தாகூரின் கீதப் பாமாலை – 80 காலியான என் கூடை .. !

This entry is part 24 of 24 in the series 8 செப்டம்பர் 2013

      மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     காலியான  என் கூடையை உனது  பாதக் கமலங்களில் வைக்கிறேன். நடக்கும் உன் பாதையில் எனது புடவைத் தலைப்பை விரிக்கிறேன் ஒரு பிச்சைக் காரி   உன் முன்பு செய்வது போல் ! மன்மதனே ! உடம்பற்ற  காதல் கடவுளே ! காமன்  வில்லில் கட்டிய பூமாலையும், வணங்கிடச் சமர்ப்பிக்கும் உனது வழிபாட்டுப் பொருட்களையும், வறுமை நீக்கப் பயன் […]

பால்வீதி ஒளிமந்தையின் அகிலவெளிக் கதிர் வீச்சுகள் [Cosmic Ray Showers] பூகோளம் சூடேறவும், காலநிலை மாறுபாடவும் நேரடித் தாக்கம் விளைவிக்கும்.

This entry is part 23 of 24 in the series 8 செப்டம்பர் 2013

          சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா       சூட்டு யுகப் பிரளயத்தை மூட்டி விடுவது சூரியத் தீக்கதிர்களா ? கிரீன் ஹவுஸ் விளைவில் திரண்டெழும் கரிப்புகை வாயுக்களா ? ஓஸோன் குடையில் விழும் ஓட்டைகளா ? பூமியைச் சூடாக்கி வருபவை சூழ்வெளி மண்டலத்தில் முகில் மூட்டம் உண்டாக்கும் அகிலக் கதிர்களா ? பரமாணுக்கள் என்னும் அக்கினிப் பூக்களா ? பம்பரமாய்ச் சுற்றும் பூமியின் அச்சாணியோ, சுற்றுவீதியோ […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 26

This entry is part 22 of 24 in the series 8 செப்டம்பர் 2013

தயாவின் கடித வாசகம் சங்கரனின் காதுகளைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவளுக்கு நேர்ந்துவிட்ட அவல வாழ்க்கையை அவனால் சகிக்கவே முடியவில்லை.  ஆனால்,அவள் விஷயத்தில் தன்னால் ஒரு விரலைக்கூட அசைக்க முடியாது என்கிற நிலையே அவளது அவலத்தை விடவும் அவனை  அதிகமாய்த் துன்புறுத்தியது. தயாவின் வீட்டில், எல்லாருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக ரமா தயாவின் கடிதத்தை இரைந்தே படித்தாள். அப்போது பக்கத்தில் இருந்த ஈசுவரனின் முகம் வெளிறிவிட்டது. ரேவதியோ வாயில் புடைவைத் தப?லப்பைப் பந்தாய்ச் சுருட்டி வைத்துக்கொண்டு    அழுதுகொண்டிருந்தாள்.     சாம்பவிதான் […]

மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்

This entry is part 8 of 24 in the series 8 செப்டம்பர் 2013

  செழியன் என்ற பெயரில் எனக்குத் தெரிந்தவர். இருவர் ஒருவர் கனடாவில். கவிதை, நாடகங்கள் எழுதுகிறவர். யாழ்ப்பாணத்தவர். புலம் பெயரும் முன் தன் ஆரம்ப வாழ்க்கையைப் பற்றி சுய சரிதையாக, வானத்தைப் பிளந்த கதை என்று நாட்குறிப்புகளாகத் தொகுத்துத் தந்துள்ளார். அது பற்றி எழுத வேண்டும். எவ்வளவு நிச்சயமற்ற வாழ்க்கையிலும் தன் நகைச் சுவை உணர்வை இழக்காதவர். இன்னொருவர், இப்போது நம் முன் நிற்கும் செழியன் சென்னை மனிதர். கோடம்பாக்கத்தில் தன் அதிக நேரத்தைச் செலவிடுகிறவர். திரைப் […]

ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)

This entry is part 7 of 24 in the series 8 செப்டம்பர் 2013

ஆர் ஷண்முக சுந்தரம் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு திறன் வாய்ந்த எழுத்தாளர். அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பு அதிகம் பெறாதவர். இலக்கிய சர்ச்சைகள், நகர வாழ்க்கையின் சந்தடி, இவற்றில் எதிலும்  சிக்கிக்கொள்ளாத தூரத்தில் அமைதியாக வாழ்ந்தவர். அவருக்கு பணம் தேவைப்பட்டபோதெல்லாம் தன்னுடைய நோட்புக்கில் ஒரு குறு நாவல் எழுதி முடித்துவிடுவார். அதற்கு அவருக்கு ஏதோ சில நூறு ரூபாய்கள் கிடைத்துவிடும். இப்படித்தான் நாகம்மாள், சட்டி சுட்டது (1965), அறுவடை […]

திலீபன் கண்ணதாசன் கவிதைகள்

This entry is part 21 of 24 in the series 8 செப்டம்பர் 2013

-ஸ்ரீரங்கம் சௌரிராஜன்       ‘சவ்வு மிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை’ என்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார் உசிலம்பட்டிக்குப் பக்கத்து கிராமத்துக்காரரான திலீபன் கண்ணதாசன்; தற்போது மதுரைவாசி! நா.முத்துக் குமார், முகுந்த் நாகராஜ் போன்ற யதார்த்தக் கவிஞர்கள் வரிசையில் இவருக்கும் ஓர் இடம் உண்டு. கிராமத்தின் அழகை, ஜீவா சொன்னதுபோல ‘வேரோடும் வேரடி மண்ணோடும்’ எடுத்துவந்து நம்முன் கவிதைகளாகத் தந்துள்ளார். யதார்த்தக் கவிதைகளில் உண்மையே கவித்துவமாகச் செயல்படும். பாடுபொருள் முன்நிற்க மொழி பின்னால் நிற்கும். திலீபன் கண்ணதாசன் […]

மருத்துவக் கட்டுரை மயக்கம்

This entry is part 20 of 24 in the series 8 செப்டம்பர் 2013

                                                   டாக்டர் ஜி . ஜான்சன்           நாம் அனைவருமே எப்போதாவது மயக்கம் அடைந்திருக்கலாம். அதனால் மயக்கம் என்பது என்ன என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.            சிலருக்கு சில நிமிடங்கள் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம். சிலருக்கு சில மணி நேரங்கள் மயக்கம் நீடிக்கலாம்.சிலருக்கு எந்த விதமான நோய்கள் இல்லாமலும் மயக்கம் வரலாம். சரியான நேரத்தில் உணவு உணவில்லையெனில் மயக்கம் வரலாம். போதிய உறக்கம் இல்லாமலும் மயக்கம் வரலாம். அல்லது அளவுக்கு அதிகமாக உண்டபின்னும் மயக்கம் உண்டாகலாம். அதிக வேலை, […]

ஜாக்கி சான் 6. சாகச நாயகன் பிறந்த கதை

This entry is part 2 of 24 in the series 8 செப்டம்பர் 2013

    சார்லஸ் தன் மனைவி லீ லீயுடன் பேசிக்கொண்டு இருந்தார்.   “இன்னிக்கு உடம்பு எப்படி இருக்கு?”   “பரவாயில்லை.  என்னைக்கு குழந்தை பிறக்குமோ? இதோட பெரிய பாடாய் இருக்கு..”   “என்ன செய்யறது?  குழந்தைங்கன்னா பத்து மாசத்துல பொறந்துடும்.  நம்ப குழந்தை என்னன்னா.. பன்னென்டு மாசமாகியும் பிறக்கலையே..” “ஆமாங்க.. குழந்தை ரொம்பவே படுத்துது ..”   — மருத்துவமனையில் லீ லீக்கு ஆண் குழந்தை பிறந்தது.   “அப்பாடா.. குழந்தை பொறந்தாச்சு.  உனக்கு உடம்பு […]

கறுப்புப் பூனை

This entry is part 19 of 24 in the series 8 செப்டம்பர் 2013

பொழுது சாயும் வேளை.   கறுப்புப் பூனை பரபரப்பாயிருக்கும்.   காரணமில்லாமல் இருக்காது. இருளின் துளியாய்த் திரியும் அது.   இன்று இருளைத் தூவித் துரிதப்படுத்த முடிவு செய்திருக்கும்.   கால் பதித்த இடங்கள் கறுப்பு மச்சங்களென கறுப்புக் கோடுகளை மைதானமெங்கும் இழுத்துத் தாவியோட இரவு முன் கூட்டியே இறங்கியிருக்கும்.   பல் நாய்க்குட்டிகள் தாய் நாயின் பால் முலையை உண்ணுவது போல் மண்ணில் விழுதுகள் ஊன்றியிருக்கும் ஆல்மரத்தின் மேல் தாவும்.   மேகங்களை மண்டியிட வைக்கப் […]

கவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியது

This entry is part 17 of 24 in the series 8 செப்டம்பர் 2013

    ஆறாம் வகுப்பில் களவாடப்பட்டது என் முதல் பேனா சந்தேகித்தேன் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தியை ஆசிரியரிடம் சொன்னேன்   என் அப்பா முதலாளி அவன் அப்பா கூலி நம்பினார் ஆசிரியர்   ஆசிரியர் கிச்சாவைக் குடைந்தார் ‘நீ இல்லையென்றால் கூட்டிப் பெருக்கும் ருக்குப் பாட்டிதான் ஒளிக்காமல் சொல்’   எடுத்தேன் என்றோ இல்லை யென்றோ சொல்லாமல் ஊமையாய் நின்றான் கிச்சா அது திமிரின் அடையாளமாம் முட்டியில் அடித்தார் மண்டி போட வைத்தார்   அடுத்த […]