பிரதிநிதி

This entry is part 7 of 33 in the series 3 மார்ச் 2013

—————–

குழப்பங்கள் கருக்கொண்டு பிரசவித்த
சூன்யத்தினுள் கரைந்தபடி காலம்

தொப்புள்கொடி அறுபடும் முன்னரே
தாயையிழந்த பிஞ்சாய்
பற்றிக் கொள்வதற்கோரு விரல் தேடி
வீறிடுகிறது வறண்ட மனம்

பலநூறு பகலவனாய் சுட்டெரிக்கின்றன
இயலாமைகள் என் ஆகாயத்தை
ஏங்கித் தவிக்கின்றன
என் பாலைவன ஏக்கங்கள்

நிசியிலுறங்கா ஓநாயின் ஓலத்தோடு
கரைகிறதென் கதறல்
அருகிலிருக்கும் அரவத்தின் கிசுகிசுப்பில்
பயந்து ஒடுங்குகிறதென் சுயம்

என்னுடைய வாழ்வை
என் பயங்கள் வாழ்கின்றன.

Series Navigationகாரைக்குடி கம்பன் கழகப் பவளவிழா அழைப்பிதழ்சமாதானத்திற்க்கான பரிசு
author

வருணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *