தாகூரின் கீதப் பாமாலை – 47 இனிமைத் திருவடிவம்

This entry is part 16 of 34 in the series 6 ஜனவரி 2013

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

இனிமைக்குள் மூழ்கி எழுந்து கொண்டு
உள்ளுக் குள்ளே எனது மனது
உற்று நோக்கி வருகுது,
பிச்சைக் காரன் பிறப்புரிமையில்
சுற்றிலும் நோக்குவ தில்லை,
என் கண்ணோட்டம் !
இதயத்துள் ளிருந்து வெளியே
எட்டிப் பார்க்கையில்,
எழும்பிட ஆரம்பிக்கும்
ஒற்றை நாணின் ரீங்கார ஓசை !
அழகுத் திருவடிவின் மடியில் இனிதாய்
ஆசைப் பாதையில்
வாசிக்கும் தாலாட்டி
நாணல் புல்லாங் குழல் ஒன்று !

 

வரம்பில்லாத ஏதோ சகதி
ஏரி ஒன்றில்
வேர்களற்ற மலர் ஒன்று
மிதக்கிறது !
அதைக் கையால் பிடிக்க முயன்றால்
அதே கையி லிருந்து
அலை வெளியே தள்ளி விடுகிறது !
ஈடு பட்டுள்ள தென் மனம்
நிற்கிறேன் அசையாமல் !
முற்பட வில்லை நான் திருடிச் செல்ல
களவுக் களஞ்சியம்
இல்லை அது
இனிமைத் திருவடிவு பூண்டது !

+++++++++++++++++++++++++
பாட்டு : 319 ஜனவரி 24, 1924 இல் தாகூர் 62 வயதினராய் இருந்த போது எழுதிப் பின்னர் சாந்திநிகேதனப் பதிப்பிதழில் வெளியிடப் பட்டது.
+++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] January 2, 2013

Series Navigationஇலங்கையில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடுஅக்னிப்பிரவேசம்-17
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *