This entry is part 28 of 34 in the series 10 நவம்பர் 2013

 

 

வாழ்க்கைக் கிணற்றில்

எத்தனையோ பக்கெட்டுகள்

காணாமல் போயின

கவனமாக பயணம் செய்யுங்கள்

நீங்கள் இறங்க வேண்டிய

நிறுத்தம்

அடுத்ததாக இருக்கலாம்

புகைவண்டியில்

உங்களது சுமையை

தோளில் சுமக்காதீர்கள்

மின்விசிறி ஓடாததால்

வியர்வையில் குளிக்க நேர்ந்தது

காகிதம் தின்னும் ஆவினங்களுக்குத்

தெரியாது

சுவரொட்டியில் அழைப்பு விடுப்பது

எந்த அரசியல் தலைவரென்று

விடுகதையாக பேசும் கிழவி

உச்சிவெயிலில் மயங்கிச் சரிந்தாள்

இப்போது  மரணப் புதிருக்கு

விடை கண்டிருப்பாள்

பித்ருக்களுக்கு திதி

கொடுத்த நாளில்

கொல்லையில் கண்ட

காக்கா கூட்டத்தில் எது

என்னுடைய மூதாதையர்கள்

என தேடிக்கொண்டிருந்தேன்

நான் இறந்து

கால் நாழிகை

கழிந்திருந்ததை உணராமல்.

Series Navigationவிளம்பரக் கவிதைமருமகளின் மர்மம் – அத்தியாயம் 2