தாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. !

This entry is part 3 of 29 in the series 5 ஜனவரி 2014

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

எந்தன் பிறவியைக் கூட,

அந்தோ !

உந்தன்  கறைபடாக்

கரங்கள்

நிரப்பாது போயினும்  

அறிந்து கொள்ளும்  என் மனம்

உன் ஒளியும் நிழலும் 

என் சிந்தனைப் பின்புலத்தில்

திடீரெனக் காட்சி தரும்

நிலை யற்ற  ஓவியங் களை !

 

கோடையில் நீரிழந்த  ஆறானது

கடல் அலை ஏற்றத்தால்

குறுகிய கரைப் பகுதி வழியே

கொடை முழுதும் பெறா விடினும்,

நலிந்த சிற்றோடை ஒன்று

விரைவாய்த்  தடம் வைக்கும்

சில நாட்கள்  !

தாகத்துக்குத் தண்ணீர்க் கொடை

பேரதிர்ஷ்டமே !

 

வெட்கும் என்  இச்சைக் கைகளில்

கிட்டுகின்ற

சின்னஞ் சிறு பிச்சைப் பண்டம்

மென்மேலும்

பெருகிக் கொண்டே போகும் !

தினம் தினம் நான் சேமித்த

வறுமை யாசகத்தை  

வைத்துளேன்  பத்திரமாய் !

ஏனெனில்

எனக்கந்த பிச்சைக் கொடை தான்

ஏற்ற தாகும்

இரவுக் கனவு கட்கு  !

 

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 228.   1939  செப்டம்பர் 30 இல்   தாகூர்  78 வயதினராய் இருந்த போது  மொங்குபுவில் உள்ள தனது  இச்சைக் கோடை வசிப்புத் தளமான  மைத்ரேவி தேவியின்  இல்லத்தில்  எழுதப் பட்டது. 

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  January 2,  2014

http://jayabarathan.wordpress.com/

Series Navigationஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புகவிதை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *