மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
நான் அறிவேன் !
நன்றாக நான் அறிவேன்
பிரிவதற் குரிய வினைகள் அனைத்தும்
துரிதமாய் முடிந்தன
என்பதை !
ஆயினும் பயணியே!
ஏன் இப்போது சிறிது தயக்கம் ?
ஆனி, ஆவடி மாதத்து
வானத்தில்
பெருமழைப் பொழிவு நனைத்து
தோட்டம், வாய்க்கால்கள்
நிரம்பி வழியும்
காட்டு மர நிழலில் !
மெல்லிய மழைத்துளி அரவத்தில்
கேட்கிறது
சிவ்விளிப்* பூங்கொத்தின் அழுகுரல்
மண்ணிலோர்
மலரை இழந்த தற்கு !
பிறகு நீ போய்விடு !
மழை பெய்து முடிந்த பின்பு
பாதை நெடுவே
பறவை இனங்களின் இனிய
கீச்சுக் குரல்
கேட்கத் துவங்கும் !
இலையுதிர் காலத் தேவதை
எழுந்திடுவாள்
நெற்றித் திலக முடன்
கடற் சிப்பியில் கலந்த
நற்குறிச்
சந்தனப் பொட்டில் !
+++++++++++++++++++++++++++++
*Shiuli Flower [இரவில் பூக்கும் மல்லிகை ஒத்த பூ]
Sewali pronounced as Hkhewali in Assamese ‘Shefali (শেফালী) or Shiuli (শিউলি) in Bengali.
Official State flower of West Bengal. Night-flowering Jasmine; Coral …
en.wikipedia.org/wiki/
+++++++++++++++++++++++++
பாட்டு : 170 1925 அக்டோபரில் தாகூர் 64 வயதினராய் இருந்த போது எழுதிச் சாந்திநிகேதன் வெளியீட்டில் வந்த பாடல் இது.
++++++++++ +++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] June 18, 2013
http://jayabarathan.wordpress.
- படைப்பு
- மொழியின் அளவுகோல்
- தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் – ஒரு பார்வை.
- புகழ் பெற்ற ஏழைகள் – 12
- கல்யாணியும் நிலாவும்
- மருத்துவக் கட்டுரை மதுவும் கணைய அழற்சியும்
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25
- நம்பிக்கை
- தாகூரின் கீதப் பாமாலை – 70 பிரிவுக்கு முன் செய்த முடிவுகள் .. !
- என்னைப் பற்றிய பாடல் – 23
- காரைக்குடி கம்பன் கழகம்
- மனதாலும் வாழலாம்
- கற்றுக்குட்டிக் கவிதைகள்
- லிங்கூ-வில் இயங்கும் காலமும் வெளியும் – கவிஞர் என்.லிங்குசாமி கவிதைகளை முன்வைத்து
- மாலு : சுப்ரபாரதிமணியனின் நாவல் – சமகால வாழ்வே சமகால இலக்கியம்
- ப.மதியழகன் கவிதைகள்
- பேராசிரியர் அர. வெங்கடாசலம் – திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் -ஓர் உளவியல் பார்வை – வள்ளுவ ஆன்மீகம்
- கவிதைகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான அணுவியல் மர்மங்கள் : மூலக்கூறில் அணுக்களின் நர்த்தனம் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 8,9,10
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 15
- உள்ளே ஒரு வெள்ளம்.
- ஆகஸ்ட்-15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 8
- “செங்கடல்”
- இரயில் நின்ற இடம்
- என்ன ஆச்சு சுவாதிக்கு?
- நான் ஒரு பொதுமகன். And Im not a terrorist
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -7