வால்ட் விட்மன் வசனக் கவிதை – 85

This entry is part 6 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

 

(1819-1892)

 

ஆதாமின் பிள்ளைகள் – 3

(Children of Adam)

(Salute Au Monde)

 

வையகமே வந்தனம் உனக்கு [2]

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

 

நீள்கிறது என்னுள்ளே 

பூமியின்

நெடுஞ் செங் குத்துக் கோடு  !

அகன்று செல்வது மட்டக்

கிடை ரேகை !

கிழக்குப் பக்கம்,

ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய

நாடுகள்  

மேற்குப் பக்கம்

வட அமெரிக்க நாடுகளும்

கொடை பெறுகின்றன

பூமத்திய ரேகைப் பகுதியில்

புயல் காற்று வீசும்

உப்பிய புவி இடுப்பில்

சுற்றி விட்ட வளை யத்தால் !

விந்தையாக

வட தென் முனைகள் வழியே

அச்சாணி  நுழையுது !

 

 

வருடத்தின் நீண்ட நாள்

இருந்திடும் என்னுள்ளே !

பரிதி சுழன்றிடும்

சரிந்த வட்டங் களில் !

அத்தமிப்ப தில்லை

சூரியன்

பல மாதங் களாய் !

என்னுள்ளே

நள்ளிரவுச் சூரியன்

நீட்டிய மாலைப் பொழுதில்  

ஏறி இறங்கி

அத்த மிக்கும் மறுபடியும்

அடிவானில் !

என்னுள்ளே அரங்க

எல்லைகள்,

கடல், கானகங்கள்,

எரிமலைகள் !

மலேசியா, பாலினேசியா

மகத்தான

மேற்கிந்திய தீவுகள் !

 

+++++++++++++++++++++++

    

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman

 

S. Jayabarathan [jayabarathans@gmail.com] July 29, 2014

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *