மேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும்

This entry is part 23 of 30 in the series 28 ஜூலை 2013

ப.லெட்சுமி,
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை

ஈ.வெ.ரா பெரியார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

படைப்பாளர்கள் தற்கால நிகழ்வுகளோடு ஒட்டித் தம் பதிவுகளைப் படைப்புக்களில் பதிய வைக்கின்றனர். இதன் காரணமாக படைப்புகள் உயிர்த்தன்மையுடன் திகழ்கின்றன. கவிஞர் மேத்தா வானம்பாடி இயக்க காலக் கவிஞராவார். தொடர்ந்து புதுக்கவிதைகளைப் படைத்துக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தமிழ்ச்சமுதாயம் பற்றிய பல விமர்சனங்களைத் தந்து தமிழ்ச்சமுதாயத்தின் இக்கட்டுக்களை, ஏற்ற இறக்கங்களை மதிப்பிட்டு அது சரியான வழியில் நடைபோட ஆக்கமும் ஊக்கமும் மிக்கக் கவிதைகளை படைத்தளித்து வருகின்றார்.

‘‘வெவ்வேறு வகையான நாலூரில் சுற்றிவரும் நாடோடிக் கவிஞன் நான், பசித்து அழும் ஏழையர்க்காய்ப் பால் ஊறும் கவி மார்பின் பணி மட்டும் நிற்காது ’’ என்று சமுதாய நோக்கம் மிகுந்த கவிதைகளை அளிப்பதே தன் பணி எனக் கவிதைகளைப் படைத்து வருபவர் மேத்தா ஆவார். இவர் தன் மொழி வளரவேண்டும், தன் சமுகம் வளரவேண்டும் என்ற எண்ணத்தில் பல கவிதைகளைப் புனைந்துள்ளார். இவரின் கவிதைகள் தரும் தமிழ், தமிழ்ச்சமுதாயம் பற்றிய சிந்தனைகளை இக்கட்டுரை தொகுத்தளிக்கின்றது.

தமிழ்மொழி

தமிழ் தமிழர்களின் தாய்மொழி. ஆனால் தமிழ் மொழியைத் தமிழர்களே புறக்கணிக்கும்போக்குத் தற்போது காண்படுகிறது என்பதைத் தன் கவிதைகளில் எடுத்துரைக்கின்றார் மேத்தா.

‘‘தமிழில் எனக்குப்

பேசவராது – என்று

சொல்வதுகூட ஒரு

தகுதியாகி விட்டது’’(மு,மேத்தா, திருவிழாவில் ஒரு தெருப்பாடகள், ப. 99)

என்று தமிழ்மொழியில் தாய்மொழியில் பேசுவதை இழிவாக நினைக்கும் தமிழ்ச்சமுதாயத்தின் அவலத்தை இக்கவிதை எடுத்துரைக்கின்றது.

தமிழ் மொழி வல்லுநர்கள், அறிஞர்கள், புலவர்கள் இவர்களிடத்தில் தமிழ் மொழி வளர வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவர்களாலும் தமிழ் மொழி வளரவில்லை என்று கருதுகிறார் மேத்தா,

‘‘தமிழ் என்கிற

தங்கச் சீப்பு

எப்போதும் உள்ளது

எங்கள் கைகளில்

இருந்து பயனென்ன?

ஒவ்வொரு நாளும்

ஒருவரை ஒருவர்

மொட்டையடிக்கிற முயற்சியில்

உள்ளோமே!

எங்களிடம்

எந்தச் சீப்பிருந்து

என்ன பயன்’’ ( மு.மேத்தா, திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்,ப. 22)

என்ற இந்தக் கவிதையில் தமிழ் தங்கச் சீப்பு என்ற குறியீடாகக் காட்டப் பெற்றுள்ளது. சீப்பு தலைமுடியை வாரிவிடுகிற நல்ல தொழிலைச் செய்யக் கூடியது. ஆனால் அதற்கு வாய்ப்பு வைக்காமல் தமிழ் அறிந்தவர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறி எந்தச் செயலையும் செய்யாமல் இருப்பதாக மேத்தா கருதுகின்றார்.

தமிழ் இனம்

தமிழ் இனம் தமிழ்நாட்டில் காலூன்றி இருப்பதுடன் பல வெளிநாடுகளிலும் தன் பரவலை பரவலாக்கியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் தமிழினம் பரவியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் எல்லா இடங்களிலும் தமிழினத்திற்குப் பல தடைகள் எழுந்து வருகின்றன. இதனைக் கருத்தி;ல் கொண்டு மேத்தா பல கவிதைகளைப் படைத்தளித்துள்ளார்.

‘‘தமிழினமே தமிழினமே

உனக்கு மட்டும்தான்

உள்ளத்தில் உறுதி உண்டு

ஊர் ஊராக

உதைபடுவதற்கு’’(,மேத்தா, கனவுக் குதிரைகள், ப. 23)

என்ற கவிதை தமிழினம் எங்கு சென்றாலும் உதைபடும் சமுதாயமாக இருக்கிறது என்று கவலை கொள்ளுகின்றார் மேத்தா.

பக்கத்து மாநிலங்களில் கூட தமிழர்கள் கவலையின்றி வாழ முடியாத சூழலை இவரின் மற்றொரு கவிதை தெரிவிக்கின்றது.

‘‘ஆற்றுநீரை

அனுப்புங்கள் என்றோம்

தமிழர்களை

ஒட்டுமொத்தமாக

ஊருக்கு

அனுப்பிவிட்டார்கள்’’( மு.மேத்தா, கனவுக்குதிரைகள்,ப.23)

என்று கர்நாடக மாநிலத்தின் தண்ணீர் தராத நிலையையும் தமிழர்களை விரட்டும் நிலையையும் எளிமையான கவிதை அடிகளால் புரிய வைத்துவிடுகிறார் மேத்தா.

‘‘சுட்டும் விழிச்சுடரால்

சுதந்திர ஈழத்தின்

ஜோதியைத்

தரிசிக்கக் காத்திருந்த

தமிழனின் கண்கள்

சிறைக்குள்ளேயே

சிதைக்கப்பட்டதாம்’’( மு,மேத்தா, திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்,ப. 45)

என்று இலங்கையில் நடைபெற்ற தமிழர்க்கெதிரான நடவடிக்கைகளின் சாரத்தை சிற்சில கவியடிகளுக்குள் காட்டி நிற்கிறார் மேத்தா.

‘‘எல்லார்க்கும் விருந்தளித்து

ஏற்றம் பெற்ற

எங்கள் இனம்

மரண தேவதையின்

கோரப்பசிக்கு

விருந்து கொடுத்தபிறகு

அங்கே

இப்போது

அகதியானது’’(மு.மேத்தா, திருவிழாவில் ஒரு தெருப்பாடகன், ப.61)

என்ற கவிதை இலங்கைத் தமிழர் நிலையின் இறுதியை எடுத்துரைப்பதாக உள்ளது. இக்கவிதை 1984 ஆம் ஆண்டு மேத்தாவால் எழுதப்பெற்ற கவிதை. ஆனால் இன்றைக்கு இலங்கைத் தமிழர்கள் சந்திக்கும் அவலத்தை அன்றைக்கே எடுத்துரைப்பதாக இது விளங்குகின்றது.

தமிழக அரசியல் நிலைப்பாட்டின் காரணமாகத் தமிழினம் தரமிழந்து போனதை ஒரு சிறுகவிதைக்குள் அடக்கிக் காட்டுகின்றார் மேத்தா.

‘‘நீதி கிடைக்குமென்று –மனு

நீதிச் சோழனிடம்- ஒரு

தூது அனுப்பிவைத்தோம்- அவன்

தூதனைக் கொன்றுவிட்டான்

காவல் நிலையத்திலே – சொந்த

கணவன் கண்ணெதிரில்- ஏழைக்

கண்ணகி கற்பிழந்தாள் – தூக்கில்

கோவலன் தொங்குகிறான்’’( மு.மேத்தா, கனவுக்குதிரைகள்,ப. 53

என்ற கவித்தொடர்கள் இக்காலத் தமிழகத்தின் இன்னல் மிக்க சூழல்களை எடுத்துரைப்பதாக உள்ளது.

‘‘எங்கள் தேசத்தில்

ஒவ்வொரு கட்சிக் கொடியும்

உயரத்தில்தான் பறக்கிறது

எங்கள் சகோதரர்களின்

தாழ்ந்து குனிந்த

தலைக் கம்பங்கள் மீது’’( மு,மேத்தா, திருவிழாவில் ஒரு தெரு;பாடகன், ப. 10)

என்று தமிழகத்தின் அரசியல் நிலைப்பாட்டை மேத்தாவின் மேற்கவிதை எடுத்துரைக்கின்றது.

தமிழ், தமிழினம் பற்றிய மேத்தாவின் விமர்சனங்கள் சமுதாயம் திருந்துவதற்கு வாய்;ப்பளிப்பனவாகும். இவரின் இந்த எச்சரிக்கைகளை ஏற்றுத் தமி;ழ்ச்சமுதாயம் நலம் பெற்றால் அது மேத்தாவின் சிந்தனைகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

——————————————————————————————————————————————

பயன்கொண்ட நூல்கள்

மு,மேத்தா, மனிதனைத்தேடி, கவிதா பப்ளிகேசன்ஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு, 2004

மு,மேத்தா, திருவிழாவில் ஒரு தெருப்பாடகன், திருமகள் நிலையம், சென்னை, ஏழாம் பதிப்பு, 2004

மு,மேத்தா, கனவுக்குதிரைகள், திருமகள் நிலையம், சென்னை, நான்காம் பதிப்பு, 2004

மு.மேத்தா, முகத்துக்குமுகம், திருமகள் நிலையம், சென்னை, ஒன்பதாம் பதிப்பு,
one_zero@rediffmail.com

Series Navigationதமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடுஇதழ்கள் நோக்கில் விளம்பர வகைகள்
author

ப. லட்சமி

Similar Posts

10 Comments

 1. Avatar
  Chellappa Yagyaswamy says:

  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வானம்பாடிக் கவிஞர்களில் மிகவும் ரசிக்கப்பட்டவராக வெளிக்கிளம்பியவர் மு. மேத்தா. அவர் பெயரைக் கேட்டாலே கல்லூரி மாணவிகள் சொக்கிப் போனதைக் கண்டிருக்கிறேன். (“வரம் கொடுக்கும் தேவதைகள் வந்தபோது தூங்கினேன்; வந்தபோது தூங்கிவிட்டு வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்” என்ற வார்த்தைகளை நான் மறக்க மாட்டேன்.) இவ்வளவு நாள் கழித்து அவரது கவிதையை விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்டது, அவர்பால் இன்னும் இளைய தமிழ் வாசகர்களுக்கு ஈர்ப்பு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆய்வாளர் லெட்சுமிக்கு வாழ்த்துக்கள். –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

 2. Avatar
  paandiyan says:

  சொன்னது யார்?????
  ‘முப்பத்தைந்து வயதான எந்த குடிமகனும் இந்தியக்குடியரசு தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல ,
  மு மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும் !’

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   நம்ம பாண்டி சார் எழுதியது எனக்குப்புரியவில்லை. வேறு யாருக்கும் புரிந்திருந்தால் எனக்கு கொஞ்சம் சொல்லவும்.

   1. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    இதுக்கு கூட கோனார் தமிழ் உரை வேணுமா சார் ?

    “முப்பத்தைந்து வயதான எந்த குடிமகனும் இந்தியக்குடியரசு தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல ,
    மு மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும் !”

    இப்படி சொன்னது யாரு-ன்னு கேக்குறாரு பாண்டியன்.

 3. Avatar
  IIM Ganapathi Raman says:

  //என்ற கவிதை இலங்கைத் தமிழர் நிலையின் இறுதியை எடுத்துரைப்பதாக உள்ளது. இக்கவிதை 1984 ஆம் ஆண்டு மேத்தாவால் எழுதப்பெற்ற கவிதை. ஆனால் இன்றைக்கு இலங்கைத் தமிழர்கள் சந்திக்கும் அவலத்தை அன்றைக்கே எடுத்துரைப்பதாக இது விளங்குகின்றது.//

  Not exactly.

  1981ல் ஜெனோசைட் நடந்தது. பெரிய அளவு கொத்துக்கொலைகள். விமானத்திலிருந்து. தமிழக மக்கள் கொதித்தெழுந்தனர். இன்று பிளவுபட்டுக்கிடக்கும் தமிழ்நாட்டுத்தமிழர் (இலங்கைத்தமிழர் பிரச்சினையில்) அன்று ஒரேமுகத்தைக்காட்டினர்.

  பத்து இலட்சம் பம்பாய்த்தமிழர் பம்பாய் பெருநகர வீதிகளில் ஊர்வலம் நடாத்தியதைக்கண்டு பம்பாய் அதிர்ந்தது. சிவ சேனையும் அவ்வூர்வலத்தில் கலந்து தோள் கொட்டுத்தது.

  தில்லியில் ஊர்வலம் இலங்கைத்தூதர் அலுவலகத்துக்குச் செல்ல தில்லி அரசு அனுமதி அளிக்கப்பட்டு, அத்தூதரிடம் கண்டன மனு கொடுக்கப்பட்டது. .

  இப்படி உலகத்தமிழரை உலுக்கியச்செயல் நடந்தவாண்டு 1981.

  அதன் தாக்கத்திலும் அதற்குப்பின்னர் நடந்த செய்லகளுமே மு மேத்தா போன்றவர்களின் கவிதைகளாகும்.

  இன்று நடந்ததை அன்றே சொன்னார் என்பது சரியன்று.

 4. Avatar
  IIM Ganapathi Raman says:

  நான் கல்லூரிபடித்த காலை இவர் பிரபலம். கவிஞர் இராய செல்லப்பா சொல்வது சரிதான்.

  மு மேத்தா காட்டும் தமிழ் வெறுப்பாளர்களுள் ஒருவனான நான் – அன்று – இவர் கவிதைகளையும் கண்ணதாசன் கவிதைகளையும் பரவலாக பிறமாணக்கர் வியக்கவியக்க பேசும்போது எரிச்சலுற்று அவ்விடத்தைவிட்டு விலகி விடுவேன். இவர் ‘புதுக்கவிதை’ எனப்படும் ஜான்ராவின் ஹீரோக்களில் (one of the heroes of the genre called New Poetry in Tamil. But the pioneer is Subramania Bharati, as Madam Lakhmi (this essayist) should know) ஒருவர். இன்று பலர். சிலர் இவர் கவிதைகளை பேச்சுப்போட்டியில் எடுத்தாளுவர்.

  ஆனால் கட்டுரையாளர் காட்டும் வரிகளை நான் கேள்விப்பட்டதில்லை. என் சக மாணாக்கர்கள் சிலாகித்த தெருப்பாடகன் கவிதை வரிகள் வேறு. அவை ஒரு ‘புதிய ஸ்டைலில் எழுதப்பட்டதாக எனக்கு அப்போது தோன்றியது. I cant say more as I am not competent to evaluate such poetry. All hearsay only.

  The lines quoted here tell the same old story of self criticism
  i.e. criticizing one’s own people w/o offering any viable solution, isn’t?.

  என் பிள்ளைகளுக்குத் தமிழில் பேச வராது (எழுதவும்தான்) என்று என் மனைவி பீற்றிக்கொண்டால், அதற்கு காரணங்கள் வேறு. We dont hate Tamil but we want our children to study English. Tamil hinders that process.

  ஒரு மொழி என்பது மண்ணிலிருந்து முளைப்பதுவே. அம்மண்ணே சரியில்லையென்றால், அம்மொழி எப்படி தழைக்கும்? உப்பே சாரமற்றுப் போனால் எதனால் பின் அது சாரமாக்கப்படும்? If salt loses its savor, what with shall it be salted again?

  இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழுக்கிடமில்லை. தமிழக அரசு ஆங்கில பயிற்றுமொழி வகுப்புக்களை அதி தீவிரத்துடன் அரசுப்பள்ளிகளில் இவ்வாண்டு தொடங்கியிருக்கிறது தெரியுமா? அடையாறில் ஜீன் மாதமிருந்த போது அங்கிருந்த குடிசை வீடுகளுக்கு அரசுப்பள்ளியாசிரியர்கள் சென்று” ஆங்கில மீடியம் ஆரம்பித்துவிட்டோம். தயவு செய்து பிள்ளைகளை அனுப்புங்கள்!”

  Some truths are bitter, aren’t they?

 5. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  ஏங்க லட்சுமி மேடம், முனைவர் பட்டத்துக்கு ஆய்வு பண்ணுறீங்க. இவ்வளவு கனமான கட்டுரை-லாம் எழுதறீங்க. கீழ்கண்ட தலைப்பை உட்டுட்டீங்களே.

  கற்பில் சிறந்தவள் கண்ணகியா கோவலனா ?

  1. Avatar
   paandiyan says:

   சரியான தலைப்பு . முடிவில் கண்ணகி திராவிடம் என்றும் கோவலன் வந்தேரி ஆரியன் என்று முடித்தால் இன்னும் தூக்கலாக இருக்கும்.

 6. Avatar
  தமிழ் பாடல் வரிகள் says:

  தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.தமிழை பற்றி தமிழில் இவ்வளுவு அறிய கருத்துகைளையும் எடுத்து உரைத்தவருக்கும், இதில் பங்கேற்ற அனைவர்க்கும் என் வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *