கொங்கு வாழ்க்கையின் வார்ப்பு :“ மொய் “ : சுப்ரபாரதிமணியன் சிறுகதை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 21 in the series 23 நவம்பர் 2014

பூ.அ ரவீந்திரன் (தலைவர் , தமிழ்ச்சிற்றிதழ் சங்கம், கோவை )

“ இலக்கியப் படைப்புகள் சமூக மனிதனை , அவனது உயிர் வாழ்க்கையின் பல்வேறு கோலத்துடன் அவனது உணர்வுகளுக்கும் சிந்தனைக்குமுள்ள முரண்பாடுகளும், சமூகத்துடனான அவனது உறவுகளும் அவனது அக வாழ்க்கையையும் புற நடத்தைகளையும் சித்தரிக்கின்றது.இவற்றுள் தனி மனிதனுக்குள்ளும் அவனது வாழ்க்கையும் வரலாற்றுச் சமூக சூழ்நிலையில் பண்பாட்டைக்காட்டுபவை கதைகள் “ என்ற கார்த்திகேசு சிவத்தம்பியின் வாசகங்கள் ( தமிழில் இலக்கிய வரலாறு, என்சிபிஎச் வெளியீடு ) சுப்ரபாரதிமணியனின் “ மொய்” என்ற சிறுகதையை இந்த வாரம் “ திண்ணையில்” படித்த போது தோன்றியது.
கொங்கு மக்களின் வாழ்க்கையை ஆர். சண்முகசுந்தரத்தைப் பின் பற்றி சிறப்பாக பதிவு செய்து வருகிறவர்களில் சி ஆர் ரவீந்திரன், மா.நடராசன்,,பழமன் போன்றோருடன் சுப்ரபாரதிமணியனும் இருக்கிறார். இக்கதை கொங்கு மக்களின் வாழ்க்கையின் ஒரு சிறுபங்கைச் சொல்கிறது. கோவை அருகிலான சோமனூர், செகடந்தாளி, எளச்சிபாளையம், செம்மாண்டாம்பாளையம், கருமத்தாம்பட்டி போன்ற ஊர்களும் அந்த ஊர்களின் கொங்கு மனிதர்களும் என்று நிறைத்திருக்கிறார்.
தபால்காரர் ஒருவருக்கு திருட்டுத்தனமாய் கடிதங்களை பிரித்துப் படிக்கும் பழக்கம். உமா என்ற ஆசிரியை பயிற்சி படித்த கிராமத்துப் பெண்ணின் – உமாவின் கடிதங்களை பின் தொடர்கிறார். பக்கத்து கிராமத்து குடிகாரனுக்கு திருமண ஏற்பாட்டில் இருக்கையில் ஆசிரியைப் பயிற்சி நண்பருடன் கிராமத்தை விட்டு வெளியேறுகிறாள். அவள் பேருந்தில் புறப்படுகையில் அவள் கையில் அய்நூறு ரூபாய் கொடுத்து “ மகராசியா இரு “ என்று ஆசீர்வாதம் செய்கிறார், இருபத்தைந்து வருடம் கழித்து அவருக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது.” என்ன திருட்டுத் தபால் ஏதாச்சும் கிடச்சுதா “ என்று கேட்கிறாள் மனைவி.உமாவின் மகன் அமெரிக்காவிலிருந்து அனுப்பி இருக்கிறான். என் அம்மா அந்தகிராமத்தை விட்டு கிளம்பும் போது மோய் ஆசீர்வாதம் செய்த உஙக்ளைப் பற்றி அம்மா சொன்னார்.உங்களைப் பார்க்க வருவேன்” என்கிறது மின்னஞ்சல்.
கொங்கு கிராம வாழ்க்கையின் அடையாளமானப் பேச்சு வழக்கு, கொங்கு மனித இயல்புகள் விரவிகிடக்கின்றன. மாறி வரும் தலைமுறை அடையாளங்கள், மனித இயல்பிம் தென்படும் மாறுதல்களை இக்கதை துல்லியமாகச் சித்தரித்திருக்கிறது. சுப்ரபாரதிமணியனை இக்கதியில் அடையாளம் கண்டு கொள்ளமுடிகிறது. ஒரு சிறுகதைக்குள் கொங்கு உலகத்தையே கொண்டு வந்து விடுவது பெரும் சிறப்பாகும்.

( கோவை இலக்கியச் சந்திப்பு 47 ம் நிகழ்வில் சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்த்த ” உயில் மற்றும் பிற கதைகள் ‘ ஜெ.பி.தாஸ் ஒரிய எழுத்தாளரின் கதைத் தொகுப்பு நூலை கவிஞர் புவியரசு வெளியிட் பூ.அ.ரவீந்திரன் பெற்றுக்கொண்டு பேசியது – ” உயில் மற்றும் பிற கதைகள் ‘ ஜெ.பி.தாஸ் ஒரிய எழுத்தாளரின் கதைகள் விலை ரூ 160 ; சாகித்ய அகாதமி வெளியீடு சென்னை ) .

Series Navigationராமலெக்ஷ்மியின் இலைகள் பழுக்காத உலகம் ஒரு பார்வை.சிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *