தாகூரின் கீதப் பாமாலை – 50 துயர்க் கடலில் ஓடும் படகு

author
0 minutes, 14 seconds Read
This entry is part 32 of 32 in the series 3 பிப்ரவரி 2013

Tagore

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

வெண்ணிலவே ! துயர்க் கடலில்

கண்ணீர்த் துளிகள் சொட்டி அலையாய்

எழும்பிடும் அந்தோ !

இணைந்து முணுமுணுக்கும் அவை

இக்கரை முதல்

அக்கரை விளிம்பு வரை.

என் படகு இருப்பது

பழக்கப் பட்ட கரைப் பக்கம் !

ஆயினும் அற்றுப் போனது

அந்தப் பிணைப்பும்,

அறியாத விளிம்பு நோக்கி

ஓரத்தில் தள்ளப் படும் திசை மாறிய

சூறாவளியால் !

 

என்னைக் கடந்து போயினர்

எல்லாப் பயணிகளும்

இறங்கும் பக்கத்தி லிருந்து !

நளின வெளிச் சத்தில் சிக்கி

குழம்பிப் போனேன் இவ்விரவில் !

வழி தவறி வேட்கை

இன்னிசையில்

முடிவற்ற பாதைக் கென்னை

இழுத்துக் கொள்ளும் !

வழிச் செல்லும் பாதையைக்

குழப்பிடும் பித்தன்

நகைக்கிறான்

ஒளிந்த கொண்டு இருட்டில் !

 

+++++++++++++++++++++++++

பாட்டு : 242 1926 இல் தாகூர் 63 வயதினராய் இருந்த போது இந்தக் கவிதை எழுதப்பட்டு பிரபாஸி இதழில் வெளியாகி “ரக்தகரபி” [Raktakarabi] என்னும் நாடகத்தில் பாப்பா பாடலாய்ப் பயன்படுத்தப் பட்டது.

+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] January 30, 2013

Series Navigationஇலக்கிய மாநாடு , அழைப்பிதழ்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *