வால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

 

  (Children of Adam)

என் வாரிசுகளைப் பற்றி ..!

 

 (1819-1892)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

 

 

 

என்னுடல் சுரப்பு நதிகள்

சங்கமம் ஆகும்

உன்னுடல் வழியாகத் தான் !

ஆயிரம் ஆண்டுப் பயணம்

 

 

நோக்கி 

உன்னுள்ளே

சுற்றிக் கொண்டுள்ளேன்.

என் உன்னதக் கொடையாக,

ஒட்டுக் கிளை போல்

உன்மேல்

பின்னிக் கொள்வேன் !

என் விந்துத் துளிகளை நான்

உன்னுள் விதைத்தேன் !

உன் வயிற்றில்

தீவிரப்

போட்டி ஆட்டப்

பெண்டிரை உண்டாக்கும் !

புதுக் கலைஞர்,

இன்னிசைப் பாடகர்,

உருவாக்கும் !

 

 

எனக்குப் பிறக்கும் சிசுக்கள்

பின்னால்

தனக்குச் சிசுக்களை

வடிக்கும் !

என் அன்பு விந்தில் உதித்த

பிறவிகள் பிறகு

பூரணச் சிசுக்கள் படைக்க

எதிர்பார்ப்பேன்.

நானும் நீயும் புணர்ந்தது போல்

எனக்குப் பிறந்த

ஆணும் பெண்ணும் முயக்க

எதிர்பார்ப்பேன் !

நான் விளைத்தது போல்

என் பிள்ளைகள் பொழிந்து தள்ளும்

இனிய கனி வகையை

எண்ணிக் கொண்டிருப்பேன்.

நான் விதைத்தது போல்

எதிர்பார்ப்பேன்

பிறப்பு, வசிப்பு, இறப்பு,

நிரந்தர நிலைத்துவம் மூலமாய்

நேசமுள்ள

அறுவடைப் பயிர்களை !

 

 

+++++++++++++++++

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [ January 3, 2012]

 

Series Navigationஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புகவிதை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *