This entry is part 15 of 24 in the series 9 ஜூன் 2013

(கற்றுக்குட்டி)

 

நான் அப்போது வசித்த ஊரில் ஆறு உண்டு

சின்னது என்றாலும் சிங்காரமானது

ஓரத்தில் நின்றால் சிலுசிலுக்கும்

கழுத்தளவு நீருண்டு, நீந்தலாம்

கரையில் மணல், புல், கோரை, நாணல்.

 

ஊர்மாறி பட்டணம் வர எண்ணியபோது

“அங்கெல்லாம் ஆறு இருக்குமாடா?” என

அறியாத நண்பன் கேட்டான்.

 

அப்போது தெரியாது என்றாலும்,

இருக்கிறது என்று வந்த பின் தெரிந்தது.

 

நிறைந்து ஓடும், நின்று பார்க்கலாம்

கரையில் நின்றால் கதகதக்கும்

போகாதே, போ, கடக்காதே, கட,

என்னும் கம்பங்கள்.

வலம் பார்த்து இடம் பார்த்து வலம் பார்த்து

புகுந்து ஓடலாம்.

 

அது நீரால் ஆனது

இது காரால் ஆனது.

Series Navigationஅன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்மதுரையில் ஆடிய குரவைக்கூத்து