வால்ட் விட்மன் வசனக் கவிதை – 63

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

 (Children of Adam)

ஒரு மாநகரை நான் கடந்த சமயம்

 

(Once I Passed Through a Populous City)

(1819-1892)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

பெருநகர் ஒன்றைக் கடந்த போது,

ஒரு சமயம் என் கண்கள்

கண்ட காட்சிகள்,

கட்டடக் கலைகள்,

மரபுகள்,

பழக்க வழக்கங்கள்,

பதிவு செய்ய

எதிர்காலப் பயன்பாட்டுக்கு

என் மூளையில்

பதித்து வைக்க நினைத்தேன் !

எல்லா வற்றுக்கும் மேலாய்

அந்நகரின்

நினைவில் இருப்பது

தற்செயலாய் நான் அங்கே சந்தித்த

வனிதை ஒருத்தி !

தங்க வைத்தாள்

என் மீது

தன் காதலைக் காட்டி !

 

 

நாளுக்கு நாள், இரவுக்கு இரவு,

நாங்கள் ஐக்கிய மானோம்.

மற்றவை எல்லாம்

எனக்கு

மறந்து போய் விட்டன !

னது நினைவில் இருப்பதை

இயம்புகிறேன் :

அந்த வனிதை மட்டும்

காதல் மோகத்துடன்

ஒட்டிக் கொண்டாள் என்னை.

னியே திரிந்தோம்,

இனியும் நேசித்தோம்

திரும்பவும் பிரிந்தோம் !

மறுபடியும்

பற்றிக் கொண்டாள் 

அந்த மாது

எந்தன் கரங்களை !

புறக்கணித்துப் போக

இயலவில்லை என்னால் !

இப்போ துள்ளாள் என்னோடு

நெருங்கிக் கொண்டு

மௌன மாக, சோக மாக

நடுங்கிய வண்ணம் !     

 

+++++++++++++++++

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman

[February 18, 2014]

 

Series Navigationபூர்வீகச் செவ்வாய்க் கோளில் மூன்றிலோர் பகுதியை மாபெரும் கடல் சூழ்ந்திருந்ததுமருமகளின் மர்மம் – 17தமிழ்த்தாத்தா உ.வே.சா.: கற்றலும் கற்பித்தலும் -1நீங்காத நினைவுகள் – 35 ஜோதிர்லதா கிரிஜாபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 47ஹாங்காங் தமிழ் மலர்திண்ணையின் இலக்கியத் தடம் – 23குலப்பெருமை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *