மின்னதிர்ச்சி தரும் மேனியைப்
பாடுகிறேன் .. !
(1819-1892)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
மின்னதிர்ச்சி கொடுக்கும்
மேனி உடற்கட்டைப் பாடுகிறேன் !
நானிச்சை கொண்ட
நாரீமணிப் பெண்டிர் படை
என்னைச்
சூழ்ந்து கொள்ளும் !
நானும் அப்பெண்டிரைச் சுற்றி
வலம் வருவேன் !
மாதரை விட்டு நான்
விலகிப் போக என்னை
விட மாட்டார்,
அவரோடு உடன்பட்டு நான்
இணங்கா தவரை !
அவரோடு நான் கூடிச்
சீரழியா தவரை !
ஆத்மா அவரோடு உட்புகுந்து
பூராவும் புதையும் வரை !
உடலை அடகு வைப்போர் அதை
முடக்கி விடுவார்
என்பதில்
ஓர் ஐயப்பாடு உள்ளதா ?
உயிரோ டிருப்பவரை
ஒருவர் கறைப் படுத்துவதும்,
இறந்தவரை
இழிவு படுத்துவதும் ஒன்று
என்பதில் ஐயப்பாடு எழுகிறதா ?
உடல் முழுவதற்கும்
ஆத்மா வானது
ஊழியம் செய்வ தில்லையா ?
உடலானது ஆத்மாவாக
இல்லை வென்றால்
உடலில் ஆத்மா இருந்தென்ன ?
பெண்ணுடல் மீதோ அல்லது
ஆணுடல் மீதோ
இச்சை கொள்ளாது
ஒருவர் நழுவிப் பின்வாங்கினால்
உடலே இழப்புக் கணக்கை
உணர்த்தி விடும்,
ஆண், பெண் உடல் உறுப்புகள்
பூரணம் உடையதால் !
அவரது முகமே இழப்புக்கு
ஆதாரம் அளிக்கும்.
பக்குவம் செய்யப் பட்ட
மனிதனின் வெளித் தோற்றம்
முகத்தில் மட்டுமல்ல
உடல் உறுப்பில், இடுப்பு நெளிப்பில்
நடைத் துடிப்பில்
கை அசைப்பில், கழுத்து நிமிர்ப்பில்
தெரியும் வியக்கும்படி.
உடை மறைக்க முடியாது !
++++++++++++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/
6. http://jayabarathan.wordpress.
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (October 25, 2013)
http://jayabarathan.wordpress.
- மரபுப்பாடல்முதல் சிறுகதைவரை வளவ.துரையனுடன் ஒரு நேர்காணல்- பாவண்ணன்
- காற்றுவெளி மின்னிதழ் அறிவிப்பு
- மாவின் அளிகுரல்
- நமது பிரபஞ்சத்தைப் புலப்படாத மற்ற இணைப் பிரபஞ்சங்களின் ஈர்ப்புவிசை இழுக்கின்றதா ?
- “Thamilar Sangamam 2013
- சித்தன்னவாசல்
- துளிப்பாக்கள்
- மது விலக்கு தேவையா ? சாத்தியமா?
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 46 ஆதாமின் பிள்ளைகள் – 3
- தமிழுக்குக் கிடைத்துள்ள புதையல் – வசனம்
- ரகளபுரம்
- ப மதியழகன் சிறு கவிதைகள்
- அழித்தது யார் ?
- வணக்கம் சென்னை
- தமிழ்ச்செல்வியின் முதல் கவிதை நூல் பற்றி
- புகழ் பெற்ற ஏழைகள் 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏழை
- குழியில் விழுந்த யானை
- தீபாவளி நினைவு
- தூக்கமின்மை
- மருமகளின் மர்மம் (புதிய தொடர்கதை) அத்தியாயம் 1
- தாகூரின் கீதப் பாமாலை – 86 புயலடிப்பின் போது .. !
- ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி
- கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும்
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 23
- சீதாயணம் முழு நாடகம் [4] (இரண்டாம் காட்சி)
- திண்ணையின் இலக்கியத் தடம் -6 ஜுலை 2, 2000 இதழ்