திருப்பூரை அடுத்த ஒரு கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தில் 10 கி.வாட் சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பு செய்து விவசாயத்தில் ஈடுபட்டு வரும் குவைத்தில் வாழும் இளங்கோவன் பற்றி பசுமை விகடனின் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி எழுதிய ஒரு கட்டுரை பேட்டியில் தெரிந்து கொண்டேன். திருப்பூர் பின்னலாடை தொழில் மின்சார வெட்டால் அவதிப்பட்டிருந்த காலம் அது. சூரிய ஒளி மூலமான மின்சார உற்பத்தி பற்றிய முக்கிய கட்டுரைப்பேட்டி அது. சமீபத்தில் கோவையில் நடைபெற்ற இளங்கோவனின் “ ஒரு சாமானியனின் சாதனை “ என்ற அவரின் வாழ்க்கை அனுபவங்கள் நூல் வெளியிட்டு விழாவில் கவிஞர்கள் அறிவுமதி, சிற்பி பாலசுப்ரமணியன், மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பிரபலங்கள் லேனா தமிழ்வாணன், இயகோகா சுப்ரமணியன், சிறுதுளி வனிதா மோகன், கேஜி மருத்துவமனை பக்தவச்சலம், முனைவர் இளங்கோவன் பார்க் அனுசா, விஜயா பதிப்பகம் வேலாயுதம், எழுத்தாளர் சி. ஆர். ரவீந்திரன் போன்றோர் கலந்து கொண்டது அவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவலைத் தூண்டியது,அந்த நூல் வெளியீட்டு விழாவிலேயே அப்பா இல்லாதக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் படிப்புச் செலவிற்கு ரூ 25 இலட்சம் ரூபாயை அவர் சார்ந்த “ அரவணைப்பு “ அமைப்பு வழங்கியது ஒரு முக்கியச் செய்தியாக இருந்தது.
சோளமோ, கம்போ, சாமையோ, அவரையோ, துவரையோ விளையும் நிலத்து விவசாயின் மகன்தான் ஒரு பட்டிக்காட்டுக்காரரான இளங்கோவன்.திராவிட கட்சியின் ஈடுபாட்டால் அறிஞர் அண்ணா தான் அவருக்கு அப்பெயர் வைத்துள்ளார்.அவரின் தந்தையின் நெஞ்சில் பெரிய அளவிற்கு ஒரு வடு இருந்திருக்கிறது. அவர் நிலத்த்தை உழுதாலோ, பாத்தி பிடித்தாலோ, வரப்பு போட்டாலோ, மண் வெட்டினாலோ அந்தத் தழும்பு புண்ணாகிச் சீழ்வடியும். அவரால் குடும்பத்திற்குத் தேவையான அளவு உதவ முடியவில்லை.அம்மாதான் எல்லாமே..எருமை வளர்த்துப் பால் கறந்தும் விற்றும் ஆடு மேய்த்து அவைகளை வளர்த்தும் அவரைப் படிக்க வைத்திடிருக்கிறார்.எம்.ஈ. படிப்பை சிம்னி விளக்கு வெளிச்சத்திலேயே படித்திருக்கிறார் என்பது அவரது வறுமையின் உதாரணம். பிறகு ஆசிரியர் பணி, பியர்லஸ் முகவர், வெட்கிரைண்டர் உற்பத்தி, பின்னலாடை உற்பத்தி என்று 13 தொழில் நிறுவன்ங்களை நடத்தியிருக்கிறார்.பத்து ஆண்டுகளில் பின்னாலாடைத் தொழிலின் வீழ்ச்சி அவரை நிலை குலைய வைத்து விட்டது. இரட்டை சக்கர வாகனம் உட்பட எல்லா சொத்துக்களையும் விற்று வந்த்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் கடனை அடைத்திருக்கிறார். 52 இலட்சம் கடனை அடைக்க வேண்டியச் சூழலில் குவைத்திற்கு வேலை தேடிச் செல்கிறார். ( அவரின் கடன் குறித்து சிலர் எழுதிய கடிதத்தால் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு ,பின் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று தனியே விமானம் ஏறுகிறார் ) அப்போது மகனுக்கு மூன்றரை வயது. மகளுக்கு ஒன்பதரை வயது. இளம் வயது மனைவி.குவைத்தில் இங்கே. குவைத்ஹ்டில் ஆட்டுக் கொட்டகையில் தங்கி மூன்று வேளை உணவை ஒரே சமயத்தில் சமையல் செய்து அலுவலக வேலை, குழந்தைகளுக்கு தனிப்பயிற்சி, சோதிடம் சொல்வது என்று சிரமப்பட்டு அந்த 52 இலட்சம் கடனை தீர்த்தபின்பே 3 ஆண்டுகள் கழித்து திருப்பூர் திரும்புகிறார். அதன்பின் சம்பாதிக்கிறத் தொகையில் 1/6 பகுதியை தானத்திற்கென்று ஒதுக்கியும் ” அரவணைப்பு” என்ற அமைப்பின் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியும் செய்து வருகிறார். கைவசம் இருந்த கல்வியை வைத்து முன்னேறியதால் ஏழை மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை அளிப்பதன் மூலம் திருப்தி கண்டு வருகிறார்.
இவரின் சின்ன வயசு அனுபவங்கள், வறுமைநிலை,வியாபாரத்தில் வீழ்ச்சி, குவைத் நாட்டில் பணம் சம்பாதிக்கும் சிரமங்கள் என்பவையெல்லாம் ஒரு சாதாரண மணிதன் நொறுங்கிப்போய் தனிமைப்பட்டு மன நோயாளியாகும் சூழலிலிருந்து தப்பித்து மீண்டு குடும்பத்தையும் நடத்துவதையும் , சமூக அக்கறை கொண்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இது சொந்த விளம்பரம் அல்லாமல் தான் சார்ந்த சமூகத்திற்கு தன்னலம் கருதாமல் தன்னுடைய பங்களிப்பைச் செலுத்துவதில் கண்டையும் மகிழ்ச்சியை பிறர் உணர வைக்கிற அம்சங்களாய் இந்நூல் அமைந்துள்ளது. தானும் வாழ்ந்து பிறரையும் வாழவைப்பது இன்பத்துள் தலையாயது என்பதை தன் செயல்களால் நிருபித்து வருகிறார். ” அஹம் பிரம்மாஸ்மி தத்வமஷி ” என்று என்னவாக இருக்கிறதோ அதுவாக இருந்து மற்றவர்களுக்கு உதவும் தன்மையைக் கொண்டிருக்கிறார்.. சக்கரவர்த்தி நெப்போலியன் காந்தி போன்றோரின் வாழ்கைச்சம்பவங்களை முன்னோடியாக எடுத்துக் கொண்டு செயல்படுவதை சில சம்பவங்கள் மூலம் ( அது அவர்களின் வாழ்விலும், இளங்கோவனின் வாழ்விலும் என்று) சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறார்.
சுயமுன்னேற்றம் சார்ந்த நூல்களில் கானப்படும் தேற்றங்களும் கதைகளும் சம்பவங்களும் மனிதன் என்னவாக ஆசைப்படுகிறான் என்பதைச் சொன்னாலும் அதை மேற்கத்திய அனுபவங்களீலிருந்து நாம் எடுத்து உள்வாங்கிக் கொள்ள சிரமப்படும் போது சாதாரண கொங்கு மனிதன் ஒருவனின் வெற்றிக்கதையும் அவனின் வாழ்க்கையின் அனுபவங்களும் இப்புத்தகத்தில்விரிந்து , முன்னேற ஆசைப்படுபவர்களுகு வெகு சமகால நிசர்சனமாக இளங்கோவனின் ஆளுமை முன் நிற்பது சுயமுன்னேற்ற நடவடிக்கைகளில் அக்கறை கொண்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே.
( ரூ 65, பக்கங்கள் 102, விஜயா பதிப்பகம் , கோவை வெளியீடு )
- பாலஸ்தீன் என்ற நாடோ மொழியோ பண்பாடோ என்றுமே இருந்ததில்லை.
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 4 – அக்கா மகாதேவி
- ஒரு பரிணாமம்
- சிட்னியில் சங்கத் தமிழ் மாநாடு – அக்டோபர் 11 , 12 – 2014
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 15
- நூல் மதிப்புரை – அழிந்த ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்
- சுருதி லயம்
- தமயந்தியம்மாள் இல்லம், 6, பிச்சாடனார் தெரு
- மும்பைக்கு ஓட்டம்
- பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது…
- சைவ உணவின் தீமையும், அசைவ உணவின் மேன்மையும்- 1
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை மாத இதழ்
- கவிதைகள்
- செந்நிறக் கோளை நெருங்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி மங்கல்யான்
- தொடுவானம் 27. கலைந்த கனவுகள்
- நூல் அறிமுகம்: ஒரு சாமானியனின் சாதனை : இளங்கோவன் நூல்
- ஆங்கில Ramayana in Rhymes
- அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 27
- மலேசியன் ஏர்லைன் 370
- பாவண்ணன் கவிதைகள்
- அவலமும் அபத்தமும் – ஸ்ரீதரனின் சிறுகதைகள்
- A compilation of three important BANNED plays by bilingual poet-playwright-director Elangovan
- ஏற்புரை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 85
- சிட்டுக்குருவிகளால் உன்னை முத்தமிட்டேன்.