பிரம்ம லிபி

This entry is part 1 of 29 in the series 12 ஜனவரி 2014

கபாலி தன் வீட்டின் வாயில் கதவைத்தட்டினான்.தட்டும் போதே அது டபக்கென்று திறந்து கொண்டது. குற்றம் அதன் மீது இல்லை.தாழிப்படாத வாயிற் கதவு. கபாலியின் மனைவி  தருமை நாதன் கோவிலுக்குச்சென்றிருப்பாள் இன்று சனிப் பிரதோஷம். . பரமசிவக்கடவுள் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே ஆனந்தமாய் நர்த்தனம்  செய்யும் புண்யகாலம் காலம்தான் அது என்று  விஷயம் தொ¢ந்தவர்கள் சொல்கிறார்களே. ஆகத்தான்.

கபாலியின்.மகள் அருணா வீட்டில்தானே இருக்கவேண்டும்.’எங்கே அவள்? அருணா என ஓங்கி அழைத்தான் கபாலி.பதில்  ஏதும் இல்லை. கொஞ்சம் குழப்பம். வாயில் கதவு ஏன் திறந்து கிடந்தது. அந்தக் கொஞ்சக்குழப்பமும்  கனத்தது.

வீட்டில் இருப்பது ஒரு அறை.அதன் கதவுகள் திறந்தே கிடந்தன.மின் விசிறியிலிருந்து தொங்கும் உடல். விறைத்துக்கொண்ட கால்கள்.அருணாவே மகள் அருணாவேதான்.’அருணா’ முடிந்த மட்டும் ஓங்கிக்கத்தினான். கபாலி தடால் என்று கீழே விழுந்தான். புரண்டான்.தலையில் அடித்துக்கொண்டான்.அருணாவின் உடலைத்தொட்டுப்பார்த்தான். அருணாவின்.உயிர்ப்பு அடங்கிப்போய் சில்லிட்டிருந்ததை உணர்ந்தான். அவன்கண்கள் குளமாகியிருந்தன. தன் தலையில் போ¢டி விழுந்ததுவாய்  சுவா¢ல்  மோதிக்கொண்டு துள்ளினான். துவண்டான்.சாய்ந்தான். அவனைக் கப்பியது சோகம். அவன் வாய் விசும்பிக்கொண்டே இருந்தது.’அருணா, என் அருணா’  ஓயாது சொல்லிக்கொண்டே இருந்தான்.
தருமங்குடியில் அருணா பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்தாள்.ஆயிரம் கனவுகள் அருணாவுக்கு இருந்திருக்கலாம்.கபாலிக்கு மக்கள் இருவர். கபாலிக்கு அருணா மூத்த மகள். கபாலியின் மனைவியோடு  அவன் பையன் மட்டும் தருமைநாதன் கோவிலுக்குச்சென்று வருவான். வீட்டின் அருகேயுள்ள ஆரம்பப்பள்ளியில் படித்து வந்தான் அவன்
. தினம் முதுகுன்றம்  என்னும் அருகேயுள்ள  பெருநகர் சென்று பணியாற்றி வருபவன் கபாலி.அங்கேயுள்ள தலைமைத்தபால் அலுவலகத்தில் எடு பிடி வேலை.பணி என்னவோ  மய்ய அரசாங்கப்பணி. எது செய்தால் என்ன அவன் அரசாங்க ஊழியன் இல்லை. அவன் செய்வது எக்ஸ்ட்றா டிபார்ட்மென்ட் வேலை. விபரம் தொ¢ந்தவர்கள் அந்த வேலைக்குப் பெயர் வைத்து இருக்கிறார்கள்.படித்தவர்கள் செய்யும்  எத்தனையோ  சூதுகளில் இதுவும் ஒன்றாயிருக்கலாம்.
கோவிலுக்குச்சென்று திரும்பிய கபாலியின் மனைவி கையில்  தருமைனாதன் கோவில் விபூதிப் பிரசாதத்தோடு  வீட்டின் உள்ளே நுழைகிறாள்.
அருணாவின் உடல் இன்னும் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டபடி கபாலி அமர்ந்திருக்கிறான்.
‘என் தெய்வமே என் தங்கமே என் தங்கக்கிளியே  உனக்கு என்னடி ஆச்சு செல்லமே நான் மோசம் போயிட்டேனே அப்பா. என் தலையில  அந்த இடி உழுந்து போச்சே தருமை நாதா உன்னைப்பார்க்கத்தானே நான்  வந்தேன்.ரவ நேரத்துல இங்க எல்லாமே கொட்டிக்கவுந்துக்கிடக்கே.கொள்ளை போயிடுச்சே.என் சாமி என்ன நடந்து போச்சி இங்கே’ கபாலியைப்பிடித்து அவள் உலுக்கினாள்
கபாலி கோ வென்று அழுதான். குழந்தை அருணாவின் உச்சி முகர்ந்து பரவசம் பெற்றிட்ட அந்தக் கபாலிக்கு இப்போது நெஞ்சு துடித்தது.கபாலியின் மகனுக்கு எதுவும் விளங்கவில்லை. அவன் இன்னும் சிறுபிள்ளை.
சோகத்தின் ஆழம் தொ¢ய நியாயமில்லை.
கணவன் கபாலியின் கால்களைப்பித்துக்கொண்டு அவள் கதறினாள். தன் மகனைக்கட்டிக்கொண்டாள்..’அக்கா அருணாவப் பாருடா தம்பி போயிட்டாடா அருணா போயிட்டா நம்மளை எல்லாம் ஏமாத்திட்டு போயிட்டா இனி வரவே மாட்டாளே செறு புள்ளயாச்சே நீ உனக்கு எத சொல்லுவேன்’. அவளுக்கு நெஞ்சு வெடித்து விடுவது போலே இருந்தது.  தோன்றியதெல்லாம்  சொல்லிச் சொல்லி ப்புலம்பினாள்.
முதுகுன்ற நண்பர்கள் அலறி அடித்துக்கொண்டு வந்தார்கள்.தருமங்குடி கிராமமே கபாலி வீட்டு வாயிலில் கூடி நின்றது.கபாலி தன் தலையில் கை வைத்துக்கொண்டு  பிரமை பிடித்தவன் போலே உட்கார்ந்திருந்தான். கபாலியின்  வீடு வந்தவர்கள் தலைக்கு ஒரு கா¡¢யமாகச்செய்து அருணாவின் இறுதிச்சடங்கு  முடித்தார்கள்.
கபாலியின் உடன் பிறந்த சகோதா¢ அருணாவின் அத்தை உள்ளூ¡¢ல் வசிப்பவள்.அருணாவின் உடலைக்கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதது நிகழ்வுக்கு வந்திருந்தோ¡¢ன் மனதை உலுக்கி எடுத்தது. அத்தைக்கு மிஞ்சிய வேறு ஒரு உறவு என்ன இருக்க முடியும்.ஆகத்தான் கூடுதல் சோகம்..  வந்திருந்த எல்லோரும் வாய்விட்டு  இதனையே சொல்லிக்கொண்டார்கள். கபாலியின் சகோதா¢ பிரமை பிடித்தவள் போல் காணப்பட்டாள்.சகோதா¢யின் கணவன் ஏதோ வேலைக்குப்போவான் வருவான். கையி காசு கிடைத்தால் குடித்துவிட்டு சண்டை வளர்ப்பான்.மணாளனே மங்கையின் பாக்கியம்.சொல்லித்தான் வைத்திருக்கிறார்கள்.  அந்த எல்லாம் தொ¢ந்த ஏகாம்பரங்கள். நீங்களும் நானும்  இதில் வேறு என்ன சொல்லி விட முடியும்.
ஒரு நாள் அருணாவின் புத்தக மூட்டைகளை எல்லாம் ஒழுங்கு படுத்திக்கொண்டு இருந்தான் கபாலி. அவன் நெஞ்சு  கூடுதலாய்க்கனத்தது.கண்கள்  இன்னும் நீர் கோத்துக்கொண்டன.
அருணாவின் பள்ளிக்கூட ¨டா¢ இருந்ததை கபாலி பார்த்தான்.அதனுள்ளாக ஏதேனும் இருக்கிறதா என்று  புரட்டினான்.புதிய விஷயமாய் அவனுக்கு ஏதும் கிடைக்கவில்லை.என்ன பார்த்து என்ன ஆகப்போகிறது. போய்விட்ட அவன்  அருணா திரும்பவும் கிடைக்கப்போகிறாளா.மண்ணில் பிறந்த ஒருவனுக்கு இறப்பு என்பது மட்டுமே நிச்சயம். இப்புண்ய பூமியில் உலவிய கடவுள் ராமனும் கிருஷ்ணனும் நம்மைப்போல்  மடிந்துதானே போனார்கள்.என்ன என்னமோ  யோசனை வந்துகொண்டே இருந்தது. அருணா மறைந்த நாளான அந்த ஜூலை இரண்டை ¨டா¢யில் தேடினான். அதில் ஏதோ எழுதித்தான் வைத்திருந்தாள். அவன் மகள் அருணா.  கபாலி  அதனைப் பைய படித்தான்.
அன்பு அப்பா
மன்னியுங்கள்.என்னுடைய பிணத்தின் கழுத்தில் நான் அணிந்திருந்த அந்த மூன்று சவரன்  சங்கிலியை த்தேடினீர்களா.நானே போன பிறகு இந்தக்கேள்வி உங்களுக்கு தேவையில்லைதான்.நான் பூப்பு அடைந்து  பின் மஞ்சள்  நீர் சடங்கு என்னும்  அந்த நிகழ்வில் தாங்கள் போட்ட அந்த மூன்று சவரன் நகையை அத்தை என்னிடமிருந்து ஒரு நாள் ஏதோ நிகழ்ச்சிக்குப்போகவேண்டும் என்று  கடனாய்க்கேட்டு வாங்கிப்போனாள். மறு  நாளே சங்க்கிலியைத்திரும்பத் தருவதாய்ச்சொன்னாள். உங்களைக்கேட்காமல்  அத்தைக்கு த்தங்கச் சங்கிலியைக் கொடுத்துவிட்டேன்.  அடுத்த நாள் நானே  அத்தை வீடு சென்று அத்தையைக்கேட்டேன். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய அந்த அத்தையை மிரட்டி என் சங்கிலியை ச்சாராயக்கடை பாக்கிக்கு எடுத்துபோய் விட்டாராம் மாமா  அதான் அந்த அத்தை புருஷன்  அத்தை என்ன செய்வாள். என்னைக்கட்டிப்பித்துக்கொண்டு  குழந்தையாய் அழுதாள். இன்னது செய்வது என்று  தொ¢யாமல் குழம்பிப்போய் இருந்த எனக்கு வேறு வழி  ஏதும் தொ¢ய வில்லையே.அப்பா.
ஒரு வேண்டுகோள்  உன்னிடம் அப்பா. அத்தையை மட்டும் ஏதும் சொல்லிவிடாதீர்கள். அத்தைக்கு நீங்கள்தானே வரன் பார்த்துக் கல்யாணம் முடித்தது. இந்த சங்கிலி விஷயம்  எதுவும் என் அம்மாவுக்கு த்தொ¢யவும் வேண்டாம்.
நான் ஒரு கோழைதான்
உங்களை ஏமாற்றி விட்ட சின்னக் கோழை.
கடிதம் முடிந்து போனது.¨டா¢யை த்தன் முகத்தில் புதைத்துக்கொண்டு அழுதான் அடக்க முடியாமல். கோவென்று அழுதான்.  அந்த தெருவுக்கு க்கூட கேட்டும் இருக்கலாம். அடுப்படியில் இருந்த அவன் மனைவி ஒடோடி வந்தாள்
‘ஏன் அத எல்லாம் இப்ப கிண்டிகிட்டு கெடக்குறீங்க. பாக்க பாக்க  பெத்தவயிறு  பத்திகிட்டு எ¡¢யுமே. புழுவா கெடந்து துடிக்கிறமே. எழுதுன எழுத்து அப்பிடி இருக்கு. நம்மால தாங்குற வெஷயமா’.
அவளைக்கட்டிக்கொண்டு அழுதான்.’நம்ப பொணம் மக்குனாலும் நமக்கு நேந்த கொற மக்குமா என் தெய்வமே’ . அவள் அவன் கண்களை த்துடைத்து விட்டாள். அவனுக்குச்சமாதானம் சொல்லிக்கொண்டே அவளும் அழுதாள்.
அருணாவின் அந்த¨டா¢யை கபாலி  பத்திரப்படுத்திக்கொண்டான்.
‘கடை வரைக்கும் போயி சவரத்துக்குஒரு பிலேடு வாங்கியாறன்’  முகத்தை  தடவி விட்டுக்கொண்டவன் சொல்லிப்புறப்பட்டான்.
¨டா¢ பத்திரமாக  அவன்  மடியில் இருந்தது கபாலி .வேகு வேகு என்று நடந்தான்.தன் சகோதா¢ வீடு  தருமங்குடி வடக்குத்தெருவில் இருந்தது.
உடன் பிறந்த சகோதா¢யை  கொன்று சாம்பல் ஆக்கிவிட்டால்  மட்டுமே சா¢ என்று அவன் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.திருமணம் செய்து அழகு பார்க்க வேண்டிய தன் மகளுக்கு  பச்சைப்பாடைகட்டி ஊர்வலம் போக  மட்டுமே வாய்த்த தன் விதியை நினைத்து நினைத்து விசும்பினான்.
‘எங்க தங்கச்சிய பாக்க வந்திங்க்களா’  சகோதா¢யின் பக்கத்து  வீ£ட்டுக்கா¡¢ கேட்டாள்.
‘ அது எங்க போச்சி’
‘உங்க பொண்ணு அருணா செத்ததுக்குப்போனது. இன்னும்  அவ உங்க ஊட்டுல தங்கி இருக்கிறதா  அவ புருஷன் சொல்லுவாரு  குடிச்சிட்டு இந்த சாக்கடையல ஒரு  பண்ணியா கெடப்பாரு  ‘
ஏதும் பேசாமல் சகோதா¢ வீட்டு வாயிலில்  கபாலி அமர்ந்து கொண்டான்.
எப்போதோ காலமாகிப்போன கபாலியின் தாய்’ உன்  பெத்தமவளா இருந்தா இப்பிடித்தான்  ஒரு குடிகாரனுக்குக்கட்டி க்குடுப்பியா’ என்று கேட்டது அவன் மனதில் நிழலாய் ஓடிக்கொண்டிருந்தது.தன் கண்களை த்துடைத்துக்கொண்டான்.  தாங்க முடியாத துக்கம் தொண்டயை அடைத்தது..எழுந்தான்.தன் சகோதா¢யை இனி அவன் எங்கே தேடுவது.
எதிரே  சகோதா¢யின் கணவன் தள்ளாடி தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தான்.
‘மச்சான் இன்னும்  உங்க  தங்கச்சி என்ன செய்யுது  இங்க அனுப்பி வக்கலாமுல்ல’
கபாலிக்கு என்ன சொல்வது என்றே தொ¢யவில்லை. பித்துப்பிடித்தவனாய் விழித்தான்.
‘அது எங்கிட்ட சொல்லிட்டு போச்சே. அருணாவ  நாம தொலைச்சிட்டம்.  அண்ணனுக்கு துணையா  கொஞ்ச நாளு  ஆறுதலா இருக்கறன்னு  நாந்தான் இங்க ஒண்டியா கெடந்து ஒழப்பறிச்சிகிட்டு கெடக்குறன்’
தள்ளாடிக்கொண்டு நிற்கும் தங்கை கணவனைத் தன்னோடு அணைத்துக்கொண்டு நடந்தான்.தன் பனியனுள்ளாக மறைந்து கிடக்கும் அந்த பாக்கி  கருமத்தை எடுத்து கபாலியிடம் அவன்  நீட்டினான்.
‘சாப்புடு ராசா கொஞ்சம் சாப்புட்டுதான் பாரு நமக்குன்னு ஒரு எழுத்து  இருக்கு  அத இன்னிக்கு   அழிச்சி யாரு எழுதப்போறா சொல்லு’சகோதா¢ கணவன்  கபாலியிடம் சொல்லிக்கொண்டே மரக்கட்டையாய்க் கீழே சாய்ந்தான்.தன் பனியனுக்குள்ளாக அருணாவின் ¨டா¢  பத்திரமாய் இருப்பதை க்கபாலி  ஒரு முறை தொட்டுப்பர்ர்த்து உறுதி செய்தான். ஆகாயம் பார்த்தான். இன்னும் அவனுக்கு  அந்த அரை நிலா  அழகாகத் தொ¢ந்தது.. .
——————————————————-

Series Navigationபெண்ணிய உரையாடல்கள் – ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல்
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *