சொந்தங்களும் உறவுகளும்

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

தத்தம் இல்லங்களில் ,
நடைபெற இருக்கும் ,
பேத்தியின்
பெயர்சூட்டுவிழா
பேரனின்
காதுகுத்தல்
மகளின்
பூப்பு நீராட்டு
மகனின்
திருமணம்
மருமகளின்
வளைகாப்பு
அப்பாவின்
சஷ்டியப்த பூர்த்தி
தாத்தாவின்
சதாபிஷேகம்
வாரிசின்
புதுமனைப்புகுவிழா
சகலமும் தடையின்றி
முடியும்வரை ,
கிழம் இருக்கணுமே
என்ற ,
சுயநல பிரார்த்தனையில் ,
மூச்சைப் பிடித்துக் கொண்டு ,
நார்க்கட்டிலில் ,
நாரோடு நாராய்
கிடக்கிறது
தொண்ணூறைக்
கடந்த பெரிசு .

Series Navigation
author

கோமதி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *