தாகூரின் கீதப் பாமாலை – 80 காலியான என் கூடை .. !

This entry is part 24 of 24 in the series 8 செப்டம்பர் 2013

 

 

 Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

காலியான  என் கூடையை

உனது  பாதக்

கமலங்களில் வைக்கிறேன்.

நடக்கும் உன் பாதையில்

எனது

புடவைத் தலைப்பை

விரிக்கிறேன்

ஒரு பிச்சைக் காரி  

உன் முன்பு செய்வது போல் !

மன்மதனே !

உடம்பற்ற  காதல்

கடவுளே !

காமன்  வில்லில் கட்டிய

பூமாலையும்,

வணங்கிடச் சமர்ப்பிக்கும் உனது

வழிபாட்டுப்

பொருட்களையும்,

வறுமை நீக்கப் பயன் படுத்து !

 

உன்  வெற்றிப் பயணங்களில்

என்னையும்

இணைத்துக் கொள்ள

உன்னை

கெஞ்சிக் கேட்கிறேன்.

என் நெற்றியைக் குறி வைக்கட்டும்

உன் மலரம்பு !

என் காலிப் பாத்திரத்தை

நீ  அமிழ்தம் ஊற்றி  

நிரப்பி விட்டால்

முரசடிப்பேன், எல்லா  விடத்திலும்

உன் வெற்றி நிகழ்ச்சியை

தென் திசைத்

தென்றல் மூலம் !

 

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 330   1936  மார்ச்சில் தாகூர்  75 வயதினராய்  இருந்த போது “சித்திராங்கதா” எழுதப் பட்டது.  அழகில்லாத போர் இளவரசி சித்திராங்கதா, தனக்கு வனப்பை வரமாய்ப் பெற தவமிருக்க விரும்பி,  அர்ஜுனனைக் கண்டு அவன் மீது காதல் வயப்பட்டுப் பாடுவதாக அமைக்கப் பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] September  3, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationபால்வீதி ஒளிமந்தையின் அகிலவெளிக் கதிர் வீச்சுகள் [Cosmic Ray Showers] பூகோளம் சூடேறவும், காலநிலை மாறுபாடவும் நேரடித் தாக்கம் விளைவிக்கும்.
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

  1. Avatar
    ஜி.ஜே.தமிழ்ச்செல்வி says:

    நடக்கும் உன் பாதையில்

    எனது

    புடவைத் தலைப்பை

    விரிக்கிறேன்

    ஒரு பிச்சைக் காரி

    உன் முன்பு செய்வது போல் !

    எத்தனை தாழ்மை உணர்வு…..! ஆச்சர்யமான வரிகள் இத்தகை தாழ்மை எங்குள்ளது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *