை ஆப்கானிஸ்தானில் வால்வார் என்று அழைக்கிறார்கள்.//ஆக,மெஹர் என்பது இஸ்லாம் பெண்ணுக்கு ஆண் கொடுக்கவேண்டிய பணம் என்பதை சு.பி க்கே விளக்கிய நீங்கள் இப்ப என்ன எழுதுகிறீர்கள். //இது ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஒரு சமூக வழக்கத்தைப் பற்றிய கட்டுரை. அதில் தேவையில்லாமல் இஸ்லாம் என்று ஆரம்பித்து…..//தங்கமணி ஸார்! இஸ்லாம் கூறும் மெஹரை விமர்சித்தே இங்கு எல்லோரும் கும்மி அடிக்கிறார்கள்.பதிலுக்கு இந்து மத பழக்கங்களை உதாரணம் காட்டி நாம் எழுதினால் கோபப்படுகிறீர்கள். இஸ்லாத்தைப்பற்றி நன்கு அறிந்த நீங்களே ஆப்கான் சமூக பழக்கம் என்று எழுதி உங்களுக்கு நீங்களே முரண்படுகிறீர்கள்…பரவாயில்லை! விவாதத்தில் இதெல்லாம் சகஜம்தான் தொடருங்கள்…..

  1. Avatar
   தங்கமணி says:

   இதில் என்ன முரண்பாடு இருக்கிறது? மெஹர் என்றால் உங்களுக்கு புரியும் என்பதால் மெஹர் என்று எழுதினேன். இது பெண்களுக்கு ஆண்கள் கொடுக்க வேண்டிய பணம். அதனை வால்வார் என்று ஆப்கானியர்கள் குறிப்பிடுகிறார்கள் என்று எழுதினேன். இதில் எங்கே இஸ்லாம் வந்தது? அந்த பின்னூட்டத்தில் இஸ்லாம் என்று ஒரு வார்த்தை இருக்கிறதா? இது சமூக பழக்கம். அதனை மதப்பழக்கமாக நீங்கள்தான் பார்க்கிறீர்கள். அந்த அரபிய பழக்கத்தை உங்களது பழக்கமாக மேற்கொண்டு விட்டு அதற்கு சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள்.

   இதில் என் கருத்தில் முரண்பாடு என்று கூப்பாடு வேறு. அதற்கு சுவனப்பிரியன் சந்தோசம்.
   சுவனப்பிரியனிடம் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலே இல்லாமல் , காப்பி பேஸ்ட் கருத்துக்களை மீண்டும் மீண்டும் போட்டுகொண்டிருக்கிறார். (அந்த விஷயத்தில் அவர் முரண்படுவதில்லை!) அதற்கு மாறாக எத்தனை கருத்துக்களை சொன்னாலும், அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் மீண்டும் மீண்டும் காப்பி பேஸ்ட் பண்ண ஒரு முனைப்பு வேண்டுமே :-) அதனையும் திண்ணை அனுமதித்துக்கொண்டிருக்கிறது.

 59. Avatar
  suvanappiriyan says:

  //இஸ்லாத்தைப்பற்றி நன்கு அறிந்த நீங்களே ஆப்கான் சமூக பழக்கம் என்று எழுதி உங்களுக்கு நீங்களே முரண்படுகிறீர்கள்…பரவாயில்லை! விவாதத்தில் இதெல்லாம் சகஜம்தான் தொடருங்கள்…..//

  தங்கமணியிடம் இது போன்ற முரண்பாடுகள் வழமையானதுதானே…:-)

 60. Avatar
  suvanappiriyan says:

  தங்கமணி!

  //அந்த அரபிய பழக்கத்தை உங்களது பழக்கமாக மேற்கொண்டு விட்டு அதற்கு சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள்.//

  இஸ்லாம் வருவதற்கு முன்பு அரபுகள் பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு புதைத்து விடுவார்களாம். சில தந்தைமார்கள் பெண் குழந்தை பிறந்து விட்டால் சமூகத்தில் வர வெட்கப்பட்டுக் கொண்டு சில காலங்கள் மறைந்து வாழ்வானாம். இது தான் அன்றைய நிலை.

  இஸ்லாம் வந்து முகமது நபி திருமணத்துக்கு மஹர் என்ற ஒரு வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவுடன் இந்த நிலை முற்றிலுமாக மாறுகிறது. இன்று பெண் குழந்தை பிறந்தால் சந்தோஷத்தில் இனிப்பு கொடுத்து மகிழ்கிறார்கள். பெண் குழந்தை பிறந்ததற்காக பல முறை சவுதிகள் கொடுத்த இனிப்பை நாங்கள் அலுவலகத்தில் சாப்பிட்டுள்ளோம். இப்படிப்பட்ட ஒரு சிறந்த ஏற்பாட்டை யாரோ சிலர் தவறாக பயன்படுத்தினால் அதனை விமரிசிக்கலாமா? பொட்டு கட்டுதலைப் பற்றி இதற்கு பகரமாக நான் கேட்டதற்கு வழக்கம்போல் பதிலே தராமல் ஓடி விட்டீர்களே! அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா! எதிர்க்கிறீர்களா!

 61. Avatar
  தங்கமணி says:

  சுவனபிரியன்,
  ஒரே பின்னூட்டத்தில் எத்தனை பொய் சொல்லலாம் என்பதற்கு நீங்கள் பாடம் எடுக்கலாம்.

  //இஸ்லாம் வருவதற்கு முன்பு அரபுகள் பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு புதைத்து விடுவார்களாம். //
  அட. எப்படி அரபியாவில் பெண்கள் இருந்தார்கள்? பிறக்கும் பெண்குழந்தைகளை உயிரோடு புதைத்துவிட்டால் அங்கே எப்படி பெண்கள் இருந்தார்கள்? மேலேயிருந்து குதித்தார்களோ?

  //சில தந்தைமார்கள் பெண் குழந்தை பிறந்து விட்டால் சமூகத்தில் வர வெட்கப்பட்டுக் கொண்டு சில காலங்கள் மறைந்து வாழ்வானாம். இது தான் அன்றைய நிலை.//

  இவர்கள் யார்? அரபியர்கள் இல்லையா? ஒருவேளை பெர்ஷியர்களாக இருக்குமோ?

  //இஸ்லாம் வந்து முகமது நபி திருமணத்துக்கு மஹர் என்ற ஒரு வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவுடன் இந்த நிலை முற்றிலுமாக மாறுகிறது.//

  அப்படியா? மெஹர் என்பது முகம்மது நபி ஆரம்பித்து வைத்த பழக்கம், அதற்கு முன்னால் மெஹர் என்பது இல்லை என்று நிரூபிக்க வேண்டுமே? அதனை நிரூபியுங்கள். இது மாதிரி நிறைய நீங்கள் நிரூபிக்க கேட்டு உங்களிடம் பதிலே இல்லை. அதுமாதிரி இன்னொன்றுஎன்று ஓடிவிடுவீர்களே.

  // இப்படிப்பட்ட ஒரு சிறந்த ஏற்பாட்டை யாரோ சிலர் தவறாக பயன்படுத்தினால் அதனை விமரிசிக்கலாமா?//

  தவறாகவே பயன்படுத்த முடியாத விஷயத்தைத்தானே உங்கள் அரபி சாமியார் கொடுக்க வேண்டும்? எப்படி தவறாக உபயோகப்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தை உங்கள் அரபி சாமியார் கொடுக்கிறார்? சரியாகப்படவில்லையே?

  // பொட்டு கட்டுதலைப் பற்றி இதற்கு பகரமாக நான் கேட்டதற்கு வழக்கம்போல் பதிலே தராமல் ஓடி விட்டீர்களே! அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா! எதிர்க்கிறீர்களா!//

  அதற்கு முன்னரே விசிறி என்பவர் பதில் கொடுத்துவிட்டார். அதனை படிக்கவில்லையா? அவர் சொன்னதை ஆமோதிக்கிறேன் என்று நான் சொல்லவேண்டும் என்றால், இதோ சொல்லிவிடுகிறேன். ஆமோதிக்கிறேன்.

 62. Avatar
  suvanappiriyan says:

  திரு தங்கமணி!

  //அட. எப்படி அரபியாவில் பெண்கள் இருந்தார்கள்? பிறக்கும் பெண்குழந்தைகளை உயிரோடு புதைத்துவிட்டால் அங்கே எப்படி பெண்கள் இருந்தார்கள்? மேலேயிருந்து குதித்தார்களோ?//

  நான் சொல்ல வந்தது வறியவர்களை! பலர் வறுமைக்கு பயந்து பெண் குழந்தைகளை கொன்றதாக குர்ஆன் கூறுகிறது. இதை அன்றைய சிலை வணங்கிகள் குர்ஆனின் இந்த கருத்தை மறுக்கவில்லை.

  அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப் பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்டதெனக் கருதிய செய்தியினால் சமுதாயத்தி லிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை உயிருடன் புதைப்பதா? என்று எண்ணுகிறான் கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.
  (அல்குர்ஆன் 16:58,59)

  அறியாமைக் காலத்தில் ரபீஆ மற்றும் முளர் குலத்தார் தங்களுடைய பெண் மக்களை உயிருடன் புதைப்பவர்களாக இருந்து வந்தனர். வறுமை மற்றும் இழிவைப் பயந்து பெண் மக்களை அரபுகள் கொன்று வந்தனர். இதற்குத் தடைவிதித்தே இறைவன் இவ்வசனத்தை அருளினான்.

  “”உன்னுடைய குழந்தை உன்னுடன் உண வருந்துவதை அஞ்சி, அதை நீ கொலை செய்வது பெரும் பாவமாகும்.” என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி:7532 )

 63. Avatar
  suvanappiriyan says:

  திரு தங்கமணி!

  //அப்படியா? மெஹர் என்பது முகம்மது நபி ஆரம்பித்து வைத்த பழக்கம், அதற்கு முன்னால் மெஹர் என்பது இல்லை என்று நிரூபிக்க வேண்டுமே? அதனை நிரூபியுங்கள். இது மாதிரி நிறைய நீங்கள் நிரூபிக்க கேட்டு உங்களிடம் பதிலே இல்லை. அதுமாதிரி இன்னொன்றுஎன்று ஓடிவிடுவீர்களே.//

  இஸ்லாத்துக்கு முன்னர் அறியாமைக் காலம் என்றழைக்கப்படும் மௌட்டீக கால அரேபியாவில் பெண்கள் மிகவும் இழிவானவர்களாகவே கருதப்பட்டனர். அவளது உரிமைகள் பறிக்கப்பட்டன; ஆண்களின் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு கேளிக்கைப் பொருளாகவே கருதப்பட்டு வந்தாள். ஒரே பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் முடிக்கக் கூடிய ஒரு கீழ்த்தரமான நிலையே காணப்பட்டது. இதனை நபி அவர்களின் மனைவியான அன்னை ஆயிஷா அவர்கள் பின்வருமாறு விபரிக்கிறார்கள்:

  “அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன.

  முதல் வகை, இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.

  இரண்டாம் வகைத் திருமணம், ஒருவர் தம் மனைவியிடம் நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொள் என்று கூறிவிட்டு அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளை விட்டும் அந்தக் கணவன் விலகியிருப்பான். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகின்ற வரை கணவன் அவளை ஒரு போதும் தீண்ட மாட்டான். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாள் எனத் தெரிய வந்தால், விரும்பும் போது அவளுடைய கணவன் அவளுடன் உடலுறவு கொள்வான். குலச் சிறப்பு மிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற அற்ப ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்துவந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஹ்’ (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.

  மூன்றாம் வகைத் திருமணம், பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்று கூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்துப் பிரசவமாகிச் சில நாட்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். இப்போது எனக்குக் குழந்தை பிறந்து விட்டது’ என்று கூறிவிட்டு அவர்களில் ஒருவனை நோக்கி ‘இவன் உங்கள் மகன் இன்னாரே’ என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.

  நான்காம் வகைத் திருமணம், நிறைய மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள்.

  இந்தப் பெண்கள் விலை மாதர்களாவர். அவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். எனவே அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்துக் குழந்தை பிறந்தால் அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்று கூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை – பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் தந்தை எனக் கருதிய ஒருவருடன் அந்தக் குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவருடைய மகன்’ என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்க முடியாது.

  சத்திய மார்க்கத்துடன் முஹம்மத் நபி அவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது இன்று மக்களின் வழக்கிலுள்ள முதல் வகைத் திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்” [புகாரி: 5127].

  அன்றைய அரபுலக பெண்களின் நிலை இஸ்லாத்துக்கு முன்னால் இவ்வாறுதான் இருந்தது.

  1. Avatar
   தங்கமணி says:

   //இஸ்லாம் வந்து முகமது நபி திருமணத்துக்கு மஹர் என்ற ஒரு வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவுடன் இந்த நிலை முற்றிலுமாக மாறுகிறது. //

   முன்பு இந்த அரபி சாமியார்தான் ஆரம்பித்து வைத்தார் என்று சொன்னீர்கள். இப்போது
   //முதல் வகை, இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.//
   ஏற்கெனவே இருந்த ஒரு வகை திருமணம் என்று ஒத்துகொண்டீர்கள்.
   ஏன் இந்த புளுகுகள்?
   இதற்காகவாவது மன்னிப்பு கேட்பீர்களா?

 64. Avatar
  suvanappiriyan says:

  திரு தங்கமணி!

  //தவறாகவே பயன்படுத்த முடியாத விஷயத்தைத்தானே உங்கள் அரபி சாமியார் கொடுக்க வேண்டும்? எப்படி தவறாக உபயோகப்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தை உங்கள் அரபி சாமியார் கொடுக்கிறார்? சரியாகப்படவில்லையே?//

  அனைத்து நல்ல விஷயங்களை கொடுத்தாலும் மனிதன் இயற்கையிலேயே தவறிழைக்கக் கூடியவனாகவே படைக்கப்பட்டுள்ளான். சாத்தானின் தீண்டுதல் அனைத்து மனிதர்களிடத்திலும் இருக்கும். தனது தவறுகளிலிருந்து பாடம் பெற்று திருந்துபவனே வெற்றி பெற்றவனாகிறான் என்று இஸ்லாம் கூறுகிறது. நேர் வழியை தனக்கு காட்டுமாறு இறைவனிடம் பிரார்த்திக்குமாறு மனிதர்களை நோக்கி குர்ஆன் கட்டளையிடுகிறது.

  ‘எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டியபின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்’
  -குர்ஆன்; 3:9

  முகமது நபியே சில நேரங்களில் தவறிழைத்து விடுகிறார். இறைவன் சுட்டிக் காட்டிய பிறகு தவறிலிருந்து விடு படுகிறார். இந்த சம்பவங்களும் குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. எனவே தவறிழைக்காத மனிதனே இந்த உலகில் இல்லை எனலாம்.

  1. Avatar
   தங்கமணி says:

   ஆகவே இதெல்லாம் அந்த அரபி சாமியாரே எழுதிக்கொண்டது என்றுதான் தெரிகிறது.

 65. Avatar
  suvanappiriyan says:

  திரு தங்கமணி!

  //அதற்கு முன்னரே விசிறி என்பவர் பதில் கொடுத்துவிட்டார். அதனை படிக்கவில்லையா? அவர் சொன்னதை ஆமோதிக்கிறேன் என்று நான் சொல்லவேண்டும் என்றால், இதோ சொல்லிவிடுகிறேன். ஆமோதிக்கிறேன்.//

  விசிறி சொன்னதைத்தான் ஆமோதிப்பீர்களோ! நீங்களாகவே முன் வந்து ‘பொட்டு கட்டி தேவரடியார்களாக பெண்களை கொடுமைபடுத்துவது தவறான சட்டம். எனது மார்க்கம் தவறாக இந்த சட்டத்தை புகுத்தி விட்டது. எனவே இதனை வன்மையாக நான் கண்டிக்கிறேன்’ என்று சொல்லப் படாதோ! ஏதோ ஒப்புக்காக வேறு வழியில்லாமல் அரை மனத்தோடு சொல்வது போல் உள்ளது. தெய்வக் குத்தம் ஆகி விடும் என்ற பயமோ! இருக்கலாம்.

  1. Avatar
   paandiyan says:

   suvanappiriyan — why you are keen on our hindu issues. here the subject is your muslim related and you should accept that islam is not a relegion and islam never ever produced human beings. all kruam topic are highly idiotic and its proved nowadays. VINDU VAYIRIL irundhu varum oru thirvam enru KURAN il ullathu. do you think that this is true????? but our hindu relegion is Number one in the scientific areas and world wide people are accpeting that one.

 66. Avatar
  suvanappiriyan says:

  தங்கமணி!

  //ஏற்கெனவே இருந்த ஒரு வகை திருமணம் என்று ஒத்துகொண்டீர்கள்.
  ஏன் இந்த புளுகுகள்?
  இதற்காகவாவது மன்னிப்பு கேட்பீர்களா?//

  அந்த சமூகத்தில் மஹர் கொடுத்து திருமணம் செய்து கொள்வது முற்றிலுமாக ஒழிந்து போயிருந்தது. நான்கு வகை திருமணம் ஒரு சமூகத்தில் உள்ளது. மற்று மூன்றிலும் ஆண்களுக்கு எந்த சிரமமும் இல்லை. சுகத்தை விருப்பம் போல் அனுபவிக்கலாம். சமூகமும் அதற்கு அங்கீகாரம் கொடுத்து வைத்திருந்தது. இவ்வளவு இலகுவான செலவில்லாத ஒரு வழிமுறை இருக்கும் போது யாராவது பல லட்சங்கள் மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன் வருவாரா? இவ்வளவு முன்னேறிய இந்த அறிவியல் உலகிலேயே பலரால் மஹர் கொடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர். வறுமைக்கு பயந்து பெண் குழந்தைகளை கொல்லும் அந்த வறிய சமூகத்தில் மஹர் கொடுத்து திருமணம் முடித்தல் சாத்தியப்படுமா? வழக்கொழிந்த ஒரு பழக்கத்தைத்தான் முகமது நபி திரும் கொண்டு வந்தார்.

  மேலும் அன்றைய அரபுகள் ஏக இறைவனைத்தான் வணங்கி வந்தனர். இடையில் அவர்களிடம் சிலை வணக்கம் புகுந்தது. அதனை முகமது நபி வந்து அனைத்து சிலைகளையும் அகற்றி அங்கு ஏக தெய் கொள்கையை பிரகடனப்படுத்துகிறார். இதனால் அந்த மக்கள் ஏற்கெனவே ஏக தெய்வ கொள்கையில் இருந்ததால் முகமது நபியின் புரட்சியை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருப்போமா?

  //ஆகவே இதெல்லாம் அந்த அரபி சாமியாரே எழுதிக்கொண்டது என்றுதான் தெரிகிறது.//

  எந்த மனிதருமே தன்னை புனிதராக மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக தன்னை தவறிலிருந்து விடுபட்ட மகானாகத்தான் காட்டிக் கொள்வார். உலகம் முழுக்க அதுதான் நிலை. ஆனால் முகமது நபியோ இறைவன் கோபப்பட்டு முகமது நபியை திருத்திய வசனத்தையும் நாம் குர்ஆனில பார்க்கிறோம். இது கூட இந்த குர்ஆனை முகமது நபி தானாக உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதையே நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

  //இதில் என்ன தெய்வக்குத்தம் இருக்கிறது? :-))//

  பிறகு ஏன் வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொள்கிறீர்கள. பெண்களை கொடுமைப்படுத்தும் இந்த சடங்குகளை கண்டிப்பாக நம்மை படைத்த இறைவன் தந்திருக்க மாட்டான். எனவே தைரியமாக இன்றும் நேப்பாள் போன்ற பகுதிகளில் பொட்டு கட்டி விடும் பழக்கத்துக்கு எதிராக குரல் கொடுங்கள். உங்களின் இந்துத்வா வாதிகளுக்கு இந்த செய்திகளை சேர்ப்பித்து இந்து மதத்தில் மறுமலர்ச்சியை உண்டாக்கப் பாருங்கள். இல்லை என்றால் மலர் மன்னனும், தங்கமணியும், ஸ்மிதாவும், புனை பெயரிலும் தான் இந்து மதத்தில் தங்கியிருப்பார்கள்.

  1. Avatar
   paandiyan says:

   jokes are here;இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். குரான் 42:32
   அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன. குரான் 42:33

   மேற்கண்ட வசனத்தை படிக்கும் போதே தெரிகின்றதா நம் முகமது நபி எவ்வளவு பெரிய விஞ்ஞானியாக இருந்து இருக்கின்றார் என்று. பாருங்கள் 1400 வருடத்திற்கு முன்பே சொல்லிவிட்டார் காற்றை அவன் (அல்லாஹ்) நிறுத்திவிட்டான் என்றால் கப்பல் ஒரு துளிக்கூட அசையாமல் அதே இடத்தில் கிடக்குமாம். என்னே முகமதுவுடைய ஞானம்! விஞ்ஞானம் ! காற்று இல்லை என்றால் கப்பல் நகராத?
   //இந்து மதத்தில் மறுமலர்ச்சியை உண்டாக்கப் பாருங்கள். இல்லை என்றால் மலர் மன்னனும், தங்கமணியும், ஸ்மிதாவும், புனை பெயரிலும் தான் இந்து மதத்தில் தங்கியிருப்பார்கள்.
   //
   try to learn something from afgan, Iraq, sudan and pulsisthaan. if not, you should be alone for “KOOVA”

 67. Avatar
  suvanappiriyan says:

  திரு பாண்டியன்!

  //இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். குரான் 42:32
  அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
  குரான் 42:33
  மேற்கண்ட வசனத்தை படிக்கும் போதே தெரிகின்றதா நம் முகமது நபி எவ்வளவு பெரிய விஞ்ஞானியாக இருந்து இருக்கின்றார் என்று. பாருங்கள் //

  சாதாரண படகுகளும், பாய்மர படகுகளும் காற்றின் உதவியுடனேயே அதிகம் பயணிக்கிறது. காற்று புயலாக மாறும் போது மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அரசு கேட்டுக் கொள்வதை பார்க்கவில்லையா? நடுக் கடலில் எத்தனையோ படகுகள் காற்றின் வேகத்தால் கவிழ்ந்துள்ளது. உயிர்ச் சேதமும் ஏற்பட்டுள்ளது. தன்னால் காற்றின் மூலம் அந்த படகை சீராக செலுத்தவும் முடியும். அதனை கவிழ்த்தி படகை ஒன்றுமில்லாமலும் ஆக்க முடியும் என்று தனது வல்லமையை இறைவன் இங்கு கூறுகிறான்.

  வங்க கடலில் உருவான நிலம் புயலால், சென்னை துறைமுகம் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த ‘பிரதிபா காவேரி‘ சரக்கு கப்பல் பெசன்ட் நகர் அருகே தரை தட்டியது. இந்த விபத்தில் கப்பலில் இருந்து தப்ப முயற்சித்தபோது, 3 இன்ஜினியர்கள், 3 மாலுமிகள் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். கப்பலில் இருந்த 31 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சரக்கு கப்பல் கடற்கரையோரமாக மணல் பரப்பிலேயே நகர்ந்து மெரினா கடற்கரை அருகே வந்துவிட்டது.
  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=30040
  இதே போல் கிரீஸ் நாட்டின் ரீனா என்ற கப்பல் நியுசிலாந்தில் புயலின் சீற்றத்தால் இரண்டாக உடைந்தது. அதில் இருந்த எண்ணெய்கள் கடலில் கலந்து பல உயிரினங்கள் இறக்க காரணமாக இருந்தது.

 68. Avatar
  தங்கமணி says:

  //அந்த சமூகத்தில் மஹர் கொடுத்து திருமணம் செய்து கொள்வது முற்றிலுமாக ஒழிந்து போயிருந்தது. நான்கு வகை திருமணம் ஒரு சமூகத்தில் உள்ளது. மற்று மூன்றிலும் ஆண்களுக்கு எந்த சிரமமும் இல்லை. சுகத்தை விருப்பம் போல் அனுபவிக்கலாம். சமூகமும் அதற்கு அங்கீகாரம் கொடுத்து வைத்திருந்தது.//

  சூப்பர் சுவனப்பிரியன்,

  உங்கள் அரபு சாமியார் வரும்போது, மெஹர் திருமணமே ஒழிந்துவிட்டது என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.

  இல்லையென்றால், உங்கள் அரபு சாமியார் முகம்மது, அரபு சாமியாரின் அம்மா, மாமா, அப்பா, அப்புறம் நபித்தோழர்கள், உமர், அபு பக்ர் எல்லோருமே இப்படி மற்ற மூன்று வழிகளில் பிறந்தவர்கள்தான் என்று நீங்கள் சொல்வதாக ஒப்புகொள்ளவேண்டும். இவ்வாறு உங்கள் அரபு சாமியாரின் பிறப்பை விமர்சிக்கும் உங்களது கருத்துக்களை பற்றி உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசை.

  பொய்களை சொல்ல ஆரம்பித்தால் நிற்க ஏது இடம்?

 69. Avatar
  suvanappiriyan says:

  //இவ்வாறு உங்கள் அரபு சாமியாரின் பிறப்பை விமர்சிக்கும் உங்களது கருத்துக்களை பற்றி உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசை.//

  அடடா…நான் முன்பே சொல்லியுள்ளேன். முகமது நபி வருவதற்கு முன்பே ஏக தெய்வ கொள்கை அங்கு இருந்தது. ஆனால் பெரும்பான்மையோர் பல தெய்வ கொள்கைக்கு மாறியிருந்தனர். முகமது நபியின் தந்தை பெயர் அப்துல்லா. அல்லாஹ்வின் அடிமை என்ற பொருள்பட தனது பெயரை வைத்திருந்தார். அதே போல் நான்கு வகை திருமணங்களும் அந்த சமூகத்தில் நடைமுறையில் இருந்தது. மிக சொற்ப நபர்களே மஹர் கொடுத்து திருமணம் செய்து வந்தனர். முகமது நபியின் தாயார் ஆமினா என்றும் தந்தை அப்துல்லா என்றும் சிறு குழந்தைக்கும் தெரியும். முகமது நபியின் பெரிய தந்தை அந்த ஊரிலேயே மிக சிறப்பாக வசதியோடு வாழ்ந்த ஒருவர். குறைஷி குலம் அங்கு நம் நாட்டு உயர் சாதியை போன்று மிக உயர்ந்து பார்க்கப்பட்ட குலம். அதே போல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நான்கு கலீபாக்கள், தோழர்கள், மனைவிகள் அனைவரின் வாழ்க்கையும் பதியப்பட்டுள்ளது. அவர்களின் முன்னோர் மஹர் கொடுத்தே முடித்துள்ளனர். மற்ற திருமண முறைகள் இஸ்லாம் வந்ததற்கு பிறகு முற்றாகவே ஒழிந்து விட்டது. அந்த சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் மற்ற மூன்று முறைகளிலேயே தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டிருந்தார்கள். இஸ்லாத்தினால் அந்த சமூகத்துக்கு கிடைத்த மிகப் பெரும் பரிசு இது போன்ற சமூக மாறுதல்கள்.

 70. Avatar
  தங்கமணி says:

  நினைத்தேன். இதே மாதிரி சமாளிப்பீர்கள் என்று.

  இதுதான் நீங்கள் எழுதியது.
  //அந்த சமூகத்தில் மஹர் கொடுத்து திருமணம் செய்து கொள்வது முற்றிலுமாக ஒழிந்து போயிருந்தது.//

  முற்றிலுமாக என்றால் என்ன பொருள்?
  தமிழ் தெரிந்துதான் எழுதுகிறீர்களா?
  உங்களது அரபு சாமியார் என்றதும் உடனே அவர் மெஹர் கொடுத்துத்தான் திருமணம் செய்தார் என்று சமாளிக்கிறீர்களே?

  இன்னும் நீங்கள் சொன்ன வரியை நிரூபிக்கவில்லை. எந்த ஹதீஸிலிருந்தாவது மெஹர் வழக்கம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டிருந்தது என்று நிரூபியுங்கள். பிறகு உங்கள் வாய்ஜாலத்தை பார்க்கலாம்.

 71. Avatar
  suvanappiriyan says:

  //இன்னும் நீங்கள் சொன்ன வரியை நிரூபிக்கவில்லை. எந்த ஹதீஸிலிருந்தாவது மெஹர் வழக்கம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டிருந்தது என்று நிரூபியுங்கள். பிறகு உங்கள் வாய்ஜாலத்தை பார்க்கலாம்.//

  தவறு என்னுடையதுதான். அலுவலக வேலைகளையும் பார்த்துக் கொண்டு பின்னூட்டங்களும் எழுதும் போது சில இடங்களில் இடறி விடுகிறோம். நானும் மனிதன்தானே….

  //அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன.//-அன்னை ஆயிஷா

  இதுதான் அன்னை ஆயிஷா அறிவிக்கும் ஹதீதில் உள்ள வாசகம். அதை விளக்கி எழுதும் போது எனக்கு தவறு நேர்ந்து விட்டது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

 72. Avatar
  தங்கமணி says:

  ஆக,
  மெஹர் என்பது இஸ்லாமிய வழக்கம் இல்லை. அதற்கு முன்பே இருந்த அரபியர்களின் சமூக வழக்கம். புதியதாக எந்த ஒரு வழக்கத்தையும் இந்த அரபு சாமியார் கண்டுபிடித்து அரபியர்களிடம் தரவில்லை. ஏற்கெனவே இருந்த ஒரு வழக்கத்தை கடவுள் பெயரை சொல்லி நியாயப்படுத்திவிட்டு போயிருக்கிறார். அவ்வளவுதானே?
  அப்புறம் மெஹரும் ஒரு சிறப்பான வழிமுறை அல்ல என்றும் தெரியவருகிறது.
  மெஹர் என்பது என்ன?

  இன்னும் ஒன்று பார்த்தேன்.
  ஒருவன் ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டால் அந்த பெண்ணுக்கு மெஹர் தர வேண்டுமாம்.

  http://islamqa.info/en/ref/72338

  அதுவும் அந்த பெண் கற்பழிக்கப்பட்டாள் என்று நான்கு சாட்சிகள் சொன்னபிறகு!

 73. Avatar
  suvanappiriyan says:

  ஆக,//
  மெஹர் என்பது இஸ்லாமிய வழக்கம் இல்லை. அதற்கு முன்பே இருந்த அரபியர்களின் சமூக வழக்கம். புதியதாக எந்த ஒரு வழக்கத்தையும் இந்த அரபு சாமியார் கண்டுபிடித்து அரபியர்களிடம் தரவில்லை. ஏற்கெனவே இருந்த ஒரு வழக்கத்தை கடவுள் பெயரை சொல்லி நியாயப்படுத்திவிட்டு போயிருக்கிறார். அவ்வளவுதானே?//

  மற்ற மூன்று வழக்கத்தையும் ஒழித்துக் கட்டியது மிகப் பெரிய சாதனை அல்லவா! இத்தனை வருடமாகியும் நம் நாட்டில் விபசாரத்தை முற்றிலுமாக ஒழிக்க முடிகிறதா? அவர் ஒழித்து காட்டினாரே! இறைவன் பெயரை சொல்லி அந்த சமூகத்தை சீரழிக்காமல் நேர்வழிதானே படுத்தியுள்ளர்.

  //இன்னும் ஒன்று பார்த்தேன்.
  ஒருவன் ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டால் அந்த பெண்ணுக்கு மெஹர் தர வேண்டுமாம்.
  http://islamqa.info/en/ref/72338
  அதுவும் அந்த பெண் கற்பழிக்கப்பட்டாள் என்று நான்கு சாட்சிகள் சொன்னபிறகு!//

  குர்ஆனிலோ ஹதீஸிலோ இது போன்ற சட்டம் கிடையாது. பின்னால் வந்த நான்கு மத்ஹபுகள்(பிரிவுகள்) இப்படியாக சட்டத்தை எழுதி வைத்துள்ளன. இது போன்ற மாற்றமான சட்டங்களை தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாத்(வஹாபிகள்) எழுச்சியால் ஓரளவு ஒழித்து விட்டோம். மற்ற இடங்களிலும் மாற்றங்கள் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *