தாகூரின் கீதப் பாமாலை – 45 கானம் பாட வேண்டும்

This entry is part 10 of 27 in the series 23 டிசம்பர் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

ஏனிங்கு வரச் சிரமப் படுகிறாய்
நேரமில்லை என்றால் ?
சிறிது கணம் வந்து தங்கியதும்
செல்ல வேண்டு மென நீ
சொல்லாதே !
என் ஆத்மாவிடம்
ஓர் அறிவுரை உள்ள தென்று
எனக்குத் தெரியும்;
எல்லை யின்றி ஆழமானது.
என்றும் நிரந்தர மான
ஒன்றைப் பற்றி
உனக்கு எடுத்துச் சொல்ல
எனக்கோர்

வாய்ப்பு கிடைக் கட்டும் !

பூங்காவைச் சுற்றி வீசும்
தென் திசைத் தென்றல் காற்று
ஒன்றை மட்டும்
மீண்டும், மீண்டும் சொல்லும் !
எழும் முழு நிலவுக்கு
ஏங்கி நிற்பேன் !
வானை முழுதும் நிரப்பும் ஓர்
கான இசை !
நானந்தக் கீதம் பாட வேண்டும்
நேரக் குறிப்பில்லா
காலப் பொழுதில் !

+++++++++++++++++++++++++
பாட்டு : 155 தாகூர் 61 வயதினராய் காசில் இருந்த போது 1923 மார்ச் 23 இல் எழுதி சாந்திநிகேதன ப் பதிப்பிதழில் வெளியிட்டது.
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] December 18 , 2012

Series Navigationநெத்திலி மீன்களும் சுறாக்களும்Dialogue titled “Martyr Devasahayam Pillai – Myth or Reality” at Nagerkoil
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *