ஆத்ம கீதங்கள் – 11 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)

This entry is part 14 of 22 in the series 28 டிசம்பர் 2014

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

நேசித்தோம் ஒருமுறையே என்று

நீ சொல்வ தெப்படி ?

தெய்வ நிந்தனை செய்பவனா ?

பனி யின்றி

உனது பூமி குளிர வில்லையா

இப்போது ?

ஓ நண்பர் களே !

நீங்கள் ஒருவருக் கொருவர் அப்படித்

தீங்கிழைப் பீரா ?

உம்மைப் போல் வழிபட்டு

உமக்காகக் கண்ணீர் வடித்தும்,

புன்னகை புரிந்தும்

நேசித்தோர் சிலரைத் தெரிந்தால்

ஒருமுறையே அவரை நேசித்தோம் என்று

உரைப்பீரா ?

 

நேசித்தோம் ஒருமுறையே அவளை என்பது

நிஜமாய் இருக்குமா ?

மறைமுகமாய்

எனது மௌனம் கேட்கிறது;

இனிய நண்பர்களே !

இதயங்கள் மேலான உரிமையில்

எனக்கும், இனிய காட்சிக்கும் இடையே

நிற்கும் போது,

அல்லது

நீண்ட நேரம்

நிழலில் பூக்களை வைக்கும்

போது எனது  

நிறங்கள் வெளுப்பதைக் காண்பாய்;

நேசித்தது ஒருமுறையே

எனும் ஆசை

வாசகங்கள் மங்கிப் போய்

என்னுள்

மறைந்து போகும் !

 

[தொடரும்]

Series Navigationதொடுவானம் 48 . புதிய பயணம்ஆனந்த பவன் நாடகம் காட்சி -19
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *