வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம்       10

This entry is part 19 of 19 in the series 6 ஜூலை 2014

ஜோதிர்லதா கிரிஜா

10.

jothilathagirija.jpgபேருந்தில்ஏறி அமர்ந்து வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லலிதாவுக்கு நிம்மதியாகஇருந்தாலும், தன் அந்தரங்கத்தைக் கணவனின் நண்பனோடு பகிர்ந்து கொள்ள நேர்ந்துவிட்டகட்டாயம் அவளது செருக்குக்குப் பங்கம் விளைவிப்பதாக இருந்தது. ரங்கன் மிகவும்நல்லவன்தான். எனினும், தன்னைப் போன்ற கறைபடிந்த கடந்த காலம் உள்ள மனைவியை மன்னித்துஎதுவுமே நடக்காதது போல் இருந்துவிடுகிற அளவுக்குப் பெருந்தன்மையானவனா என்பதை அவளால்கணிக்க முடியவில்லை. …

ஒருவனுடன்ஓடிப்போய்க் குழந்தையும் பெற்றுக்கொண்டு திரும்பியவளை அவள் பெற்றோர் அந்தக்குக்கிராமத்தில் ஏற்றுக்கொண்டதே பெரிய விஷயம்தான். ஊராரின் ஏச்சுப் பேச்சையெல்லாம்அவள் அம்மா பொருட்படுத்தவில்லை. அவள் அம்மாவின் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசியறியாதஅவள் அப்பாவோ அவளிடம் சினந்து எதுவும் பேசவே இல்லை.

அவள்காதலித்த அந்த பாஸ்கர் பக்கத்து வீட்டுக்குப் புதிதாய்க் குடிவந்த இளைஞன்.நன்றாய்ப் பாடுவான். அவர்கள் இருவரும் இணையக் காரணமாக இருந்தது இருவருடையவும்பாட்டுத்திறன்தான். அவன் வீட்டு மொட்டைமாடியில் அவனும், இவள் வீட்டு மொட்டைமாடியில்இவளுமாய் அமர்ந்துகொண்டு பிரபல சினிமாக்களின் காதலர்கள் பாடும் (`டூயட்’) இருகுரலிசைப் பாடல்களை மாற்றி மாற்றிப் பாடிக் கிறங்கிப் போவது வழக்கமாயிற்று.

கதாநாயகனின்அடியை அவன் பாடினால், கதாநாயகி பாடும் அடுத்த அடியை இவள் பாடுவாள். அந்தத்திரைப்படக் காட்சியையும் இருவரும் கற்பனையில் கண்டு களிப்பார்கள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இப்படியாக மொட்டைமாடி `டூயட்’ பாடல்களால் இருவரது காதலும்வளரலாயிற்று. இதை அக்கம்பக்கத்து மனிதர்களில் சிலர் கவனித்துவிட்டு அவள்பெற்றோரிடம் வத்தி வைத்து விட, இனி அவள் மொட்டை மாடிக்குப் போகவே கூடாது என்று அவள்அம்மா அவளுக்குக் கட்டுப்பாடு விதித்துவிட்டாள்.

ஆனால், `மதில் காவலோ? மனசு காவலோ?’ எனும் பொன்மொழிக்கேற்ப, அவர்களுக்கு விதிக்கப்பெற்றகெடுபிடிகள் ஒரு நாள் மீறப்பட்டு இருவரும் ஓடிப்போனார்கள்.

… கடைசியில் ஏமாந்து போய்த் திரும்பி வந்த அவளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை அவள் இனிப்பாடவே கூடாது என்பதுதான்! அவள் அம்மா அவளது நாக்கில் சூடும் போட்டாள்! ஊர்முழுவதும் பரவிவிட்ட அவளது கறைபடிந்த வாழ்க்கை அவளது வருங்காலத்துக்குப்பெருந்தடையாக இருந்தது. அவளை எவரும் ஏற்க முன்வராத நிலையில் அவள் பெற்றோர் அந்த ஊரைவிட்டுக் கிளம்பித் திருச்சியில் குடியேறினார்கள். அவள் அப்பாவுக்குக் கொஞ்சம்பூர்வீகச் சொத்து இருந்ததால் புதிய ஊர் அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இல்லை.

அதன்பின்னர்தான் ரங்கனுடன் அவளது திருமணம் ஒரு தரகர் மூலம் திகைந்தது. வட்ட முகமும், கரிய பெரிய கண்களும், செதுக்கிய வடிவிலான மூக்கும், சிவந்த உதடுகளும் ரங்கனைஅடிமைப்படுத்தப் போதுமானவையாக இருந்தன. தன் அழகின் மூலம் அவள் அம்மா அவள் அப்பாவைஅடக்கியாண்டு வந்தது போன்றே அவளும் ரங்கனை நடத்த முற்பட்டாள். இதுநாள் வரையில் தான்ரங்கனை மட்டந்தட்டியே நடத்தி வந்துள்ளது பற்றியோ, அவனது மென்மையான பேச்சுகளுக்கும்கூட எடுத்தெறிந்தே எதிரொலித்து வந்துள்ளது பற்றியோ அவள் நினைத்தும் பார்த்த்தில்லை.

ஆண்களுக்குரியபெண்சபலத்தைத் தன் பேரழகின் வாயிலாகத் தனக்கு ஆதாயபபடுத்தியே வந்துள்ளது பற்றியஉணர்வு கூட அவளுக்கு அதுகாறும் வந்ததில்லை. இப்போதோ, சேதுரத்தினத்தின் திடீர்வருகையால் விளைந்த திகிலில் அவள் தன்னைத் தானே விமரிசனம் செய்து கொள்ளும்படிஆகிவிட்டது.

லலிதாஅதிகம் படிக்கவும் இல்லை. அவர்களின் பரம்பரை வழக்கப்படி ஒன்பதாம் வகுப்போடு அவளதுபடிப்பு நிறுத்தப்பட்டு விட்டது. அவள் பெற்றோரும் தற்போது காலமாகிவிட்டிருந்தார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை ரங்கன் மெய்ப்பித்து அவளைவிரட்டி விடுவானாயின், அவளுக்குப் போக்கிடம் கிடையாது. எனவே அவளை வருங்காலம் பற்றியஅச்சமும் கவலையும் ஆட்கொண்டன.

எனினும்இன்று கடற்கரையில் சேதுரத்தினத்தைப் பார்த்துச் சுருக்கமாய்த் தனது வேண்டுகோளைஅவனிடம் கூறியதன் பின்னர், அவன் தந்த வாக்குறுதியால் அவள் மனம் பெரிதும் அமைதியடைந்திருந்தது. இனி ரங்கனிடம் அன்பாகவும் அனுசரணையுடனும் நடந்துகொள்ள வேண்டும்எனும் முடிவுக்கு அவள் வந்தாள். இந்தத் தீர்மானம் தன்னையும் தன் மணவாழ்க்கையையும்காப்பாறும் என்று உறுதியாய்த் தோன்றியதில், அவள் அதுவரையில் அறிந்திராதநிம்மதியுடன் பேருந்தின் இருக்கையில் நன்றாய்ச் சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.

…. ஓட்டலுக்குப் போன சேதுரத்தினம், ஒரு பணியாளிடம் தான் ராமரத்தினத்தைப் பார்க்கவிரும்புவதாய்ச் சொன்னான். கணபதி எனும் பணியாள் ஒரு பெரியவர் வந்து அவனைத் தம்காரில் அழைத்துச் சென்றதாய்த் தெரிவித்தான்.

மறுநாள் வந்து அழைத்துப் போவதாய்ச் சொன்னவர் இன்றே வந்து அழைத்துப் போவானேன் என்றுஅவன் யோசித்தான். ஏதோ அவசரமும் அவசியமும் நிறைந்த காரணம் இருக்கவேண்டும் என்றுதோன்றியது. ராமுவின் வேலை விஷயமெனில் அவரே வந்து அழைத்துப் போக மாட்டார் என்பதால்வேறு எதோ விபரீதமான காரணம் இருக்கவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.

`அப்படியானால், அது என்னவாக இருக்கும்?…’ – யோசித்தவாறே அவன் திரும்பிப் போனான்.

… காரைத் தம் வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கியவாறே, “இறங்குப்பா!” என்று கணேசன் ராமரத்தினத்தின் புறம் பார்த்துக் கூறினார்.

அவன்கதவைத் திறந்துகொண்டு இறங்கினான். விரைந்து நடந்த அவரை ஒரு நாய்க்குட்டியைப் போலஅவன் பின்தொடர்ந்தான்.

அன்றுநுழைந்த அதே அறைக்குள் இருவரும் நுழைந்தார்கள். அதே நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.

சிலநொடிகள் கழித்து, “உன்னை எதுக்கு வரச் சொல்லி யிருப்பேன்னு உன்னால ஊகிக்கமுடிஞ்சுதா?” என்று அவனை ஆழமாய் நோக்கியபடி அவர் வினவினார்.

“தெரியல்லே, சார். .. என்னோட வேலை விஷயமா ரமணி கிட்ட சொல்லி வெச்சிருந்தேன். அதுக்காகஇருக்கலாமோன்னு…”

“அப்படியிருந்தா முதல்ல உன்னைப் பார்த்தப்பவே ஒரு கோடி காமிச்சிருந்திருப்பேனேப்பா? அதில்லே… உனக்கு ரெண்டு தங்கைகள் இருக்காங்க இல்லே?”

“ஆ…ஆமா, சார்?”

“ரெண்டுபேர்ல மாலாங்கிறது யாரு? மூத்தவளா, இளையவளா?”

“அவதான்சார் மூத்தவ. எதுக்குக் கேக்கறீங்க, சார்?”

“சொல்றேன், சொல்றேன். இன்னைக்கு சாயந்தரம் ஒரு மீட்டிங் இருந்தது. அதான் உன்னை நாளைக்கு வரச்சொன்னேன். ஆனா அது கான்சல் ஆயிட்டதால உன்னை இன்னிக்கே கூட்டிண்டு வந்துட்டேன்…நீப்ளஸ்டூ வரைக்கும்தான் படிச்சிருக்கியாமே? ரமணி சொன்னான். ”

“ஆமா, சார். அதுக்கு மேல படிக்க வசதி இல்லே. வேற வேலை கிடைக்கிற வரைக்கும்இருக்கட்டுமேன்னு ஓட்டல்லே வேலைக்குச் சேர்ந்தேன். என் தங்கை மாலாவைப் பத்திஎதுக்கு சார் கேட்டீங்க?”

“அட, இருப்பா, சொல்றேன்….உங்களுக்குச் சொத்து பத்து என்னென்ன இருக்கு?”

“அதெல்லாம்கிடையாது, சார். ஒரே ஒரு சின்ன வீடு மட்டுந்தான் எங்க சொத்து. வேற எதுவும்கிடையாது.”

“உங்கம்மாவுக்குநகைகள் இருக்கா?”

“இல்லே, சார். ஒரே ஒரு ரெண்டு பவுன் சங்கிலி மட்டும் இருக்கு. கையில ரப்பர் வளையல்தான்போட்டுக்குவாங்க.”

கணேசன்தாம் அமர்ந்திருந்த நாற்காலியின் கையில் ஒரு கையால் தாளம் போட்டபடி இன்னொரு கையால்மேசை இழுப்பறையைத் திறந்தார். பிறகு அதிலிருந்து ஓர் உறையை எடுத்து அவனிடம்நீட்டினார்.

“படிச்சுப்பாருப்பா!” என்ற அவரது முகம் இறுகியிருந்தது. குரலில் ஏளனமும் கடுமையும் ஒருசேரஒலித்தன.                                                                                                                    – தொடரும்

Series Navigationசோஷலிஸ தமிழகம்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *