நிறமற்றப் புறவெளி

1
0 minutes, 0 seconds Read
This entry is part 15 of 40 in the series 26 மே 2013

விழி திறந்த பகலில்
மொழி மறந்து மௌனமானாய்
இமை மூடிய இரவில்
தலைக்கோதி தாலாட்டினாய்
நிழல் விழும் தூரத்தில்
நீ எனது உறவானாய்
தென்றலாய் எனைத் தொட்டு
தீண்டும் இன்பம் தந்தாய்
இளங்காற்றாய் மாறி
வனப்பூக்களின் காதலை வளர்த்தாய்
கடுங்காற்றாய் உருமாறி
காதல் வேதனையைத் தந்தாய்
நிறமற்றப் புறவெளியில்
உருவற்ற உனை
தலையசைத்து அறியவைத்தேன்
எனை மறந்த நீயோ
கடல் அலையைக் கைப்பிடித்து
உடல் பிணைந்த மறதியில்
புயலாய் வந்து சாய்த்து
மரமான என்னை
மரிக்க வைத்துவிட்டாயே – என்
காற்றுக் காதலியே…!

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம்…! – 7ஜங்ஷன்
author

ரிஷ்வன்

Similar Posts

Comments

  1. Avatar
    கவிஞர் இராய செல்லப்பா says:

    மரத்தின் கவிதை அருமை. -நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா. (பின் குறிப்பு: பழங்காலத் தமிழ்ப்படங்களில் கதாநாயகனோ, காதலியோ, சாவதற்குமுன் நீண்ட வசனம் பேசிவிட்டு சாவர். அதே பாணியில் தான் ரிஷ்வனின் மரமும் கவிதை பேசிவிட்டு சாகிறதோ?)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *