விஸ்வரூபம் – விமர்சகர்களின் மூளைச் சலவையா?

This entry is part 24 of 24 in the series 9 ஜூன் 2013

உயிர்மையில் வெளிவந்திருக்கும் அ முத்துகிருஷ்ணனின் கட்டுரை “விஸ்வரூபம் 300 பொய்களும் 3000 உண்மைகளும்” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. திருப்பி எந்த விவாதமும் தேவையில்லை. இதை எதிர்த்துச் சொல்வதெல்லாம் பொய். நான் சொல்வதல்லாம் உண்மை என்ற ஒரு முழுமுதல் கருத்தை முன்வைத்துத் தொடங்கும் கட்டுரைக்கு என்ன பதில் சொல்ல முடியும்? கட்டுரை முதல் வரிகள் ஆங்கிலத்தில். முதல் உலகப் போரை ஆரம்பித்தது யார்? என்று தொடங்கி அமெரிக்கா மற்றும் மேற்குலகின் கொலைக் குற்றங்களைப் பட்டியலிட்டு, இதெல்லாம் முஸ்லிம்கள் செய்தது அல்ல என்று வலையுலகில் வலம் வரும் ஒரு மேற்கோள் பட்டியலை முன்வைக்கிறார் முத்துகிருஷ்ணன்.

A German Muslim scholar was asked on a live TV show about terrorism and Islam. He said:

Who started the First World War? Was it Muslims?
Who started the Second World War? Was it Muslims?
Who killed about 20 million Aborigines in Australia? Was it Muslims?
Who sent the nuclear bombs to Hiroshima and Nagasaki? Was it Muslims?
Who killed more than 100 million Indians in North America? Was it Muslims?
Who killed more than 50 million Indians in South America? Was it Muslims?
Who took about 180 million of African people as slaves, of whom 88% died and thrown in the Atlantic? Was it Muslims?

No, they weren’t Muslims! First, you have to define terrorism properly. If a non-Muslim does something bad, it is a crime. But if a Muslim commits the same act, he is a terrorist.

First remove this double standard, and then come to the point!

ஒரு ஜெர்மன் முஸ்லிம் அறிஞர் சொன்னது என்று வலைத் தளங்களில் உலா வரும் மேற்கோள் இது. இது முஸ்லிம் தீவிரவாதிகள் அமெரிக்கா-முஸ்லிம்கள் என்ற எதிர்-எதிர் அணி புரட்டை நியாயப் படுத்த முன்வைப்பது. இஸ்லாமிஸ்டுகள், நம் ஊர் இடதுசாரிகள், அமெரிக்காவின் தீவிர வலது சாரிகள் மூன்று தரப்பினருமே ஒன்றே போல், அமெரிக்காவிற்கு எதிரி இஸ்லாம், இஸ்லாமிற்கு எதிரி அமெரிக்கா என்று திட்டவட்டமாக நிறுவப் பாடுபடுகிறார்கள். தான் காட்டும் காட்சிகளுக்கு 300 ஆதாரம் இருக்கிறது என்று கமல் ஹாசன் பேச்சை முன்வைத்து, தலைப்பில் அவற்றை பொய்கள் என்று சாடும் முத்து கிருஷ்ணன், கமல் ஹாசன் சொன்னது எதுவும் பொய் என்று ஓர் இடத்திலும் சொல்லவில்லை. பின் ஏன் தலைப்பு அப்படி? அந்த பரபரப்பு உயிர்மையின் “நக்கீரன்” அடையாளத்தின் ஒரு பகுதி என்று சொல்ல வேண்டும்.

முத்துகிருஷ்ணன் பட்டியலை அப்படியே திருப்பிப் போட்டு முஸ்லிம்கள் செய்த இனப் படுகொலைகளுக்கு , ஜின்னாவின் ஆசியுடன் நடந்த “நேரடி நடவடிக்கை” யில் கல்கத்தாவில் நடந்த இனப்படுகொலை , வங்க தேசத்தில் யாஹ்யா கான் , கறுப்பு நிற வங்காள முஸ்லிம்களையும், ஹிந்துக்களையும் கொன்று குவித்த இனப் படுகொலை, தெற்கு சூடானில் அரபி முஸ்லிம்கள் கறுப்பின முஸ்லிம்கள் மீது நிகழ்த்திய இனப் படுகொலை, கிருஸ்துவர்கள் மீது நைஜிரியாவில் நிகழ்த்தப் படும் இனக்கொலைகள் என்று மீண்ட பட்டியல் இட முடியும். ஆனால் இது அர்த்தமற்ற பட்டியல். இஸ்லாமும் கிருஸ்துவமும் அடிப்படையில் ஏகாதிபத்திய மதங்கள். அவை இம்பீரியல் மதங்கள் என்பதன் பொருள் இஸ்லாமிய மக்களும், கிருஸ்துவர்களும் ஏகாதிபத்திய வாதிகள் என்பதல்ல. காலனியாதிக்கத்தின் மதம் எது என்பது சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்ட ஒன்று.

அமெரிக்காவை முஸ்லிம் எதிரிகள் என்று கட்டமைப்பதன் மூலம், இஸ்லாமிஸ்டுகள் ஒரு நிரந்தர பாழ் மனநிலயினை இஸ்லாமியர்களிடம் தோற்றுவித்து கட்டிக்காக்கிறார்கள். ஆனால் அகில உலக அரசியல் சதுரங்கம் இப்படி எளிதான சூத்திரத்தில் அடங்கி விடுவதல்ல. அமெரிக்கா அடிபப்டைவாத இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவுடன் நட்புப பூண்டுள்ளது. இதனால் எந்த முஸ்லீமும், சவூதி அரேபியாவை ஹராம் என்றோ, அமெரிக்க சைத்தானின் நண்பன் என்றோ பிரசாரம் செய்ததில்லை. துருக்கி, ஜோர்தான், ஏமன் என்று பல இஸ்லாமிய நாடுகளும் அமெரிக்காவின் நண்பர்களே. கொசோவோவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நடந்த அநீதியைத் தட்டிக் கேட்டதில் அமெரிக்கா முன் நின்றது என்பதும், செர்பிய போர்க்குற்றவாளிகளளைத் தண்டிக்க அமெரிக்கா முனைந்து நின்றதும் வரலாறு. தெற்கு சூடானின் கறுப்பின முஸ்லிம் மக்களுக்கு தனி நாடு பெற்றுக் கொடுத்ததும் அமெரிக்க முனைப்பில் தான்.

யமுனா ராஜேந்திரனின் கட்டுரையையும் முத்துகிருஷ்ணனின் கட்டுரையையும் அருகருகாக வாசித்தால் இரண்டும் அச்சு அசல் ஒன்றே போல் இருப்பதைக் காண முடிகிறது. யமுனா ராஜேநதிரன் உதாரணம் காட்டும் ஆப்கானிஸ்தான் ஆதரவுப் படங்களையும், அமெரிக்க ஆதரவுப் படங்களையும் தவிர்த்து மற்ற எல்லாமே ஒன்றே போல் இருப்பது காணலாம். சில்வஸ்டர் ஸ்டலோன் நடித்த ‘ராம்போ 3″ பாதாம் இரணிட்லுமஎ உதாரணம் காட்டப் படுகின்றன. அதே பழைய வாதங்கள். தாலிபானை வளர்த்து விட்டது அமெரிக்கா. (அதுதானே , சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தால் அமெரிக்காவிற்கு என்ன? ) இது ஆச்சரியம் என்று சொல்ல முடியாது. ஒன்றே போல் மூளைச்சலவை செய்யப் பட்ட இரு நபர்களின் வெளிப்பாடு ஒன்றாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

“பாலஸ்தீனியர்களிக் குறிவைத்து ஏராளமான திரைப் படங்களை அமெரிக்கா எடுத்துள்ளது. சீக்கியர்களைக் குறிவைத்து ஏராளமான ஹிந்தி திரைப் படங்கள் வெளிவந்துள்ளன. 1992-க்குப் பின்பு தான் சீக்கியர்களைக் கைவிட்டு ஹிந்தி சினிமா இஸ்லாமியர்களைத தனது இலக்காகிக் கொண்டது. ” முத்துகிருஷ்ணனின் பொய்களுக்கு அளவே இல்லை. அவர் சினிமா ஏதும் பார்த்திருக்கிறாரா என்பதே எனக்குச் சந்தேகம். அந்த ஏராளமான படங்களில் ஒன்றிரண்டின் பெயரைக் கூட முத்துகிருஷ்ணன் குறிப்பிட வில்லை. பாலஸ்தீன மக்களுக்கு புகலிடம் அளிப்பதில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்று அமெரிக்கா என்பது ஓர் உண்மை.

அமெரிக்காவின் உலகளாவிய நோக்கங்கள் முஸ்லிம்களைக் குறிவைத்ததல்ல. அப்படி ஒரு பிரமையை ஏற்படுத்திக் காபபற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்பதில் தான் உலக அரசியலின் இன்னொரு பக்கம் இருக்கிறது. ஒரு பக்கம் சோவியத் யூனியனின் மறைவுக்கு துக்கம் காக்கிற முத்துகிருஷ்ணன், இன்னொரு பக்கம் சோவியத் யூனியன் செய்த ஆக்கிரமிப்புகளையும், ஸ்டாலின் காலத்தில் நிகழ்ந்த அநீதிகளையும் பட்டியல் இடுவதில்லை. ஏனென்றால் முத்து கிருஷ்ணனின் அரசியல் நோக்கில் அமெரிக்க எதிர்ப்பு மையம் கொண்ட அளவிற்கு வேறு எதுவும் பொருட்படுத்தத் தக்கதல்ல. (இஸ்ரேல் உருவாகிய போது முதலில் அதை அங்கிகரித்தது சோவியத் யூனியன். )

————————————
விஸ்வரூபம் பற்றிய விமர்சனங்களை இங்கு விமர்சிக்க காரணம் ஒரு போக்கு தமிழ் அறிவுஜீவிப் பத்திரிகைகளில் உருவாகியிருப்பைதைச் சுட்டிக் காடுவது தான். இன்னொரு காரணம் – தமிழில் உள்ள சினிமா விமர்சனங்களின் இரு வேறு போக்குகளையும் அலசுவதும் , வெகுஜன சினிமாவின் விமர்சனம் எந்தப் புள்ளியில் இயங்க வேண்டும் என்ற ஒரு விவாதத்தைத் தொடங்குவதும் தான். ஒரு முனையில் வெங்கட் சாமிநாதன், சிறு பத்திரிகை வட்டத்தினரின் தூய்மைவாத விமர்சனங்கள். இவை கலைப் படங்களை இனங்காணவும் ரசிக்கவும் பெரும் உதவி புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்னொரு புறம் நாயக வழிபாட்டில் தோய்ந்த வெகுஜன ஏடுகளின் விமர்சனங்கள். இரண்டுமே வெகுஜன சினிமாவின் கலைப் பண்புகளையும், சமூக தளத்தினையும் புரிந்து கொள்ள உதவாது. ராஜன் குறை, சுந்தர் காளி போன்றோர் முயன்றால் இதை முன்னெடுத்துச் செல்லலாம்.

துரதிர்ஷ்ட வசமாக யமுனா ராஜேந்திரன், முத்துகிருஷ்ணன் பாணி விமர்சனங்கள் தவறான அரசியல் நோக்கில் வெகுஜன சினிமாவின் சிறப்புகளை புறக்கணித்து தம் செல்ல அரசியல் நோக்குகளை இவை ஏற்றுக் கொல்லவில்ல என்பதை மட்டுமே மையப் புள்ளியாக்கி சிதைந்துள்ளன. இது எதனால் என்பது நம் முன் உள்ள கேள்வி.
——————————-

Series Navigationசெவ்வாய்க் கோளில் தளவுளவி ஒரு காலத்தில் சிற்றாறு நீரோடி உலர்ந்த தடம் இருப்பதைக் காட்டியுள்ளது
author

கோபால் ராஜாராம்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *