பௌத்த கோவில்கள் மீது கொரிய கிறிஸ்துவர்களின் தொடர்ந்த அட்டூழியம்

author
6
0 minutes, 7 seconds Read
This entry is part 1 of 31 in the series 10 பெப்ருவரி 2013

எமி ஹயகாவா

பௌத்த கோவில்களையும் அதன் ஆவணங்களையும் கொரிய கிறிஸ்துவர்கள் அழிப்பதும் தீ வைத்து கொளுத்துவதும் அதிகரித்து வருகிறது. நாம்டேமுன் வாசல் என்ற இடத்தில் நடந்த பேரழிவுக்கு பிறகு கலாச்சார சொத்துக்களையும் தேசிய சொத்துக்களையும் பாதுகாக்க பல சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டாலும், கொரியாவின் பௌத்த கோவில்களையும் அதன் கலாச்சார சொத்துக்களையும் தீவைத்து அழிப்பதும், நாசம் செய்வதும் தொடர்ந்து நடக்கிறது.

beomeo2012 அக்டோபர் 4ஆம் தேதி ஹ்வாம்ஸா கோவிலின் காக்வாங்ஜெஒன் (Gakhwangjeon Hall of Hwaomsa Temple in Gurye County, Korea) ஹால் சில கிறிஸ்துவர்களால் தீவைத்து அழிக்க முயற்சி செய்யப்பட்டது. பௌத்த துறவிகளால் உடனே கண்டுபிடிக்கப்பட்டதாலும், 2008இல் தீ தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாலும் வாசல் மட்டுமே சிறிது அழிக்கப்பட்டது.

கண்காணிப்பு தொலைக்காட்சியில் எடுக்கப்பட்ட வீடியோவில், ஒரு மனிதன் ஹால் முழுக்க பெட்ரோலை ஊற்றுவதையும்,அவன் தீக்குச்சி உரசி போடுவதையும் பார்த்த பார்வையாளர்களும் சொல்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் காரணமாக, கொரிய புத்த சமூகம் மீண்டுமொருமுறை அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. கொரியாவின் கலாச்சார சொத்துக்களை காக்க இன்னும் தீவிரமான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று போராடிகொண்டிருக்கிறது.

மேலும், ஆகஸ்ட் 20ஆம் தேதி 2012இல் ஒரு புராடஸ்டண்ட் பாஸ்டர் ஸியோங் (Seong) டோங்வாஸா கோவிலின் தர்மா ஹாலை அசிங்கப்படுத்தினார். இந்த பாஸ்டர் சூன்போகெம் சர்ச்சின் பாஸ்டர். இவர் தர்மா ஹாலில் மூத்திரமடித்ததையும், அங்கிருந்த புராதன பௌத்த ஓவியங்கள் மீது அழியாத மை கொண்டு தேய்த்ததையும் பார்த்து பிடிபட்டார்.இவரது தீச்செயல்களும், தர்மா ஹாலில் உள்ள cctv படம் பிடித்திருக்கிறது.

 

பௌத்த சமூகம் இந்த செயல்களால் அதிர்ச்சியடைந்திருக்கிறது. சட்ட ஒழுங்கு அதிகாரிகள் இந்த செயல்களுக்கு தக்க தண்டனை தரவேண்டும் என்றும், இது வெறுமே அனுமதியில்லாத இடத்தில் நுழைந்ததற்காக இருக்கும் சாதாரண தண்டனையை வழங்கி விட்டுவிடக்கூடாது என்றும் கோரிவருகிறது.

ஏற்கெனவே இந்த கிறிஸ்துவ பாஸ்டரை மனநலமில்லாதவர் என்று சாக்கு சொல்லி போலீஸ் விடுவித்துவிட்டது. கொரிய அரசாங்கமும், போலீஸ் சட்ட ஒழுங்கு துறையும் பௌத்த கோவில்களையும் தேசிய சொத்துக்களையும் அழிக்க துணை போகின்றது என்று கருதும் பௌத்த சமூகம் மிகுந்த கோபமடைந்துள்ளது.

நவம்பர் 2011இல் the stupa of National Preceptor Jigwangguksa of Beopcheonsa temple, என்னும் பேஒப்சேனொன்சா கோவிலின் ஸ்தூபம் அசிங்கம் செய்யப்பட்டது. அதன் மீது பெரிய சிலுவை வரையப்பட்டது. இந்த படம் கிறிஸ்துவர்களின் பேஸ்புக் பக்கங்களிலும் ட்விட்டர் பக்கங்களிலும் பகிரப்பட்டது.

2(1)இதே போல நவம்பர் 2011இல் ஹவேண்டே அருகே உள்ள புஸான் என்ற நகரில் நான்கு புத்த கோவில்கள் இது போல கிறிஸ்துவர்களால் அசிங்கம் செய்யப்பட்டன என்று கோவில்கள் புகார் செய்தன. கொரிய கிறிஸ்துவர்கள் புத்த சிலைகள் மீது சிவப்பு சாயத்தை பூசி அசிங்கம் செய்திருந்தார்கள்.

3(1)-1-1197736710

பௌத்த கோவில்கள் மீது தேசிய கலாச்சார சொத்துக்கள் மீதும் பல வருடங்களாக கிறிஸ்துவர்கள் அழிப்பையும் தீவைப்பையும் அசிங்கம் செய்வதையும் செய்து வருகிறார்கள். இதுவே கொரிய மத சமூகங்களிடையே மதநல்லிணக்கம் குலைவதற்கு காரணமாக இருக்கிறது.

1(1)

”1907 மீண்டும் புஸான்” என்ற விழாவை ஜூன் 2006இல் கொரிய கிறிஸ்துவர்கள் கொண்டாடினார்கள். அப்போது அந்த கிறிஸ்துவர்கள் பகிரங்கமாகவே புஸான் பகுதியில் இருக்கும் எல்லா பௌத்த கோவில்களும் புத்த மடங்களும் அழிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள். இந்த விழாவுக்கு கொரிய ஜனாதிபதி லீ ம்யுன்பாக் Korean President Lee MyungBak முக்கிய விருந்தாளியாகவும் இருந்ததை கண்டு கொரிய குடிமக்கள் மனம் நொந்தார்கள்.

பெப்ருவரி 2011இல் மூன்று கிறிஸ்துவ பாஸ்டர்கள் ஜோக்யே கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த பௌத்த துறவிகளை “இயேசுவை நம்பு. நாம் (கொரியர்கள்) அனைவரும் கடவுளின் பிள்ளைகள்“ என்று ஆணையிட்டது பெரிய பிரச்னையை உண்டுபண்ணியது.

2010இல் கிறிஸ்துவ மதத்தை சார்ந்த பாஸ்டரும் கல்லூரி மாணவர்களும் போங்ஜேஉன்ஸா கோவிலுக்குள் நுழைந்து அங்கு புராட்டஸ்டண்ட் கிறிஸ்துவ சடங்குகளை நடத்த ஆரம்பித்தார்கள். எல்லா நிலமும் இயேசுவுக்கே என்று சடங்கு நடத்தினார்கள்.

இது யூட்யூப் மற்றும் இணையம் முழுவதும் பகிரப்பட்டது.

இது போன்று கொரியாவில் நடக்கும் அசிங்கப்படுத்தல்களும், பௌத்த ஆலயங்களை அழிப்பதும் பௌத்தர்கள் கொரியாவில் பாரபட்சம் காட்டப்படுகிறார்கள் என்ற எண்ணத்தை வலுவடையச்செய்கிறது. மத நல்லிணக்கம் வேண்டுமென்றால், கொரிய கிறிஸ்துவர்களும் புராட்டஸ்டண்ட் கிறிஸ்துவர்களும் இவ்வாறு அசிங்கங்கள் செய்வதை நிறுத்த வேண்டும்.

மூலம்

உபரி இணைப்பு

தம்மாடைம்ஸ் 2002 செய்தி

 

Series Navigationபலுச்சிஸ்தான் இந்துக்களின் வெளியேற்றம்
author

Similar Posts

6 Comments

  1. Avatar
    paandiyan says:

    இந்த ஒரு விசயத்திற்காக பௌத்தம், ஹிந்து ஒன்று சேர்ந்து ஒரு நேர்கோட்டில் வர வேண்டியது அவசியம் ஆசிய கண்டதில் விரைவாக

  2. Avatar
    ஷாலி says:

    திரு.பாண்டியன் அவர்களே! உங்களை விஷயம் தெரிந்தவர் என்று நான் நினைத்திருந்தேன்.நீங்களும் வெவரமில்லாமல்தான் இருக்கிறீர்கள் என்று இப்பத்தான் தெரிந்தது. நீங்கள் ஆசைப்பட்ட புத்தமும்,ஹிந்துமதமும் ஒரே நேர் கோட்டில் அல்ல ஒரே கோடாக வந்து பல நூற்றாண்டு ஆகிறது. பெருமாளின் பத்து அவதாரத்தில் ஒரு அவதாரம் தான் புத்த பெருமா(ள்)ன். நாடாளும் காங்கிரஸ்,நாடாண்ட பாஜாக இவர்கள் அனைவரும் பெருமாள் பக்தர்கள்.எனவே ஸ்ரீ மகாவிஷ்ணு அவதாரப்புள்ளியில் அனைவரும் ஒன்று படுகிறார்கள். கடந்த வாரம் ஜனாதிபதி ராஜ பக்சே திருப்பதி வந்து ஓர் இரவு தங்கி பெருமாளின் அதிகாலை சேவையில் கலந்து கொண்டு சேவித்தது ஏன்? புத்த பெருமானின் மற்றொரு அவதாரம்தான்.ஏழுமலை வாசன் ஸ்ரீ நிவாஸ பெருமாள். சுப்ரமணிய சுவாமி பாரதரத்னா விருதுக்கு ராஜபக்சேவை பரிந்துரை செய்கிறார்.சுஷ்மா சுவராஜ் பரிந்து பேசுகிறார். சிங்க(ள) பெருமாள் பக்தரை காப்பதற்கு இந்தியா ஆளும் வர்க்கம் ஆடிய நாடகம் தாங்கள் அறிந்ததே.சிவனை வழிபடும் சைவ தமிழ் மக்களை விட பெருமாளை வழிபடும் சிங்களர்கள் நட்பில் நெருங்கியவர்களே! இந்த பெருமாள் பக்தியே சிங்களவர்களுக்கு ஆள்,அம்பு,சேனை கொடுத்து தமிழ் சைவப் புலிகளை ஒழித்தது.தமிழ் சைவ இந்துக்களை முள்வேலி வதை முகாமில் அடைத்தது.
    “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்.” பாரதி விவரமாகத்தான் பாடியிருக்கிறார். பாண்டியன் ஸார்! நீங்க கோடு போடச்சொன்னீர்கள்.நம்ம தேசியக் கவி NH ரோட்டை ஐ முன்பே போட்டுட்டார்.கவலைப்படாதீர்கள் உங்கள் ஆசைப்படியே ஆசியாக் கண்டத்தில் விரைவாக இக்கோடு ரோடு இலங்கை வரை புத்த பெருமாளின் சீனச் சீடர்களால் போட்டு முடிந்தது.பாரதி பாலத்தை கடந்துவிட்டால் முதல் தரிசனம் ராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாத ஸ்வாமி ஆலயம்தான்.இப்ப நீங்க பாட்டை பாடுங்க..தேவுடா…தேவுடா…எழுமலை தேவுடா..சூடுடா..சூடுடா..ராஜபக்சேவை சூடுடா..

    1. Avatar
      paandiyan says:

      விளக்கமாக நீட்டி எழுதி பழக்கமில்லை எனக்கு- சொல்ல வந்த சாராம்சம் சுருக்கமாக – இந்திய மற்றும் சீனா பேதங்களை விட்டு ஒரு நேர் கோட்டில் வரவேண்டியது காலத்தின் கட்டாயம் . அவர்களக்கும் மத மாற்ற பிரச்னை இருக்கின்றது . இது சம்பந்தமாக குருமூர்த்தி எழுதிய ஒரு பழைய கட்டுரை விளகமாக இருக்கும் .மற்றபடி உங்கள் நையாண்டி மறைமுக எதிர்ப்பு மத மாற்ற கோவம் நன்கு புரிகின்றது . ஹிந்து என்றால் பிராமின் என்று எப்படி இழுத்துவிடுவது என்று நன்கு தெரிந்த இனைய உலகம் — புத்தம் என்றால் இப்படிதான் இலங்கை என்று இழுத்து வேடிக்கை பார்க்கும்

  3. Avatar
    ராஜ நரசிம்ம விவேக் says:

    கொரியா என்று விட்டு விட்டுவிட்டீர்கள் எந்த கொரியா தென்கொரியாவா அல்லது வட கொரியாவா ? விளக்கவும்

    ராஜ நரசிம்மா விவேக்
    தஞ்சை

  4. Avatar
    punaipeyaril says:

    சிங்க(ள) பெருமாள் பக்தரை காப்பதற்கு இந்தியா ஆளும் வர்க்கம் ஆடிய நாடகம் தாங்கள் அறிந்ததே –> இந்த அரசியல் ட்தேவையில்லை. அத்துனை திசையிலும் விரோதிகளை சம்பாதித்த ஒருவனின் முடிவிற்கு இந்தியா ஆளும் வர்க்கம் பொறுப்பாகாது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *