தாகூரின் கீதப் பாமாலை – 60 மரத் தோணியை நிரப்பு .. !

This entry is part 15 of 33 in the series 14 ஏப்ரல் 2013

தாகூரின் கீதப் பாமாலை – 60

மரத் தோணியை நிரப்பு .. !

 

Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

உன் மனதில் நான் நிலைப்பேனோ

இல்லையோ

என் சிந்தனையில் இருப்பது

அது அல்ல !

இன்றும் பிறகும் வந்து போய்,  

நின்று உன் கதவருகில் 

காரண மின்றிப் பாடுகிறேன்  !

நாட்கள் விரைந்தன  

நானிங் கிருந்த போது  !

போகும் என் பாதை யிலே

உன்னருகில் நானிருக்க நேர்ந்தால்

உன் முகத்தில்  

பளிச்செனத் தெரியும் திகைப்புக்  

களிப்பொளியைக் காண  விருப்பம் !

அதனால் தான்

ஏனென்று ஒரு காரணமும் இல்லை

நான் பாடுவ தற்கு !

 

வசந்த காலம் கடந்த பின்பு

மலர்ந்தப் புது மலர்கள்

உலர்ந்து உதிர்ந்து விடும் !

உற்ற நேரத்தை நிரப்பும் அவை

மற்றதை அறியாது !

நாள் முடிந்து போகும்,

அந்திம வெளிச்சம் மங்கி விடும்,

கானங்கள் முற்றுப் பெறும்,

வீணை மௌன மாகும் !

நானிங்கு உள்ள போதே, இந்த

மரத்தோணி யை மட்டும் நீ

நிரப்ப மாட்டாயா

ஒரு விளையாட்டு  மிதப்பியாய் ?

அதனால் தான்

ஏனென்று ஒரு காரணமும் இல்லை

நான் பாடுவ தற்கு !

 

+++++++++++++++++++++++++

பாட்டு : 70   தாகூர்  தன் 65 வயதில் [மார்ச் 3,  1927] சாந்திநிகேதனத்தில் எழுதியது.   

+++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] April 9, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationமந்திரமும் தந்திரமும் – ஜப்பானிய நாடோடிக்கதைகுருஷேத்திர குடும்பங்கள் 6
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *