தாகூரின் கீதப் பாமாலை – 51 நேசிப்பது உன்னை !

This entry is part 19 of 31 in the series 10 பெப்ருவரி 2013

 

 

Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

நேசிப்ப துன்னை,   நேசிப்ப துன்னை

என்றென் அவலக் குரல்

ஓசையாய் ஒலித்துக் கொண்டு

உடைத்து வெளி வரும்

பூமியின்

மார்பி லிருந்தும்

நீர் மயத்தி லிருந்தும் !

வானமோ நெஞ்சு வலிவோடு

வாட்டம் அடையும் !

கனிவுடன் தெரியும் தொடுவான்

கண்கள் போல்

கண்ணீர் துளிகளால் ஈரமாகி

மங்கலாகும் !

 

வேதனைப் பெரு மூச்சொன்று

வெடித்து விடும்

பரந்த கடற் கரை மேல் !

முந்தைய நாட்களின் மறந்து போன

முணு முணுப்புகள்

பிறந்திடும்

புதிய புல்லிலை மேல் மீண்டும்

இறப்பதற்கு !

 

+++++++++++++++++++++++++

பாட்டு : 129 1926 இல் தாகூர் 63 வயதினராய் இருந்த போது இந்தக் கவிதை நந்தினியின் பாடலாய் எழுதப்பட்டு “ரக்தகரபி” [Raktakarabi] என்னும் நாடகத்தில் பயன்படுத்தப் பட்டது. தாகூரின் சொந்த மொழிபெயர்ப்பு 1925 இல் சிவந்த ஒலின்டர்ஸில் [Red Oleanders] வெளியானது.

+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] February 6, 2013

Series Navigationகுற்றமும் தண்டனையும் – எம். ஏ. சுசீலாவின் மொழிபெயர்ப்புசி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -3
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *