சைவ உணவு – பழக்கமா? பண்பாடா?

author
5
0 minutes, 1 second Read
This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

veganமீனா தேவராஜன்

மனிதன் வாழ்வு என்பது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப அமையும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அக்காலத்திலிருந்தே இந்தியர்கள் சைவ உணவு உண்பார்களா? அசைவ உணவு உண்பார்களா? என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அதேபோல் உடை உடுத்தும் பழக்கங்களும் விவாதத்திற்குட்பட்டவையாக அமைகின்றன.

பலஇன மதத்தவர்கள் வாழும் இந்தியாவில் உணவு பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுவதற்கு முக்கிய காரணங்கள் இந்தியா தொன்று தொட்டு பல நாட்டவர்களின் ஆட்சிக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.. மேலும் அப்படி வந்தவர்களில் சிலர் இங்கேயே தங்கி நம் இனத்தவரைத் திருமணம் செய்து கொண்டவர்களுமுண்டு. எனவே உணவுப் பழக்க வழக்கங்கள் பல கலந்து விட்டன என்றே கூறலாம்.

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த கிரீஸ் நாட்டு அலெக்ஸாண்டர் வந்தவர், நம் நாட்டுச் சப்பாத்தியைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லவில்லையா?

பின் வந்த முகமதியர்களின் தாக்கத்தால் தென்னிந்தியாவைவிட வட இந்தியாவின் பழக்க வழக்கங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன என்று வரலாற்றின் வழி நாம் தெரிந்து கொள்ளமுடிகிறது. இந்திய உணவாகக் கருதப்படும் பிரியாணி எங்கிருந்து வந்தது? பூண்டின் பயன்பாட்டை நாம் கற்றுக் கொண்டது எப்படி? அதே போன்று சைவ அசைவ உணவுப் பழக்கங்கள் வந்திருக்கக்கூடும் அல்லவா?.

ஆங்கில நாட்டுப் பழக்கங்களை நம்மில் பலர் இந்தியாவில் கைகொண்டுள்ளனர். அதுதான் சிறந்த நாகரீகம் என்று கருதுவோரும் உண்டு. அவர்கள் போல் உணவு உண்பது. அதாவது முள் கரண்டி, கரண்டி ஆகியவற்றைப் பயன்படுத்துவது. தட்டுகளில் சாப்பிடுவது, தண்ணீருக்குப் பதில் கோக்கொலா குடிப்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம். அவர்கள் நாடு குளிர் மிகுந்த நாடு. கைகளில் அணியப்பட்டிருக்கும் கையுறையைக் கழற்றினால் குளிர் தாங்காது, கையால் சாப்பிட்டால் கை கழுவ முடியாது. அது அந்த நாட்டுச் சூழல். இப்போது நம் நாட்டிலிருந்து அங்கு போய் வாழும் மக்கள் அந்தப் பழக்கங்களைப் பினபற்றினால் தப்பில்லை, ஏனென்றால் ரோம் நகரில் வாழ்ந்தால் ரோமாபுரியனைப் போல்தான் வாழ வேண்டும். இல்லையென்றால் அந்நாட்டு இயற்கைச் சூழல் நம்மைப் பாதிக்கும் அல்லவா?

மேலை நாட்டில் உள்ளவர்கள் உணவில் அதிக வெண்ணெய் பாலாடைக்கட்டி ஆகியவற்றை உண்பார்கள். அவை அவர்களை குளிரிலிருந்து காக்கும். அது அவர்களுக்கு மது பானமும் தேவை. ஆனால் நம் இந்தியா வெப்பமுடைய நாடு இத்தகைய சூழலுக்கு அவை தேவையா?

ஒவ்வொரு நாட்டில் கிடைப்பவைதான் அந்நாட்டு மக்களுக்குரிய உணவாக இருந்து வந்திருக்கின்றன. அக்காலத்தில் சார்ஸ் நோயும் எச்1எம்1 நோயும் ஏற்படவில்லை. கோழிக் கறி கிடைக்காவிட்டாலும் பிற நாடுக்களிலிருந்து இறக்குமதி செய்து உலகளாவிய வணிப முறை இப்போது வந்துவிட்டது? மேலும் அபரிதமான செல்வச் செழிப்பும் வளர்ந்து விட்டது. அதாவது பணத்தைக் கொண்டு வாங்கும் திறன் (purchasing power of money) வளர்ந்து விட்டது. எனவே எனக்கு விருப்பமுள்ளவற்றை நான் விரும்பிச் சாப்பிடுகிறேன் என்ற நிலை உருவாகி விட்டது.

இந்துக்களும்பன்றிக்கறியைதவிர்க்கக்காரணம் அவர்கள் இந்துகள் அவர்கள் இந்து மதக் கொள்கையைப் பின் பற்றுகிறார்கள். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பன்றிக்கறியைச் சாப்பிடுகிறார்கள். அது அவர்கள் பின்பற்றும் மதக் கொள்கை. இது தனி மனித சுதந்திரம்.

அன்று கண்ணப்பர் சிவனுக்கு மாமிசம் படைத்தார் என்றால் அன்று கண்ணப்பர் வேட்டுவத் தொழிலைச் செய்தார். எனவே தான் உண்ணும் உணவை அன்பினால் ஆண்டவனுக்குக் கொடுத்தார். சிவச்சாரியார் பழங்கள் பூக்கள் ஆகியவற்றைப் படைத்து மகிழ்ந்தார்.

கோயில்களில் சைவ உணவு படைக்கப்படுகிறது ஏன் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு ஏற்பட்டு உள்ளது. கோயில் என்பது வழிபாட்டு இடம் எந்த மதத்தவருக்கும் இது பொருந்தும். மேலும் அது பலர் கூடும் இடம் . அவ்விடம் சுத்தமாக இருக்கவேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. அசைவ உணவுகளை அவ்விடங்களில் பயன்படுத்தினால் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உண்டு. ஆடு, மாடு, கோழி ஆகியவற்றிலிருந்தும் தொற்ற நோய் பரவ வாய்ப்பு உண்டு என்பதால் பொது இடங்களில் அசைவ உணவு பயன்படுத்தப்படாமலிருந்திருக்கலாம்.  அவ்விடங்களில் தூர்நாற்றமும் ஏற்படக்கூடும். அவ்விடங்களைச் சுத்தம் செய்வதும் சிரமம்.

இங்கு நான் ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். நாம் ஆடைகள் அணியும் முறை மேலைநாட்டுப் பாணியில்தான். இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு வேட்டி அணிவோருக்குத் தடை என்ற அறிவுப்புதான். இதில் பண்பாட்டுச் சிக்கலுள்ளதா?

அன்று பழைய பாடல் ஒன்று சொல்கிறது, “ உண்பவை நாழி உடுப்பவை இரண்டே!” என்று . இது இன்றும் எல்லா நாட்டிற்கும் பொருந்தும். ஒரு கால் சட்டை, ஒரு மேல் சட்டை, அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஆனால் சில இடங்களில் நாம் ஏன் மேலைநாட்டவரின் உடைகளைக் கட்டாயப்படுத்த வேண்டும்? இது நாம் எல்லாரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

உதாரணமாக பள்ளிச் சீருடையை எடுத்துக் கொள்வோம். அல்லது அலுவலகத்திற்குப் போகும் அதிகாரிகளை எடுத்துக் கொள்வோம். பாண்ட், சட்டை சரி ! அதற்கு மேலாக பூட்ஸ் தினப்படி தேவையா? அது கூட காலணி என்பது கல்லும் முள்ளும் குத்தாமலிருக்க பாதுகாப்பு, அதற்குள் ஒரு காலுறை (ஸாக்ஸ்?) ஏன்? சிக்கெனப் பிடித்த காலணிக்குள் காலுறை வேறு. காற்றே புகாமல் காலணியையும் காலுறையும் மாற்றும் போது ஏற்படும் நாற்றம் தேவையா? கழுத்தைப் பிடிக்கும் டையும் நம் நாட்டிற்குத் தேவையா? வியர்வையால் சீருடை அணியும் சிறுவர்கள் தவிப்பதை நான் கண் கூடாகக் கண்டிருக்கிறேன். நான் முன் கூறியதைப் போல் மேலைநாட்டு வானிலைக்கு அவை அவசியம். இவை நமக்குத் தேவையா? சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். நாம் வாழும் இயற்கைச் சுழலுக்கும் நம் உடம்புக்கும் ஏற்ற பழக்கங்களைப் பின்பற்றுவதே நல்லது.

சைவமா? அசைவமா? என்பது பண்பாட்டுச் சிக்கல் அல்ல? பழக்கங்கள் மாறுவதால் ஏற்படும் சிக்கல்தான். “நீ சைவனாக இருக்க விரும்பினால் நீ இரு. நீ எவ்வழியால் இறைவனை அடைய விரும்புகிறயோ அவ்வழியில் நீ இறைவனை அடை “ என்ற முழு சுதந்திரம் உள்ளது. நமக்கு வேண்டியவற்றை நாம் அறிந்து நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவற்றை, நம் உடலுக்கு ஏற்புடையதை நாம் உண்டால் சிக்கல் ஏற்படுவதற்கு வழியில்லை. நீ வாழும் ஊரில் கிடைப்பதை நீ உன் விருப்பம் போல் உண்.” என்ற கொள்கை நமக்கு ஏற்புடையது. அவன் சாப்பிடுகிறான், நான் சாப்பிடக் கூடாதா? யாகத்தில் போடலாம், போடக் கூடாது என்பது உன் வீட்டு யாகத்தையும் உன் விருப்பத்தையும் பொருத்து”. என்ற எண்ணினால் பிரச்சினை என்பது கிடையாது. சைவஉணவுமுறைஅசைவஉணவுமுறையைவிடஎவ்விதத்திலும்உயர்ந்ததுஅல்ல, அசைவம்எவ்விதத்திலும்மக்களைதாழ்த்துவதில்லைஎனும்சூழல்சமூகத்தில்நிலவவேண்டும் என்பது நம் கைகளில்தான் உள்ளது. ஒரு தனி மனிதன் மாறினால் ஒரு குடும்பம் மாறும், ஒரு குடும்பம் மாறினால் ஒரு சமுதாயம் மாறும். ஒரு சமுதாயம் மாறினால் ஒரு நாடு மாறும்.

 

 

Series Navigation
author

Similar Posts

5 Comments

 1. Avatar
  ஷாலி says:

  //இந்துக்களும்பன்றிக்கறியைதவிர்க்கக்காரணம் அவர்கள் இந்துகள் அவர்கள் இந்து மதக் கொள்கையைப் பின் பற்றுகிறார்கள். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பன்றிக்கறியைச் சாப்பிடுகிறார்கள். அது அவர்கள் பின்பற்றும் மதக் கொள்கை. இது தனி மனித சுதந்திரம்.//

  ஒரு மதத்தைப் பற்றி கட்டுரை எழுதுபவர்கள் அம்மதத்தைபற்றி சிறிதளவேனும் தெரிந்து எழுதுவது நல்லது.இல்லையேல் தேவையற்ற குழப்பம் ஏற்ப்படும். “இந்தியாவில் முஸ்லிம்கள் பன்றிக்கறி சாப்பிடுகிறார்கள்.இது அவர்கள் பின் பற்றும் மதக்கொள்கை.”’ என்று தவறுதலாக எழுதியுள்ளார்கள்.திண்ணை தள நிர்வாகிகளின் பரிசீலனையை மீறி இத் தவறு இடம்பெற்றுள்ளது. சரி செய்து கொள்ளுங்கள்.இஸ்லாம் பன்றி இறைச்சியை அசுத்தமானது.அதை சாப்பிடக்கூடாது என்று கட்டளை இட்டுள்ளது.

 2. Avatar
  செல்வன் says:

  மீனா தேவராஜன் அவர்களே,

  என் கட்டுரையின் முக்கிய நோக்கமே இந்தியாவின் ஆன்மிக, வரலாற்று மரபில் மாமிச உணவுக்கு இருந்த சிறப்பான இடத்தையும், பின்னாளில் சைவர்கள் அதை ஹைஜாக் செய்ததுமே.

  பெயரிலேயே பார்க்கலாம். மாமிசம் சிவனும், சிவனடியார்களும் விரும்பி உண்ட உணவு. மகாபாரதத்தில் சிவன் பன்றி வேட்டையாடின செய்தி உள்ளது. கண்ணப்ப நாயனார் கொடுத்த பன்றிமாமிசத்தை சிவன் உண்டார். சிவன் அணிந்திருப்பது புலித்தோல். இப்படி சிவன் எவ்விதத்திலும் தள்ளி வைக்காத மாமிச உணவை “அசைவம்” என பெயர் சூட்டி அது சிவனுக்கும், சைவநெறிக்கும் எதிரானது என கூறியது எவ்விதத்தில் நியாயம்?

  அடுத்து கோயில்களீல் உயிர்ப்பலி கொடுத்தல் சுகாதாரமற்றது என கூறியுள்ளீர்கள். இன்றைக்கும் பல கிராமதேவதை திருகோயில்களில் திருப்பலி கொடுக்கபடுகிறது. அவை எல்லாம் மிக சுத்தமாக தான் இருக்கின்றன. நான் அதற்காக அனைத்து கோயில்களிலும் ஆடுவெட்ட சொல்லி கேட்கவில்லை. மாமிச உணவு அசுத்தமானது, புனிதமற்றது எனும் இந்துக்களின் மனபோக்குக்கு ஒரு உதாரணமாகவே இதை சுட்டிகாட்டுகிறேன்.

  வேத நெறிப்படி யாகங்களில் உயிர்ப்பலி கொடுத்தே ஆகவேண்டும். பவுத்தத்தின் தாக்கத்தால் உயிர்ப்பலி கொடுப்பது நின்று யாகங்கள் அவற்றின் உண்மையான தன்மையை இழந்து பவுத்தமயாகின. உலகில் வேறூ எந்த மதத்திலும் இப்படி பிற மதத்தின் தாக்கத்தால் தம் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டார்கள். இந்து மதத்தில் இப்படி பவுத்தம், சமணத்தின் மிக தவறான உணவு வழக்கத்தை கடைபிடித்தது மட்டும் அல்லாமல், மாமிச உணவு தீண்டதகாதது, கெடுதாலனது என கூறி அவ்வுணவை உண்பவர்களை தீண்டதகாதவர்களாக மாற்றியும் தள்ளி வைத்து விட்டார்கள். இன்றும் மாமிசம் உண்பவர்களை பூசாரிகளாக ஏற்க இந்து கோயில்கள் முன்வரபோவது கிடையாது. மாமிசம் உண்ணும் சாமியார்களை இந்துக்கள் புறக்கணிப்பார்கள்.

  இந்த மனோபாவம் மாறவேண்டும். தாவர உணவு எந்த விதத்திலும், எந்த தொன்மையான இந்து நூலிலும் நன்னெறீயாக முன்மொழியபட்டதே கிடையாது. இன்று அதுதான் இந்து மதம் என்ற அளவுக்கு இந்து மதம் ஹைஜாக் செய்யபட்டு விட்டது. தொன்மையான இந்து சமயத்தை அதன் பாரம்பரியத்தை ஒட்டி இன்னமும் கடைபிடிப்பவர்கள் தலித்துகளும் இன்னபிற மாமிசம் உண்ணும் வழக்கத்தினருமே. ஆனால் அவர்கள் மெயின்லைன் இந்துமத்தில் இருந்தே ஒதுக்கபட்டு புறக்கணிக்கபட்டுவிட்டதுதான் வேதனை

  தாவர உணவு வழக்கம் உள்ள இந்துக்கள் அனைவரும் பவுத்த, ஜைன மத தாக்கத்தை கைவிட்டுவிட்டு மாமிச உணவை உண்டு உண்மையான இந்து மத வேர்களுக்கு திரும்பவேண்டும். அதுவே என் கட்டுரையின் சாராம்சம்.

 3. Avatar
  meenal says:

  “இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பன்றிக்கறியைச் சாப்பிடுகிறார்கள். அது அவர்கள் பின்பற்றும் மதக் கொள்கை. இது தவறுதான்.” மன்னிக்கவும். அங்கு ‘ இப்படி இருக்க வேண்டும். ‘ இந்தியாவில் உள்ள முஸ்லிம் “அல்லாதவர்களில் சிலர்” பன்றிக்கறியைச் சாப்பிடுகிறார்கள்.

 4. Avatar
  Gowthaman Ramasamy says:

  ரொம்ப நாட்களாக (=வருடங்கள்) திண்ணை தளத்திற்கு வராததும் படிக்காததும் ஒன்னும் நட்டமில்லை என்பதுவை உறுதி செய்யும் வகையில் இந்த கட்டுரை இருக்கிறது. எந்தவித ஆழ்ந்த புரிதல் இல்லாமல் டீ-கடையில் உட்கார்ந்து போண்டா சாபிட்டுகொண்டு உலகை அலசும் மேம்போக்கு (=மொண்ணை) தனமான கட்டுரை. டீ-கடை பேச்சு ஒன்றும் இழிவானதல்ல. ஆனால் பொதுவாக அதன் தரம் இதுதான்.

  ஷூக்குள் சாக்ஸ் ஏன் போடவேண்டும் என தெரியாமல் இருப்பது பற்றி என்ன சொல்வதென தெரியவில்லை. எந்த குளிர் நாடுகளையும் விட நம் தமிழ் கூறும் நல்லுலகுக்குதான் ஷீ தேவை. உங்களின் ஒன்னுக்கு, பீ, பீடாவிலிருந்து ஒரு தலைமுறை தப்பிக்க வேண்டி இருக்கிறது.

 5. Avatar
  Prakash Devaraju says:

  @ Gowthaman Ramasamy – எங்களின் தரம் பற்றி உ​ரைத்த​மைக்கு நன்றி. இக்கட்டு​ரை​யைத் தனித்து படித்தால் முழு விவரம் தங்களுக்குத் ​தெரிய வாய்ப்ப்பில்​லை. ​செல்வன் அவர்கள் எழுதிய “சைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்” என்ற கட்டு​ரையின் பின்னனுட்டமாக​வே மீனா அவர்கள் இக்கட்டு​ரை​யை எழுதியதாகத் ​தோன்றுகிறது. ​செல்வன் அவர்கள் “​சைவ உணவின் பண்பாட்டு சிக்கல்” என த​லைப்பிட, அது பண்பாட்டு சிக்கல் அல்ல, பழக்கவழக்க மு​றை (​not a cultural problem; just a choice of habit) என மீனா அவர்கள் எழுதியிருக்கிறார்.

  ​மேலும், ஷீ பற்றிய தங்களது கருத்துக்கும் நன்றி. நமது நாட்டில் ​பொது சுகாதாரம் கு​றைவாக இருப்பது மிகப்​பெரிய அவலக்​கேடுதான். அதற்காக ஷீ அணிந்து​கொண்டு ​செல்வது தற்காலிக சாமர்த்திய​மே அன்றி, மிகப்​பெரிய புத்திசாலித்தனமில்​லை. Air Conditioning ஏன் Fan கூட ஒழுங்காக சுற்றாத பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நம் மாணவர்கள் leather ஷீ அணிந்து ​செல்வது என்பது ஒரு நிர்பந்தப்படுத்தப்பட்ட அ​செளகரியம்தான். அதிலும் மிகக்​கொடு​மை, convent school uniform என்ற ​பெயரில் சிறுவர்களும் சிறுமிகளும் plastic ஷீவும், nylon சாக்ஸூம் அணிந்து​கொண்டு 95 degree Fahrenheit இல் ​செல்வதுதான். அ​தை மாட்டிக்​கொண்டு சுட்​டெரிக்கும் ​வெயிலில் கா​லையில் Prayer, மா​லையில் physical training ​செய்தவர்களுக்குத்தான் ​​​​தெரியும் அந்த ​கொடு​மை. ​தே​வையா இந்த ​வெட்டி பந்தா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *