கவிதைகள்

This entry is part 17 of 29 in the series 12 ஜனவரி 2014

நிந்தனை

 

ஒன்றுக்கிருக்க

தெருவோரத்தில் ஒதுங்கியவனின்

காலில் நரகல் பட

மலம் கழித்தவனின்

வம்சாவளியை திட்டியபடியே

சைக்கிளை மிதிப்பான்.

——————————-

 

விலை

 

சுவரொட்டியைத்

தின்னும் பசுக்களுக்குத்

தெரியாது

அவள் ஆடை குறைப்புக்கு

எவ்வளவு வாங்கினாலென்று.

———————-

 

பாவமூட்டை

 

தேவாலயத்தில்

பாவிகள் ஒன்று கூடி

பாவமூட்டையை

விட்டுச் செல்வர்

குட்டி தேவதைகளை

பிரிய முடியாத கர்த்தர்

வாசல் வரை வந்து

வழியனுப்புவார்.

Series Navigationநாணயத்தின் மறுபக்கம்தாகூரின் கீதப் பாமாலை – 97 உன் இன்னிசை எதிரொலி .. !
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *